Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Quote:யாரந்த தேவதையா தெரிந்தால் நிச்சயம் சொல்கிறேன் இளைஞன். உங்களுக்கு சொல்லாமலா?
என்ன எஸ்கேப் ஆகுறிங்களோ??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
இல்ல மழலை தெரியாமல் எப்படி சொல்றது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
பிடித்திருக்கிறது என்பதற்காக முட்டாள்தனங்களை அரங்கேற்ற முடியுமா மதன்? பதிவுத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதை விட அதை செய்யவேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

தாலி கட்டுறத விடுவம் ஆனால் பிராமணரை அழைப்பது எதற்கு? பணம் கொடுப்பது பிரச்சினையில்லை ஆனால் வேற்றுமொழியில் உங்களுக்கு விளங்காமல் ஒன்றை சொல்லி உங்களுக்குத் திருமணம் செய்விப்பதற்கு யாரவர்? உங்கள் அன்னை தந்தை உறவுகளின் வாழ்த்துக்களுடன் நீங்கள் ஒன்றிணைவது சரி. ஆனால் இந்த பிராமணர்களுக்கு அந்த இடத்தில் என்ன வேலை. அதில்தான் தெளிவுவேண்டும் மதன்.

சடங்குகள் சம்பிரதாங்கள் என்கிற போலி வழக்குகளுக்குள் இருந்து மீறமுடியாத நிலைக்குள்ளாகியிருப்பது கவலைதான். உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு முடியாது. ஆனால் உங்கள் முடிவில் தெளிவு காணுங்கள் என்பது என் அன்பான வேண்டுகோள்.

சிலவேளைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்காக நீங்கள் இந்த முடிவை எடுக்கலாம். சிலநேரங்களில் சில சமரசங்களை செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைகளுக்குள்ளாயிருக்கலாம். எது எப்படியாக இருப்பினும் தனிமனிதனை மாறு என்று சொல்வதை விட, மாற்றத்திற்கான புறச்சூழலை உண்டுபண்ணுவது அவசியம். அல்லது அப்படியான சூழல் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் சமூகப்புரட்சிக்கான புறச்சூழலை உண்டுபண்ணுவதன் மூலம் தனி மனித மனங்களிலும் மாற்றங்களை உண்டுபண்ணலாம் என்பது உண்மை.


Reply
இளைஞன் Wrote:பிடித்திருக்கிறது என்பதற்காக முட்டாள்தனங்களை அரங்கேற்ற முடியுமா மதன்? பதிவுத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதை விட அதை செய்யவேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.

உண்மையை சொன்னால் சில சமயங்களில் அரங்கேற்ற வேண்டியிருக்கின்றது, நான் லண்டனில் இருந்து வெகு தூரத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்துகொண்டிருந்த போது அதே விடுதியில் மலேசியாவை சேர்ந்த ஒரு தமிழ் மாணவரும் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு நாளுக்கு ஒரு முறையாவது சோறு கறி சாப்பிட வேண்டும் இல்லை என்றால் சாப்பிட்ட மாதிரி இருக்காது. அந்த இடத்திலோ தமிழர்களோ இந்தியர்களோ இல்லை என்பதால் தென்னிந்திய சமையல் பொருட்கள் கிடைக்காது, அதனால் அவருக்கு சமையல் பொருட்கள் மலேசியாவில் இருந்து மிகுந்த பணசெலவில் பார்சலாக வரும், அவரும் அதை வைத்து சமைத்து சோறூ கறி சாப்பிடுவார். அந்த நகரத்தில் இருந்த மற்றவர்கள் மேற்கத்தைய உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர்வாழவில்லையா? உயிர்வாழ்வதற்கு தேவை உணவே அன்றி சோறூ இல்லை தானே? ஆனால் அவருக்கு பழகிவிட்டது பிடித்திருக்கின்றது அதனால் செய்கின்றார். இதனால் அவர் செய்வது முட்டாள் தனமாகிவிடாது, அவருடய உணர்வுகள் எனக்கு புரிகின்றன, எது எப்படியோ அவரால் இப்படி செய்தால் சந்தோஷமாக இருக்க முடிகின்றது, இதனால் மற்றவர்களுக்கு அவர் இடையூறு எதையும் தரவில்லையே. அப்படியே இருந்துவிட்டு போக்கட்டுமே. அது போலதான் இதுவும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இப்படியும் பார்க்கலாம் தானே மதன்?

உணவில் எந்த உணவென்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் அதை உட்கொள்ளும் முறையில் தான் பிரச்சினையே. கையால் அள்ளி வாயில் போட்டு மென்று உண்ணவேண்டிய உணவை, ஐயரை அழைத்து மந்திரம் ஓதி உண்பதைத்தான் முட்டாள்தனம் என்கிறேன். :?


Reply
அதுதான் அந்த தென்னிந்திய உணவை அவருக்கு மலேசியாவில் இருந்து வரவழைத்து உண்ண பிடித்திருக்கு, எனக்கு பெற்றோர்களுக்க்காக ஐயரை வரவழைக்க பிடித்திருக்கு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மதன் அண்ணா சொல்லும் முறையில் திருமணம் செய்வது தான் நல்ல முறை என்று எனக்கு படுது.

இளைஞன் அண்ணா சொல்ற மாதிரி விளங்காத பாஷையில் மந்திரம் சொல்லும் போது அதன் தம்ழ் விளக்கத்தையும் சொல்லும் படி அய்யரை கேக்கலாம் தானே

புலம் பெயர்ந்த சமுதாயத்தில எமது பல அடையாளங்களை தொலைத்து விட்டோம் இதையுமா விட வேண்டும் :?

புலத்தில இருக்கிற நாங்க தான் எமது அடையாளங்களை முன்னேற்றம் என்ற பேரில இழக்கிறமே தவிர (உதாரணமா வெள்ளைக்காரர் இன்னும் மேரி டேவிட் போன்ற பழைய பெயர்களை வைக்கனம் ஆனா எங்கட தமிழர்கள் தமிழல்லாத வாயில நுழையாத அர்த்தமில்லாத பெயர்களை வைக்கினம்) மற்ற சமுதாயங்களில இப்படியான பாதிப்புகள் குறைவு.

அதுக்காக கண்ணை மூடிக் கொண்டு அர்த்தமில்லாத சடங்குகளை செய்யோணும் எண்டு இல்லை
. .
.
Reply
இனத்துவ அடையாளங்களை ஒரு சமூகம் இழக்கிறது என்றால் அது ஒன்றில் சிந்தனையில் வங்குரோத்துக்குச் சென்றிருக்க வேண்டும்...அல்லது இன்னொரு இனத்துக்கு அடிமைப்படத் தயாராகி விட்டது என்று கருத வேண்டும்...!

இங்கு பலருக்கு நவீனத்தை எது எதற்குள் புகுத்துவது எதை எதைக் களைய வேண்டும் என்ற சிந்தனை அடிப்படையின்றி தங்கள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் நியாயங்கள் என்று தங்களுக்கு தெரிந்தவற்றை கருத்தென எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..! சமூகம் என்பது தனி நபர்களில் உள்ள சமூக விதிவிலக்குகளின் கட்டமைப்பு அல்ல....! பாரம்பரியம் என்றாலும் நவீனம் என்றாலும் கருத்தொருமைப்பாட்டுக்குள் சமூகத்தில் அனைவராலும் ஏற்கப்பட வேண்டும் அன்றில்..அவ்வகை எழுத்துக்களின் விளைவு காசு கொடுத்து வாங்கிய சிலரின் கைதட்டல்களோடு அரங்கோடு அடங்க வேண்டியதுதான்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மதன் அண்ணா சொல்வதையே நானும் ஏற்கிறேன். சட்டத்திற்கு முன் தாங்கள் கணவன் மனைவி என அடையாளம் காட்டுவதற்காகவே பதிவுத்திருமணம் செய்யப்படுகிறது. அதேபோலவே சமுதாயத்திற்கும் தாங்கள் கணவன் மனைவியென அடையாளப்படுத்துவதற்காகவே ஒரு சமயப்பெரியார் முன்னிலையில் சாஸ்திர சடங்கு சம்பிராயப்படி தாலி கட்டி கணவன் மனைவியாக பெற்றோர் சுற்றத்தார் பெரியோர்களின் ஆசியுடன் சந்தோசமாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.
----------
Reply
இளைஞன் Wrote:பதிவுத் திருமணம் சரி. மதரீதியான சடங்குகளூடான திருமணம் என்பது எதற்கு?


இங்கே கருத்தாடலுக்குரிய தலைப்பில் தமிழர்கள் என்பதை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். எனவே தமிழர்களான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என இணையும் போது அவர்களை இணைப்பது தாலி என்ற ஒரு பந்தத்தால் தான். தமிழர்களாகிய ஒவ்வொருவரும் தாலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என சொல்லிப்புரிய வைக்கத்தேவையில்லை. எனவே தாலியை ஒரு ஆண் ஆனவன் பெண்ணுக்கு அணியும் போது மதரீதியாக சாஸ்திரப்படி கட்டினால் அது நாகரிகமற்ற செயலா? இல்லையே. எனவே திருமணம் என்னும் போது பதிவுத்திருமணமும் தேவை தான் மதரீதியான சடங்குத்திருமணமும் தேவைதான்.
----------
Reply
ஒரு திருமண வயதை அடைந்த ஆண் திருமண வயதை (21) அடையாத பெண்ணை காதலிக்கும் போது அவ்விடத்து இவர்கள் வாழ்க்கையில் பெற்றோர்கள் இக்காதலை ஏற்றுக்கொண்டு மதரீதியாக திருமணத்தை நடத்தி வைத்தாலும் சட்ட ரீதியாக இவர்களால் திருமண பந்தத்திற்குள் நுழைய முடியாதே. எனவே மதரீதியான சடங்கும் முக்கியம்.
----------
Reply
ஏன்: வெண்ணிலாக்கா தாலி கட்டாதவை மந்திரம் ஊதாமல் கல்யாணங்கட்டினவ சந்தொசமா இல்லையே? நித்திலாக்கா தாலி கட்டுறத தான் உங்கட அடையாளமெண்டால் பொம்பிளையள் வெளிநாட்டில சீலை கட்டிக்கொண்டு போங்கவன். ஆம்பிளயள் வேட்டி கட்டிக்கொண்டு போங்களன். சரி குளிர்காலத்தில கஸ்ரமெண்டால் வெயில் காலத்தில செய்யலாந்தானே? நிறைய எங்கட அடையாளங்கள் அடுக்கிக் கிடக்குது அதுகளயும் செய்யுங்கோவன் :? அர்த்தம் இல்லாத சடங்குகள செய்யோணுமெண்டு சொல்லேல எண்டு சொல்லுறீங்கள் அப்ப தாலி கட்டுறத அர்த்தமான சடங்கு மந்திரம் ஊதுறது அர்த்தமான சடங்கெண்டால் அதில என்ன அர்த்தமிருக்கக்கா :?
Reply
கடவுளே இல்லை என்கிறம்.. இதில திருமணமாம் அதில
தேவர்களை கூப்பிட்டு மந்திரமாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சின்னப்புள்ளத் தனமா இல்ல இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
[size=14]உங்கள் கருத்துகளை வாசித்துக் கொண்டு போகும் போது
நான் பார்த்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஐரோப்பாவுக்கு வந்தவர்களின் திருமணங்களுக்கு
போகும் போது நடக்கிற ஒரு நிகழ்வு
கூடுதலாக ஆண் இங்கே பல காலம் வாழ்ந்தவராக இருப்பார்,
பெண் ஊரிலிருந்து வந்து அவரோடு பல காலம்
<b>லிவிங் டு கெதர்</b> மாதிரி வாழ்கை நடத்தியிருப்பார்.
இங்கே முதலிரவு உட்பட எதற்குமே நேர காலங்கள் சம்பிரதாயங்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

மொய் வாங்கவோ அல்லது
கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ
அல்லது
ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட
வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................
அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்.

இப்படி கல்யாணம் நடக்கும் பெண்களில் 99 சதவீதமானவர்கள் வயிற்றில் குழந்தையொன்றை சுமந்து கொண்டு (2 முதல் 5-6 மாதங்களாக)இருப்பார்கள்.

இது கல்யாண வீடியோ எடுப்போருக்கு தெரியும்.
வயிற்றை மறைத்து எடுக்க பக்கத்து அக்கா அட்வைசெல்லாம் பண்ணுவார்.
இவை உண்மையிலே வீடியோ கல்யாணமாகவே இருக்கும்.
அதற்கு காரணம் வீடியோக்காரர் வரும் வரை எந்த ஒரு சடங்கும் தொடங்காது.
வீடியோக்காரர் இந்த இடத்தில் பட டைரக்டராகவே செயல்படுவார்.

இப்படி நேரம் கடந்து பிரச்சனைகள் ஏற்பட்டாலும்
12 மணிக்கு தாலி கட்ட ஓடித் திரிவார்கள்.
இதற்கு ஏற்றாற் போல ஐயர் மந்திரங்களை சென்சார் வேறு செய்து ஒப்பேத்திவிடுவார்.

இதையெல்லாம் பார்க்கும் போது சடங்குகள் என்றால் இப்படியா
என பல முறை சந்தேகங்கள் வந்ததுண்டு.
இதெல்லாம் சரியா?
Reply
Quote:மொய் வாங்கவோ அல்லது
கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ
அல்லது
ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட
வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................
அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்
உண்மைதான் அஜீவன் அண்ணா.
இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இங்கு நடைபெறும்
திருமணங்கள் எல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் தான்
வரும். இது எப்படி? :roll: :roll:
Reply
[quote=AJeevan][size=14] பெண் ஊரிலிருந்து வந்து அவரோடு பல காலம்
[b]லிவிங் டு கெதர் மாதிரி வாழ்கை நடத்தியிருப்பார்.
இங்கே முதலிரவு உட்பட எதற்குமே நேர காலங்கள் சம்பிரதாயங்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

மொய் வாங்கவோ அல்லது
கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ
அல்லது
ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட
வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................
அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்.

இப்படி கல்யாணம் நடக்கும் பெண்களில் 99 சதவீதமானவர்கள் வயிற்றில் குழந்தையொன்றை சுமந்து கொண்டு (2 முதல் 5-6 மாதங்களாக)இருப்பார்கள்.

[/color]


அவங்க 5 6 மாதம் சேர்ந்து வாழ்ந்ததற்கு பின்னர் தான் புரிந்திருக்கு மத ரீதியாக திருமணத்தை நடத்தணும் என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
உண்மைதான் அஜீவன் அண்ணா... இதுபற்றி எழுதவேண்டும் என்றிருந்தேன் அதற்குள் நீங்கள் எழுதிவிட்டீர்கள். நன்றிகள்.


திருமணம் முடிக்காமலே முதலில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்துவிட்டுத்தான் இங்கு பலர் திருமணம் செய்கிறார்கள். (தமிழர்களைத் தான் சொல்கிறேன்). திருமணத்திற்கு முன்னரே உடல்ரீதியான உறவுகளும் ஏற்பட்டிருக்கும். இங்கே சடங்குகளும் சம்பிரதாயங்களும் சாமி சமயங்களும் ...? தம் தேவைக்கேற்ப சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சாமியையும் சமயத்தையும் உதறிவிட்டுபோகும்போது, அவை தேவையே இல்லை என்று சொல்வதைக்கூடு உள்வாங்கமுடியவில்லை.

உண்மைகள் சுடத்தான் செய்யும்.
உண்மைகள் நீங்கள் நினைப்பது போன்று அழகானவையல்ல.


Reply
மொய் வாங்கவோ அல்லது
கொடுத்த மொய்யைத் திருப்பி வாங்கவோ
அல்லது
ஊருக்கு கல்யாணம் நடந்ததாக காட்ட
வீடியோவுக்காக ஒரு கல்யாணம் நடக்கும்............................
அதுக்கும் ஒரு ஐயர் நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பார்.

இப்படி கல்யாணம் நடக்கும் பெண்களில் 99 சதவீதமானவர்கள் வயிற்றில் குழந்தையொன்றை சுமந்து கொண்டு (2 முதல் 5-6 மாதங்களாக)இருப்பார்கள்.

இது கல்யாண வீடியோ எடுப்போருக்கு தெரியும்.
வயிற்றை மறைத்து எடுக்க பக்கத்து அக்கா அட்வைசெல்லாம் பண்ணுவார்.
இவை உண்மையிலே வீடியோ கல்யாணமாகவே இருக்கும்.
அதற்கு காரணம் வீடியோக்காரர் வரும் வரை எந்த ஒரு சடங்கும் தொடங்காது.
வீடியோக்காரர் இந்த இடத்தில் பட டைரக்டராகவே செயல்படுவார்.

இப்படி நேரம் கடந்து பிரச்சனைகள் ஏற்பட்டாலும்
12 மணிக்கு தாலி கட்ட ஓடித் திரிவார்கள்.
இதற்கு ஏற்றாற் போல ஐயர் மந்திரங்களை சென்சார் வேறு செய்து ஒப்பேத்திவிடுவார்.

Quote:அஜீவன் உண்மையை எல்லாம் இப்பிடி பப்பிளிக்கா சொல்ல கூடாது :twisted: :twisted:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
Quote:வெண்ணிலாக்கா தாலி கட்டாதவை மந்திரம் ஊதாமல் கல்யாணங்கட்டினவ சந்தொசமா இல்லையே? நித்திலாக்கா தாலி கட்டுறத தான் உங்கட அடையாளமெண்டால் பொம்பிளையள் வெளிநாட்டில சீலை கட்டிக்கொண்டு போங்கவன். ஆம்பிளயள் வேட்டி கட்டிக்கொண்டு போங்களன். சரி குளிர்காலத்தில கஸ்ரமெண்டால் வெயில் காலத்தில செய்யலாந்தானே? நிறைய எங்கட அடையாளங்கள் அடுக்கிக் கிடக்குது அதுகளயும் செய்யுங்கோவன் அர்த்தம் இல்லாத சடங்குகள செய்யோணுமெண்டு சொல்லேல எண்டு சொல்லுறீங்கள் அப்ப தாலி கட்டுறத அர்த்தமான சடங்கு மந்திரம் ஊதுறது அர்த்தமான சடங்கெண்டால் அதில என்ன அர்த்தமிருக்கக்கா
_________________
மிஸ் பூனைக்குட்டி.. சாறி உடுத்து போகின்ற..தமிழ் ஆடை அணிந்து திரிபவர்களை புலத்தில் கண்டதில்லையோ..?? இன்னும் வெஸ்டேன் ஆடை அணியாத பெண்களை நாங்கள் லண்டன்ல கண்டிருக்கம். அது அது அவரவர் விருப்பம் இதற்கு குளிர் ஒரு தடையல்ல. புலம்பெயர்ந்து தமிழர்கள் மட்டும் வாழவில்லை எத்தனை எத்தனை காரணங்களிற்காக முஸ்லீங்களும் இடம் மாறியிருக்கிறார்கள். அவர்கள் குருதா போட மறக்கிறார்களா..?? எத்தனை இந்திய பாகிஸ்தான் பெண்கள் சாறி உடுத்திறார்கள் குளிர் மழை என்று பார்க்காமல். அப்படி அணிகிற ஆண்கள் கூட இருக்கிறார்கள். அவர்களால் மாறாமல்் வாழ முடிகிறது. தங்கட கலாச்சாரத்தை அடையாளத்தை பேணமுடிகிறது ஏன் தமிழரால் முடியாது நாங்களா எல்லாத்திக்கையும் நுழைகிறம். எங்கட அடையாளத்தை காக்கவேணும் என்று நினைச்சால் எதுவும் பொருட்டாய் அமையாது. ஆனால் வசதிக்கேற்ப பலர் ஆடை அணிகிறார்கள் அதற்காகக அவர்களால் தமிழ் உடை உடுத்தவே முடியாது என்பதா அர்த்தம்.

முன்னைய காலத்தில் தாலியை வெறும் எளிமையாய் வைத்திருந்தார்கள் எல்லாரும் அதை பயன்படுத்தக்கூடியவாறு.. இப்ப தாலி என்கிறது எப்படி மாறியிருக்கு.. பவுனில நிக்குது.. 45.. 50 அதை பாதுகாக்கிறதே பெரிய வேலையாய்ப்போச்சு. இப்படி மாறிய தால தான் தாலியின் புனிதம் அறியாமல் திரியிறார்கள். என்ன பண்ண காலமோ..

தாலி என்பது ஒரு அடையாளம் உண்மையில் அர்த்தமுள்ள அடையாளம். அன்பின் அடையாளமாய் நாங்க பாக்கிறம். அது தானே.. உண்மை ஒரு ஆணும் பெண்ணும் நம்பிக்கையின் பால் சேர்ந்து வாழலாம்.. தாலி நம்பிக்கையை அதிகரிக்கும்.. இன்னொன்று சமூகத்திற்கும் எங்கட நம்பிக்கையை சொல்றதுக்கு இந்த தாலி ஒரு சாதனமாய் பாருங்கள். முன்னைய காலங்களில் பலவற்றை விளக்கிறதுக்கு இந்த தாலியைப்பயன்படுத்தினார்கள். இப்ப தாலி பெண்கள் மட்டும் போடுறது கஸ்டமாய் இருந்தால் ஆண்களையும் போடவையுங்கள் அதற்காக அதை தேவையற்றது என்பதில் என்ன நியாயம். தாலி பெண்களும் மெட்டி ஆண்களும் அணிகிற வழக்கம் இருந்து மருவி இரண்டையும் பெண்கள் அணியும் நிலை வந்திட்டுது. திருமணம் ஆன ஒருவரை அடையாளம் காட்டி அதற்கு புனிதம் கொடுப்பது தாலி. போற போக்கில.. நம்பிக்கையில வாழுவம் ஏன் பதிவுத்திருமணம் என்று கேப்பியள்.. அப்புறம்.. விலங்குகளாட்டம். அலையலாம் பாத்திருங்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
vasisutha Wrote:இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இங்கு நடைபெறும்
திருமணங்கள் எல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் தான்
வரும். இது எப்படி? :roll: :roll:

இதுதான் ஐரோப்பா ஐயர் சாத்திரம் or முகுர்த்தம் என்பது...........................
ஐயர்மார் சனி ஞாயிறுகளில் தனது உழைப்புக்காக நாள் குறித்துக் கொடுத்து விடுவார்கள்.
அதில் அவர்கள் சொல்லும் புருடாதான் பகல் 12மணிக்குத் தாலி கட்டினால் தோசமெல்லாம் போய் விடும் என்பது..................

நான் இது பற்றி ஒரு சாத்திரியிடம் பேசிய போது அவர் சொன்னார் ...............
"இப்பிடி முகுர்த்தங்கள் வரவே வராது.
ஐரோப்பாவில் இருக்கிற மாதிரி முகுர்த்தங்களை இந்தியாவிலோ, இலங்கையிலோ கேட்டால் தப்பு என்றுதான் சொல்லுவார்கள்.
என்ன செய்யிறது நானும்தான் வந்த இடத்தில இரண்டு மூன்று கலியாணத்தை நடத்தினன்.
வந்த இடத்தில செலவுக்கு ஏதாவது கிடைக்குதில்லே......................"

<b>சில ஐயர் பிரச்சனைகள் :-</b>

1. ஐயர் இரண்டு கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.
சிலர் ஒரு கலியாணத்தை நேரத்துக்கு முடித்து விட்டு
அடுத்த கலியாணத்துக்கு ஓடி விடுவார்கள்.
<b>இப்பிடி முகுர்த்தங்கள்?</b>

2. இரண்டு கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு
ஒரு கலியாணத்தை நடத்த வேறு நாட்டிலிருந்து வர வழைத்தோ
அல்லது விருந்துக்கு வந்தவரையோ வைத்து மறு கலியாணத்தை நடத்துவார்.
இப்படிப் பட்டவர்கள் மாட்டிக் கொண்டு முழிப்பதே தனி வேடிக்கை.
கவுண்டர் செந்தில் கொமடி தோற்று விடும்.

நாட்டுக்கு நாடு இவர்கள் கலியாணம் செய்து வைக்கும் முறை மாறுபட்டிருக்கும்.
இவர்கள் சடங்கை கொஞ்சம் மாறிச் செய்யத் தொடங்கியதும் பிரச்சனை தொடங்கிவிடும்..................
இதற்கென்ரே சில சொடக்கு பாண்டிகள் கலியாண வீடுகளுக்கு வந்திருக்கும்.
அதுகள் ஐயர்மாரை ஒரு வழி பண்ணத் தொடங்கினால்...............?
ஐயோ பாவம்..........................
சொடக்கு பாண்டிகள்
பெரும் குளிரில சட்டையில்லாம மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க குளிர் வந்து தாக்கட்டும் என்று வேற கதவை திறந்து விடுங்கள்....................
இவங்களை எதிர்த்தால் கலியாணமே நடக்காது.
பலர் மாப்பிளையின் நண்பர்களாகவே இருப்பார்கள்?
இந்த நேரங்களில் அதிகமாக ஐயருக்கு வழி காட்டியாக இருப்பது வீடியோ இயக்குனர்கள் அல்லது போட்டோ இயக்குனர்கள்தான்.
அவர்கள் கூட உதவுவது வேலை முடிந்து நேரத்துக்கு போய்ச் சேர வேண்டுமென்ற நோக்கில்தான்.

சில ஐயர்மார் வைக்கும் சடங்கு பொருட்கள் குறைந்திருந்தால் வீடியோ தம்பியின் காதில் மெதுவாக முணுமுணுப்பார்.
அது என்ன தெரியுமா?
வீடியோவில் சடங்குப் பொருட்களை எடுக்காமல் காப்பாற்றும்படி சொல்லும் காதோடு மந்திரமே..............

கலியாணத்து வீடியோ தெலுங்கு படம் போல டபிங் செய்யப்பட்டதும் உண்டு.
வந்தவருக்கு சரியாக மந்திரம் தெரியாமல் ஒப்பேத்தப் போய் அந்த வீடியோ ஊருக்குப் போய் மாட்டி விடும் என்ற பயத்தில்
வேறொரு கலியாண மந்திரமும் சினிமா பாடல்களும் கை கொடுத்த சமயங்கள் பல.

என்ன செய்வது தப்பு வீடியோகாரரின் மைக் பிரச்சனை அல்லது ஆட்களின் சத்தம் என குறைகள் திசை திரும்பி விடும்.

வீடியோக்காரர்கள் இதைச் செய்வதற்குக் காரணமே ஐயர் மூலம் கிடைக்கும் ஓடர்களை காப்பாற்றவே...........................

ஐயர் மந்திரம் சொல்ல முன்னோ
அல்லது தாலி கட்டும் மந்திரம் சொல்லு முன்னோ
கடவுளைப் பார்க்கவே மாட்டார்.
வீடியோக்காரரைத்தான் பார்ப்பார்.....................
அவர் தலையாட்டினால்தான் மந்திரமே தொடங்கும்.

இனியாவது கவனித்துப் பாருங்கள்.
வீடியோ கடவுளுக்கு எவ்வளவு பவர் என்று.

எவ்வளவு இருக்கு............................சொல்ல...................???????
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)