vasisutha Wrote:இன்னும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இங்கு நடைபெறும்
திருமணங்கள் எல்லாம் சனி அல்லது ஞாயிறு நாட்களில் தான்
வரும். இது எப்படி? :roll: :roll:
இதுதான் ஐரோப்பா ஐயர் சாத்திரம் or முகுர்த்தம் என்பது...........................
ஐயர்மார் சனி ஞாயிறுகளில் தனது உழைப்புக்காக நாள் குறித்துக் கொடுத்து விடுவார்கள்.
அதில் அவர்கள் சொல்லும் புருடாதான் பகல் 12மணிக்குத் தாலி கட்டினால் தோசமெல்லாம் போய் விடும் என்பது..................
நான் இது பற்றி ஒரு சாத்திரியிடம் பேசிய போது அவர் சொன்னார் ...............
"இப்பிடி முகுர்த்தங்கள் வரவே வராது.
ஐரோப்பாவில் இருக்கிற மாதிரி முகுர்த்தங்களை இந்தியாவிலோ, இலங்கையிலோ கேட்டால் தப்பு என்றுதான் சொல்லுவார்கள்.
என்ன செய்யிறது நானும்தான் வந்த இடத்தில இரண்டு மூன்று கலியாணத்தை நடத்தினன்.
வந்த இடத்தில செலவுக்கு ஏதாவது கிடைக்குதில்லே......................"
<b>சில ஐயர் பிரச்சனைகள் :-</b>
1. ஐயர் இரண்டு கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.
சிலர் ஒரு கலியாணத்தை நேரத்துக்கு முடித்து விட்டு
அடுத்த கலியாணத்துக்கு ஓடி விடுவார்கள்.
<b>இப்பிடி முகுர்த்தங்கள்?</b>
2. இரண்டு கலியாணத்துக்கு ஒப்புக் கொண்டு
ஒரு கலியாணத்தை நடத்த வேறு நாட்டிலிருந்து வர வழைத்தோ
அல்லது விருந்துக்கு வந்தவரையோ வைத்து மறு கலியாணத்தை நடத்துவார்.
இப்படிப் பட்டவர்கள் மாட்டிக் கொண்டு முழிப்பதே தனி வேடிக்கை.
கவுண்டர் செந்தில் கொமடி தோற்று விடும்.
நாட்டுக்கு நாடு இவர்கள் கலியாணம் செய்து வைக்கும் முறை மாறுபட்டிருக்கும்.
இவர்கள் சடங்கை கொஞ்சம் மாறிச் செய்யத் தொடங்கியதும் பிரச்சனை தொடங்கிவிடும்..................
இதற்கென்ரே சில சொடக்கு பாண்டிகள் கலியாண வீடுகளுக்கு வந்திருக்கும்.
அதுகள் ஐயர்மாரை ஒரு வழி பண்ணத் தொடங்கினால்...............?
ஐயோ பாவம்..........................
சொடக்கு பாண்டிகள்
பெரும் குளிரில சட்டையில்லாம மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க குளிர் வந்து தாக்கட்டும் என்று வேற கதவை திறந்து விடுங்கள்....................
இவங்களை எதிர்த்தால் கலியாணமே நடக்காது.
பலர் மாப்பிளையின் நண்பர்களாகவே இருப்பார்கள்?
இந்த நேரங்களில் அதிகமாக ஐயருக்கு வழி காட்டியாக இருப்பது வீடியோ இயக்குனர்கள் அல்லது போட்டோ இயக்குனர்கள்தான்.
அவர்கள் கூட உதவுவது வேலை முடிந்து நேரத்துக்கு போய்ச் சேர வேண்டுமென்ற நோக்கில்தான்.
சில ஐயர்மார் வைக்கும் சடங்கு பொருட்கள் குறைந்திருந்தால் வீடியோ தம்பியின் காதில் மெதுவாக முணுமுணுப்பார்.
அது என்ன தெரியுமா?
வீடியோவில் சடங்குப் பொருட்களை எடுக்காமல் காப்பாற்றும்படி சொல்லும் காதோடு மந்திரமே..............
கலியாணத்து வீடியோ தெலுங்கு படம் போல டபிங் செய்யப்பட்டதும் உண்டு.
வந்தவருக்கு சரியாக மந்திரம் தெரியாமல் ஒப்பேத்தப் போய் அந்த வீடியோ ஊருக்குப் போய் மாட்டி விடும் என்ற பயத்தில்
வேறொரு கலியாண மந்திரமும் சினிமா பாடல்களும் கை கொடுத்த சமயங்கள் பல.
என்ன செய்வது தப்பு வீடியோகாரரின் மைக் பிரச்சனை அல்லது ஆட்களின் சத்தம் என குறைகள் திசை திரும்பி விடும்.
வீடியோக்காரர்கள் இதைச் செய்வதற்குக் காரணமே ஐயர் மூலம் கிடைக்கும் ஓடர்களை காப்பாற்றவே...........................
ஐயர் மந்திரம் சொல்ல முன்னோ
அல்லது தாலி கட்டும் மந்திரம் சொல்லு முன்னோ
கடவுளைப் பார்க்கவே மாட்டார்.
வீடியோக்காரரைத்தான் பார்ப்பார்.....................
அவர் தலையாட்டினால்தான் மந்திரமே தொடங்கும்.
இனியாவது கவனித்துப் பாருங்கள்.
வீடியோ கடவுளுக்கு எவ்வளவு பவர் என்று.
எவ்வளவு இருக்கு............................சொல்ல...................???????