MUGATHTHAR Wrote:[b] புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா??????????
இன்று காலை தீபம் தொலைக்காட்சியில் மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பான ஒரு உரையாடல் இடம்பெற்றது. அனேகா; இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. இப்போ தீபம் சந்தாஅட்டை மூலமாகவே ஒளிபரப்பாவதாலும் வேலை காரணமாகவும் நேரம் கிடைத்திருக்காது. சரி நாங்களும் யாழ் களத்தில் இதைப்பற்றி ஒரு கருத்துகளை அலசுவம் என்ன?
புலம் பெயா; மக்கள் எத்தனையோ வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அதை மறுக்கவே முடியாது. முக்கியமாக பொருளாதாரத்தை குறிப்பிடலாம்
இதைவிட
1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)
2) பெண்கள் சுதந்திரம்
3) பிள்ளைகள் சுதந்திரம்
4) சமய.கலாச்சார.கலை அறிவு
5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறது
இப்படி நிறைய நன்மையான விடயங்கள் இருக்கிறது
இதை விட இவர்களுக்குத் தெரியாமலே ஒரு சில பாதிப்புக்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளை சென்றடைகின்றன. நிகழ்ச்சியில் ஒரு நேயா; குறிப்பிட்டது போல வெளிநாட்டில் இருப்பவர்களின் சில உறவுகள் கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இதுக்குக் காரணம் படிப்புச் சரிவராவிட்டால் அண்ணனைப் பிடிச்சு எப்பிடியும் வெளிநாடு போகலாம் எண்ட நினைப்பு இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது.பெற்றோரும் இதையே ஊக்கிவிக்கிறார்கள்
அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே?
இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா??
சரி இதேபோல் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே வையுங்கள்
வணக்கம் முகத்தார் அவர்களே...
உங்கள் கருத்தை இன்றுதான் வாசிக்க முடிந்தது. விளக்கமாகப் பதில் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை முடிந்தால் பின்னர் ஒருநாள் எழுதுகிறேன்.
சாதாரணமாக முன்னேற்றம் என்பது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பின்நோக்கிய நகர்வு என்பது இல்லை. அதாவது ஒரு சமூகம் என்பது முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.
1. மனிதனின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியல் வரலாற்றுப் பாதையானது ஒரு கோடு போன்றது(தொடக்கமும் முடிவும் உடையது)
2. மனிதனின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியல் வரலாற்றுப் பாதையானது வட்டவடிவானது (தொடக்கமும் முடிவும் இல்லை. திரும்பத் திரும்ப ஒரே விடயமே நடந்துகொண்டிருக்கும்)
3. மனிதனின் நீண்டு நெடுத்திருக்கும் வாழ்வியல் வரலாற்றுப் பாதையானது ஸ்பிறிங்க் (தமிழென்ன?) வடிவானது. (திரும்பத் திரும்ப ஒரே விடயம் நடப்பதில்லை. ஆனால் முன்னர் நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் தொடர்பிருக்கும். ஆனால் நிறைய மாற்றங்கள் இருக்கும்.)
இப்படி மூன்று வித கோட்பாடுகள் உள்ளன. இதில் மூன்றாவது சரியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே புலம்பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதே உண்மை. பலரால் கருதப்படுகின்ற சீரழிவுகள் எல்லாம் ஈழத்தில் இருக்கும் பொழுழுதே இருந்தவைதாம். பாலியல் தொழில், போதைப்பொருள் பாவனை, காதலும் ஏமாற்றமும், கள்ளத் தொடர்புகளும், குழுமோதல்களும் எல்லாமும் ஈழத்திலும் இருந்தனதாம். எனவே இவற்றையெல்லாம் பின்னடைவுகள் என்றோ அல்லது பின்நோக்கிய நகர்வு என்றோ சொல்வதற்கில்லை.
தமிழீழத்தைப் பொறுத்தவரை தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டமானது சமூகப் பிரச்சனைகளை மேவி நிற்பதால் சமூகப் பிரச்சனைகள் வெளித்தெரிவதில்லையே ஒழிய இல்லை என்று ஆகிவிடாது. குறிப்பாக ஒரு மனைவி இருக்கும் பொழுதே அவரை விவாகரத்து செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதெல்லாம் நடந்திருக்கின்றன. இந்தப் போர்ச்சூழலிலும் நடந்தேறியுள்ளன என்பதே உண்மை நிலை. ஏறகனவே சமூகத்தில் உள்ள குறைபாடுகளை சீர்கேடுகளை விடுத்து, அதற்கு தனியே ஒருசாரார் மீது பழிசுமத்துவதையும் முதலில் தவிர்த்து எந்தவகையில் புலம்பெயர் சமூகத்தின் முன்னேற்றம் அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்:
1. புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கல்வி சார்ந்த தேடல். துறை சார்ந்த வளர்ச்சி. தொழில் சார்ந்த முன்னேற்றம். இதுவரை தமிழ் சமூகம் கற்றுக்கொள்ளாத துறைகளூடான பயணம் என்பது முன்னேற்றமே. குறிப்பாக Gen Technology, Digital Technology, Micro Technology, Mechtronik போன்ற புதிய துறைகளைக் குறிப்பிடலாம்.
2. புலம்பெயர் இலக்கியம் என்பது கூட தமிழ் இலக்கியத்தின் ஒரு வளர்ச்சி நிலை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
3. புலம்பெயர் சினிமா என்பது ஈழத்தமிழர்களாலும் தனித்துவமான சினிமாவை படைக்கமுடியும் என்பதற்கு சான்றான முன்னேற்றப்பாதை என்பதை யாரும் மறுக்கமுடியாது.
4. புலம்பெயர் மாணவர் அமைப்புக்களும், அவற்றின் தலைமைத்துவப் பண்புகளும், தாயகம் நோக்கிய அவர்களின் தேடல்களும் பயணங்களும் மதிக்கத்தக்கன.
5. தமிழர்களின் ஊடக வளர்ச்சியும், அவற்றினூடான உலகப் பார்வையும் கூட முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.
6. பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கிறது. தமிழீழம் நோக்கியதாகவும், புலம்பெயர் மண்ணின் நிலை சார்ந்ததாகவும் இதனை பார்க்கலாம்.
இன்னும் பல உள்ளன.
இனி பின்நோக்கிய நகர்வு என்று பார்க்காமல் சீரழிவுகள் அல்லது மாற்றப்படவேண்டியவை அல்லது முன்னேற்றப்பாதையில் தடங்கல்களாக முட்களாக இருப்பவை பற்றி கவனிப்பதும் அவசியம். கடல் கடந்துவந்தபோதும் தமிழ் சமூகம் சாதி மத கலாச்சார சாக்கடைகளையும் காவி வந்துள்ளது என்பதே யாதார்த்த நிலை. கோயில்கள், கலாச்சார சடங்குகள் போன்றன இதற்கு சான்று பகர்கின்றன. தமிழ் சமூகத்தில் பெண்நிலை, குழந்தைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பு, சூழலை உணராது தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை என்பனவும் முன்னேற்றத்திற்கான தடைகள்தாம்.
***சீதனம், பெண்மீதான வன்முறை, பாலியல் ரீதியான விவகாரங்கள் (பாலியல் வன்முறை, பாலியல் அடக்குமுறை), பெற்றோர் பிள்ளைகள் இடைவெளி, குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் மீதான திணிப்பு, சாதியப் பார்வை, மதரீதியான நம்பிக்கைகள், மூடச்சடங்குகள் (சாமத்தியச் சடங்கு), அவற்றை மேடைபோட்டு அரங்கேற்றும் நிலை, கலையை வியாபாரமாக்குதல், முழுதாய் கற்றறியாமல் அரங்கேறுதல், இலக்கியத்தை வியாபாரமாக்கிப் பணம் பண்ணுதல், சிறு சிறு காரணங்களுக்கான விவாகரத்துகள், விசாவிற்கான திருமணங்கள், ஈழத்தில் ஒருவரையும் புலத்தில் ஒருவரையும் மணத்தல், குழுமோதல்கள், போதைப்பொருள் பாவனை, பாலியல் தொழில், பாலியல் இன்பம் காண்பதற்காய் வேற்று இனத்துப் பெண்களை ஏமாற்றுதல், இணையக்காதல்கள், பணமோசடி (சீட்டு), கோயில்களுக்கான சண்டைகள், வானொலிகளுக்கிடையிலான மோதல்கள் இன்னும் இன்னும் ...............................
மாற்றம் என்பது ஒரு திடீர்ப் பாய்ச்சலில் நிகழ்வது. ஆனால் அதற்கான பயணம் என்பது நீண்டதாக இருக்கும். எனவே சீர்கேடுகள் சீர்திருத்தப்படுவதற்கான பயணத்தை தொடர்வோம்.
பி.கு.: முடிந்தால் பிறகு இன்னும் விபரமாக எழுதுகிறேன்.