நிதர்சன் மன்னிக்கவும் அறியாமையை அறியாமல் கருத்தாடும் உங்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லும் விடயங்களை விளக்குவதில் பயனில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.
பெண்அடக்குமுறை என்பது உங்கள் வீட்டுக்குள்ளும் பிரியோகிக்கப்படுகிறது என்பதை உங்கள் கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கிறது. கனடாவில் நடக்கும் வியடங்களை இங்கு நிறையவே எழுதலாம். ஆனால் அதற்கான நேரம் இல்லை. நானும் வேலை குடும்பம் குழந்தைகள் என் அறிவு மேம்பாட்டுக்கான படிப்பு ää சமூக வேலைகள் என நிறையவே தலையில் வைத்துக்கொண்டே இக்களத்தில் கருத்தாடுகிறேன்.
சமூக வேலையாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப்பெண்களுக்கான உதவிகளில் ஒரு சேவகியாக இருக்கிறேன். உலகில் பெண்களின் பாதிப்புக்களை நீங்கள் கேட்டே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தினந்தினம் சந்திக்கும் பாதிப்புற்ற பெண்களின் சோகங்களை சுமைகளை இங்கு எழுத எனக்கு நேரமில்லை. அவர்களுக்கான ஆக்கபூர்வமான செயலை நம்மால் முடிந்ததை செய்கிறோம்.
தனியே பெண்கள் என நீங்கள் கருதுவது எமது தமிழ்ப்பெண்களையே. ஆனால் நான் உலகத்துப்பெண்களுடன் சேர்ந்து எங்கள் பெண்களின் அவலங்கள் பற்றியும் அடக்குமுறை பற்றியும் கதைக்கிறேன்.
ஆணுக்கு கோபம் வந்தால் கையோங்க முடியும் அதை பெண்வாங்க வேணும். அப்படித்தானே ? வாழ்க உங்கள் நற்சிந்தனையும் அறிவுரையும். ஆண் பெண் இருவருக்குள்ளும் இருக்கின்ற மனிதத்தை எங்கே கொன்று போட்டீர்கள் ? உங்களைப்போல பெண்களும் வேலைக்குப்போகிறார்கள் பொதுவேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஊதியமில்லாத உழைப்பாக குடும்பபராமரிப்பு குழந்தை பராமரிப்பு எல்லாவற்றையும் செய்கிறாள். குறிப்பிட்ட சிலவிகிதமான ஆண்கள் குடும்பம் குழந்தை பராமரிப்பில் ஈடுபட்டு மனைவியின் சுமையில் பங்கெடுக்கிறார்கள். ஆனால் இதுவே ஒட்டுமொத்தமான பெண்களின் உரிமையையும் பெற்றுத்தந்து விட்டதாய் கூப்பாடு போடும் உங்கள் குழந்தைத்தனமான பதிலுக்கு பதில் சொல்வதை விட்டுவிடுகிறேன்.
பெண்களால் பெண்கள் அடக்கப்படுகிறார்கள் என்றால் உங்கள் மனைவியியைக் கொடுமைப்படுத்தும் மாமி உங்கள் அம்மாவல்லவா. அம்மாவை திருத்த மகனால் முடியாது விட்டால் பிறகெதற்கு உங்களுக்கு உங்கள் மனைவி ? உங்களுக்கான வேலைகளை செய்யும் இயந்திரமாகவா தேவைப்படுவாள் ?
மாமிகளைவிட மாமாக்களும் இப்போ நிறையவே மகளை மருமகளை தங்கையை மனைவியை அடக்குகி ஆழ்கிறார்கள். இது தெரியாதா ?
மாமிகளை உருவாக்குவதே நீங்கள்தான். பிறப்பிலிருந்து கணவன்வரையும் பெண் ஆணுக்கு சேவகியாக இருந்து வரும் சுமையே மாமியானதும் தன்மீதான சுமையை மருமகளின் தலையில் சுமத்துவதற்கு முனைகிறாள். அதையே புரிய முடியாது பெண்மீதான உங்கள் குற்றச்சாட்டுக்களை வைப்பது நான் பிடித்ததற்கு 3கால் என்ற வாதமே தவிர உண்மையான சமத்துவத்துக்கு வழிசொல்லும் தீர்வையல்ல.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதுபற்றி நான் எழுத நினைத்தனை கிருபன் எழுதியுள்ளார். ஆகவே அதைபுரிந்து கொள்ள கிருபனின் கருத்து போதுமானது.
காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு தற்காலக் காதலின் பிரிதல் பற்றி கதையுங்கள். ஊரில் கோவில் திருவிழாக்களிலும் பாடசாலைகளிலும் ஆரம்பித்த காதல் தற்போது இணையம் வரையும் வளர்ந்;து விட்டது.
நீங்கள் குறிப்பிடும் காரணங்கள் கூட பெண்ணை உங்களுக்குள்ளேயே பூட்டிவைத்ததன் வெளிப்பாடே தவிர பெண்ணின் குற்றமல்ல.
புகலிடத்தில்தான் தம்பியின் மனைவியை அண்ணன் அபகரிக்கு முற்படுவதும் தனது தவறை மறைக்க பிறந்த 7நாள் சிசுவுடன் மாடியால் தள்ளி விழுத்தி கொன்றதும் நடக்கிறது. தன்மகளின் வயதையொத்த அன்னி நாட்டுப்பெண்பிள்ளைகளைக்கூட இரண்டாம் மூன்றாந்தாரமாக கூடுவதும் புலத்தில் நடக்கிறது.
இதையெல்லாம் ஒட்டுமொத்த ஆண்களின் தவறாகவோ பெண்களின் தவறாகவோ எடுத்து விளங்கும் விளக்கமின்மையே உங்கள் புலத்தப்பெண்கள் பற்றிய விபரிப்பும்.
நீங்கள் கோடிட்டு காட்டிய பெண்களை வைத்து ஒட்டுமொத்த புலத்துப்பெண்களையும் எடைபோட முயல்வது உங்களது குறுகிய சிந்தனையையும் தேடலில்லாத உங்கள் பார்வையையுமே தெளிவுபடுத்துகிறது.
இந்தக்களத்தில் சிந்தனைத்தெளிவற்று பெண்களின் நிpலையை விளக்குவதுகூட நீங்களும் இன்னும் ஒரு அண்ணாவும்தானே. ஏனைவயவர்களில் கணிசமான அளவு ஆண்கள் யதார்த்தத்தை புரிந்து பெண்கள் நிலை தொடர்பாக தங்கள் கருத்தினை முன்வைக்கின்றார்கள்.
மீண்டும் நிதர்சனுக்கு சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம். தமிழினி ää அம்புலி ää மலைமகள் ää தாரணி ää யாழினி இவர்களின் பெண்ணிலையே எங்களுக்கு வேண்டும்.
இதற்கும் மேல் புரியாது விளித்தால் மன்னியுங்கள் நிதர்சன் உங்களுக்கு பதில் எழுதி பயனில்லை.
உங்கள் போன்றவர்களின் கைதட்டலுக்காகவும் ää ஆமோதிப்புக்காகவும் ää பாராட்டுக்காகவும் ஏங்குவோருக்கு மட்டுமே உங்கள் வாதத்துக்கு வரவேற்புத்தர முடியும்.
:::: . ( - )::::