Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
#61
tamilini Wrote:பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை.. Idea :wink:

பெண்களின் சுதந்திரம் என்பது ஆணுடன் முட்டி மோதி முரண்பட்டு குத்து வெட்டுப்படுவது அல்ல தமிழினி. நீங்கள் இந்த நடைமுறையை கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
ஆண்களை நம்பாதே என பெண்ணும் பெண்களை நம்பாதே என ஆணும் சொல்லிக்கொண்டிருப்பது ஆண்பெண் சமத்துவமான ஆரோக்கிய சமூகத்தை உருவாக்காது.
தமிழினி ஆணாதிக்கம் அடிமனசில் இல்லாத ஆண்கள் இல்லையென்று சொல்ல முடியாது. அதிகமாக பெண் சமத்துவத்தை நேசிக்கும் ஆண்கள் நிறையவே தற்போது இருக்கிறார்கள்.

நமது தேசிய விடுதலைப்போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்பெண் சமத்துவத்தை நோக்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தில் பெண்சமத்துவத்தை நிறுவிய பெருமை நமது தேசியத்தலைவருக்கும் அவருடன் கூடிய ஆண் பெண் தளபதிகள் போராளிகளையுமே சாரும்.

வாதம்புரியும் வல்லமையால் வாதம் செய்ய முடியுமே தவிர சமத்துவமான சமூகத்தை உருவாக்கத்தராது.
:::: . ( - )::::
Reply
#62
Quote:நமது தேசிய விடுதலைப்போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்பெண் சமத்துவத்தை நோக்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தில் பெண்சமத்துவத்தை நிறுவிய பெருமை நமது தேசியத்தலைவருக்கும் அவருடன் கூடிய ஆண் பெண் தளபதிகள் போராளிகளையுமே சாரும்.
என்ன அஸ்வினி அக்கா.. நீங்க சொல்லுங்க தேச விடுதலையில சமநிலை வழங்கப்பட்pருக்கா..?? முக்கியமான பல பகுதிகளில் தலைமையில இருக்கிறது ஆண்கள் தான். அங்க கூட சரியாக முழுமையாக இன்னுமு; நடைமுறைக்கு வரவில்லை. எங்க எங்க ஆண்களும் எங்க எங்க பெண்களும் இருக்கிறார்கள் பாத்துக்கோங்க.. :mrgreen: :mrgreen: :wink: சரி சமனாய் போர்க்களத்தில நிக்கிறாங்க. மற்ற இடங்களில்..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#63

தமிழினி... ஆணும் பெண்ணும் இணைந்ததுதான் சமூகம்..
அங்க சமூக உரிமை நிலை என்பது சமனாக இருக்கும் இருந்துதான் வருகிறது...! இல்ல ஆணோ பெண்ணோ வாழ்ந்திருக்க முடியாது உலகில்...! அதற்காக ஆணும் பெண்ணும் சமன் என்ற நிலை தவறு....! நீங்க அந்த வேறுபாட்டை உணராம கருத்துச் சொல்லுறீங்க...!

நீங்க சுதந்திரம் என்பதால் கருதுவது என்ன...??! அதுக்கு விளக்கம் சொன்னியள் எண்டா எங்கள் கருத்தைத் தெளிவுபடுத்தலாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
பெண்ணின் உரிமைகளை மறுக்க முயலும் குருவிகளும் ஆணாதி்க்கத்தன்மையும் ஆண்களையும் பிரித்து பார்க்கமுடியாத தமிழினியும் ஒரே பிழையான தீர்வைத்தான் கொடுக்க முயலுகிறார்கள்--------------------------------------------------------ஸ்ராலின்
Reply
#65
aswini2005 Wrote:
tamilini Wrote:பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை.. Idea :wink:

பெண்களின் சுதந்திரம் என்பது ஆணுடன் முட்டி மோதி முரண்பட்டு குத்து வெட்டுப்படுவது அல்ல தமிழினி. நீங்கள் இந்த நடைமுறையை கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
ஆண்களை நம்பாதே என பெண்ணும் பெண்களை நம்பாதே என ஆணும் சொல்லிக்கொண்டிருப்பது ஆண்பெண் சமத்துவமான ஆரோக்கிய சமூகத்தை உருவாக்காது.
தமிழினி ஆணாதிக்கம் அடிமனசில் இல்லாத ஆண்கள் இல்லையென்று சொல்ல முடியாது. அதிகமாக பெண் சமத்துவத்தை நேசிக்கும் ஆண்கள் நிறையவே தற்போது இருக்கிறார்கள்.

நமது தேசிய விடுதலைப்போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்பெண் சமத்துவத்தை நோக்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தில் பெண்சமத்துவத்தை நிறுவிய பெருமை நமது தேசியத்தலைவருக்கும் அவருடன் கூடிய ஆண் பெண் தளபதிகள் போராளிகளையுமே சாரும்.

வாதம்புரியும் வல்லமையால் வாதம் செய்ய முடியுமே தவிர சமத்துவமான சமூகத்தை உருவாக்கத்தராது.

எனி பெண்கள் சும்மா சுதந்திரம் சம உரிமை என்று உச்சரிக்கும் போது தெளிவாக உச்சரியுங்க...சமூக நிலைச் சம உரிமை...ஆணுக்கு பெண் சமநிலையல்ல...என்பதை தெளிவாக வேறுபடுத்தி உச்சரிப்பது சிறந்தது...! ஆண் தலைமைத்துவச் சமூகம் என்பதே இன்றும் மனித சமூகத்தின் நிலை....அதில் மாற்றங்கள் கோருங்கள் வரவேற்கலாம்...ஆனால் ஆணுக்கு நீங்க சமனானவர்கள் என்ற வாதம் அர்த்தமற்றது...! அதற்குள் ஒழித்து வைத்திருக்கும் உண்மைகளையும் வெளியிடத்தவறாதீங்க...! காரணம்...அது புரியாம ஏமாறி சீரழியிற பெண்களின் எண்ணிக்கை உலகில் அதிகரிச்சுக் கொண்டே போகுது...உங்க நன்மைக்குதான் சொல்லுறம்,,,! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
தன்னைத்தானே திருத்தினா சமூகம் தானாகவே திருந்துமாம். முதல் உங்கள் தலைமைத்துவப் பண்பிலிருந்து வெளியிலை வாங்கோ. அதுவே ஆண்பெண் சமத்துவத்துக்கான தீர்வை இலகுவாக கொண்டுவரும்.

தன்னை வழிநடத்த தன்னை வழிப்படுத்த தெரியாமல் யாரும் இங்கு இல்லை. சிலருக்கு தாங்கள் தலைமைத்துவப்பண்பாளர்களாக இருப்பதாக எண்ணிக் கொள்வதில் பிரியம். அதை நிறைவு செய்ய இப்படி ஆலோசனை அறிவுரை என வருவது வளமைதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#67
stalin Wrote:பெண்ணின் உரிமைகளை மறுக்க முயலும் குருவிகளும் ஆணாதி்க்கத்தன்மையும் ஆண்களையும் பிரித்து பார்க்கமுடியாத தமிழினியும் ஒரே பிழையான தீர்வைத்தான் கொடுக்க முயலுகிறார்கள்--------------------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் என்ன அடிப்படையில் குருவிகள் ஆண் ஆதிக்கம் சொல்கிறது என்றீங்க...உங்களுக்குள்ளும் (தலைமைத்துவ உணர்வை எங்களால் காட்ட முடியும்...நீங்கள் மனிதன் என்ற நிலைக்குள் இயற்கையால் இன்னும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீங்கள் என்பதை நிரூபித்து உங்களுக்குள் உள்ள ஆண் சமூக தலைமைத்துவ (தலைமைத்துவத்தை ஆதிக்கமாகவே நீங்க பலர் கருதுறீங்க) பண்பை எங்களால் இந்த நொடியில் கூட காட்ட முடியும்...! சும்மா கதையளந்து பெண்களை ஏமாற்றாதீங்க...இப்படி ஏமாந்துதான் பெண்கள் தினம் தினம் சுதந்திரம் என்ற போர்வையில் சீரழிய அதுவே அநாகரிகமாக புதிய நாகரிகமா வளர்ந்தும் வருகிறது...இது மனிதனை அழிவுக்கே இட்டுச் செல்லும்...இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லையேல் இப்போ மனித இனம் அழிந்திருக்கும்..உங்க கதையைக் கேட்டிருந்தா...! நீங்க சுதந்திரம் என்து செய்ய முனையுற அநாகரிகங்களைச் செய்திருந்தா...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
tamilini Wrote:
Quote:நமது தேசிய விடுதலைப்போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்பெண் சமத்துவத்தை நோக்கிய தேசிய விடுதலைப்போராட்டத்தில் பெண்சமத்துவத்தை நிறுவிய பெருமை நமது தேசியத்தலைவருக்கும் அவருடன் கூடிய ஆண் பெண் தளபதிகள் போராளிகளையுமே சாரும்.
என்ன அஸ்வினி அக்கா.. நீங்க சொல்லுங்க தேச விடுதலையில சமநிலை வழங்கப்பட்pருக்கா..?? முக்கியமான பல பகுதிகளில் தலைமையில இருக்கிறது ஆண்கள் தான். அங்க கூட சரியாக முழுமையாக இன்னுமு; நடைமுறைக்கு வரவில்லை. எங்க எங்க ஆண்களும் எங்க எங்க பெண்களும் இருக்கிறார்கள் பாத்துக்கோங்க.. :mrgreen: :mrgreen: :wink: சரி சமனாய் போர்க்களத்தில நிக்கிறாங்க. மற்ற இடங்களில்..?? :wink:

நீங்கள் ஆண்தலைமைத்துவத்தையும் தளபதிகளை மட்டுமே அறிந்துள்ளீhகள் தமிழினி. உங்கள் தமிழினி என்ற பெயரிலேயே தமிழீழ பெண்கள் அரசியல்துறையையே வழிநடாத்தும் தலைமைத்துவப்பண்புடன் ஆழுமையான தமிழினி முதல் ஆயிரமாயிரம் பெண் தளபதிகள் தலைமை வகிக்கும் போராளிகள் இருக்கிறார்கள். இவர்கள் பற்றி நேரம் கிடைக்கின்ற போது தருகிறேன் நீங்கள் அறிந்து கொள்ள. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#69
stalin Wrote:பெண்ணின் உரிமைகளை மறுக்க முயலும் குருவிகளும் ஆணாதி்க்கத்தன்மையும் ஆண்களையும் பிரித்து பார்க்கமுடியாத தமிழினியும் ஒரே பிழையான தீர்வைத்தான் கொடுக்க முயலுகிறார்கள்--------------------------------------------------------ஸ்ராலின்

ம் அதுதான் எனது கருத்தும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#70
பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;
. .
.
Reply
#71
kuruvikal Wrote:
stalin Wrote:பெண்ணின் உரிமைகளை மறுக்க முயலும் குருவிகளும் ஆணாதி்க்கத்தன்மையும் ஆண்களையும் பிரித்து பார்க்கமுடியாத தமிழினியும் ஒரே பிழையான தீர்வைத்தான் கொடுக்க முயலுகிறார்கள்--------------------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் என்ன அடிப்படையில் குருவிகள் ஆண் ஆதிக்கம் சொல்கிறது என்றீங்க...உங்களுக்குள்ளும் (தலைமைத்துவ உணர்வை எங்களால் காட்ட முடியும்...நீங்கள் மனிதன் என்ற நிலைக்குள் இயற்கையால் இன்னும் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீங்கள் என்பதை நிரூபித்து உங்களுக்குள் உள்ள ஆண் சமூக தலைமைத்துவ (தலைமைத்துவத்தை ஆதிக்கமாகவே நீங்க பலர் கருதுறீங்க) பண்பை எங்களால் இந்த நொடியில் கூட காட்ட முடியும்...! சும்மா கதையளந்து பெண்களை ஏமாற்றாதீங்க...இப்படி ஏமாந்துதான் பெண்கள் தினம் தினம் சுதந்திரம் என்ற போர்வையில் சீரழிய அதுவே அநாகரிகமாக புதிய நாகரிகமா வளர்ந்தும் வருகிறது...இது மனிதனை அழிவுக்கே இட்டுச் செல்லும்...இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லையேல் இப்போ மனித இனம் அழிந்திருக்கும்..உங்க கதையைக் கேட்டிருந்தா...! நீங்க சுதந்திரம் என்து செய்ய முனையுற அநாகரிகங்களைச் செய்திருந்தா...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

சில உளவியல் அறிஞர்களும் சில மதஙகளும் ஆண்கள் தான் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்கள் கூறின. பின் அவைகள் நிராகரிக்கப்பட்டன.
சம காலத்தில் அரசியல் தலைமைத்துவத்தை வியக்கதக்கவகையில் செய்துகாட்டிய பெண்கள் இஸ்ரேல் கோல்டா மேயர் ,இந்திராகாந்தி,தட்சர். இதில் இந்திராகாந்தி மார்க்கிரட் தட்சர் ஆகியோரின் தலைமைத்துவ ஆளுமை முன் மற்றவர்கள் மண் கவ்வினதை தொடர்புசாதனம் மூலம் கண்டு வியந்திருக்கிறேன்.
பெண்களுக்கும் சுதந்திரம் கொடுக்கிறதுக்கும் மறுக்கிறதுக்கும் இந்த ஆண்கள் யாருங்க-----அவர்களும் வாழ்வியலில் சம பங்கினரே----------------அநாகரிக சீர்கேடுகளை ஏற்படுவதை நானும் எதி்ர்க்கிறேன். இச்சீர்கேடுகளுக்கு பெண்கள் மட்டுமன்றி ஆண்களுமும் அடக்கம்.அநாகரிக சீர்கேடுகள் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதனால் ஏற்படுவதில்லையுங்க .இந்த இழிவு கலாச்சாரநிலையை சில சக்திகள் திட்டமிட்டு உருவாக்கின்றனர் .நீங்கள் சொன்ன விஞ்ஞான தொழில்நுட்பததின் ஒரு பகுதியை அதற்கும் பயன்படுதுகின்றனர். இந்த ஏகாதி பத்தியவாதிகள் தங்களின் ஏகபோக இருப்பை தக்க வைப்பதற்காக ---------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலன்
Reply
#72
Niththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;

பெண் சுதந்திரம் என்றால் என்ன.... எதனிடம் இருந்து சுதந்திரம் பெற விளைகிறது... என்ன நோக்கத்துக்காக...அதன் எதிர்கால செயற்படு வடிவம் என்ன.. அதனால் ஒட்டுமொத்த மனித இனம் சந்திக்க இருக்கும் நன்மைகள்... இதுவரை பெற்ற சுதந்திரம் என்ன எதனிடமிருந்து பெறப்பட்டது...அதனால் கண்ட நன்மை என்ன தீமை என்ன....இதுகளைக் கொஞ்சம் விளக்கிறீங்களா...???! :wink: Idea :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#73
குருவிகள், சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால் நீர் ஊரில் சிங்கள அரசுக்கும், ராணுவத்துக்கும் சேவை செய்து கொண்டு, எச்சிற் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பீர்.

அடக்குமுறைக்கு தமிழ்சமூகம் ஆளானபடியால்தான், அது அடக்குமுறையாளனை எதிர்க்கிறது. சிங்கள அரசு போராட்டத்தை மலினப்படுத்த, தமிழரைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றது.

இதுபோலத்தான் பெண்களும் ஆண் அடக்குமுறைக்கு எதிராகப் போராட. அந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்த உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

உமக்குச் சுதந்திரத்தைப் பற்றி முதலில் யாராவது பாலபாடம் எடுக்க வேண்டும், அதன் பின்புதான் பெண்சுதந்திரம் என்றால் என்னவென்பது உமக்குப் புரியும்.
நீரும், உமக்கு ஆலவட்டம், கொடி பிடிப்போரும் இங்கு நிறையப்பேர் உள்ளனர். நீங்களெல்லாம் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும்போது தூய்மையான உள்ளத்தோடு எழுதுவதில்லை என்றே நான் கருதுகிறேன். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற கருத்தியலில் இறுக்கமாக உள்ள உங்களைப் போன்றோர் எப்படி இனவிடுதலையை ஆதரிக்கமுடியும்?
<b> . .</b>
Reply
#74
kirubans Wrote:குருவிகள், சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால் நீர் ஊரில் சிங்கள அரசுக்கும், ராணுவத்துக்கும் சேவை செய்து கொண்டு, எச்சிற் பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பீர்.

அடக்குமுறைக்கு தமிழ்சமூகம் ஆளானபடியால்தான், அது அடக்குமுறையாளனை எதிர்க்கிறது. சிங்கள அரசு போராட்டத்தை மலினப்படுத்த, தமிழரைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றது.

இதுபோலத்தான் பெண்களும் ஆண் அடக்குமுறைக்கு எதிராகப் போராட. அந்தப் போராட்டங்களை கொச்சைப்படுத்த உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்.

உமக்குச் சுதந்திரத்தைப் பற்றி முதலில் யாராவது பாலபாடம் எடுக்க வேண்டும், அதன் பின்புதான் பெண்சுதந்திரம் என்றால் என்னவென்பது உமக்குப் புரியும்.
நீரும், உமக்கு ஆலவட்டம், கொடி பிடிப்போரும் இங்கு நிறையப்பேர் உள்ளனர். நீங்களெல்லாம் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும்போது தூய்மையான உள்ளத்தோடு எழுதுவதில்லை என்றே நான் கருதுகிறேன். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற கருத்தியலில் இறுக்கமாக உள்ள உங்களைப் போன்றோர் எப்படி இனவிடுதலையை ஆதரிக்கமுடியும்?

கிருபன்ஸ் ஆத்திரப்படாம கேட்க கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்...!

பெண்கள் அடக்கப்படுகிறார்களா...யாரால்... எப்போதெல்லாம் எங்கெங்க...எச்சந்தர்ப்பத்தில்...??! சரி அடக்கப்படுகிறார்கள் என்று ஆதாரத்துடன் சொன்னால் ஏன் அடக்குபவர்களுடன் புரிந்துணர்வு வழியில் அன்புவழியில் சுதந்திரம் பெறவில்லை...???!

கள்வனும் சொல்கிறான் தானும் தொழில் செய்யமுடியாமல் பொலீசால் அடக்கப்படுவதாக ஒடுக்கப்படுவதாக.. அவனுக்கும் விடுதலையின் தேவை இருக்கு...அப்ப அவனும் போராடலாமா... பெண்களைப் போலவே...!

சரி பெண்கள் அடக்கப்பட்டிருந்தால்...அடக்குமுறையால் அவர்கள் என்ன தீமைகளைச் சந்தித்தனர்...சுதந்திரத்தின் பின் என்ன நன்மைகளைச் சாதித்தனர்...சாதிப்பர்...!

ஒரு அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் போராடுவதில் நியாயம் இருந்தால் ஏன் பெண்கள் ஆயுதம் தூக்கி ஆண்களைக் கொன்றுகுவித்து தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்ட முயலாமல்....சும்மா திட்டிக் காலம் கழிக்க வேண்டும்...!

சுதந்திரம் விடுதலை என்பது போன்ற உயர் தொனிப்பொருள் உள்ள பதங்களை எனியும் எள்ளி நகையாடாதீர்கள்..! பெண்கள் தேடுவது சமூகத்தில் தாங்கள் அனுபவிக்கத்தவறிய நியாய உரிமைகளை அனுபவிக்கச் சந்தப்பமே அன்றி..விடுதலையோ சுதந்திரமோ அல்ல...! உரிமைகள் மனிதனுக்கு என்று சட்டப்பாதுகாப்புடன் எங்கும் வழக்கப்படே இருக்கு இன்று...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
kuruvikal Wrote:உரிமைகள் மனிதனுக்கு என்று சட்டப்பாதுகாப்புடன் எங்கும் வழக்கப்படே இருக்கு இன்று...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

சட்டங்களை இயற்றியோர் யார்? சட்டங்கள், ஒழுக்கங்கள் என்பவனற்றை எழுதியோர் எல்லாம் ஆண்களே. ஆண்கள், பெண்களைக் கலந்தாலோசிக்காமல் தாங்களே தமக்குள் முடிவெடுத்து உருவாக்கியவையே இந்தச் சட்டங்களும், ஒழுக்க நெறிகளும். இந்த சட்டங்களும் ஒழுக்கங்களும் பெண்ணின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. பெண்களை சரிசமமாகப் பார்க்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

நீர் பாலபாடம் வேண்டுமென்று கேட்டால், முதலில் பெண்களை இழிவு செய்து கருத்தெழுதுவதை நிறுத்திவிட்டு சமூகத்தில் பெண்களின் நிலையென்ன என்பதனை அறிந்துகொண்டு வாரும். பெண்கள் பிரச்சினைகள் இன்றி தாங்கள் சந்தோஷமாக, தத்தமது அன்றாடக் கருமங்களை, ஆண்களின் இடையூறின்றி செய்கிறார்கள் என்றால் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று ஒத்துக்கொள்கிறேன். (நீர் ஆண்களின் இடையூறின்றி, ஆண்களை தமது கைப்பாவையாகத்தான் பெண்கள் நடாத்துகிறார்கள் என்று சொல்லுவீர் என்பதும் நமக்குத் தெரியும்)

பெண்கள் சரிசமமாக வாழவேண்டும் என்ற தார்மீக உரிமைய வேண்டித்தான் போராடுகிறார்கள் (போராட்டம் என்றால் வன்முறை மட்டும்தான் போராட்டம் என்றில்லை). அவர்கள் ஆண்களை ஏறி மிதிக்க வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை. சம உரிமையுடன் இருக்கிறார்கள் என்று நீர் சொல்ல வருவது, முந்தைய சிறீலங்கா ஜனாதிபதி இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை என்று சொன்னதுபோல. மற்றவர்களை மூடர்கள் என்று எண்ணும் முட்டாள்கள்தான் இப்படி உளறுவார்கள்.
<b> . .</b>
Reply
#76
பெரும்பாலும் சட்டங்கள் என்பது பொது மனிதன் என்ற அடிப்படையில் தான் இயற்றப்பட்டுள்ளன...! ஆண் பெண் வேறுபாடின்றி... சட்டத்தின் முன் சகலரும் சமனாகத்தான் பார்க்கப்படுகின்றனர்...! அதிலும் சில சட்டங்கள் ஆண்களுக்குப் பாதகமாக பெண்களுக்கு அதிகம் சலுகைகள் வழங்குகின்றன....! ஆண்கள் சட்டங்களை இயற்றியதில் தவறிருந்தால் ஏன் பெண்கள் அதைச் சுட்டிக்காட்டவில்லை..அதற்குள் அடங்கி அதை அனுபவிக்கிறார்கள்...! காரணம் சட்டங்கள் மனிதனுக்கு என்றே வரையப்பட்டவை என்பதால்...!

பெண்களுக்கு என்ன எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் இருக்கு... உள்ள உரிமையை அனுபவிக்க ஏன் விடுதலை சுதந்திரம் பேச வேண்டும்...உள்ள உரிமைகளைப் பாவியுங்கள்...யார் தடுக்கின்றார்...தடுப்பவரைத் தடுக்க போதுமான சட்டங்கள் இருக்கு...! பெண்கள் உரிமைகளைப் பாவிக்கத்தவறுவது அடக்குமுறையாகாது...! இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள உரிமைகளைக் கூடப் பாவிக்க முடியாத நிலை அத்துடன் வழங்கப்படும் உரிமைகள் கூட அரைகுறை...அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்படும் நிலை...அதற்கும் பெண்களின் நிலைக்கும் இடையே மிகப் பெரிய தெளிவான வேறுபாடுண்டு...!

எந்தச் சட்டமும் ஆணாதிக்கம் என்ற ஒன்று காட்டி சட்டம் பேசுவதில்லை..எந்தச் சட்டத்திலாவது...ஆண் ஆதிக்கம் என்று இருக்கா..??! அப்படி வரையவும் முடியாது என்பது சட்ட வல்லுனர்களுக்குத் தெரியும்...! அவர்கள் உங்களைப் போல அன்றி யதார்த்தத்தோடு சட்டங்களை இயற்றுகின்றனர்...!

கிருபன்ஸ் உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமையை உண்டு எங்கிறீர்களே பெண்கள் அனுபவிக்கும் எத்தனையோ உரிமைகளை ஆண்கள் அனுபவிக்க முடிவதில்லை...அதற்காக நீங்கள் ஏன் ஆண்களுக்கு குரல் கொடுக்கவில்லை...! குறிப்பாக கடின வேலைத்தளங்களில் ஆண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்... கடின வேலைகள் வழங்க்கப்படுகின்றன...! பெண்கள் நீண்ட விடுமுறைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்களின் வேலைகள் ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன...மேலதிக வேலைப்பழு ஏற்றப்படுகிறது...! இரவு நேரக் காவல்கடமைகளில் ஆண் தொழிலாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்...பெண்கள் அல்ல....! இப்படி ஏராளம் சலுகைகள் என்ற போர்வையில் ஆண் உரிமை மறுப்புக்கள் நிகழ்கின்றன....! இவை உங்கள் கண்ணுக்குப் படவில்லையோ...இப்ப விவாகரத்துக்கும் டேற்றிங் போறத்துக்கும் சம உரிமை கேட்கும் நீங்கள் ஏன் இவற்றைக் கருத்தில் எடுக்கதவறுகிறீர்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
சட்டம் ஒரு கழுதை முன்னாலை போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும் ஏறினால் சவாரி விடலாமென்று சட்டத்தைப்பற்றி நேரு கூறியிருந்தார். சட்டங்களில் எப்பொழுதும் ஓட்டைகள் வைக்கப்பட்டு ஒரு சாரருக்கு சாதமாகவே எப்பவுமே உருவாக்கப்பட்டுள்ளது----------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்.
Reply
#78
தூயா பபா உங்கள் பட்டிமன்றத்துக்கு தேவையான தலைப்பு இங்க இருக்கு அதோட கார சாரமான விவாதம் நடககுது.

குருவி அண்ணா தங்களது கருத்தின் படி விவாகரத்து தப்பு எண்டா பெண் கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும பொறுத்து போக வேணுமா

டேற்றிங் போறதுக்காகவா எல்லாரும் பெண் சுதந்திரம் கேக்கினம் மிகவும் தவறான கருத்து.

எனது சொந்த வாழ்க்கையில் எந்த விதமன அடக்குமுறையையும் நான் சந்திக்கவில்லை ஆனால் தொழில் முறையில் ஆண்களால் மிகவும் மோசமாக பாதிக்கப் பட்ட பெண்களை சந்தித்து இருக்கிறன்.

இப்படியான ஆண்களின் அடககுமுறைகளில் இருந்துதான சுதந்திரம் தேவையே தவிர ஆண்களை எதிரியாக கருதுவது பெண் சுதந்திரம் ஆகாது
. .
.
Reply
#79
Niththila Wrote:பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெண்களை தரக்குறைவாக கதைப்பது பல ஆணாதிக்கவாதிகளது பொதுக்குணம் அப்படி பேசுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை முடக்க முயலுவார்கள். இது எனது தந்தையார் எனக்கு சொன்ன கருத்து. இதனை நான் கருத்துகளத்தில் பல முறை கண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரை கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ள முடியாதவர்கள் தான இப்படியானவர்கள்;

ஆத்தாடி அம்மாவின் அடக்குமுறைக்குப் பயந்து அப்பா ஏதாவது புலம்பியிருப்பார். அதைப் போய் பெரிசாய் எடுத்திட்டீங்க. பாவம் பிழைக்கத் தெரிந்த மனிஷன்.
Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#80
Quote:நிதர்சனின் நிதர்சனமான தெளிவின் புரிதல் நன்றாகவே புரிகிறது. கிலோவும் தொன்னும் உங்கள் வாய்களில் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதுதான் ஆணவம் மேலோங்கி சமூகத்தின் சமபங்காளிகளின் உரிமைகளை மதிக்கத் தெரியவில்லை. சமத்துவம் சமானம் என்பது உங்கள் வரையில் அதிகாமாகிப்போயிருப்பது உங்கள் அறியாமையையே படம்போட்டு விளக்கியிருக்கிறது நிதர்சன்.

இந்தக்களத்தில்தான் யாரோ ஆண்நிலை என்பதே இல்லையென்றார். ஆனால் ஆண்நிலைவாதியாக ஒருவர் இன்னும் ஆணாதிக்க சிந்தனை செயல்களுடன் களத்தில் திணிப்பதை ஏற்றுக்கொள்வாரோ என்னவோ ?

தம்பி நிதர்சன் பலநீண்டகாலமாக பெண்ணின் சுயத்தை ஒளித்து வைத்திருந்த உங்கள் சுயநலங்கள் தற்போது பெண்களின் எழுச்சியில் சாயம்போகிறது. அதனைப்பொறுக்கமாட்டாமலேயே இத்தகைய அதிசுதந்திரம் கொடுத்துவிட்டதாய் கூப்பாடு போடும் இயலாமையே உங்கள் வெளிப்பாடு.

பெண்ணிலைவாதிகள் என்றால் அதன் பொருள் பெண்ணின் நிலையை அதாவது பெண்ணின் நிலமைகளை வெளிச்சொல்வோர். அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.

உங்கள் ஆண்ணிலைவாதம் அடக்கியாழும் தத்துவத்தையே சொல்லி நிற்கிறது.

சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம்.

உங்கள் மூளையின் வேர்வரையும் பரவிநிற்கும் ஆணாதிக்கச் சிந்தனை வெளிப்பாடு காளிதாசர் முதலான ஆதிகால ஆண்கலைஞர்களையும் அக்காலக்கதாநாயகர்களையும் படித்துப்பாருங்கள் ஆணாதிக்கம் அன்றுமுதல் இன்றுவரையும் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் மத்தியில் தற்கொலைகளும் ää மனநோயாளர்களும் ää உளவியற்தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலையும் ää இன்னும் இதர தாக்கங்களுக்கும் உள்ளாகும் பெண்களின் நிலை தாயகம் முதல் புலம்பெயர் தேசங்கள் வரையும் தொடர்வதற்கான காரணங்களும் உங்கள் போன்ற மனநிலையாளர்களின் ஆதிக்க மனப்பாங்கும் ஆதிக்கச் சிந்தனைகளுமே.
மன்னிக்கவேண்டும் அஸ்வினி உங்கள் கருத்துக்கு பதில் கருத்து வைப்பதோ அல்லது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதோ எனது நோக்கமல்ல. நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருப்பது புகலிட தமிழ் பெண்கள் பற்றி. பெண்கள் புகலிடத்தில் அடக்கப்பட்டுள்ளனர் என்றால்.....???? அதை நீங்கள் ஆமொதிக்கிறீர்கள் என்றால்.....??? இங்கே இந்த யாழ் களத்தில் நீங்களோ தமிழினியோ நித்திலாவோ அல்லது சாந்தியக்காவோ மற்றும் ஏனைய கள பெண் உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியாது. அது மட்டுமல்ல... பெண்நிலை வாதியாக தம்மை இனம் காட்டும் சிலர் தமது பிரபல்யத்துக்காக பெண் அடிக்கப்பட்டுள்ளால் என்று சொல்லாம் அனால் அவர்கள் அந்த கருத்தை எழூத அவர்களுக்கு சுகந்திரம் இருக்கிறது எனில்.... அதற்க்கு காரணம் யார்? ஆணாணவன் வேலைக்கு சென்று ஒழுங்காக தனது குடும்பத்தை நிர்வகிப்பதால் தான் (சில பெண்களும் வேலைக்கு பொகின்றனர் இல்லை என்று சொல்லவில்லை) சில சமயம் உங்கள் நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டிருக்கலாம் ஆனால் தமிழ் பெண்கள் அடக்கப்படவுமில்லை அடங்கி வாழவுமில்லை....அச்சம் மடம் நாணம் பயப்பு இவைதானாம் பெண்ணுக்கு சிறப்பு அவற்றை இல்லாமல் ஆக்குவது தான் பெண்ணுக்கு சுகந்திரம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் சுகந்திரத்துக்காக போராடுங்கள்....பெண் சமூகத்தில் இருந்து பெண்களுக்கு விடுதலையை வேண்டுங்கள்.. பெண்கள் பெண்களால் அடக்கப்படுவதை மழுங்கடிக்கப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அதன் பின் ஆண்கள் அடக்குகிறார்கள் என்ற கரத்தக்கு வாருங்கள்.. தாம்மை கவனிக்கவே நேரமின்றி புகலிடத்தில் ஆண்கள் திரிகையில் உங்களை அடக்க வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்க்க ஆண்கள் பயித்தியங்கள் அல்ல. இக்கருத்துக்களை ஆண் என்ற நிலையில் இருந்து நீங்கள் எழுதுவதாய் நினைத்தால் தராளாலமாய் நினையுங்கள். நான் கனடாவில் வாழுகின்றேன் இங்கு நடக்கும் சில விடயங்களளை தெரிவிக்க விரும்புகின்றேன். இங்கு பெண்களால் காதல் என்ற வார்த்தை எதற்காக பயன் படுத்தப்படுகின்றது???? தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே.. அவற்றை எல்லாம் மீறி உண்மைக் காதலாய் வருவது 25 வீதத்தினரே! அதை விட கேவலமான விடையங்களும் பல நடக்கிறது... வேற்றினத்தவருடன் திரிவதையோ அல்லது அவர்களை திருமணம் செய்வதையோ நான் தவறாக சொல்ல வில்லை. ஆனால் அவர்கள் காம ஆசைக்கு மட்டும் ஆளாகி எத்தனை பெண்கள் இருக்கின்றனர்? அதைப்பற்றி அவர்களின் பெற்றவர்கள் கூட கேட்க முடியாது கேட்டால் வரம் பதில் இது எனது தனிப்பட்ட விடயம் ( that's my personal) இந்த வார்த்தை பெரும்பால கணவன் மனைவிகளுக்கிடையிலும் பாவிக்கப்படுவதை பார்க்க முடியும். எனக்கு தெரிந்து பிரிந்த குடும்பங்களில் பலவற்றின் பிரிவுக்கு ஒரு சாதாரண பிரச்சினையே காரணமாகிறது. சிற்சில சந்தர்ப்பத்தில்களைப்பால் வரும் கணவன் தவறாக பேசினாலே அல்லது தப்பி தவறி கை பட்டாலோ காவல்துறை அழைக்கப்படகின்றது. இதனால் என்ன வரும்? அவர்கள் தமது சட்டத்தின் படி அடுத்த 7 நாட்களுக்கு வீட்டுப்பக்கமே கணவன் வரமுடியாது இங்கே ஆரம்பிக்கிறது விரிசல்... இதற்க்கு என் சொல்கின்றீர்கள் அஸ்வினி... உண்மையில் பெண்களுக்கு சில சமூகப்பிரச்சினைகள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் அதற்க்கு பெண்களே காரணம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)