Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
நான் என்ன சொல்கிறேன் என்றால் நடைமுறைக்கு ஏற்றவகையில் முதலில் பஸ் என்பதை பேரூந்து என்றும் றெயின் என்பதை தொடரூந்து என்றும் அவசியமானவற்றை முதலில் ஏற்றுக்கொண்டு திருத்துவோம்.
இங்கும் சில நடைமுறைப்பிரச்சனைகள் உண்டு. அதாவது தொடரூந்து என்பது பெரிய சொல்லாகி சொல்வதற்கு கடினமாக இருக்கிறது.
தொடரூந்து எத்தனை மணிக்கு வரும்? என்று சொல்வது நீண்டுவிட்டது.
ஆக செய்யவேண்டியதை முதலில் செய்வோம்.
அதைவிடுத்து
<b>"அவனுக்கு மாங்காயீரலில் நோயுள்ளதால் மாங்காயீரல் பண்டுவம் செய்யவேண்டும் என வைத்தியர் சொன்னார்"</b>
<b>
"தம்பி தான் வளர்த்த பொழுதுவணங்கியும் பூத்திருப்பது கண்டு பொந்திகை கொண்டான்"</b>
என கதைக்க எழுதவேண்டுமென நினைப்பது ஆரோக்கியமானதா?
.
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
நன்றி கலை
உங்களிடமிருந்து மேலும் தூய தமிழ்ச் சொற்களை எதிர்பார்க்கிறோம்.
<b>
?
- . - .</b>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
தமிழ் வாணன் நீங்கள் இதையே நீண்டு விட்டது சொன்னாள் மற்றவற்றை என்ன சொல்வீர்கள்....ரெயில் என்பதை..வேறு எப்படி தமிழில் சருக்கமாய் அழைப்பது.. எல்லாவற்றையும் சொல்வது இலகு ஆனால்... நடைமுறையில் அவை சாாத்தியமற்றவை
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அடுத்த வீட்டு அம்மா அழகாக இருக்கிறாள் என்பதற்காக அவளையா அம்மா என்றழைப்பது?
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
இது தமிழ்ச்சொல்தான் என்பதை உறுதியாக சொல்லகூடிய அவ்வாறு தூயதமிழில் குறைந்தது 50 சொற்களில் ஒரு பந்தியை யாராவது இங்கு <b>சுயமாக</b> எழுதினால் நானும் உங்கள் பேரணியில் இணைந்துகொள்கிறேன்.
.
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
நான் நீங்கள் கருதுவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் உடனடியாக செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன என்பதைதான் நான் சொல்கிறேன்.
கலை அவர்கள் சொல்கிறார்:
அதாவது சூரியன் என்பதற்கு கதிரவன் என்ற அழகான தழிழ்ச் சொல் இருக்கும்போது ஏன் நாம் சூரியன் என்று பாவிக்க வேண்டும்.
நான் என்ன சொல்கிறேன் என்றால் <b>சண்ரீவி</b> என்று சொல்வதை ( அது கூட <b>சன் டிவி</b> ஆகிவிட்டது) முதலில் சூரியதொலைக்காட்சி என்றாவது மாற்றமுயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
நீங்கள் 100வீதம் வேண்டும் என்கிறீர்கள். நான் படிப்படியாக முன்னேறிசெல்வோம் என்கிறேன்.
உங்கள் அனைவரின் தமிழார்வத்துக்கும் நன்றிகள்.
.
Posts: 106
Threads: 8
Joined: Nov 2003
Reputation:
0
<b>தமிழ்ச்சொல்----------------------வடசொல்</b>
மகிழ்ச்சி--------------------------சந்தோசம்
மருப்பு---------------------------தந்தம்
மறை-----------------------------வேதம்
முகில்-----------------------------மேகம்
முறை-----------------------------நீதி
வஞ்சினம்-------------------------சபதம்
வனப்பு---------------------------காவியம்
வியப்பு---------------------------ஆச்சரியம்
விலங்கு--------------------------மிருகம்
வெள்ளுவா----------------------பௌர்ணமி
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
எனக்கொரு சந்தெகம் கலையக்கா :?
விலங்கு எண்டால் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் எல்லாத்துக்கும் பொதுவா சொல்றதெண்டு நினைச்சன். மிருகம்: சிங்கம் புலி நாய் கழுதை குரங்கு; பறவை: கிளி, காகம், குருவி, மயில்; விலங்கு: மனிதர், புலி, கிளி இப்பிடித்தான் நினைச்சிருந்தன். இப்ப விலங்கெண்டுறது எத சொல்றதுக்கு பயன்படுது? மனுசர் சிங்கம் புலி கிளி காகம் எல்லாத்தையுமா இல்லாட்டி தனிய சிங்கம் புலி போன்றவற்றை மட்டுமா?
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
பூனைக்குட்டிக்கான பதில்: :roll:
கல்தோன்றி மண்தோன்றி முன்தோன்றாக் காலத்தே(?) பிறந்தது தமிழ்க்குடி என்றால் கூடுதலான சொற்கள் தமிழிலிருந்துதான் பிறமொழிக்கு சென்றிருக்க வேண்டும்.
தற்போது பல ஆங்கில சொற்களையே(முன்னர் அவ்வாறு கருதப்பட்ட) அவை அடிப்படையில் தமிழ் சொற்களே என அறிஞர்கள் நிறுவி வருகிறார்கள். எனவே இச்சொற்களும் எதிர்காலத்தில் தமிழ்ச்சொற்கள் தான் என நிறுவப்படலாம்.
எனவேதான் நான் சொல்கிறேன். இந்த விடயத்தில் முக்கியமான விடயத்துக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள்.
ஒரு சொல்லை பிழை என்றும் மற்றயதை தவறென்றும் சொல்வதானால் அதனை நிறுவவேண்டும். அதனை அப்போதுதான் ஏற்றுக்கொள்ளமுடியும்.
உதாரணத்துக்கு சூரியன் வடமொழி சொல் என்றும் அதன் அடி தமிழ் அல்ல என்றும் நிறுவவேண்டும். பின்னர் கதிரவன் என்பது சூரியனை குறிக்கும் தமிழ்ச்சொல் என நிறுவவேண்டும்.
அதனைவிடுத்து எழுந்தமானதாக இதனை தவறென்றும் அதனை சரியென்றும் சொல்லமுடியுமா? என்பதே என் கேள்வி.
அப்படி அல்லாமல் அதற்கான நிறுவல்கள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்துவதன் மூலமே அவை வலிதாகும்.
.
Posts: 98
Threads: 18
Joined: Mar 2005
Reputation:
0
மேலும் தமிழ் என்பது கூட இந்த வடிவில் ஆதியில் இருக்கவில்லை என்பதையும் பலரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறேன்.
திரவிடம் ---> திரமிளம் ---> திரமிழம் ---> தமிழம் ---> தமிழ்
இவ்வாறான ஒரு படிறையான வளர்ச்சியில்தான் "தமிழ்" ஏ பிறந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் தற்போது நாம் எழுதும் தமிழ் எழுத்து வடிவங்களோ அல்லது வசன அமைப்புகளோ அங்ஙனம் இருந்ததில்லை என்பதையும் தற்போது ஆதி தமிழ் எழுத்தாவணங்களை பார்த்து "மொழி பெயர்க்க கூடிய எவரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என நினைக்கிறேன்.
ஏன் இதனை சொல்கிறேன் தமிழின் அடிப்படைகளை மாற்றாமல் தமிழ் மாற்றமடைந்துள்ளது என்பதையும் இன்னும் புதிய மாற்றங்கள் வரும் என்பதையும் கொள்க.
.
Posts: 118
Threads: 3
Joined: Jan 2005
Reputation:
0
தமிழ் நாட்டு தொலைக்காட்டி பெயரை நங்கள் மாற்றவா....அட பாவிங்களா தொலைச்சிடுவன் மவனுகள... நாங்கள் யார் தமிழின் தாய் வீடு நாங்கள் ஆங்கித்தை தமிழ்ல கலப்பம் தமிழை ஆங்கிலத்தில் கலப்பம் ஈழத்தமிழ் முட்டாள் வேண்டுமென்றால் தமிழுக்காய் உயிர் கொடுக்கட்டும் நாங்கள் மானப்பிறவிகள் எங்களுக்கு எங்கள் வீட்டுப்பிரச்சினைதான் முக்கியம் உழை உண் உடு படு சாவு...இந்த இரண்டெழுத்து வாக்கியங்கள் தான் எங்கள் தாரக மந்திரம் எவனாவது சண் ரீவியை சூரியன் தொலைக்காட்சி என்றோ ராஸ் ரீவியை ராஜா தொலைக்காட்சி என்றோ கதைச்சீக்க அவ்வளவு தான்...
ஆமா நம்ம தொலைகாட்சிகள் தானெ ஆங்கிலபெயால இருக்கு பேந்தேன்டா நீங்கள் கள்ளக்காட் பொட்டு அதை பாக்கிறீங்க....அதுமட்டுNமு உங்கடை ஆக்கள் தயாரிக்கற படங்களை கூட நீங்கள் நிராகரிக்கிறீங்கள் பிறகெதுக்கு உங்களுக:கு தமிழுணர்வு... தனித்துவமாய் ஏதாவது செய்யுங்க எங்களை கொப்பி பண்ணி படமெடுக்காதீங்க. எங்களை கொப்பி பண்ணி நாடகம் எடுக்காதீ;க..பாடல் படிக்கிறதுக்கு எங்கடை கலைஞர்களிட்ட வரதையுங்கோ... தனிச்சிறப்பொட எடுத்து வெற்றி பெறுங்க அதுக்கு பிறகு எங்களிட்ட கலைகளைப்பற்றி கதையுங்க.....
(நான் ஒரு இந்தியனாய் இருந்து பதில் சொன்னேன்)
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
திரவிடம் ---> திரமிளம் ---> திரமிழம் ---> தமிழம்
தமிழ்வாணன் இதை
தமிழ் ---> தமிழம் ---> திரமிளம் ---> திராவிடம்
என்று பாருங்கள்
தமிழ் என்ற சொல் ஆரியர்களின் உச்சரிப்புக்களினாலேயே திராவிடம் என வந்ததாக கூறுகிறார்கள்.
<b>
?
- . - .</b>