05-10-2005, 01:11 AM
<img src='http://img165.echo.cx/img165/1830/wave23ox.jpg' border='0' alt='user posted image'>
நெஞ்சினில் நெருக்கமாக
நெருங்கி உறவாடிடும்
நினைவலைகள்
மிஞ்சி வழிகிறதே
அணைகள் ஏதுமின்றி...!
நினைவலைகள் மோதிடவே
பொங்கிடும் ஞாபகக்கடல்...!
அடங்கிடாத மனமதுவும்
ஆசையுடன் ஆர்ப்பரிக்கும்...!
ஆதங்கமாய் ஞாபகங்கள்
அடியதனை விடைகேட்கும்
அடியிலருந்து விடைபெற்று
மேல் நோக்கி நீந்திடவே...!
நீந்திய ஞாபகத் துளிகள்
கண்களைப் பனிக்க வைக்கும்...!
கண் நீர்த்துளிகள்
ஆறாக அணி சேர்ந்து
நதியாகி தரையை முட்டும்...!
எட்டிய ஞாபகங்கள்
தட்டியே எழுப்பிடுமே
பொக்கிஷமாய்
பூட்டி வைத்த
பொன்னான நாட்களையே....!
செயற்கையான மின்னொளியை
விஞ்சிய
இயற்கையான நிலவொளியில்
அம்மாவுடன் கொஞ்சி
கும்மாளமடித்த
குழந்தைப் பருவம்
பசுமரத்தாணியாய்
நெஞ்சில் பதிந்திருக்கிறதே...!
பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
மனமதனை மகிழ வைக்கும்
மழைக்காலம்
பாடப்புத்தகங்களுக்கு
வேட்டு வைக்கும் காலமது...!
படித்த பாடங்கள் கப்பலாக
மழை நீரில் தத்தளித்து
கரை சேர்ந்திட துடிதுடிக்கும்...!
கப்பல் செய்த களிப்பு
இறுதியாண்டு பரீட்சையினை
மறக்கடிக்க செய்துவிடும்...!
ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!
ஒன்றில்லை இரண்டில்லை
ஒராயிரம் ஞாபகங்கள்...!
இதயத்தின் ஓரத்தில்
அடக்கமாய் அடங்கியிருந்தாலும்
அவ்வப்போது அடங்காது
கடலாக ஆர்ப்பரிக்கும்
கடந்த கால
பசுமையான
நினைவலைகள்...!
நெஞ்சினில் நெருக்கமாக
நெருங்கி உறவாடிடும்
நினைவலைகள்
மிஞ்சி வழிகிறதே
அணைகள் ஏதுமின்றி...!
நினைவலைகள் மோதிடவே
பொங்கிடும் ஞாபகக்கடல்...!
அடங்கிடாத மனமதுவும்
ஆசையுடன் ஆர்ப்பரிக்கும்...!
ஆதங்கமாய் ஞாபகங்கள்
அடியதனை விடைகேட்கும்
அடியிலருந்து விடைபெற்று
மேல் நோக்கி நீந்திடவே...!
நீந்திய ஞாபகத் துளிகள்
கண்களைப் பனிக்க வைக்கும்...!
கண் நீர்த்துளிகள்
ஆறாக அணி சேர்ந்து
நதியாகி தரையை முட்டும்...!
எட்டிய ஞாபகங்கள்
தட்டியே எழுப்பிடுமே
பொக்கிஷமாய்
பூட்டி வைத்த
பொன்னான நாட்களையே....!
செயற்கையான மின்னொளியை
விஞ்சிய
இயற்கையான நிலவொளியில்
அம்மாவுடன் கொஞ்சி
கும்மாளமடித்த
குழந்தைப் பருவம்
பசுமரத்தாணியாய்
நெஞ்சில் பதிந்திருக்கிறதே...!
பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
மனமதனை மகிழ வைக்கும்
மழைக்காலம்
பாடப்புத்தகங்களுக்கு
வேட்டு வைக்கும் காலமது...!
படித்த பாடங்கள் கப்பலாக
மழை நீரில் தத்தளித்து
கரை சேர்ந்திட துடிதுடிக்கும்...!
கப்பல் செய்த களிப்பு
இறுதியாண்டு பரீட்சையினை
மறக்கடிக்க செய்துவிடும்...!
ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!
ஒன்றில்லை இரண்டில்லை
ஒராயிரம் ஞாபகங்கள்...!
இதயத்தின் ஓரத்தில்
அடக்கமாய் அடங்கியிருந்தாலும்
அவ்வப்போது அடங்காது
கடலாக ஆர்ப்பரிக்கும்
கடந்த கால
பசுமையான
நினைவலைகள்...!
" "
" "
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->