tamilini Wrote:சரி அந்தச்சொல்லில்.. ஏதாவது தவறிருக்கா என்ன.. இப்ப <b>ஈழத்தமிழர்.. இந்த சொல்பாவிக்கிறதில்லை</b> என்றது நமக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.
கற்புஅழித்துவிட்டான் என்றால் அந்த <b>பெண்ணின் கற்பை அழித்துவிட்டான்</b> என்று.. பொருள்படும். அந்த பெண்ணின் வாழ்வு அத்துடன் அழியுது என்று பொருளா அதற்கு. இப்ப தான் சொல்லுறார்கள் <b>கற்பு மனதோடும் சம்பந்தப்பட்டது</b> என்கிறார்கள். ஆனால் நம்மாக்கள் கற்பு என்றால் உடலோடு சம்பந்தப்படுத்தித்தான் இப்பவும் பார்க்கிறார்கள். அந்த வகையில கற்;பழிப்பு என்பது.. அழிப்பு என்ற பொருளில் எடுத்தம் நாங்க..
XXXXXXXXXX என்ற சொல்லிற்கு தமிழில் அர்த்தம் இருந்தால்.. தேவைப்பட்டால் பாவிக்கதானே வேணும். ஆக மொத்தம்.. நான் சொன்ன கற்பழிப்பு என்ற சொல்லிற்கு.. ஏற்ற அல்லது பொருத்தமான சொல் வன்புணர்வு என்றியள்.. அதை ஏற்றுக்கொண்டம். அதற்காக கற்பழிப்பு தவறு என்றதாய் அர்த்தம் அல்ல..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழினி...
கற்பழிப்பு என்கிற சொல்லை ஈழத்தமிழர்கள் பயன்படுத்துவது பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வைக் குறிப்பிடத்தான். இந்தச் சொல் பொதுமக்கள் மத்தியில் இன்னும் வழக்கில் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான ஊடகங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை முற்றாக இல்லாவிடினும் பெருமளவு நிறுத்தியுள்ளார்கள். சில கட்டுரைகளில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டுவதற்காக அப்படியே அந்தச் சொல்லையும் மாற்றாமல் எடுத்துக்கொள்வார்கள். ஆனாலும் சில செய்தியாளர்கள், கட்டுரையாளர்கள் இன்னமும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.
ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல் பெணகள் மீதான் பாலியல் வன்புணர்வைக் குறிப்பதற்குத்தான் கற்பழிப்பு என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. நீங்களே அதனை "கற்பை அழித்துவிட்டான்" என்கிற சொல்லாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் நடத்தப்படுவதில்லை. அது ஆண்கள் மீதும் நடத்தப்படுகிறது. எனவே அந்தசமயத்தில் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த நமது சமூகத்தால் முடிவதில்லை.
கற்பு என்பது மனதோடும் சம்பந்தப்பட்டது என்று நீங்கள் எழுதியிருப்பது, கற்பு உடலோடும் சம்பந்தப்பட்டது என்பதை நீங்களும் இன்னும் நம்புவதாகவே அமைகிறது. கற்பு என்பது நமது அங்கங்கள் போன்று அதாவது கால், கை, தலை போன்று ஒரு உறுப்பு/அங்கம்/பொருள் அல்ல என்பதை முதலில் உள்வாங்கவேண்டும். எனவே கற்பு பொருளாக அல்லது உறுப்பாக இருக்கும் எனின் அதை அழிப்பது சாத்தியம். கையை வெட்டி வீழ்த்தினால் கை இல்லை - கையை அழித்தாயிற்று. அதுபோலவா கற்பும்? இல்லைத்தானே! ஆணுறுப்பு பெண்ணுறுப்புள் வன்முறையைப் பயன்படுத்தி/விருப்பத்துக்கு மாறாக தன் விந்துவை செலுத்துவதால் எதுவும் அழிந்துவிடாதுதானே? அல்லது அழிக்கப்படாதுதானே?
கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்தது என்று கொள்ளும்போது அது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானதே. இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அப்படி அது ஒழுக்கநெறி சார்ந்ததெனின் இன்னொருவர் அதை அழிக்கமுடியாது. தானேதான் தன் ஒழுக்கத்தை மீறஇயலும். எனவே இங்கும் கற்பழிப்பு என்கிற சொல்லை பயன்படுத்த முடியாது.
பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரம் என்கிற சொற்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் கற்பழிப்பு என்று கூகிளில் கொடுத்து தேடியது போன்று, நான் இங்கு குறிப்பிட்டுள்ள சொற்களைக் கொடுத்துத் தேடிப்பாருங்கள். நீங்கள் முன்னர் குறிப்பிட்ட தினக்குரல் நாளிதழிலும் அந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இறுதியாக: கற்பழிப்பு என்கிற சொல்லை எந்தவிதத்திலும் பாலியல் வன்முறையைக் குறிப்பதற்கு பயன்படுத்தமுடியாது. குறிப்பாக பெண்கள் மீது இந்த சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நமது சமூகத்தின் ஆதிக்கக் கருத்தினையே வெளிப்படுத்தும்.
குழைக்காட்டான் குறிப்பிட்டது போல் கற்பழிப்பு என்கிற சொற்பதம் தவறானதே. நீங்கள் சொல்வது போல் சரியானது என்று வைத்துக்கொண்டால், அதனை எதற்கு பயன்படுத்த முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
Quote:...
செயற்கைக்கும் இயற்கைக்கும்
ஆயுட் போராட்டம்
நவீனம் உயிரினங்களைக்
கற்பழித்துக் கொண்டிருக்கிறது
கறுப்புக்கும் வெள்ளைக்கும்
காதல் தோல்வி
...
மேலுள்ள வரிகள் என்னுடைய ஒரு பழைய கவிதையில் உள்ள சில வரிகள். இங்கு நான் கற்பழிப்பு என்கிற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மேலே கற்பழிப்பு என்ற சொல் தவறானது என்று சொல்லிவிட்டு எனது கவிதையில் அதனை பயன்படுத்தியுள்ளேன் - எதனால் என்பதை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். முடியாவிட்டால் நான் மேலே எழுதியுள்ள கருத்துக்களை மறுபடி வாசித்துபாருங்கள் - விளங்கலாம்.