Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
#81
கண்ணன் கால இடைவெளி நீளமானாலும் கனமாக வந்துள்ளீர்கள்..பாய்ஸ் க்கு விமர்சனமல்ல..என்றாலும் திரைப்படபகுப்பாய்வு தேவையென்பதை அழகாக தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.
தமிழ் திரைப்படங்களிலும் பகுப்பு முறையிருக்கிறது..நீங்கள் தனித்தனியாக பகுத்துச் சொன்னவைகள்
░-> பலாத்காரம்
░-> sex
░-> பயங்கரம்
░-> போதை வஸ்து அல்லது வேறுதுர்பழக்கங்கள்
░-> துவேசம்
░-> கெட்ட வார்த்தைகள்
<b>(கண்ணனின் தரவிலிருந்து)</b>அனைத்தும் .ஒரேபடத்தில் விகிதாசாரஅளவில் கலக்கப்பட்டு எமக்குத் தரப்படுகிறது. அதுதான் மேலைத்தேயப் படங்களுக்கும், தமிழ்ப்படங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடு

-
Reply
#82
நன்றி கண்ணன்,
தேவையான போது தேவையான விளக்கங்களை எழுதக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

[u]<b>இந்திய சினிமா தணிக்கை முறை</b>

திரைப்படத் தணிக்கை , திரைப்பட வரலாற்றின் ஆரம்ப கால கட்டத்திலேயே ஏற்பட்டது.
மதம்
அரசியல்
சமூகம்
போன்ற காரணங்களுக்காக தணிக்கை முறை ஏற்பட்டது.

மதச் சட்டங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றிற்கு கருத்துகளைச் சொல்லும் போதும் கடவுளரை இழிவுபடுத்தி திரைப்படங்களை எடுக்கும் போதும் மதங்களைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

அரசுக்கு எதிராக எடுக்கப்படும் படங்களில் அரசின் கொள்கைகளையும், அரசின் மேல் குற்றச் சாட்டுகளையும் கூறியதால் அரசு இத்தகைய படங்களை எதிர்த்தது.

காமத்தையும், வன்முறையையும், ஏனைய குற்றங்களையும் துாண்டிவிடும் விதத்தில் எடுக்கப்படும் படங்களை சமுதாயக் கண்ணோட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் எதிர்த்தனர்.

இதன் விளைவால் தணிக்கை முறை ஏற்பட்டது.திரைப்படத் தயாரிப்பு முடிந்ததும், திரையிடுமுன் தணிக்கை குழுவிற்கு திரைப்படம் வரும். தணிக்கையில் தப்பான பகுதிகள் நீக்கப்படும். மாற்றம் செய்யச் சொல்லியும் திரைப்படம் வெளிவரும்.சில படங்கள் திரையிடத் தடையும் விதிக்கப்படும்.

கமியுனிசம், சர்வாதிகாரம் மற்றும் மதச்சார்பு நாடுகளில் அரசே திரைப்படங்களைத் தணிக்கை செய்கிறது.

அமெரிக்கா,பிரிட்டன்,ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஜனநாயக நாடுகளில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களே தணிக்கை செய்து கொள்கின்றனர்.இந்த தணிக்கையை போலீஸ் துறை ஏற்கவோ, மறுக்கவோ மாற்றவோ அதிகாரமுண்டு.

சில நாடுகளில் , அதாவது பெல்ஜியம்,சுவீடன், டென்மார்க்,சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் திரைப்படத்தை தணிக்கை செய்யாமலே வெளியிடும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் அரசால் நியமிக்கப்பட்ட திரைப்படக் குழு திரைப்படங்களை தணிக்கை செய்கிறது. இதில் தலைவர் ஒருவரும் 12 முதல் 20க்கு குறையாத அங்கத்தினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தியாவிலுள்ள தணிக்கை குழுக்கள் மாநில வாரியாக செயல்படுகின்றன.

திரைப்படத் தயாரிப்பாளர் தணிக்கைக் குழுவிற்கு விண்ணப்பித்த பின்னர் , திரைப்படத்தின் நீளத்தைப் பொறுத்து தணிக்கை கட்டணம் செலுத்த வேண்டும்.

தணிக்கை குழு குறிப்பிடும் நாளில் திரைப்படத்தின் பிரதியை , வீடியோவில் பதிவு செய்து,

பதிவு செய்யப்பட்ட வீடியோ கெசட்,
கதை,
வசனம்,
ஷாட் முதலிய விளக்கங்கள் அடங்கிய
சென்சார் ஸ்கிரிப்ட் முதலியவற்றை தணிக்கை குழுவிடம் கையளித்தல் வேண்டும்.

பின்னர் தணிக்கை குழு படத்தை பார்த்து படத்திற்கு என்ன சான்றிதழ் வழங்குவதென முடிவெடுப்பார்கள்.

<b>இந்திய திரைப்பட சான்றிதழ்கள் 4 வகைப்படும்.

அவை [b]U, A , U/A, S</b> எனப்படும்.

<b>U</b> - அனைத்து மக்களும் பார்க்கலாம்.
<b>(Unrestricted Public Exhibition)</b>

<b>A</b> - 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கத் தகுந்த படம்.
<b>(Adults only)</b>

<b>U/A</b> -12 வயதற்கு உட்பட்டவர்கள் பெரியோரின் அனுமதியுடன் பார்க்கத் தகுந்த படம். பெரியோரும் பார்க்கலாம்.


<b>S</b> - விசேட பிரிவினர் மட்டும் பார்க்கத் தகுந்த படம். இவை மருத்தவர், இரானுவம் மற்றும் குற்றவியல் நிபுணர்களுக்கென்று தயாரிக்கப்படும் விசேட படங்களாகும்.

இந்த சான்றிதழ் பெறும் படங்கள் அந்தந்தத் துறையைச் சார்ந்தவர்களைத் தவிர்ந்த வேறு எவரும் பார்க்க அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

இந்த 4 பிரிவுகளில் எந்தப்பிரிவில் படத்திற்கு சான்று வேண்டும் என்று தயாரிப்பாளர் கோரலாம்.

இந்த கோரிக்கைக்கு ஏற்ப திரைப்படத்தில் மாற்றங்களைச் செய்ய தணிக்கை குழு கோரும். அவர்களுடைய கருத்தை தகுந்த காரணங்களுடன் ஏற்கவோ மறுக்கவோ தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் உரிமையுண்டு.

தணிக்கை குழு திரைப்படத்திற்கு தடையும் விதிக்கலாம்.

அப்படி தடை ஏற்படும் போது தலைமை தணிக்கை குழுவான ட்ரிப்யுனலுக்கு அப்பீல் செய்யலாம்.

அங்கு தம் நியாயங்களை எடுத்துக்கூறி முடிவாகக் கிடைக்கும் சான்றிதழைப் பெற்று திரைப்படத்தை வெளியிடலாம்.

உங்கள் கவனத்திற்கு:-
(Boys திரைப்படம் U/A சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.)

தொடரும்..................

நன்றி:மதன் கேப்ரியேல்
சென்னை திரைப்பட கல்லுாரி விரிவுரையாளர்.

[b]"A cultural value that is disappearing from the Earth."
-Werner Herzog

நட்புடன்
AJeevan
info@ajeevan.com
Reply
#83
Boys படத்தைப் பற்றி எத்தனைவிதமான விமர்சனங்கள்.......... படத்தை பார்த்துவிட்டும், பார்க்காது விமர்சனம் செய்தோரின் கருத்துக்களைப் பார்க்கும்போது இவை இளைய தலைமுறையினரின்........வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா ? என்ற கேள்விதான் ஏற்படுகிறது.
சுமார் 20 வருடங்களுக்குமுன் வெளிவந்த வயது வந்தோருக்கான திரைப்படங்களை தற்போதைய காலகட்டத்தில் பார்க்கும்போது அவை சாதாரண படங்களாகவே தெரிகிறது.
இந்த கால பாய்ஸ் போன்ற திரைப்படங்ளை இன்னும் 20 வருடங்களின்பின் பார்க்க நேரிட்டால் இந்தப் படங்கள் சாதாரண படங்களாகவும் ஒருவேளை இருக்கலாம்.
உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

In friendship you have full safety, love has no guarantee - boys

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#84
tamilchellam Wrote:Boys படத்தைப் பற்றி எத்தனைவிதமான விமர்சனங்கள்.......... படத்தை பார்த்துவிட்டும், பார்க்காது விமர்சனம் செய்தோரின் கருத்துக்களைப் பார்க்கும்போது இவை இளைய தலைமுறையினரின்........வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா ? என்ற கேள்விதான் ஏற்படுகிறது.
சுமார் 20 வருடங்களுக்குமுன் வெளிவந்த வயது வந்தோருக்கான திரைப்படங்களை தற்போதைய காலகட்டத்தில் பார்க்கும்போது அவை சாதாரண படங்களாகவே தெரிகிறது.
இந்த கால பாய்ஸ் போன்ற திரைப்படங்ளை இன்னும் 20 வருடங்களின்பின் பார்க்க நேரிட்டால் இந்தப் படங்கள் சாதாரண படங்களாகவும் ஒருவேளை இருக்கலாம்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
சிலருக்கு வாழ்க்கையே பிரச்சாரம்.. சிலருக்கு பிரச்சாரமே வாழ்க்கை.. நல்லகாலம் ஜனநாயக நாட்டிலிருக்கிறோம்.. பிழை சரி நாம் பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.. கடைசி பகுத்தறிவை உபயோகித்து பார்ப்பதா விடுவதா என்பதை தீர்மானிப்பதுகூட எங்களால் முடிகிறதே.. அதையிட்டு சந்தோஷப்படுவோமாக.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#85
ம் மதவுப்பிளான் தான் இதுகும்:என்ன செய்யிறது. மதவிலை இருந்தவைக்கு அந்த பழக்கம் தானே வரும். கருத்தை கருத்தாக ஏற்க பழகுங்கள். அதன் உண்மைதன்மைகளை உணர முற்படுங்கள். அதை விட்டிட்டு மதிவிலை இருந்து போறவாற சில பெண்களிடம் மட்டுமே சேட்டை விடற மாதிரி இருக்கு. உங்கள் நடவடிக்கை.

kuruvikal Wrote:ஏனக்கா....கராத்தேயும் யோகாவும் எண்டு றிஸ்க் எடுக்கிறியள்...ஒரு சாமிப்படத்தை வைத்து பஞ்சதோத்திரங்களையும் ஒரு ஐந்து நிமிடம் மனதை அடக்கி படிக்கக் கற்றுக்கொடுங்கோ அது போதும்...எங்கட ஆசிரியர்மார் பெற்றோர் அப்படித்தானே சொல்லித்தந்தவை....! அதுக்குப் பிறகுதான் நாங்கள் யோகாப்பயிற்சிக்குப் போனனாங்கள்.....! முதலில செய்ததுதான் பின்னையதற்கு பெரிதும் உதவினது...! இது அறியாப் பருவத்தில கராத்தே கற்று பிறகு அறிந்த பருவம் வர கள்ளக்காட்டுப்பறிக்க வழி சொல்லுறியள் போலவும் கிடக்கு....!எதுக்கும் தீர யோசித்து கராத்தேயை அறிந்த பருவத்தில் கற்கிறது நல்லம் போலக் கிடக்கு....!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#86
கண்ணன் Wrote:நான் மேலே குறிப்பிட்டது எதுவும் BOYS கான விமர்சனம் இல்லை ஆனாலும் சங்கர் அவர்களின் திருகுதாளங்கள் பற்றி பத்திரிகையில் பார்த்தேன்.
தமிழருக்காக தமிழக மண்ணில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அதே மண்ணிலுள்ள திரைப்படதணிக்கை அமைப்பின் அனுமதி பெறாமல் வேறு மாநிலத்தின் தணிக்கை அமைப்பின் அனுமதி பெற்று தமிழர்களுக்கான தணிக்கை அமைப்பபை முட்டளாக்கி தமிழர்களும் அவர்கள் கலாச்சாரமும் மண்ணாங்கட்டீயும் என்று துட்சமாக எண்ணி பணம் தான் குறி என்று எண்ணி செயற்படும் ஒரு இயக்குனரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.


கெட்டவார்த்தை ஏதோ பேசியுள்ளதாகவும் அறிந்தேன். அது எப்படியோ எனக்குத்தெரியாது.
ஆனால் எனது குறும்படங்களில் தேவையேற்படும் பட்சத்தில் அப்படியானவசனங்களை சேர்த்துக்கொள்வேன். ஆனால் மனிதகுலம் வெட்கி தலைகுனியாத வசனமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமெடுப்பேன்.
எனக்குத்தெரியும் எனது குறும்படம் ஒரு குறிகியவட்டத்தினருக்கு மட்டுமே
அதே படம் 6 வயது சிறுவர்களுக்கு சென்றடைய கூடிய சாத்தியம் ஏற்படும் போது இப்படியான கெட்ட வார்த்தைகளையும் தவிர்ப்பேன்.
ஏற்கனவே இந்திய தணிக்கை முறை பற்றி எழுதியிருக்கிறேன். இது முழு நாட்டுக்கான தணிக்கை முறைதானே தவிர, தமிழ் நாட்டுக்கு மட்டுமென மட்டுப்படுத்தப்படவில்லை.

தமிழ் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தமிழ் மொழியில் மட்டுமல்ல, மொழி மாற்றம் செய்யப்பட்டு
1.சென்னை
2.NSC - வட - தென் ஆற்காடு,
3.MR - மதுரை - ராமநாதபுரம்
4.TK - திருநெல்வேலி, கன்னியாக்குமரி
5.TT - திருச்சி, தஞ்சாவுர்
6.கோவை - நீலகிரி மாவட்டம் உட்பட
7.சேலம்
ஆகிய பகுதிகளில் தமிழ் மொழியிலும்
மற்றும்

மொழி மாற்றம் செய்யப்பட்டு அல்லது தமிழில்
8.கர்நாடகா ( கன்னடம் )
9.கேரளா ( மலையாளம்)
10.ஆந்திரா (தெலுங்கு )
11.வட இந்தியா (Hindi)

12. வெளி நாடுகள் (தமிழில்)
திரையிடப்படுகின்றன.

இந்தியாவின் சகோதர மொழிகளாகக் கருதப்படும் ஏனைய மொழிகளுக்கோ அல்லது தமிழுக்கோ இந்த மாநிலத்தில்தான் தணிக்கை செய்ய வேண்டுமென்ற நியதியில்லை.

ஊமை விழிகள் கூட பம்பாயில் தணிக்கை செய்யப்பட்டது.
மத்திய அரசுக்கு கட்டுப்பட்டே சினிமா மற்றும் தொலைக் காட்சிகள் செயல்படுகின்றன.இல்லாவிடில் Boys படத்தில் பொடா சட்டத்தால் அப்பாவிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய காட்சி தமிழக அரசால் நிச்சயம் கத்தரிக்ப்பட்டிருக்கும்.

நான் இதுவரை பார்த்த சங்கரின் படங்களில் Boysசில்தான் சங்கர் யதார்த்த வாழ்வை சித்தரிக்க முயன்றிருக்கிறார் என்பது அப்பட்டமான உண்மை.இதுவரை நான் சங்கரை ஒரு போதும் சிறந்த இயக்குனராக கருதியதேயில்லை. Boysசில் மாறியிருக்கிறார்.
<b>
Boysசில்</b>
:oops: இளைஞர்கள் கெடுவதற்கு காரணமானவர்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

:oops: இளமைத் துடிப்பால் இளைஞர்கள் சிறு வயதில் செய்யும் தவறுகளால் அவர்களது வாழ்வு எப்படி சிதையும் என்பதைக் கூறியிருக்கிறார்.

:oops: காதல் மயக்கத்தால் நடுத் தெருவுக்கு வந்து நாயாய் அலைய வேண்டிய வேதனையை இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.

:oops: பசிக் கொடுமை தாங்க முடியாமல்,வாழ்ந்து சாதிக்க வேண்டுமென்ற வெறியில்,ஏன்? ஏது? என்று கூடத் தெரியாமல் (நக்சலைட்டுகளுக்காக)பாட்டெழுதி சிறையில் புழுவாய் அந்த இளைஞர்கள் படும் சித்திரவதையையும், இந்திய சிறையின் அவல நிலையையும் சித்திரமாக்கியிருக்கிறார்.

:oops: இவ்வளவுக்கும் மத்தியில் ஆதரவாக வரும் ஒரு (விவேக்) சின்னக் கலைவாணரையும் , அதே ஆதரவுக்கரத்தால் துவண்டு கிடக்கும் இளைஞர்களுக்கு துணிவு சொல்லி வாழ்கையில் போராடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்.

:oops: தன்னோடு வாழ்ந்து உயிர் பிரிந்த நண்பனுக்காக அவர்கள் உருகும் போது இளைஞர்களது நட்பின் வலியைத் தாங்க முடியவில்லை.

:oops: அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு, மகள் தந்தையிடம்
"அப்பா, ஏன்பா எனக்கு ஹரினியென்னு பேர் வச்சீங்க? உங்க பழைய காதலியை மறக்க முடியாமதானே எனக்கு அந்த பேரை வச்சீங்க. அவங்க தலை முடியை இன்னும் டைரியில மறைச்சு வச்சிருக்கீங்க.ஆனா எனக்கு மட்டும் என் முனாவை மறக்க சொல்றீங்களே?"
என்று அப்பன் முகத்தில் கோடு படிய வைக்கிற போது எந்த பெரிசுக்கு படம் பார்க்க தோணும்?

ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு துளி கருமை படிந்தாலும்,அந்த கருமைதான் கண்ணைக் குத்தும்,பெரிசா இருக்கிற வெண்மை நமக்குத் தெரிவதேயில்லையே?
ஏன்?????????????

நல்ல விடயங்களை பார்க்காமல், கெட்டதையே பெரிதுபடுத்துவதற்கு காரணம் அவரவர் உறுத்தல்களே?

There are good or bad subjects,there's only the way in which they are seen.

பார்க்கிறவன் பார்வையைப் பொறுத்தது இந்த உலகம்.........
நல்லதை நினைப்போம்.
நல்லதே நடக்கும்.
Reply
#87
அதை விட பிள்ளைகளின் உளவியல் தொடர் பாக நிறைய கூறலாம். கூட்டுக்குடும்ப சுூழல் இட நெரிசல் ஒற்றை அறை வாழ்க்கை முறை அவற்றால் குழந்தைகளின் உளவியல் நிறைய பாதிக்கிறது. அதன் பிரதி பலிப்புக்கள் தான் இவை .(ஆதிக்கம் செலுத்துவதாக நான் நினைக்கிறேன். படம் பாத்தால் தான் மிகுதி புரியும்.)
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#88
இப்ப எல்லரும் என்னத்தைப்பற்றி எழுதுறீங்கள்.. போய்ஸ் படம் பார்க்கக்கூடியதா இல்லையா என்பது பற்றித்தானே.. கராத்தே.. யோகாசனம்.. தேகப்பியாசம்.. எல்லாம் எங்கையப்பா வந்தது எல்லாரும் சேர்ந்து.. குழப்புறீங்களப்பா..

18 வயதுக்குக் கூடவெண்டால் போய்ப்பாருங்கப்பா.. ஒருத்தரும் ஒண்டும் சொல்லமுடியாது.. (அப்பன்அம்மா உட்பட)
முன்னமும் இதைத்தான் சொன்னேன்.. நீங்கள் இருப்பது ஜனநாயக நாடு.. அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட எதையும் நீங்கள் 18 வயதிற்குப்பின் செய்யலாம்.. பிறகு என்ன பெரிய சர்ச்சை.. அது சரியோ.. இது பிழையோ.. என..

12 வயதுக்குமேல் யாரும் பார்க்கலாம்.. என தணிக்கைக்குழு அறிவித்திருக்கிறது.. நீங்கள் கிழடுகள் பார்க்கலாமோ விடலாமோ என ஆராச்சி செய்கிறீர்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#89
nalayiny Wrote:அதை விட பிள்ளைகளின் உளவியல் தொடர் பாக நிறைய கூறலாம். கூட்டுக்குடும்ப சுூழல் இட நெரிசல் ஒற்றை அறை வாழ்க்கை முறை அவற்றால் குழந்தைகளின் உளவியல் நிறைய பாதிக்கிறது. அதன் பிரதி பலிப்புக்கள் தான் இவை .(ஆதிக்கம் செலுத்துவதாக நான் நினைக்கிறேன். படம் பாத்தால் தான் மிகுதி புரியும்.)
இவ வந்திட்டா உளவியல் மனோ தத்துவவியல் கொண்டு.. படம்.. பார்க்க விருப்பமெண்டால் பாருங்கோவன்.. அதுக்குப்பிறகு நல்ல படம் அல்லது கூடாத படம் எண்டு சொல்லுகோவன்.. பிள்ளையளுக்கு 12 வயதுக்கக் குறைவெண்டால் நீங்கள் பார்த்து அதுகளை பார்க்க விடுறதோ இல்லையோ எண்டு அதுக்குப்பிறகு முடிவு செய்யுங்கோவன் ..
இங்கத்தய 12 வஙது பிள்ளைகள் அங்கத்தய 16 வயது பிள்ளைகளுக்குச் சமன்..

அங்கிருந்து இடையில் வந்து இரண்டும்கெட்டான் நிலையில் இருப்பவர்களின் பிரச்சனை காணாததைக் கண்டவர்களின் பிரச்சனை. அதற்கு நாம் எதுவும் செய்யமுடியாது. ஏதொ உங்கள் பிள்ளைகளுக்கு 16 வயதுவரை நல்லது கெட்டது சரி பிழை சொல்லவேண்டியது நீஙகள். அதை நினைவில்வைத்திருந்து செயற்பட்டால்ச் சரி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#90
Mathivathanan Wrote:18 வயதுக்குக் கூடவெண்டால் போய்ப்பாருங்கப்பா.. ஒருத்தரும் ஒண்டும் சொல்லமுடியாது.. (அப்பன்அம்மா உட்பட)
முன்னமும் இதைத்தான் சொன்னேன்.. நீங்கள் இருப்பது ஜனநாயக நாடு.. அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட எதையும் நீங்கள் 18 வயதிற்குப்பின் செய்யலாம்.. பிறகு என்ன பெரிய சர்ச்சை.. அது சரியோ.. இது பிழையோ.. என..

12 வயதுக்குமேல் யாரும் பார்க்கலாம்.. என தணிக்கைக்குழு அறிவித்திருக்கிறது.. நீங்கள் கிழடுகள் பார்க்கலாமோ விடலாமோ என ஆராச்சி செய்கிறீர்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இது ஜனநாயகம்.................... வாழ்க...............

12வயதுக்கு மேல் பார்ப்பது கூட தப்பென்றால் மகாகவி பாரதியார் உட்பட ஏகப்பட்டவர்கள் 13வயது பாலகர்களை திருமணம் செய்து கொண்டது தப்பாகாதோ?

இளைஞர்கள் மிக மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.


பெரியவர்களாக நடிப்பவர்கள் மட்டுமே தெளிவு பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.ஆஸ்கார் அவார்டுகளை இவர்களுக்கு கொடுக்கலாம்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் இவர்கள் தம்மை மறுபரிசீலனை செய்து கொள்ளாவிடில். இங்குள்ளவர்களுக்கு வயோதிப விடுதிகள் இருப்பது போல் இவர்களுக்கு ஒரு வகை விடுதிகளை கட்ட வேண்டிவரும்.

இதுவரை படம் பார்க்கும் போது என்ன தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை பார்த்தோம் என்று கூட தெரியாமல் படம் பார்த்த மேதாவிகள், இனியாவது படம் தொடங்குமுன் காட்டப்படும் தணிக்கை சான்றிதழையாவது பாருங்கள்.

(Camera copy அல்லது எழுத்தோட்டம் மற்றும் முக்கியமான பகுதிகளை ரிமோட் துணையுடன் ஓட விட்டு பார்ப்பவர்கள்,மன்னிக்கவும்)
Reply
#91
உண்மையைக் கூறுவதானால்
கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்
என்ற முத்திரை குத்தலாம்
HAI FRIENDS
Reply
#92
மகிழ்ச்சி அஜீவன்
உங்கள் போன்றவர்கள் எம்முடன் இருப்பது இந்தியசினிமாவின் செயல்முறை நுட்பங்களை அறிவதற்கு உதவுகிறது.

கடந்த 7 வருடமாக இந்தியதிரைப்படங்கள் அதிகளவில் பார்க்கவில்லை
கடந்த 4 வருடத்தில் 2அரை படம் தான் பார்த்தேன் ( தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டா(ள்)ல், படையப்பா அரைப்படம்.) எனவே BOYS என்ற படத்தை பார்த்தால் கூட மற்றபடங்களுடன் அதை ஒப்பிட்டு BOYS இல் அப்படி என்ன புதிதாக முன்னைய படங்களில் வராத ஆபாசம் வன்முறை உண்டு என்று என்னால் கூறமுடியாது.
ஆனாலும் முன்னைய வயதுவராதவர்களுக்கான படங்களில் ஆபாசம் வன்முறை இருந்திருந்தால் அதுவும் தவறு
அதே தவறு மீண்டும் வரும் போது முன்னைய தவறை சுட்டிக்காட்டி முன்னைய படங்களில் வராத ஆபாசமா வன்முறையா வந்துவிட்டது என்று ஆபாசத்திற்கும் வன்முறைக்கும் வக்காலத்து வாங்குவது அறிவுபுூர்வமானதல்ல மாறாக BOYS இல் அப்படி எதுவித ஆபாசம் வன்முறை இல்லை எனில் அதை மட்டும் சொல்லுங்கள்

மற்றது

[quote=AJeevan]
இதுவரை படம் பார்க்கும் போது என்ன தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை பார்த்தோம் என்று கூட தெரியாமல் படம் பார்த்த மேதாவிகள், இனியாவது படம் தொடங்குமுன் காட்டப்படும் தணிக்கை சான்றிதழையாவது பாருங்கள்.

(Camera copy அல்லது எழுத்தோட்டம் மற்றும் முக்கியமான பகுதிகளை ரிமோட் துணையுடன் ஓட விட்டு பார்ப்பவர்கள்,மன்னிக்கவும்)


ஒரு பொருளை வாங்கும் போது அந்தப்பொருள் பற்றிய குறிப்புக்கள் வெளியே இருக்க வேண்டுமேஅன்றி உள்ளே அல்ல அதே போல்த்தான் Video பிரதிகளுக்கும் உள்ளேயும் வெளியேயும் அந்த முத்திரைகள் இருக்கவேண்டும்.
இந்த எச்சரிக்கைகள் எந்ததமிழ் video, dvd யிலும் இருப்பதாக தெரியவில்லை என வர்ததகநிறுவன ஊழியர் ஒருவர் மூலம் அறிகிறேன்.
அதைவிட அந்த படத்தை பார்க்க போகிறவர்கள் தமிழர்கள் எனவே அது பற்றிய அறிவித்தலும் தமிழில் தெளிவாக இருக்கவேண்டும். அப்படி நான் பார்த்த எந்தப்படங்களிலும் இருந்ததாக எனக்குத்தெரியவில்லை. சில வேளை ஆங்கிலத்தில் சின்னஞ்சிறிய எழுத்தில் இருந்ததோ தெரியாது ஆங்கில மொழி அறிவு எனக்கில்லை அதனால் அதை புரிந்து கொள்ள முடியாதிருத்திருக்கலாம்.
ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் மேதாவிகளே எனக்குத்தெரியாது ஆனால் நான் சுத்த பாமரன்
Reply
#93
கண்ணன் Wrote:ஒரு பொருளை வாங்கும் போது அந்தப்பொருள் பற்றிய குறிப்புக்கள் வெளியே இருக்க வேண்டுமேஅன்றி உள்ளே அல்ல அதே போல்த்தான் Video பிரதிகளுக்கும் உள்ளேயும் வெளியேயும் அந்த முத்திரைகள் இருக்கவேண்டும்.
இந்த எச்சரிக்கைகள் எந்ததமிழ் video, dvd யிலும் இருப்பதாக தெரியவில்லை என வர்ததகநிறுவன ஊழியர் ஒருவர் மூலம் அறிகிறேன்.
அதைவிட அந்த படத்தை பார்க்க போகிறவர்கள் தமிழர்கள் எனவே அது பற்றிய அறிவித்தலும் தமிழில் தெளிவாக இருக்கவேண்டும். அப்படி நான் பார்த்த எந்தப்படங்களிலும் இருந்ததாக எனக்குத்தெரியவில்லை. சில வேளை ஆங்கிலத்தில் சின்னஞ்சிறிய எழுத்தில் இருந்ததோ தெரியாது ஆங்கில மொழி அறிவு எனக்கில்லை அதனால் அதை புரிந்து கொள்ள முடியாதிருத்திருக்கலாம்.
ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் மேதாவிகளே எனக்குத்தெரியாது ஆனால் நான் சுத்த பாமரன்

இது வீடியோ உரிமையைப் பெற்று வெளியிடுபவர்களின் தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் வீடியோ கெசட்களை அல்லது DVD,VCD போன்றவற்றை வெளியிடும் போது அதற்கான கவர் டிசைன்களைச் செய்பவர்களுக்கு இதுபற்றி தெரிவிக்க வேண்டும்.அத்துடன் இதுவும் ஒரு சட்ட வரையறைக்குட்பட்ட கலைதான்.ஆனால் நம்மிடையே உள்ள பெரும்பாலானவர்ர்கள் இதுபற்றிய எந்தவித கல்வியோ அல்லது அறிவோ இல்லாமல் இவற்றில் ஈடுபடுவதால் இச்சிக்கல் உருவாகிறது.இது பற்றி உரிய இடங்களில் முறையிட்டால் இது தொடராமல் தடுக்கலாம். குறிப்பாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் எப்படிப்பட்டவர்கள் இவ் உரிமைகளைப் பெறுகிறார்கள் என்பது? இவர்களது குறிக்கோள் பணம் புரட்டுவதே தவிர கலைச் சேவையல்ல.

புலம் பெயர் நாடுகளில் உள்ள தொலைக் காட்சிகளை நடத்துபவர்களும் இப்படிப்பட்டவர்களே என்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமும் வேதனைக்குரியதுமாகும். இதில் முக்கியமான தகுதிகளில் இருப்போர் எத்தகைய தகுதியுள்ளவர்கள் என்று ஆராய்ந்தால் புரியும். அண்மையில் ஒருவர் தொலைக் காட்சி ஒன்றுக்கு முக்கியமானவராக தோந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அவருக்கு இந்திய சினிமா நடசத்திரங்களைத் தெரியுமென்பதாம்.தலைவிதி...........

சாதாரணமாகவே தியட்டர்களில் வெளியே ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பர அறிக்கைகளில் இந்த தணிக்கை எழுத்து பொறிக்கப்பட்டு இருக்கும்,இருக்க வேண்டும்.ஆனால் இதை வெகுவானவர்கள் இந்தியாவிலேயே பார்ப்பதில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் சில பொடிசுகள் டிக்கெட் வாங்கி தியெட்டருக்குள் நுழைய வரும் போது டிக்கட் கிழிப்பவர் உள்ளே விட மறுப்பார். தர்க்கம் வரும்.

பொடிசு: நீ முடியாதுண்ணா,ஏன்யா டிக்கட் குடுத்தாங்க? என்று கத்துவான்.

டிக்கட் கிழிப்பவர்:"கண்ணு என்ன குருடா , போய் போஸ்டரை பாருடா கசமாளம்........" என்று கத்துவார்.

பொடிசு: வா வெளியே வச்சுக்கிறேன் " என்பான் பதிலுக்கு.

டிக்கட் கிழிப்பவர்:எந்த வண்டிண்ணு கூட பார்க்காம ஏறிட்டானுக, பொறம் போக்கு........."
என அமளி துமளியே ஏற்படுவதுண்டு.

இலங்கையில் கூட ஆங்கிலப்படங்கள் திரையிடப்பட்டால், திரைப்பட தலைப்புக்குள் விளம்பரத்தில் Adults only அதாவது வயது வந்தவர்களுக்கு மட்டும் என எழுதப்பட்டிருக்கும். மற்றப்படி தமிழ்,Hindi படங்களுக்கு எழுதியதை நான் கண்டது குறைவு. ஆனால் தோரகா என்ற Hindi படத்துக்கும் அதே படம் தமிழ் மொழி மாற்றமாக வந்த விசுணுவர்த்தன் நடித்திருந்த அலை என்று ஞாபகம் (சரியாக பெயர் சொல்ல முடியவில்லை)Adults only என குறிப்பிடப்பட்டிருந்தது.சிங்கள மொழி படங்களில் ஒரு சில இக் குறியீட்டோடு வெளிவந்தன.

ஒன்றுமே விரசமில்லாத ஆங்கிலப் படங்களுக்கும் சில தியெட்டர்களில் Adults only என எழுதியிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அக்காலத்தில் "என்ன படம் பார்த்தீர்கள்?" என்று யாராவது கேட்டால் நாங்களும் Adults only என்றுதான் நண்பர்களுக்கு சொன்னோம். வீட்டில் மட்டும் பக்கத்து தியெட்டரில் ஓடிய ஏதோ தமிழ் படத்தின் பெயரைச் சொன்னோம். நாணும் அப்போ உங்களைப் போல சுத்த பாமரன்தான்.

ஆனால் கண்ணா,
இந்த

http://www.kijkwijzer.nl/engels/epictos.html[/color]

இணைய தளத்தை தேட மட்டும் எங்கிருந்து வந்தது ஆங்கில அறிவு???????????????

துாங்குவோரை எழுப்பலாமாம்.
ஆனால் துாங்குவோர் போல நடிப்போரை எந்தக் கொம்பனாலும் எழுப்ப முடியாதெண்டு சொல்கிறர்ாகள் கண்ணா,உண்மையா?

உன் அன்பு நண்பன்
AJeevan
Reply
#94
உண்மை தான் அஜீவன் தூங்குவது போல் நடிப்போரை எழுப்புவது சற்று சிரமம் தான்

உங்கள் கட்டுரை பிரமாதம்.
தூங்குபவர்களை மட்டுமல்ல ததூங்குவது போல் பசாங்கு செய்பவர்களையும் தட்டி எழுப்பவல்லது உங்கள் எழுத்து.
தொடர்ந்து எழுதுங்கள்.
எல்லோரையும் விழிப்படைய செய்யுங்கள்.
Reply
#95
என்ன ஒருத்தரையும் காணேல்லை..?
<img src='http://www.webulagam.com/cinema/review/0309/01/images/img1030901021_1_2.gif' border='0' alt='user posted image'>
எல்லோரும் பாய்ஸ் பார்க்கப் போயிட்டார்களா?
Reply
#96
பாய்ஸ் பார்க்கச் சொல்லுறீங்கள்.. பார்த்துவிட வேண்டியதுதான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விஸ்ணுவர்த்தன் சந்திரகலா நடித்தது சிறீதரின் அலைகள்.. பொன் என்ன பூவென்ன அஜீவன்.. உன் கண்ணடி உள்ளத்தின் முன்னே.. :wink: தோரகாவின் தமிழாக்கம் சசிகுமார் நிர்மலா நடித்த அவள். ஆடாமல் ஆடுகிறேன்.. பாடாமல் பாடுகிறேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னவோ.. நிர்மலாக்கு கிடைக்காத 'இதயக்கனி" ராதாசலுாஜாக்குதானே கிடைத்தது?! :mrgreen:
.
Reply
#97
sOliyAn Wrote:பாய்ஸ் பார்க்கச் சொல்லுறீங்கள்.. பார்த்துவிட வேண்டியதுதான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
விஸ்ணுவர்த்தன் சந்திரகலா நடித்தது சிறீதரின் அலைகள்.. பொன் என்ன பூவென்ன அஜீவன்.. உன் கண்ணடி உள்ளத்தின் முன்னே.. :wink: தோரகாவின் தமிழாக்கம் சசிகுமார் நிர்மலா நடித்த அவள். ஆடாமல் ஆடுகிறேன்.. பாடாமல் பாடுகிறேன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னவோ.. நிர்மலாக்கு கிடைக்காத 'இதயக்கனி" ராதாசலுாஜாக்குதானே கிடைத்தது?! :mrgreen:

சரியாகச் சொன்னீர்கள் ,நன்றி சோழியான்.

விஸ்ணுவர்த்தன் சந்திரகலா நடித்தது சிறீதரின் <b>அலைகள்</b>

பாடல்வரிகள் மிக அழகானவை:
பொன் என்ன பூவென்ன கண்ணே-உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
மணப்பெண்ணாக உன்னோடு என்னை-புவி
காணாமல் போகாது கண்ணே..........

சரியா? மனதைவிட்டு அகலாத இசையும்,மெட்டும்-பாடலும்............

தோரகாவின் தமிழாக்கம் (Re-make)
திரைப்பட ஒளிப்பதிவின் போது ெஹலிகப்டர் (Helicopter) ஒன்றில் தொங்கி நடிக்க முயன்ற போது கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த கன்னட நடிகர் சசிகுமார் நிர்மலா நடித்த <b>அவள்</b>

பாடல் வரிகள்:-
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன்
வா வா வா..................

இலங்கை - இந்திய தயாரிப்பாக ெஜய்சங்கர் மற்றும் இலங்கை நடிகை கீதா குமாரசிங்க நடித்த தமிழ்படம் கூட வயது வந்தவர்களுக்கு மட்டுமென்று குறிப்பிடப்பட்டு வெள்வத்தை சப்பையர் தியெட்டரில் வெளிவந்து ஓடியது.

அதில் கீதாவுக்கு போதை வஸ்து கொடுத்து கற்பழிக்கும் காட்சியும் ,அங்கு வரும் அண்ணன் ெஜய்சங்கர் நிர்வாணமாக தங்கை கீதா நிற்கும் காட்சியும் இடம் பெற்றிருந்ததால் A முத்திரையுடன்
படம் வெளிவந்தது.

நன்றி சோழியான் தரவுகளுக்கும் நினைவுக்கு கொண்டு வந்ததற்கும்.
AJeevan

திரைப்படங்கள் கீழ்வருமாறு இந்தியாவில் தரம் பிரிக்கப்படுகின்றன:

<b>கதைப்படம்</b>
1.புராணம் (Mythoology)
2.சரித்திரம் (Historical)
3.சமூக சீர்திருத்தம் (Social reform)
4.சண்டை, போர், (Fighting,War)
5.அரசியல் (Political)
6.நாடோடிக் கதைகள் (Folk lore)
7.திகில், துப்பறியும் (Suspence, Detective)
8.மனோதத்துவம் (Phychological)
9.குடும்பப்பிரச்சனை (Family Sentiments)
10.நகைச்சுவை நையாண்டி (Humorous , Satirical)
11.பக்தி (Devotional)
12.குழந்தைப் படங்கள் (Children Films)

<b>உண்மை நிகழ்ச்சிப் படங்கள்</b>

1.கருத்து விளக்கம் (Documentary)
2.செய்தி (News reel)
3.கல்வி (Educational)
4.தகவல் (Information)
5.விளம்பரம் (Advertisement)

நன்றி: நண்பன் K.R.கண்ணன் D.F.Tech
சென்னை திரைப்படக் கல்லுாரி
சென்னை
Reply
#98
AJeevan Wrote:பாடல்வரிகள் மிக அழகானவை:
பொன் என்ன பூவென்ன கண்ணே-உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
மணப்பெண்ணாக உன்னோடு என்னை-புவி
காணாமல் போகாது கண்ணே..........

<b>பிழை திருத்தம்:

பொன் என்ன பூவென்ன கண்ணே-உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
மணப்பெண்ணாக உன்னோடு என்னை-புவி
காணாமல் போகாது [b]பெண்ணே</b>..........
Reply
#99
பாடல் வரிகளுக்கு சென்சார் இல்லையா?இதயக்கனியில் நல்ல பாடலொன்று இருக்கிறது.
Reply
[b]ஒன்றுமறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்றுக் குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம்..........

இந்தப் பாடலா..?
nadpudan
alai
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)