கண்ணன் Wrote:நான் மேலே குறிப்பிட்டது எதுவும் BOYS கான விமர்சனம் இல்லை ஆனாலும் சங்கர் அவர்களின் திருகுதாளங்கள் பற்றி பத்திரிகையில் பார்த்தேன்.
தமிழருக்காக தமிழக மண்ணில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அதே மண்ணிலுள்ள திரைப்படதணிக்கை அமைப்பின் அனுமதி பெறாமல் வேறு மாநிலத்தின் தணிக்கை அமைப்பின் அனுமதி பெற்று தமிழர்களுக்கான தணிக்கை அமைப்பபை முட்டளாக்கி தமிழர்களும் அவர்கள் கலாச்சாரமும் மண்ணாங்கட்டீயும் என்று துட்சமாக எண்ணி பணம் தான் குறி என்று எண்ணி செயற்படும் ஒரு இயக்குனரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
கெட்டவார்த்தை ஏதோ பேசியுள்ளதாகவும் அறிந்தேன். அது எப்படியோ எனக்குத்தெரியாது.
ஆனால் எனது குறும்படங்களில் தேவையேற்படும் பட்சத்தில் அப்படியானவசனங்களை சேர்த்துக்கொள்வேன். ஆனால் மனிதகுலம் வெட்கி தலைகுனியாத வசனமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமெடுப்பேன்.
எனக்குத்தெரியும் எனது குறும்படம் ஒரு குறிகியவட்டத்தினருக்கு மட்டுமே
அதே படம் 6 வயது சிறுவர்களுக்கு சென்றடைய கூடிய சாத்தியம் ஏற்படும் போது இப்படியான கெட்ட வார்த்தைகளையும் தவிர்ப்பேன்.
ஏற்கனவே இந்திய தணிக்கை முறை பற்றி எழுதியிருக்கிறேன். இது முழு நாட்டுக்கான தணிக்கை முறைதானே தவிர, தமிழ் நாட்டுக்கு மட்டுமென மட்டுப்படுத்தப்படவில்லை.
தமிழ் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தமிழ் மொழியில் மட்டுமல்ல, மொழி மாற்றம் செய்யப்பட்டு
1.சென்னை
2.NSC - வட - தென் ஆற்காடு,
3.MR - மதுரை - ராமநாதபுரம்
4.TK - திருநெல்வேலி, கன்னியாக்குமரி
5.TT - திருச்சி, தஞ்சாவுர்
6.கோவை - நீலகிரி மாவட்டம் உட்பட
7.சேலம்
ஆகிய பகுதிகளில் தமிழ் மொழியிலும்
மற்றும்
மொழி மாற்றம் செய்யப்பட்டு அல்லது தமிழில்
8.கர்நாடகா ( கன்னடம் )
9.கேரளா ( மலையாளம்)
10.ஆந்திரா (தெலுங்கு )
11.வட இந்தியா (Hindi)
12. வெளி நாடுகள் (தமிழில்)
திரையிடப்படுகின்றன.
இந்தியாவின் சகோதர மொழிகளாகக் கருதப்படும் ஏனைய மொழிகளுக்கோ அல்லது தமிழுக்கோ இந்த மாநிலத்தில்தான் தணிக்கை செய்ய வேண்டுமென்ற நியதியில்லை.
ஊமை விழிகள் கூட பம்பாயில் தணிக்கை செய்யப்பட்டது.
மத்திய அரசுக்கு கட்டுப்பட்டே சினிமா மற்றும் தொலைக் காட்சிகள் செயல்படுகின்றன.இல்லாவிடில் Boys படத்தில் பொடா சட்டத்தால் அப்பாவிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய காட்சி தமிழக அரசால் நிச்சயம் கத்தரிக்ப்பட்டிருக்கும்.
நான் இதுவரை பார்த்த சங்கரின் படங்களில் Boysசில்தான் சங்கர் யதார்த்த வாழ்வை சித்தரிக்க முயன்றிருக்கிறார் என்பது அப்பட்டமான உண்மை.இதுவரை நான் சங்கரை ஒரு போதும் சிறந்த இயக்குனராக கருதியதேயில்லை. Boysசில் மாறியிருக்கிறார்.
<b>
Boysசில்</b>
:oops: இளைஞர்கள் கெடுவதற்கு காரணமானவர்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
:oops: இளமைத் துடிப்பால் இளைஞர்கள் சிறு வயதில் செய்யும் தவறுகளால் அவர்களது வாழ்வு எப்படி சிதையும் என்பதைக் கூறியிருக்கிறார்.
:oops: காதல் மயக்கத்தால் நடுத் தெருவுக்கு வந்து நாயாய் அலைய வேண்டிய வேதனையை இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.
:oops: பசிக் கொடுமை தாங்க முடியாமல்,வாழ்ந்து சாதிக்க வேண்டுமென்ற வெறியில்,ஏன்? ஏது? என்று கூடத் தெரியாமல் (நக்சலைட்டுகளுக்காக)பாட்டெழுதி சிறையில் புழுவாய் அந்த இளைஞர்கள் படும் சித்திரவதையையும், இந்திய சிறையின் அவல நிலையையும் சித்திரமாக்கியிருக்கிறார்.
:oops: இவ்வளவுக்கும் மத்தியில் ஆதரவாக வரும் ஒரு (விவேக்) சின்னக் கலைவாணரையும் , அதே ஆதரவுக்கரத்தால் துவண்டு கிடக்கும் இளைஞர்களுக்கு துணிவு சொல்லி வாழ்கையில் போராடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்.
:oops: தன்னோடு வாழ்ந்து உயிர் பிரிந்த நண்பனுக்காக அவர்கள் உருகும் போது இளைஞர்களது நட்பின் வலியைத் தாங்க முடியவில்லை.
:oops: அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு, மகள் தந்தையிடம்
"அப்பா, ஏன்பா எனக்கு ஹரினியென்னு பேர் வச்சீங்க? உங்க பழைய காதலியை மறக்க முடியாமதானே எனக்கு அந்த பேரை வச்சீங்க. அவங்க தலை முடியை இன்னும் டைரியில மறைச்சு வச்சிருக்கீங்க.ஆனா எனக்கு மட்டும் என் முனாவை மறக்க சொல்றீங்களே?"
என்று அப்பன் முகத்தில் கோடு படிய வைக்கிற போது எந்த பெரிசுக்கு படம் பார்க்க தோணும்?
ஒரு பெரிய வெள்ளைத்தாளில் ஒரு துளி கருமை படிந்தாலும்,அந்த கருமைதான் கண்ணைக் குத்தும்,பெரிசா இருக்கிற வெண்மை நமக்குத் தெரிவதேயில்லையே?
ஏன்?????????????
நல்ல விடயங்களை பார்க்காமல், கெட்டதையே பெரிதுபடுத்துவதற்கு காரணம் அவரவர் உறுத்தல்களே?
There are good or bad subjects,there's only the way in which they are seen.
பார்க்கிறவன் பார்வையைப் பொறுத்தது இந்த உலகம்.........
நல்லதை நினைப்போம்.
நல்லதே நடக்கும்.