Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
#41
வாழ்க கொன்வேட்டர் வாழ்க யுூனிக்கோட்

திண்ணையிலிருந்து உருவி...


இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
அக்னி புத்திரன். சிங்கப்பூர்.

திரு. சங்கர் அவர்களுக்கு வணக்கம்.


ஜென்டில்மேன்இ முதல்வன்இ ஜீன்ஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "பாய்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.


தமிழ்கூறு நல்லுலகம் செய்த தவப்பயனாக இப்படம் தங்களின் கைவண்ணத்தில் உருவாகி வெளிவந்துள்ளது.


உங்கள் திரைப்படத்தில் பல காட்சிகள் நம் தமிழ் உலகம் இதுவரை கண்டிராதஇ பார்த்திராத புதுமைக்காட்சிகள்..வசனங்கள்..ஆஹா..ஓகோ..


அவற்றில் ஒரு சில மிக மிக உச்சம்.. நினைத்து நினைத்து இன்புறத்தக்கவை.அவற்றில் சிலவற்றை இங்கே தங்களுக்கு நினைவுப்படுத்துகின்றேன்.




காட்சி 1


ஐந்து இளைஞர்கள் நண்பர்கள். பெற்றோர் வீட்டில் இல்லாதபோது.. ஒரு விபச்சாரியை வீட்டிற்கு அழைத்து வந்துஇ ஐந்து பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் உடலுறவு கொள்ளுவது போன்ற காட்சி..

காட்சிகள் மிகத் தத்ரூபமாக இரசிக்கும்படி ஆபாசமாக.. ஸாரி.. மிகக் கவர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டு இருந்தன..


காட்சிகள் இப்படி வசனம் எப்படி? இதோ..சில எடுத்துக்காட்டுகள்..


உடலுறவை முடித்துவிட்டு மூன்றாவதாக அறையை விட்டு வெளியே வருபவன் உதிர்க்கும் ஒரு வசனம் ..


டேய்.. நான் மூனு தடவைடா.. ஆஆஆ..


மற்றொருவன்: டேய் இந்த கொஞ்ச நேரத்தில் மூனு தடவையா? எப்படிடா?


விலைமகள் கூறும் 'நறுக்' வசனம்:


ஐந்தாவதாக உடலுறவு கொள்ள வருபவனிடம்..

டேய்..

நீங்க கொடுத்த பணத்திற்கு நாலு பேரே அதிகம்.இன்னும் ஐநூறு கொடு..அப்பதான் நீ

செய்யலாம்..


என்ன மஞ்சள் புத்தகம் படிக்கிற மாதிரி இருக்கா? எல்லாம் உங்கள் படக்காட்சி வசனங்கள்தான்..ஐயா..


மேலும் சில அற்புதமான காட்சிகள்..




காட்சி 2


இரண்டு விடலைகள்(டீன் ஏஜ்)அருகருகே உட்கார்ந்து பேசிக்கொள்ளும் காட்சி..



இளைஞன்:

ஏய்..உங்களுக்கு அந்த "பீலிங்" வந்தால் என்ன செய்வீர்கள்..ப்ளீஸ் சொல்லுப்பா..


இளைஞி: போடா..


இளைஞன்:ப்ளீஸ்..ப்ளீஸ்..என்ன பண்ணுவீங்கப்பா..


இளைஞி: ம்..அந்த பீலிங் வந்தால் காலு மேல காலு போட்டு உட்கார்ந்துக்குவோம்


இளைஞன்:ஏய்இப்பக்கூட..

அப்படித்தானே..காலு மேல காலு மேல போட்டு உட்கார்ந்துஇருக்கே... பீலிங்காஆஆஆ!


இளைஞி: ச்சீ..போ..ஒஒஒஓஓஓஓஸ!!


ஆஹாக.. கருத்தாழமிக்க சத்தான முத்தான வசனங்கள்..


மேலும் ஒரு காட்சி..

நீங்களே படித்து இரசியுங்கள்..


காட்சி 3


பெற்றோர்களால் விரட்டப்பட்ட விடலைகள் தங்க இடமின்றி ஒரு பழைய கார் செட்டில் இரவு

தங்குகின்றனர். அப்போது அவர்களில் ஒருவன் செக்ஸ் புத்தகம் படிக்கின்றான்..திடீரென்று கார் ஆடுகின்றது!


ஒருவன்: என்னடா..காரு திடீரென்று ஆடுது!

மற்றொருவன்:

( செக்ஸ் புத்தகம் வைத்துத்திருந்தவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்து)


டேய்.... காலு கையா..சும்மா வைத்துக்கொண்டு படுக்கமாட்டே..! (சுய இன்பம் செய்வதாக பொருள்படும்படி)


மேலே கண்டவைகள் அனைத்தும் ஒருசில உதாரணங்கள்தான்..இவை போல படமெங்கும்

அற்புத அசர வைக்கும் காட்சி அமைப்புகள்..

வசனங்கள்..உடைஅலங்காரங்கள் உடம்பையே புல்லரிக்கச் செய்கின்றன..


சரி.. உங்களிடம் இந்த அப்பாவி பாமரன் விடுக்கும் சில கேள்விகள்ஸ


1.தமிழ்க் கலாச்சாரம் பண்பாடு காற்றிலே பறக்கும்படி இப்படி ஒரு மலிவான திரைப்படம் எடுத்து வெளியிட என்ன காரணம்?


2.பாடுபட்டு வளர்த்த இத்தமிழ்ச்சமுதாயத்தை இப்படிப் பாழ்ப்படுத்தலாமா?


3.இப்போக்கு நம் இளையர்களை தீயவழிக்கு இட்டுச்செல்லாதா?


4.தரமான படங்களைத் தந்த தாங்கள்இ தரம்கெட்டுப் போய் இப்படி ஒரு மஞ்சள் படம் தருவதற்கு பணம்தான் காரணமா?


5.இத்திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க இயலுமா?


நான் செய்வது வியாபாரம். இங்கு இலாபம்தான் நோக்கம். நான் அறிவுரை சொல்ல அய்யன் வள்ளுவன் இல்லை என்று கூறி தப்பித்துக்கொள்ள முயல வேண்டாம். முதலில் ஒன்றுஇ நீங்கள் அறிவுரை கூறி யாரையும் திருத்த வேண்டாம். இருப்பதை கெடுக்காமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் என் ஆதங்கம். நீங்கள் எல்லாம் அறிவுரை கூறித்தான் தமிழ்ச்சமுதாயம் திருந்த வேண்டும் என்ற நிலையும் இல்லை.


நீங்கள் செய்வது வியாபாரம்தான். இலாபம்தான் இலக்கு. மறுக்கவில்லை. ஆனால்இ உங்கள் வியாபாரம் நுகர்வோனை பாதிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு அண்மையில்இ குளிர்பானங்கள் விற்கும் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியைக் குறிப்பிடலாம். மேலும் திரைப்பட நடிகை வினிதாவின் விபச்சாரம் கூட வியாபாரம்தான். அவர் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளவில்லையா? என்ன அவர் மற்றவர்களின் உடலைக் கெடுக்கின்றார். நீங்கள் இளையச்சமுதாயத்தின் மனத்தைக் கெடுக்கிறீர்கள். வேறுபாடு அவ்வளவுதான்..பணம்தான் குறி என்றால்இ திரைப்படத்துறையில் இருக்கும் உங்களுக்கு ஒரு பத்து வினித்தாக்கள் கிடைப்பது அவ்வளவு சிரமம் அல்ல என்று நினைக்கின்றேன். ஏன்னென்றால்இ அத்தொழிலில் பாதிக்கப்படுவர்கள் ஏற்கனவே கெட்டுப்போனவர்கள்தான் மீண்டும் மீண்டும் வந்து தங்களை கெடுத்துக்கொள்வார்கள். ஆனால் உங்களின் இத்திரைப்படம் ஒன்றுமறியா அப்பாவிகளைஇ இளைஞர்களைத் திசை திருப்ப வல்லதாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் மக்களின் மனத்தைத் திசை திருப்பாமல் தங்கள் தொழிலை மாற்றிக்கொண்டு தசை வியாபாரத்தில் ஈடுபடலாம் அல்லது இனிவரும் காலங்களில் இது போன்ற திரைப்படங்கைளத் தரக்கூடாது. இதுதான் என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.


மேலும் சமுதாயத்தில் நடப்பதைதான் நாங்கள் திரைப்படமாகத் தருகின்றோம் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். சிலவற்றை நாம் இலைமறை காய் மறையாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் சமுதாயத்திற்கு நல்லது. இதைதான் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.


எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டுவது நமது கலாச்சாரத்திற்குஇ பண்பாட்டுக்கு ஏற்புடையதல்ல. எடுத்துக்காட்டாக.. ஆண் பெண் இனச்சேர்க்கையின் வழிதான் குழந்தை பிறக்கிறது.


இதுஉண்மைதான்..நடப்பதுதான்...ஆகையால் இதை வெளிச்சம் போட்டு காட்டுவதில் தவறு இல்லை என்று கருதி எவரும் எங்கள் பெற்றோர் எங்களை இப்படித்தான் உருவாக்கினார்கள் என்று கூறி உடலுறவு காட்சியைப்படம்பிடித்து தங்கள் வீட்டு வரவேற்பறையில் தொங்க விடுவதில்லை. சங்கரும் செய்யமாட்டார் என்று நம்புகின்றேன்.


திரைப்படம் சக்தி வாய்ந்த மக்கள் தொடர்புச்சாதனம். அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சங்கரிடம் இருந்து இப்படி ஒரு மஞ்சளை எதிர்பார்க்கவில்லை. நல்ல மங்களகரமானவற்றையே எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு பாமரன்.

இப்படிக்கு

அக்னி புத்திரன்.

சிங்கப்பூர்.


agniputhiran@yahoo.com
Reply
#42
சமுதாயத்கில் சாக்கடை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் சங்கர் அதை இனம் காட்டியுள்ளார்...எனியும் சாக்கடை என்று அறியாமல் தவறு செய்தேன் என்று பழிசொல்பவர்கள் உருவாகவேண்டாம் என்று சங்கர் சுஜாதா ரகுமான் நினைத்திருந்தால் இப்படம் அதற்கு உபயோகமாக இருக்கலாம்,,,,,! படத்தில் சங்கர் சொன்னவை தமிழ் சமூகத்தில் உள்ளவையே அன்றி மேற்கில் இருந்து கொண்டுவந்தல்ல...அப்படியென்றால் தமிழ் சமூகத்தில் உள்ள கெட்டவைகளை வெளியில் காட்டாமல் மூடிவைத்து வளர்க்கவா விரும்புகிறீர்கள்...????!!!! பாலியல் கல்வியே 8,9 வயதில் இருந்து கொடுக்கப்படும் போது....ஏன் சங்கள் சமூகத்து சாக்கடையை வெளியில் காட்டி அதை யாரும் நாடாதபடி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியாது....! இன்று இந்தியாவில் எயிட்ஸில் தமிழ் நாடும் முன்னணி மாநிலங்களில் ஒன்று அவையெல்லாம் சங்கர் சொல்லியா பார்வியது........????!

காலம் காலமாய் திரைமறைவில் நடந்தவை இன்று திரைக்கு வந்துள்ளது சமுதாயமும் பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய காட்டாயம் எடுத்தியம்பப்பட்டதாக ஏன் இப்படத்தை கொள்ளக்கூடாது ஏன் அந்த வகையில் விமர்சனங்களும் விளம்பரங்களும் தரப்படவில்லை....?????!!!

:evil: Idea :!: :?: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
திருத்தம்...
சங்கள்-- சங்கர்
பார்வியது-- பரவியது
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஷங்கரிடம் ஒரு கேள்வி  

இளைஞர்களிடம் எத்தனையோ பாஸிட்டிவ்வான விஜயங்கள் இருக்க, வெறும் செக்ஸிற்காக அலையும் கூட்டமாக அவர்கள் சித்திரிக்கப்பட்டிருப்பது சரியா? ஷென்டில்மேனிற்கு அப்புறம் உங்கள் படங்களில் வல்காரிட்டி படிப்படியாகக் குறைந்து அழுத்தமான படங்களைக் கொடுத்த நீங்கள், திடீரென்று இந்த அளவுக்கு இளைஞர்கள் றிஷீrtrணீஹ் பண்ண வேண்டிய அவசியம் என்ன?  

ஷங்கர்: வெற்றிபெற்ற இளைஞர்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் நேர்மையாகச் சொல்லியிருக்கிறேன். பொறுப்பு இல்லாமல் சுற்றித் திரியும்போது பொறுப்பு இல்லாதவர்களாகவும், பொறுப்பு வந்தவுடன், பொறுப்பானவர்களாகவும் காட்டியிருக்கிறேன். அந்த வயதிற்குண்டான தெரிந்துகொள்ளும் ஆர்வங்கள், அத்துமீறல்களை, குழப்பங்களை, கற்பனையாகச் செய்யாமல் நிஜவாழ்க்கையில் நடக்கின்ற, நடந்த சம்பவங்களை வைத்துத்தான் சொல்லியிருக்கிறேன்.  

அது இளமையின் ஒரு பகுதி மட்டுமே! அதை மட்டும் இல்லாமல் அவர்களின் காதலை, கலாசார பயங்களை, கௌரவம் பார்க்காமல் எந்த வேலையையும் செய்யும் மனப் பக்குவத்தை, சொந்தக் காலில் நிற்கும் மன உறுதியை, நட்புக்காகச் செய்யும் தியாகத்தை, உழைத்து முன்னேறுவது போன்ற பல பாசிடிவான விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். கதை நியாயப்படித்தான் காட்சிகளும். ஒருசில காட்சிகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் காட்சிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.  


--------------------------------------------------------------------------------  

படத்தில் அதிர்ச்சிதரக்கூடிய அளவில், நேரடியான வசனங்கள் இருக்கின்றன. பலத்த எதிர்ப்பு வரும் என்று தெரிந்தேதான் அவை எழுதப்பட்டனவா?  

சுஜாதா: நீங்களே அதிர்ச்சி தரும் வசனம் என்று தீர்மானித்து, அதற்கு எதிர்ப்பு இருப்பதாகவும் தீர்மானித்து விடுகிறீர்கள். ஒருமுறை தியேட்டருக்குப்போய் மக்களுடன் இந்தப் படத்தைப் பாருங்கள். தெரிந்தே யாரும் தப்பு செய்யமாட்டார்கள். நல்ல காரியம்தான் செய்வார்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குமுதத்திற்கு சங்கரண்ணை கொடுத்த பேட்டி.... நிச்சயமாக இது பெற்றோர் பார்க்கவேண்டிய படம்!
ஆனால் இந்தப் படத்தை ஏன் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று ஆக்கவில்லை என்பது என் கேள்வி.... 17-18 வயதிற்கு முதல் எனக்கு இப்பிடியான பெடியளின் குறும்புத்தனங்கள் தெரியாது..விளங்காது...அப்படியானால் தெரியாதவனுக்கு சொல்லிக்கொடுப்பதாக அமையாதா? இல்லாவிட்டால் பெடியள் இன்று 18க்கு முதலே இதை எல்லாம் செய்கிறார்களா? உலகம் எங்க போகுது? :?
Reply
#45
இந்தியா டுடே செப்.17,2003

கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்
ஞாநி

வெற்றியின் ரகசியம் என்ன ? வழக்கமாக வெற்றியின் ரகசியம் உழைப்பு, கடும் உழைப்பு என்று வெற்றி பெற்ற முதலாளிகள் சொல்வார்கள்.அப்படியானால் கடுமையாக உழைக்கிற எல்லாரும் ஏன் வெற்றியடைவதில்லை? கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள்.


சுஜாதாவும் ஷங்கரும் வித்யாசமான பதிலை பாய்ஸ் படத்தில் சொல்லுகிறார்கள். நேர்மைதான் வெற்றியின் ரகசியம். எவ்வளவு உன்னதமான கருத்து ? படத்தில் இந்த நேர்மை எப்படி வெளிப்படுகிறது ?


கேர்ள்ஸ் ஆசைகளை அடக்கிக் கொள்ள என்ன செய்கிறார்கள், மார்பகங்களை பெரிதாக்கவும் கெட்டிப்படுத்தவும் என்னென்ன பயிற்சிகள் செய்கிறார்கள் என்று பாய்ஸ் நேரடியாக கேர்ள்சிடம் ' நேர்மையாக' கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.


பெண் உறவுக்கு ஏங்கும் பாய்ஸ் என்ன செய்ய வேண்டும் ?


சுஜாதா(70)வும் ஷங்கரும்(35) நேரடியாக்வே வகுப்பு எடுக்கிறார்கள் பஸ்சில் எப்படி இடிக்கலாம், உரசலாம், ஜவுளி-நகைக் கடைகளில் 'சுரணை'யற்ற மாமிகளை எப்படி தடவலாம் என்று காட்சி ரூபத்தில் கற்றுக் கொடுத்திருப்பது நிச்சயம் எல்லா வீட்டுப் பெண்களுக்கும் 'பயன்'படும். இனிமேல் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்படுவார்கள்.


கதாநாயக பாய் காதலில் ஜெயிப்பதற்காக அண்ணா சாலையில் நிர்வாண ஓட்டம் ஓடுகிறான். ஆனால் காதலில் எதிரிகளான பெற்றோர்களின் சித்ரவதையினால், பாய்ஸ§ம் கேர்ளும் வீட்டை விட்டு நடுத்தெருவில் குடிகார அங்கிளின் ( தமிழில் சொன்னால் தப்பாகிவிடும்) உதவியுடன் வாழ்க்கையில் வெற்றி அடையப் போராடுகிறார்கள். போராடிக் கண்டுபிடித்த உண்மைதான் 'நேர்மையே வெற்றியின் ரகசியம்'. நமக்கு எளிதில் புரிவதற்காக, இதை மார்பகங்கள் குலுங்கக் குலுங்க பெண்கள் ஆடிப் பாடிச் சொல்கிறார்கள்.


நேர்மை என்பதை நாம் தப்பாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது. அய்யப்பன் சீசனில் பாய்ஸ் பணத்துக்காக அய்யப்பன் கேசட் போடுவது நேர்மை. எம்.டி.வி விருதுக்காக ஆபாசமாக ஆடுவது நேர்மை. காதலுக்காக நிர்வாணமாக தெருவில் ஓடுவது நேர்மை. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து தெரு நாடகம் போடும் 'தீவிர'வாதிகளுக்குப் பணத்துக்காகக் கூடப் பாட்டு போட்டுக் கொடுப்பது தப்பு. அதனால் பொடாவில் கைது செய்யும் ஆபத்து ஏற்படும். எனவே ச்மத்தான பாய்ஸ§ம் கேர்ள்சும் பஸ்சில் இடிப்பது, கடையில் உரசுவது, வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் தொழிலாளியை அழைத்துவருவது போன்ற 'நேர்மை'யான விஷயங்களை மட்டும் செய்யலாம்.


சென்னை தணிக்கை அலுவலகத்தில் டிரெயிலர் படத்துக்கே ஏராளமான வெட்டுகள் விழுந்ததும், மொத்தப் படத்தை தணிக்கைக்கு ஹைதராபாதுக்கு கொண்டு போய்விட்டார்கள். இந்த 'நேர்மை'தான் வெற்றியின் ரகசியம் !


.பெண்களைக் கேவலமாக, கீழ்த்தரமாக சித்திரிப்பதில் தொடங்கி,பெண் சீண்டலை ஊக்குவிப்பது , இளம் மனங்களை வக்கிரப்படுத்துவது வரை பல்வேறு இ.பி.கோ செக்ஷன்களின் கீழ் பலவிதமான குற்றங்கள் பாய்ஸ் படத்தில் செய்யப் பட்டிருக்கின்றன.பூங்காவிலும் பீச்சிலும் இருக்கும் அப்பாவிகளிடம் வீரம் காட்டும் போலீசுக்கு 'படைப்பாளிகள்' வீட்டு வாசலுக்குப் போகும் நேர்மை உண்டா ?


ஆபாசமான வசனங்களும், காட்சிகளும் நிரம்பிய இந்தப் படத்தை இவர்கள் உருவாக்கியது பணத்துக்காகவா ? இருவரும் ஏற்கனவே லட்சாதிபதிகள். புகழ் ? இன்னுமா ? இளைஞர்களின் அசலான பிரச்சினைகளில் ஒன்றான பாலியல் ஒடுக்குமுறையை சமூகத்துடன் பகிர விரும்பிய அக்கறையா ? படத்தில் அந்த அக்கறைக்கு துளியும் இடம் இருக்கவில்லையே.


என்னைப் பொறுத்த மட்டில் அசல் பிரச்சினை வேறு.


ஒரே ஒரு முறை நம் வீட்டில் ஒரு பத்து ரூபாயைத் திருடிவிட்டால், அந்த வேலைக் காரரின் நிலை என்ன ? நிரந்தரமாக குற்றவாளிப் பட்டம். நம் வட்டாரத்திலேயே வேறு யார் வீட்டிலும் அவரை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாத நிலையை வேகமாக ஏற்படுத்திவிடுவோம்.


ஆனால் இவ்வளவு கேவலமான படைப்பை தெரிந்தே உருவாக்கித் தருபவர்கள் நம் சமூகத்தில் எந்தப் புறக்கணிப்புக்கும் இழிவுக்கும் ஆளாவதில்லை. தொடர்ந்து சுஜாதாவை தீவிர இலக்கிய இதழ்கள் முதல் வெகுஜன இதழ்கள் வரை விமர்சனம் இன்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கும். ஷங்கருக்கு அடுத்த வாய்ப்பு உண்டு. வேலைக்காரிக்குக் கிடையாது. குறைந்தபட்சம் ஷங்கரும் சுஜாதாவும் ஒரு பொது மன்னிப்பைக் கோரவேண்டுமென்று எழுதும் நேர்மை கூட நமது ஊடகங்களில் பலருக்கு இல்லை.


காரணம் நமது சமூகம் எப்போதுமே புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் கொண்டாடுகிறது. அவற்றைப் பயன்படுத்தி பணமும் புகழும் சேர்த்துக் கொள்பவர்களை ஆராதிக்கிறது. ஆனால் புத்திசாலிகள் நேர்மையானவர்களா என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.அதனால்தான் நேர்மையின் பெயராலேயே ஒரு கேவலமான படைப்பை தைரியமாக சந்தைக்குக் கொண்டு வர முடிந்திருக்கிறது.


(இந்தியா டுடே செப்.17,2003)
Reply
#46
அப்படிச் சொல்லமுடியாது கணணிப்பித்தரே....
மேற்குலகில் பாலியல் கல்வி சிறுவயது முதலே ஊட்டபடுகிறது...இன்று இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் பாலியற்கல்வி ஆண்டு ஆறுமுதல் தரப்படுகிறது...அப்போ அது என்ன நோக்கத்தில்......! பாலியல் என்பது மறைத்து மறைத்து நடாத்தும் சமாச்சாரமாகியதால்தான் எயிட்ஸும் மறைமுகமாக பெருகிவருகிறது...மேற்குலகம் தந்த எயிட்ஸ் இன்று மேற்குலகில் கட்டுப்பாட்டில் இருக்கிறது... அது எப்படி....?!அடிப்படை பாலியல் கல்வி அறிவும் அதற்கு ஒரு காரணம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
நல்ல பாலியல் கல்விதான் படிப்பிக்கினம்.....
எனக்கும் விஞ்ஞானம் படிப்பிச்சது ஒரு ரீச்சர்...மற்றப் பாடங்கள் போல் படம் கீறி ஒரு மணி நேரம் விளங்கப்படுத்தி படிப்பிக்காமல்...இதை விளக்கமின்றி வெறுமனே வாசித்து விட்டுச் சென்றுவிட்டார்...இதுதான் பாலியல் கல்வியூட்டும் முறையா?
இதனால்தான் இளைஞர் தாமே பாலியல் கல்விக்கு புத்தகங்களை நாடிச் செல்கின்றனரோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#48
வன்முறை காட்சிகள் கொண்ட படங்கள் இளைஞர்களை வன்முறையாளர்களாக உருவாக்குகின்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வன்முறைக் காட்சிப் படங்களைப் பார்த்துவிட்டு அதே போல் கொலை, கொள்ளை என்று பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளதை பல்வேறு சந்தர்பங்களில் பார்த்தும், கேட்டும் இருக்கின்றோம். இதே மாதிரியான விளைவே இப்படம் கொடுக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? இனி ஒரு பெண் கால் மேல் கால் போட்டு உட்கார முடியாது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இனி மறந்தும் காற்சட்டை "சிப்" பூட்டாது போனால் இவன் இதுக்குத்தான் திறந்துபோட்டு வாறன் என்று ஒரு பெயர் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#49
அனுபவமோ?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பயமோ?


Reply
#50
அதுதான் ஊரிலை கால் மேல் கால்போட்டு இருக்ககூடாது என்று சொல்வதோ?
Reply
#51
<!--QuoteBegin-yarl+-->QUOTE(yarl)<!--QuoteEBegin-->அதுதான் ஊரிலை  கால் மேல் கால்போட்டு இருக்ககூடாது என்று சொல்வதோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன அண்ணை உங்களுக்கும் இன்றுதானா தெரியும்?...
நாம் ஏதோ மூடநம்பிக்கை என்று இருந்துவிட்டோம்...முதியோரைப் பழித்தோம்....எங்கள் பெண்களும் சொல்லித்தரவில்லை :oops: :oops:
Reply
#52
அது திட்டம் வகுத்தவரின் தவறல்ல அமுலாக்கலின் தவறு....பாலியல் தொழிற்பாடு என்பது இயற்கையானது...ஆனால் சமுதாய நலன் கருதியதாக மனித இனத்தின் நலன் கருதி அதை ஒரு வரையறைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பு...எனவே வரையறையை மீறாது மீறப்பட்ட வரையறைகளை வெளிக்காட்டுவது ஒன்றும் தவறல்ல...மீறப்படும் வரையறைகளை கண்டுகொள்ளாது தொடர்ந்து அனுமதிப்பதே மாதவறு....!

மருத்துவ, உயிரியல் மாணவர்கள் சகல விடயங்களையும் அறிந்து கொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அங்கே ஒரு வரையறை இடப்பட்டே கல்வி அளிக்கப்படுகிறது....அதே போல் சமுதாயத்தின் சகல மட்டத்திலும் செய்ய முடியும்...அதனால் பாலியல் உணர்வுகள் ,அவற்றைக்கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...தறிகெட்ட பாலியல் உணர்ச்சி வெளிப்பாட்டால் வரும் தீமைகள் என்பனவற்றை எடுத்துக் கூறி சமூகத்தை தவறான வழியில் செல்வதில் இருந்து தடுக்கலாம் தானே....!

உண்மையில் சங்கர் வியாபாரம் கடந்து அப்படி சிந்தித்திருந்து இப்படத்தை தயாரித்திருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை....! இந்தியாவில்,கொழும்பில் காமசூத்திரா பல்கலைக்கழகங்களிலேயும் தியேட்டர்களிலும் காண்பிக்கப்பட்டது......அதையேன் அப்போ தடை செய்யவில்லை.....! கோயில் சிற்பங்களில் படுமோசமான பாலியல் உணர்வைத்தூண்டும் வெளிப்பாடுகள் உள்ளன ஏன் அவற்றை இடித்துத்தள்ளவில்லை...இதை இப்படத்தின் எதிர் விமர்சனதாரர்கள் விளங்கப்படுத்துவார்களா....?!

எயிட்ஸ் எப்படிப்பரவுகிறது என்பதற்கு உடலுறவுக்காட்சி போன்ற ஒன்றை படமாகப் போட்டு விளம்பரம் செய்வதா அதையே வார்த்தைகளில் பக்கம் பக்கமா போட்டு எழுதி விளங்கப்படுத்துவதா மக்களை எளிதில் போய்ச் சேர்கிறது...????!

சினிமாவை ஒரு மீடியாவாகக் கொண்டு சங்கர் கெட்டதால் நல்லதைப் பெற முனைந்திருக்கிறார் என்றுதான் நாம் கருதுகிறோம்....வியாபாரம் சினிமாவில் சகஜம் தானே....!
:twisted: :!: :roll: :?: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
போய்ஸ் பற்றிய தற்ஸ்தமிழ் தரும் விமர்சனங்கள்....

<img src='http://thatstamil.com/images13/cinema/boys3-300b.jpg' border='0' alt='user posted image'>

http://thatstamil.com/news/2003/09/12/boys.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
காமக் கழியாட்ட கோயில் சிற்பங்களையும்
வள்ளுவனின் காமத்துப்பாலையும்
கொக்கோ முனிவரின் கொக்கோ சாத்திரத்தையும்
இவர்கள் எப்போது
எரிப்பார்கள்?
எதிர்ப்பார்கள்?

ஆதித் தமிழன் புத்திசாலி போல் தெரிகிறதா?
இல்லை தற்போதைய தமிழன்?????????????
Reply
#55
அஜீவன் அண்ணா....

கைதட்டல்கள்.
கோயில்களில் உள்ள சிற்பங்கள் பற்றி ஒருதடவை நான்
நண்பர்களுடன் கதைத்திருக்கிறேன். கலாச்சாரம் மண்ணாங்கட்டி
என்று கத்தும் நம்மவர்கள் ஏன் இவற்றைக் கவனிப்பதில்லை?
சினிமா வேறு, கோயில் சிற்பம் வேறோ?


Reply
#56
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணா....

கைதட்டல்கள்.
கோயில்களில் உள்ள சிற்பங்கள் பற்றி ஒருதடவை நான்
நண்பர்களுடன் கதைத்திருக்கிறேன். கலாச்சாரம் மண்ணாங்கட்டி
என்று கத்தும் நம்மவர்கள் ஏன் இவற்றைக் கவனிப்பதில்லை?
சினிமா வேறு, கோயில் சிற்பம் வேறோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சில உண்மைகளை தாங்கிக் கொள்ள பலரால் முடிவதில்லை இளைஞனே.

நாம் நம்மைச் சுற்றி நடப்பவற்றை மறைத்து நம்மை தெய்வப் பிறவிகளாகக் கருதிக் கொள்ள பழக்கப் பட்டு விட்டோம்.
இது ஒரு விதமான மன நோய்.

கதையில் எழுதினால், பத்தகத்தில் வந்தால் அது பரவாயில்லை. சினிமாவில் வந்தால் ஒரு பெரிய புரட்சி...........

ஆரம்பம் முதலே சினிமாக் கதாநாயகர்கள் வில்லத்தனமே செய்யாதவர்கள். வில்லன் ஒரு மாபாதகத்தைச் செய்யப் போகும் போது எங்கோ இருந்து அதையறிந்து மரம் தாவி, மலை தாவி..............தாவ வேண்டியதெல்லாம் தாண்டி ஓடி வந்து காப்பாற்றுபவர். இவர் ஒரு புழுவைக் கூட மிதிக்க மாட்டார். அவ்வளவு .......................

இவர் அழகாக இருப்பார். மென்மையானவர். பெண்கள் இவர்களைக் காதலிப்பார்களே தவிர இவர்கள் யாரையும் போய் காதலிக்க மாட்டார்கள்.
பெண் அடிமைத்தனத்தின் உச்ச கட்டம் இது.

வில்லனைக் கூட இறுதியில் மன்னித்து ஒரு வார்த்தையில் தப்பிப் போ என திருத்திவிடுபவர்கள்.
இவர்கள் அசாத்திய பிறவிகள்.............

என்னய்யா குறளி வித்தை................
<b>
இங்கு பேசுபவர்கள் நீலப்படங்கள் பார்க்கவில்லை?
நீல-மஞ்சல் புத்தகங்கள் படிக்கவில்லை?
இவற்றை செய்யவேயில்லை?</b>

நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்.
இவற்றை செய்யவில்லை அல்லது இப்படி எண்ணவேயில்லை என்று...........

அப்படி செய்யாத இவர்களுக்கு எப்படித் தெரிந்தது இது வீட்டுக்குள்ள நடக்க வேண்டிய - நடக்கிற சமாச்சாரமெண்டு.
எல்லாம் சுத்த நடிப்பு.
சுயநலம்.

இப்ப கூட இவர்கள் Boys படத்தில எதையும் வெட்டாம பார்க்க கிடைக்க வேணுமே என்றுதான் பிராத்தனையோடு இருப்பார்கள்.

இறைவனுக்கே ரெண்டு பொண்டாட்டி என்று சொல்லி ஆண் வாக்கம், வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ள நீதிக் கதையும், விளக்கமும் அளித்த போது இதுவெல்லாம் தவறாக படாத தமிழகம்???????????

இதை (வப்பாட்டனை) ஒரு பெண்ணும் வைத்திருக்க உரிமையிருக்க என்று சொல்லவில்லையே?

இப்படி ஒரு பெண் செய்தால் அவள் வே..........
இதை ஒரு ஆண் செய்தால் ??????????
........................................

கற்பு பெண்ணுக்கு மட்டுமாம்?
என்ன கொடுமை?????????

உலகம் விழிக்கவே கூடாது என்று எவன் நினைத்தாலும், அது விழிக்கும் போது அதைத் தடுக்க எவராலும் முடியாது.

இது இயற்கையின் நியதி.
Reply
#57
இளைஞா...கலாசாரத்தைப்பற்றி முழுதாக அறியாமல் கூக்குரலிடலாமோ?

நாம் வழிபடும் சிவலிங்கம்...சிவனின் குறியே..காமசூத்திரத்தை அருளியதும் சிவனும் பார்வதியுமே...கோவில்களில் அதைப் பதித்தது அறியா காமவித்தைகளை மக்கள் அறியவே அன்றி அக்கம்பக்கம் உள்ள பெண்களை இழுக்க அல்ல...
இவற்றைச் சொன்ன அதே கலாசாரம்தான் பிரம்மச்சாரியத்தின் வலிமை ஒழுக்கம் போன்றவற்றையும் சொல்லியிருக்கு...அவை தங்கள் கண்ணுக்கு தெரியாதோ?....மன ஒருமைப்பாடுதான் கடவுள் வழிபாட்டின் முதற்படி...இது இல்லாவிட்டால்???

காமம் என்பது நாலு சுவரிற்குள் கணவன் மனைவி ஈருடல் ஓருயிராக கலந்து களிக்கும் காதல் செயற்பாடு...அதை சினிமாவாக்கி வியாபாரமாக்கியது மேலைத்தேயம்...அதை பிரதி பண்ணுவது எமது சினிமாக்காரர்...

ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்...

கற்பை பொதுவில் வைப்போம்...அதுவே தமிழர் கலாசாரம்
Reply
#58
மகிழ்ச்சி அஜீவன் அண்ணா...

உங்கள் கருத்துக்களில் உடன்பாடே.
எனவே மேலதிகமாகச் சொல்லத் தோன்றவில்லை. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மிக்க மகிழ்ச்சி.

நண்பா கணணி...
கலாச்சாரம் என்றவுடன் எதுக்குக் கத்தல்.
நீங்கள் கருதும் கலாச்சாரத்தைப் பற்றி முழுதாய் எனக்குத் தெரியாது
என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதேவேளை அந்தக் கலாச்-
சாரத்தின் மையம் எதுவென்றும், அதன் தேவை எது என்றும் சற்று
அறிவேன். மற்றும் கலாச்சாரம் என்று கத்துவோர்க்கு கலாச்சாரம்
என்றால் என்னவென்பதும், எதற்கானது என்பதுவும் தெரியாது.
தங்கள் சுயலாபங்களிற்காகவும், பயத்தின் நிமித்தமும் கூக்குரல்
இடுபவர்களே இந்த கலாச்சாரப் பிரியர்கள்.

எதுவும் நிரந்தரமில்லை.

பி.கு.: கலாச்சாரம் தமிழர் பருகும் கள்ளச் சாராயம்.


Reply
#59
திண்ணையில் அக்கினிபுத்திரனிற்கு பதில் கடிதம்.

திரு. அக்னி புத்திரன் அவர்களுக்கு, :? Idea


தங்களின் 'பாய்ஸ்' விமர்சனக் கட்டுறை பார்த்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. தங்களின் கட்டுறையை படித்தபோது எனது கல்லூரி நினைவுகள் வந்து போயின. தாங்கள் குறிப்பிட்டது போன்று படத்தில் இச்சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பின், எமது வாழ்வின் குறிப்பிடத்தக்க ஒரு காலகட்டத்தை இயக்குனர் சங்கர் பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன், மகிழ்கிறேன்.

தாங்கள் குறிப்பிட்டிருந்தது போல் 'அந்தக்காலத்தில்' இவை இலை மறை காய் மறையாக வைக்கப்படவில்லை. மாறாக சமூகத்திலும், பல்வேறு குழுக்களிலும் இத்தகு விஷயங்கள் தாராளமாக பரிமாரிக்கொள்ளப்பட்டன. இவ்வளவு ஏன், எங்கள் கோவில்களில் எம் முன்னோர் இத்தகு விஷயங்களை பாமரர்களுக்கு சிற்பங்கள் வாயிலாக வடித்து எம் மனதில் இருந்த 'sex related guilt conscious' ஐ நீக்க முயன்றனர்.

சமீப காலமாக,இவ்விஷயங்கள் இலை மறை காய் மறையாக வைக்கப்பட்டதன் விளைவு, இன்று தமிழகம் 'AIDS' நோயின் தலைமை இடமாக திகழ்கிறது ! இதுதான் நீங்கள் கட்டிக் காத்திட நினைக்கும் 'இலைமறை காய்மறை' யின் மகிமை!!

நான், என்னளவில் கண்டிருக்கிறேன், என் நண்பர்கள் விலைமாதுக்களிடம் விலை பேசி, பணம் பகிர்ந்து , வரிசை வைத்து புணர்ந்து மகிழ்வதை ( மகிழ்வது மட்டுமல்லாது, சற்றே வித்தியாசமான 'expressions of guilt' ஐயும் கண்டதுண்டு - தற்போது ஒரு ஆன்மீக-தேசீய கட்சியில் இருக்கும் தமிழ்கத்தில் பிரபலமான நண்பன் ஒருவன் பக்கத்தறையில் புணர்ந்து முடிந்ததும் ஓவென்று கதறி அழுதான் என்று மற்றொரு நண்பன் ஒரு முறை கூறினான்).


அது போல, கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு விலைமாதுவுக்கு இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டதை (வென்ற குழு மாதுவை இட்டுச்சென்றதாம் - சங்கத்தமிழர்கள் அல்லவா??). விலைமாதென்று வீடு திரும்பும் மகளிரை தொந்தரவு செய்த நிகழ்வுகள் அனேகமாக அனைத்து தமிழ் நாட்டு இல்லங்களிலும் ஒரு முறையாவது விவாதிக்கப்பட்டிருக்கும், வேதனையை உண்டாக்கியிருக்கும்.

இவ்வாறு நடைமுறைத் தமிழகம் இருக்கும்போது (we remain the most sexually suppressed society in India - in my view), இவற்றை வெளிக்கொணர்ந்த ஒரு மகத்தான இயக்குனரை பணத்திற்க்காக இவற்றை காட்டியுள்ளார் என்று விமர்சிப்பது நியாயம் அல்ல என்பது எனது கருத்து. Let these things be brought to the notice of all , let there be debates into the forbidden, suppressed areas of our society. புழக்கடையில் முடை நாற்றம் என்றால், ஊதுபத்தி ஏற்றி அதை மூடிமறைக்கும் மனப்பாங்கு இனியாவது மாறட்டும்.


நண்றி. வணக்கம்.

மும்முடிச்சோழன்
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#60
நமது விவாதங்கள் கருத்து மோதல்களாக மட்டும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

அக்கினிபுத்திரனது விமர்சனத்தில் ஜென்டில்மேன் (கொள்ளையடித்து , ஊரான் சொத்தைத் திருடி கொடை வள்ளலாவது) முதல்வன்( ஒரு நாளில் இந்தியாவை திருத்துவதான ஒரு போதும் நிறைவேறாத கனவு) ஜீன்ஸ் (இரு இளைஞர்களை முட்டாளாக்கும் ஒரு அழகியின் திருகுதாளங்கள்)போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "பாய்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.

(அக்கினிபுத்ரா, சிங்கையின் Thomsan Roadலிலுள்ள ஒரு காதல் பார்க்குக்கு இரவு நேரங்களில் காதலர்கள் மட்டும்தான் போக முடியும். அவர்கள் சுதந்திரமாக எல்லாம் செய்ய முடியும். தனியாக ஒரு ஆணோ, பெண்ணோ போக முடியாது என்பதும். இப்படி அத்து மீறி போக முயல்பவர்கள் காதலர்களை தொந்தரவு செய்ய முயல்பவர்கள் என காவல் துறையால் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் தெரியுமோ? தெரியாதோ?)

அடடா , இவரது (அக்கினிபுத்திரனின்)ரசனையே தனி அலாதி. இவரது சினிமா ரசனைக்காகவாவது, விமர்சனத்துக்காகவாவது
Boys பார்த்து விட வேண்டும் என்று இன்று நானும்
வீடியோ கடைக்கு போய் Boys DVD வாங்கபோனேன்.

கடைக்கு வந்த சிலர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

சில இளவட்டங்களும் என்னைப் பார்த்தார்கள்.

நான் DVD யைக் கையிலெடுத்த போது

<b>ஒரு இளைஞன்:</b>
நாங்கள் Boys, எங்களுக்கு பிடித்திருக்கிறது. Girlsக்கு பிடிக்குமோ தெரியாது என்றான்.

அவர்களது சம்பாசனை என்னை அவர்கள் பால் ஈர்த்தது.
அவர்களிடம் கேட்டேன்

"எப்பிடி தம்பி படம்?"

சங்கர் படம்தானே? கிரபிக்ஸ் தான்.
வீட்டில எல்லாரோடயும் பார்ப்பீங்களோ தெரியாது.

ஏன்? என்றேன்.

இல்லை எங்கட வீட்டில எங்களோட யாரும் பார்க்க இல்ல. நாங்க தனியாத்தான் பார்த்தோம் என்றான் ஒரு இளைஞன்.

நான் அவர்கள் முகத்தைப் பார்த்தேன்.

அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து சொன்னான்:

நாங்கள் இதையெல்லாம் பார்த்து கெட்டுட மாட்டம். நாங்க ரோட்டுல பார்க்காததா? பள்ளிக்கூடத்தில சொல்லித்தராததா? நாங்க இங்க பிறந்தவங்க அண்ண ........

எனக்குள் பெருத்த மகிழ்ச்சி. இவர்களைப் போல எமது எதிர்கால சந்ததிக்கு விளக்கமும், எதைப் பார்த்தும் நான் கெட மாட்டேன் எனும் தெளிவும் அறிவும் சிந்தனையும் தேவை. எனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டேன்.

நான் Boys DVDயை வாங்கும் போது இளைஞர் கூட்டம் வெளியேறியது.

நான் பின் தொடர்ந்தேன்.

இளைஞர்கள் பின்னால் நானும் நடந்தேன்.

அவர்களைத் தாண்டி ஒரு சில சுவிஸ் மங்கையர்கள் வருவது தெரிந்தது.

"ஹாய் சாலி சாம"("ஹாய் friends)" என்றார்கள்.
அவர்களும் பதிலுக்கு
"ஹாய் சாலி சாம"
என்ற வாறு எந்த அசம்பாவமுமில்லாமல் மங்கையரும் அவர்கள் வழியே நடந்தார்கள்.

சரியான தெளிவு ஒரு சமுதாயத்துக்கு இருக்குமானால் ஈவ்டீசிங், கற்பழிப்புகள் போன்றவை நிச்சயம் நடக்காது.

புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????

லண்டன் இளைஞர்களது தவறான நடவடிக்கைகளுக்கு யார் காரணம்?

எத்தைனை அமைப்புகள் தமிழர் நலம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்?

இவர்களும் எமது கலாச்சாரத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்களே தவிர , எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்கிறார்கள்?
(ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.)

ஆனால் லண்டனிலிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகை இவர்களது திருகு தாளங்களைப் பட்டியலிட்டதோடு, தொலைக் காட்சியொன்றிலும் விவாதமாக முன்வைத்தது.

லண்டன் குற்றங்கள் பற்றி என்னோடு ஒருவர் பேசிய போது நான் அவரிடம் சொன்னேன்
இது இளைஞர்களது தவறல்ல. அவர்களுக்கிடையே இருக்கும் மன உளைச்சல்களை பரிசீலித்து ஒரு கவுண்சிலங் முறையிலான மனநல பயிற்ச்சியை தமிழர் நல அமைப்புகள் கொடுத்திருந்தால் இவர்களது தாக்கங்கள் பிரச்சனைகள் மாறியிருக்கும் என்றேன்.????????????

ஒரு முறை லண்டன் தமிழ் பத்திரிகை ஒன்றில் பிரச்சனைகளில் ஈடுபட்ட தமிழ் இளைஞரைக் காடையர் என்று எழுதியதற்காக, அதை எழுதிய பத்திரிகையாளரை லண்டனில் நடைபெற்ற ஒரு பகிரங்க கூட்டத்தில் வைத்து தாக்கிப் பேசினேன்.

மேலை நாடுகள் ஒருவரை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வரை அந்த நபரது கெளரவத்துக்கு பங்கம் விளைவிப்பதில்லை. அவர் குற்றவாளியானால் அவர் தண்டனை பெற்று வெளியேறும் போது அவரை மீண்டும் ஒரு சராசரி மனிதனாகவே அச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் ,நாம் சந்தேகப் பட்டாலே போதும் அப்பாவிகளைக் கூட குற்றவாளிகளாக்கி விடுகிறோம்.இவை திருத்தப்பட வேண்டுமானால் அறிவு சார்ந்தவர்களாக எண்ணும் நாம் முதலில் திருந்த வேண்டும்.

<b>உண்மைகளை மறைத்து வைப்பதால் கேடுகள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பே இல்லை.[/</b>color]

[color=darkblue]இலங்கையில் ஒரு மாதர் நல அமைப்பு வீட்டு வேலைக்காக பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடுக்கும்படி இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

[u]காரணம் ஏழ்மையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் அனைத்து பெண்களும் ஏதாவது ஒருவகையில் பாலியல் பாலாத்காரத்துக்கு ஆளாவதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் வறுமைக் கோட்டிலிருந்து விடுபடுவதற்காக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இவ் அப்பாவிப் பெண்கள் கெடுக்கப்படுவதோடு தண்டிக்கப்பட்டு அல்லது கற்பிணிகளாக அல்லது குழந்யொன்றுடன்அல்லது பிணமாக வந்து சேர்வதாக அங்கலாய்க்கிறது, வேதனைப்படுகிறது இப் பெண்கள் நல அமைப்பு.

இவை பற்றிய தகவல்கள் வெளியில் தெரியப்படுத்தப் படாததால் இக் கொடுமைகள் தொடர் கதை போல் தொடர்வதாக அவர்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இப் பாதகங்களைச் செய்பவர்களை யார் தண்டிப்பது?

தவிர,
புலம் பெயர் நாடுகளுக்கு வரும் எத்தனை பேர் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நடுவழிகளில் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.
இவற்றை ஈழமுரசு தொடர் கட்டுரைகளாக வெளியிட்டது.

இவை தெரியப்படுத்தப் படாமல் கெளரவம் பார்த்திருந்தால் இந்தப் பாவிகளின் அட்டகாசம் இன்னும் தொடர்ந்திருக்கும்.

ஆனால் இவை இன்னும் அடியோடு குறைந்து விடவில்லை. இவை பற்றித் தெரியாதவர்களுக்கும் ஒன்றுமறியா அப்பாவிகளுக்கும் இன்னும் இவை போன்ற அக்கிரமங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

<b>நாம் தெளிவு பெறாமல் அடம் பிடித்தால் அது நமக்கே வினையாக முடியும்.</b>

(Boys பார்த்து விட்டு விரைவில் விமர்சனத்தை முன் வைக்கிறேன்..............

அதுவரை நட்புடன்
அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)