04-05-2005, 05:21 PM
<b>புலிகளின் பகுதிக்குள் ஊடுருவித்தாக்கிய கடற்படைப்படகு மீது புலிகள் தாக்குதல்! </b>ஜ திருமலை நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமைää 05 ஏப்பிரல் 2005ää 20:34 ஈழம் ஸ
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை உப்பாறு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் முகாமுக்கு 200 மீற்றர் தொலைவு வரை நுழைந்த சிறீலங்கா கடற்படைப் படகு மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தமது முறைப்பாடு குறித்து எழிலன் தெரிவிக்கையில்
'இன்று முற்பகல் திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்கா கடற்படைப் படகு ஒன்று உப்பாறுப்பகுதிக்குள் நுழைந்தது.
'அப்போது கடலில் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அப்பகுதி முகாமிலிருந்த போராளிகள் என்ன நடந்தது என்பதை பார்ப்பதற்கு கடற்கரைக்கு வந்தனர்.
'அங்கு சிறீலங்கா கடற்படைப் படகை அவர்கள் கண்டனர். போராளிகளைக்கண்ட கடற்படையினர் தமது படகை கரையை நோக்கிச் செலுத்தினர். இதனையடுத்து போராளிகள் தமது முகாமை நோக்கி ஓடினர். அவ்வேளை போராளிகளை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச்;சூடு நடத்தினர்.
'முகாமுக்கு வந்த போராளிகள் கடற்படைப்படகு கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்துக்குள் வந்து தம்மீது தாக்குதல் நடத்திய கடற்படைப்படகு மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர்.
இதனையடுத்து கடற்படைப்படகு திரும்பிச்;சென்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் - கரையிலிருந்து சுமார் 200 மீற்றருக்குள் - இந் நடவடிக்கையானது போர்நிறுத்த மீறல் சம்பவமாகும்.
இச்;சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது"- என்றார்.
இதேவேளை இத்தாக்குதலில் தமது படகு சேதமடைந்ததாகவும் இதில் கடற்கண்காணிப்பாளர் ஒருவர் வந்ததாகவும் சிறீலங்கா கடற்படையினர தெரிவிக்கின்றனர்.
கடற்படைப்படகு அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப்பிரயோகம் செய்த போர்நிறுத்த மீறலின் போதுதான் போராளிகள் சுட்டனர் என்றார்.
நன்றி
புதினம்.

hock: காணிப்பாளன் நாங்கள் சொல்வதை ஒரு போதும் நம்பமாட்டானோ??? :evil: :evil: