04-03-2005, 05:42 PM
மீண்டும் தலை தூக்கியுள்ள காட்டுமிராண்டித்தனமான பகிடிவதைகள்
ழூ முதலாமாண்டு மாணவர்கள் 14 பேர் நிர்வாணமாக்கப்பட்டு புகைவண்டி ஓட்டுமாறு நிர்ப்பந்திக்கட்டனர்
ழூ வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் சம்பவம்
ழூ இரண்டாம் வருட மாணவர்கள் 6 பேர் இடைநிறுத்தம்
-கனகரவி-
வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களால் முதலாம் வருட ஆசிரிய மாணவர்கள் பகிடி வதைக்குட்படுத்தப்பட்டது தொடர்பில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் 6 பேர் இடைநிறுத்தப்பட்டார்கள்.
இதனையடுத்து இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் பகிடி வதை செய்தார்களென்ற குற்றச்சாட்டை தம் மீது காரணமின்றி சுமத்தி தமது சக மாணவர்களை இடைநிறுத்தம் செய்துள்ளார்கள். ஆகவே.... அவர்களை கல்வியியல் கல்லூரிக்குள் உள்வர அனுமதிக்கக் கோரி 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஐந்து மணி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டமெனக் கூறி பிரதான வாயில் பகுதியில் சத்தியாக்கிரகமிருந்தனர். பின்னர் கல்வியியல் கல்லூரியின் ஆணையாளரின் விசாரணையினைத் தொடர்ந்து இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது.
நிர்வாகம் அழைத்தும் திசைமுகப்படுத்தல் நிகழ்விற்கு இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்கள் வராததுஇ அறிவிக்காமல் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டமென்று பிரதான வாயிலில் சத்தியாக்கிரகமிருந்தது போன்றவை தம்மை அவமானப்படுத்திய செயலாகும். ஆகவே.... தகுந்த முறையில் இரண்டாமாண்டு ஆசிரிய மாணவர்கள் நடக்கவில்லை என்பதனால் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி விரிவுரையாளர்கள் விரிவுரைகளை நடத்தாமல் உள்ளனர். இது 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.
ஆனால்.... சிங்கள மொழி மூல ஆசிரிய மாணவர்கள் இரண்டு பிரிவினருக்கும் விரிவுரைகள் நடந்தன. தமிழ்மொழி மூல முதலாமாண்டு ஆசிரிய மாணவர்களுக்கும் விரிவுரைகள் நடந்தன.
ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் இப்படியான பிரச்சினைகள் நடப்பதை எந்த மனதுடன் பார்த்துக் கொண்டிருப்பது? ஆகவே.... உண்மை நிலையினை அறிந்து கொள்ள பல தரப்பினருடனும் தொடர்பு கொண்டோம்.
இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்கள் பகிடிவதை செய்யவில்லை என வலியுறுத்திய போதும் ஒருமித்து அனைவராலும் உறுதியாக மறுக்க முடியவில்லை. சின்னச் சின்னச் சம்பவங்களென சிலவற்றை ஒத்துக் கொள்கின்றார்கள். அத்துடன் குறிப்பிட்ட சிலர்தான் முன்னின்று பகிடிவதை செய்துள்ளனர். நேர்மையாக இவர்களால் எதுவுமே செய்யவில்லை என மறுக்க முடியாது. ஆகவே தான் இப்பொழுது பகிடிவதை தொடர்பான விவகாரத்தை விட்டுவிட்டு நிர்வாகத்தில் பிழை கண்டுபிடித்துள்ளனர். நிர்வாகம் பிழையென நீங்கள் கூறுவதை முற்று முழுதாக தவிர்த்து நிர்வாகம் புனிதமானதென சொல்லுங்கள் என நான் சொல்லவில்லை. உங்களுடைய பிரச்சினை வெளிக்கொண்டு வரப்படும் போது நிர்வாகம் செய்தது பிழையென அடுக்கிக் கொண்டு போவதில் அர்த்தமில்லை.
இரண்டாமாண்டு மாணவர்களின் முக்கியமான குற்றச் சாட்டுகளாக உப பீடாதிபதி முன்னறிவித்தலின்றி பெண்களின் விடுதிக்குள் சென்றாரெனவும்இ மலக்குழி விவகாரத்தில் முன்னின்ற மாணவர்கள் பகிடிவதை செய்யாமலே செய்தார்களெனவும் நிர்வாகம் வெளியேற்றியதாகவும் தமிழ்ப் பிரிவு மாணவர்களுடன் கடுமையாக நடப்பது போல் சிங்களப் பிரிவு மாணவர்களுடன் நடப்பதில்லை எனவெல்லாம் சொன்னார்கள். ஆனால்... பெண்களின் விடுதிக்குள் உப பீடாதிபதி வந்தாரென பெண்கள் எவரும் சொல்லவில்லை.
இன்னுமொரு விடயமாக பதவி உயர்விற்காகவும்இ பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே நிர்வாகம் காரணமின்றி தம்மில் நடவடிக்கை என்ற போர்வையில் பழிவாங்குவதாகவும் இரண்டாமாண்டு ஆசிரிய மாணவர்கள் சொன்னார்கள். ஆனால்இ தற்போது பகிடிவதை விவகாரமே முக்கியமானது. ஆனால்இ
வெளிப்படுத்த முடியாத வகையில் மிகவும் கீழ்த்தரமாக செயற்பட்டுள்ளனர். மூத்த விரிவுரையாளர் ஒருவரிடம் இது பற்றி பேசுகின்ற போதுஇ கல்வியியல் கல்லூரி தொடங்கிய காலத்திலும் இந்த முறைதான் .இது போன்ற செயல்கள் தான் நடந்துள்ளதெனக் கூறினார்.
பகிடி வதை செய்வோரே! கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் தொடர்பான 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் உங்களுடைய ஆட்டத்தை ஆடுங்கள்.
1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம்இ பிரிவு (2) இல் பகிடிவதை புரிகையில் கல்வி நிறுவனமொன்றின் மாணவருக்கு அல்லது பணியாட்தொகுதி உறுப்பினரொருவருக்கு பாலியல் தொந்தரவை அல்லது பாரதூரமான காயத்தினை ஏற்படுத்துகின்ற எவரேனும் இச் சட்டத்தின் கீழ் தவறொன்றுக்கு குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன்இ நீதிவானொருவர் முன்னிலையில் சுருக்கமுறையிலான விளக்கத்தின் பின்னர்இ குற்றத் தீர்ப்பளிக்கப்படுவதன் மூலம் பத்து ஆண்டுகளை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு மறியற்றண்டனைக்கு ஆளாதல் வேண்டும் என்பதுடன்இ எந்த ஆளுக்கெதிராக தவறு புரியப்பட்டதோ அந்த ஆளுக்கு விளைவிக்கப்பட்ட ஊறுகளுக்கு நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட தொகையொன்றினை நட்ட ஈடாக செலுத்துமாறும் கட்டளையிடப்படலாம். இதனை மட்டுமல்ல அதன் முழு விபரங்களையும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆகவே... எங்களை மதிக்காவிட்டால் நாங்கள் பகிடிவதை செய்வோமென எண்ணுவதைப் போன்ற முட்டாள் தனமான செயலெதுவும் இருக்க முடியாது. கல்வியியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்களாக இருப்பவர்கள் உலகம் மதிக்கும் ஆசிரியத் தொழிலை சேவையாக செய்பவர்கள். அந்தச் சேவை செய்யும் ஆசிரிய மாணவர்கள் பகிடிவதையென மோசமாக நடக்கக் கூடாது.
இதனால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிப்படைய வேண்டிய நிலைமை ஏற்படும்
நன்றி தினக்குரல்

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->