Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தின் ஆலயம் ஒன்பது - தயா ஜிப்ரான்-
#1
ஆகமத் திருத்தத்திற்கு
மூன்றில் ரெண்டு போதும்.

கல்லறைப் பிரதேசமானாலும்
குறைந்த வாடகையில்
ஒரு
கர்ப்பக்கிரகம் வேண்டும்.

-------------------------------------------

அந்நியன் தார்ச்சாலையிலும்
"அம்மன்" தரிசனம் வேண்டி
அங்கப்பிரதிஸ்டை


-------------------------------------------

பொன்னாடை போர்த்தி
பொன்னம்பலவாணருக்கு பாராட்டு!

மூன்றாண்டுக்கு மேலாய் - ஒரே
முகவரியில்
கோயில் கொண்டருளிய
பெருமையை வியந்து.

-------------------------------------------

தீபாராதனை
அரோகரா முழக்கம்
Sorry சொல்லி
விலகிய
பிள்ளையார்

-------------------------------------------

சித்திரைப் பௌர்ணமியா?
ஆடி அமாவாசையா?
எதுவானாலும்

சனி ஞாயிறில்
வரச் சொல்லுங்கள்.

-------------------------------------------

மாணவர்கள் தான்
ஆனாலும்
ஆசிரியர்களாய் ஆகிவிட்டார்.

பூசைகளை பார்த்தவர் தான்
ஆனாலும்
பூசகராய் மாறிவிட்டார்.

பூசகரை வரச் சொல்லுங்கள்
கடவுள்களாய்
ஆக்கிடலாம்.

-------------------------------------------

வேதம் ஓதுதல்
வேதியர்க்கு அழகு

இல்லை இல்லை......

வேலையில்லையேல்
வேதியனாகு

-------------------------------------------

கல்லானாலும் கடவுள்
Lagerhaus ஆனாலும்
கோயில்

(Lagerhaus - Store Room)

-------------------------------------------

அமைச்சரை தெரிய
ஒரு தேர்தல்
பிரதமரை தெரிய
ஒரு தேர்தல்
ஜனாதிபதியை தெரிய
ஒரு தேர்தல்

பூசகரை தெரியவும்
ஒரு தேர்தல்

வாழ்க! பக்தநாயகம் !!!

-------------------------------------------


- தயா ஜிப்ரான்-
.
.!!
Reply
#2
வாழ்த்துக்கள். புலத்தில் கோயில் நிலையை நன்றாக உணர்த்தியிருக்கின்றீர்கள், ஒரு கோயிலில் இருந்து பூசகர் வெளியேறினால் அவர் உடனே புதிய கோயிலை ஆரம்பித்து விடுகின்றார் :evil:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
நன்றி மதன்.
.
.!!
Reply
#4
ம் வாழ்த்துக்கள் நன்றாக கூறி இருகிறீர்கள் ..



இதையும் கேட்டு பாருங்கள் கனடாவில் என்ன நிலை என்று தெரியும்
[b][size=18]
Reply
#5
கவிதை அருமை தயா ஜிப்ரான்.. வாழ்த்துக்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
அருமையிலும் அருமை. நகைச்சுவை உணர்வால் சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள். தூண்டப்படுமா தன்மானத்? தமிழர்களின் சிந்தனைகள்.
Reply
#7
Quote:மாணவர்கள் தான்
ஆனாலும்
ஆசிரியர்களாய் ஆகிவிட்டார்.

பூசைகளை பார்த்தவர் தான்
ஆனாலும்
பூசகராய் மாறிவிட்டார்
கவிதை அருமை தயா ஜிப்ரான்.. வாழ்த்துக்கள்.
Reply
#8
கவிதை அருமை தயா ஜிப்ரான்.. வாழ்த்துக்கள்
Quote:சித்திரைப் பௌர்ணமியா?
ஆடி அமாவாசையா?
எதுவானாலும்

சனி ஞாயிறில்
வரச் சொல்லுங்கள்.
Reply
#9
Quote:சித்திரைப் பௌர்ணமியா?
ஆடி அமாவாசையா?
எதுவானாலும்

சனி ஞாயிறில்
வரச் சொல்லுங்கள்.


வேதனைக்குரிய விடயத்தை நகைச்சுவையுடன் அணுகியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர்கள்; சிந்தித்தால் நல்லது. திருமண நாட்கள் உட்பட அனைத்து நல்ல நாட்களும் சனி ஞாயிறில் வருவது ஆச்சரியம்தான்.

!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)