![]() |
|
புலத்தின் ஆலயம் ஒன்பது - தயா ஜிப்ரான்- - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புலத்தின் ஆலயம் ஒன்பது - தயா ஜிப்ரான்- (/showthread.php?tid=4595) |
புலத்தின் ஆலயம் ஒன்பது - தயா ஜிப்ரான்- - Thaya Jibbrahn - 04-02-2005 ஆகமத் திருத்தத்திற்கு மூன்றில் ரெண்டு போதும். கல்லறைப் பிரதேசமானாலும் குறைந்த வாடகையில் ஒரு கர்ப்பக்கிரகம் வேண்டும். ------------------------------------------- அந்நியன் தார்ச்சாலையிலும் "அம்மன்" தரிசனம் வேண்டி அங்கப்பிரதிஸ்டை ------------------------------------------- பொன்னாடை போர்த்தி பொன்னம்பலவாணருக்கு பாராட்டு! மூன்றாண்டுக்கு மேலாய் - ஒரே முகவரியில் கோயில் கொண்டருளிய பெருமையை வியந்து. ------------------------------------------- தீபாராதனை அரோகரா முழக்கம் Sorry சொல்லி விலகிய பிள்ளையார் ------------------------------------------- சித்திரைப் பௌர்ணமியா? ஆடி அமாவாசையா? எதுவானாலும் சனி ஞாயிறில் வரச் சொல்லுங்கள். ------------------------------------------- மாணவர்கள் தான் ஆனாலும் ஆசிரியர்களாய் ஆகிவிட்டார். பூசைகளை பார்த்தவர் தான் ஆனாலும் பூசகராய் மாறிவிட்டார். பூசகரை வரச் சொல்லுங்கள் கடவுள்களாய் ஆக்கிடலாம். ------------------------------------------- வேதம் ஓதுதல் வேதியர்க்கு அழகு இல்லை இல்லை...... வேலையில்லையேல் வேதியனாகு ------------------------------------------- கல்லானாலும் கடவுள் Lagerhaus ஆனாலும் கோயில் (Lagerhaus - Store Room) ------------------------------------------- அமைச்சரை தெரிய ஒரு தேர்தல் பிரதமரை தெரிய ஒரு தேர்தல் ஜனாதிபதியை தெரிய ஒரு தேர்தல் பூசகரை தெரியவும் ஒரு தேர்தல் வாழ்க! பக்தநாயகம் !!! ------------------------------------------- - தயா ஜிப்ரான்- - Mathan - 04-02-2005 வாழ்த்துக்கள். புலத்தில் கோயில் நிலையை நன்றாக உணர்த்தியிருக்கின்றீர்கள், ஒரு கோயிலில் இருந்து பூசகர் வெளியேறினால் அவர் உடனே புதிய கோயிலை ஆரம்பித்து விடுகின்றார் :evil: - Thaya Jibbrahn - 04-02-2005 நன்றி மதன். - kavithan - 04-02-2005 ம் வாழ்த்துக்கள் நன்றாக கூறி இருகிறீர்கள் .. இதையும் கேட்டு பாருங்கள் கனடாவில் என்ன நிலை என்று தெரியும் - vasisutha - 04-02-2005 கவிதை அருமை தயா ஜிப்ரான்.. வாழ்த்துக்கள். - kasthori - 04-02-2005 அருமையிலும் அருமை. நகைச்சுவை உணர்வால் சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள். தூண்டப்படுமா தன்மானத்? தமிழர்களின் சிந்தனைகள். - shanmuhi - 04-02-2005 Quote:மாணவர்கள் தான்கவிதை அருமை தயா ஜிப்ரான்.. வாழ்த்துக்கள். - hari - 04-02-2005 கவிதை அருமை தயா ஜிப்ரான்.. வாழ்த்துக்கள் Quote:சித்திரைப் பௌர்ணமியா? - Eswar - 04-02-2005 Quote:சித்திரைப் பௌர்ணமியா? வேதனைக்குரிய விடயத்தை நகைச்சுவையுடன் அணுகியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர்கள்; சிந்தித்தால் நல்லது. திருமண நாட்கள் உட்பட அனைத்து நல்ல நாட்களும் சனி ஞாயிறில் வருவது ஆச்சரியம்தான். |