kuruvikal Wrote:கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம் தொடர்பாக திசைகளில் வந்த ஒரு விமர்சனம்.....
http://www.thisaigal.com/sep03/unicinema.html
விமர்சனம் விமர்சனமாகுமா....விமரிசையாகுமா....விபரீதமாகுமா....விளம்பரமாகுமா....விபரமாகுமா...விவகாரமாகுமா....!
:roll:
<b>ஒரு இதயம் துடித்திருக்கிறதே
அந்த இதயத்துக்கு வலித்திருக்கிறதே..........</b>
அந்தப் படத்தில் மணிரத்தினம் பல விஷயங்களை, மிகவும் ஆழமாகவும், நுட்பமாகவும் வெளிப்படுத்தியிருந்தார். என்னுடைய தோழி மனித உரிமைகளுக்குப் போராடுபவர்களில் ஒருத்தி. படம் அவளை நிறைய யோசிக்க வைத்திருந்தது.இலங்கை அரசியலின் ஒரு சிறு துணுக்கைத்தான் மணிரத்தினம் காட்டியிருந்தார். ஆனால் அந்தப் படம் உண்டாக்கிய தாக்கம் பிரம்மாண்டமானது. ஒரு கலைஞன் எப்படி ஒரு சரித்திரத்தைத் தன் சொந்தக் கருத்துக்களுடன் மற்றவர்களுடன் பரிமாறிக்கொண்டான், அந்தப் பரிமாற்றத்தின் மூலம் மற்றவர்கள் தங்களுக்குத் தெரியாத உலகத்தைப் புரிந்து கொண்டார்கள் என்பதை மணிரத்தினத்தின் படம் பிரதிபலித்தது.
அன்று படம் பார்க்க வந்திருந்தவர்களில் கணிசமானவர்கள் கரலைனைப் போல ஆங்கிலேயர்கள். அவர்களும் கரலைனைப் போல ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கரலைனை உருக்கிய காட்சிகளில் அந்தப் பெண் குழந்தை தன் அன்னியத்தை உணர்ந்த காட்சியை முக்கியமானதாகச் சொன்னாள். மிக மிகக் கனமான, சிக்கலான ஒரு மனவோட்டத்தை மிகச் செறிவுடன் இணைத்துக் காட்டிய படம் கன்னத்தில் முத்தமிட்ட்டால்..சற்று நேரம் கழித்து கரலைன் மணிரத்தினம் குறித்து மிக உயர்வாக சில வார்த்தைகள் சொன்னாள்.
<b>கரலைன்</b> இலங்கை அரசியல் குறித்து ஆங்கிலப் பத்திரிகைகள் மூலம் அறிந்தவள். மணிரத்தினம் சொன்ன 'கவிதை' செய்திகளைத் தாண்டிய ஓர் உணர்வுக் கொத்து. அந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள விருதுகளில் சிறந்த படத்திற்கான விருது இல்லை, விருதுகள் வேறு அம்சங்களுக்குக் கொடுக்க்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அந்தப் படம் ஆறு விருதுகளை வென்றிருப்பது தமிழ்ப் பட உலகம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
நன்றிகள் :
எழுதிய: ஆர்.பாலசுப்ரமணியம்
களத்துக்குள் தெளித்த : குருவிகள்
<b>கனத்த இதயங்களுக்குள்ளும் கண்ணீர் துளிகள்
நமக்குள் மட்டும் ஏன் ...................................?</b>