Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
HTML கற்போம்
#41
மிகவும் பயனுடையதாக இருக்கின்றது தமிழ்வாணன் அண்ணா. தொடர்ந்து எழுதுங்கள்.
--
--
Reply
#42
நன்றி `ஹரி.
துசி உங்களிற்கு `ஹரி எழுதியுள்ள விளக்கத்தை தான் தரவிருந்தேன். எனவே அவர் எழுதியுள்ளது உங்களுக்கு பயன்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். இப்பொழுது சரியா?


Reply
#43
துசி சரியாகிவிட்டது என்று சொன்னார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#44
நல்லது மதன்.

பயனுள்ள கட்டுரை தமிழ்வாணன். நீங்கள் தொடருங்கள்.
அப்படியே சோபனா குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்தில் எடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும். தமிழில் எழுதும் தொழில்நுட்பச் சொற்களுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கிலப்பதத்தை எழுதுங்கள். சாதாரணமாக முதன்முறை பயன்படுத்தும் போது எழுதினால் கூட போதுமானது.

தொடருங்கள்...


Reply
#45
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களை கவனத்தில சொண்டு அடுத்த தொடரை எழுதுகிறேன்.


.
Reply
#46
மிகவும் பிரயோசனமாக உள்ளது அண்ணா. இங்கு பல்கலைக்கழகத்தில சின்னதுவளுக்கு இதை தான் படிப்பிக்கினம். படிப்பிக்க போகும் போது உங்கள் பாடங்கள் பயனாக உள்ளது. நன்றி.
[size=16][b].
Reply
#47
<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/frontpage.JPG' border='0' alt='user posted image'>

தொடர் - 3 ற்குரிய படவிளக்கத்தை இணைத்திருக்கிறேன்.
இவ்வாறு வெளியிலிருந்து படத்தை இணைக்க வசதி உள்ளதா என்பது தெரியாமல் இருந்ததால்தான் அவ்விடயத்தில் கவனம்
செலுத்த முடியவில்லை.

மட்டுறுத்துனர்கள் இப்படத்தை உரிய இடத்தில் இடுவார்கள் என
நம்புகிறேன்.
அன்புடன் தமிழ்வாணன்.

தொடர் 3 இல் படத்தை இணைத்துள்ளேன். - மதன்
Reply
#48
இன்று நான்காவது பாடத்தில் எழுத்துருக்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். தமிழ்இணையதளங்கள் இன்று யுனிக்கோட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றன. அண்மைய விண்டோஸ் அனைத்தும் இவ் எழுத்துருக்களை காண்பிக்ககூடிய ஆற்றலை கொண்டவை. விண்டோஸ் பதிப்புகளில் இற்றைவரைக்கும் லதா எனப்படும் ஒரு தமிழ் எழுத்துரு பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கில எழுத்துக்களில் பல்வேறு அலங்கார எழுத்துருக்கள் உள்ளன. ஆனால் தமிழில் ஏனைய எழுத்துருக்களை இணையத்தளத்தில் பயன்படுத்துவது பற்றி பிறிதோர் பகுதியில் பார்ப்போம்.

தற்போது எழுத்துருக்களை மாற்ற அதனது அளவை மாற்ற அதனது நிறங்களை மாற்றுவதை பற்றிபார்ப்போம்.

<html>
<head>
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>

<body>
வணக்கம் இது HTML தொடர் - 04.


<font face="latha" size="1" color="red"> எழுத்துருபெயர் லதா - சிவப்பு - அளவு - 1</font>

<font face="latha" size="2" color="blue"> எழுத்துருபெயர் லதா - நீலம் - அளவு - 2</font>

<font face="latha" size="3" color="green"> எழுத்துருபெயர் லதா - பச்சை - அளவு - 3</font>

<font face="latha" size="4" color="red"> எழுத்துருபெயர் லதா - சிவப்பு - அளவு - 4</font>

<font face="arial" size="5" color="blue"> Font Name Arial - blue - size-5</font>

<font face="Monotype Corsiva" size="5" color="green"> Font Name Monotype Corsiva - green - size-6</font>

</body>

</html>

இவ் மீயுரைக்கான வெளியீடு (output) படத்தில் காட்டியது போல் இருக்கும்.

<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/fourthpage.JPG' border='0' alt='user posted image'>

இங்கு எழுத்துருக்களின் பெயரை மாற்றி பாருங்கள். அதன் அளவை கூட்டி குறைத்து பாருங்கள். அதன் நிறத்தை மாற்றி பாருங்கள்.

இப்போது நாம் விரும்பிய எழுத்துருவை இணையப்பக்கத்தில் இடும்போது அவ் எழுத்துரு எமது கணனியில் இருக்கவேண்டும் என்பது எமக்கு தெரியும். ஆனால் இணையப்பக்கத்தில் எமது பக்;கத்தை இடும்போது அவ் எழுத்துரு எல்லோரிடமும் இருக்கிறதா? என்பது முக்கியமானது. எனவே நாம் வரிசையாக எழுத்துருக்களின் பெயர்களை இடும்போது அவ் ஒழுங்கில் எந்த எழுத்துரு கணனியில இருக்கிறது என பரிசோதித்து இணையப்பக்கத்தை காண்பிக்கும்.

<font face="TheneeUniTx, TSCu_InaiMathi, Arial Unicode Ms, Latha"> வணக்கம் </font>

இவ்வாறு குறித்தால் முதலில் தேனீ எழுத்துரு இருக்கிறதா என கணனி பரிசோதிக்கும். இருந்தால் அவ் எழுத்துருவில் எழுத்துரு தோன்றும். அவ் எழுத்துரு கணனியில் இல்லையென்றால் இணைமதி எழுத்துரு இருக்கிறதா என கணனி பரிசோதிக்கும். இவ்வாறு இருந்தால் அவ் எழுத்துருவில் எழுத்துரு தெரியும்.

இங்கு குறிப்பிட்டவற்றை சில சில மாற்றங்களுடன் செய்துபாருங்கள். மீண்டும் சந்திப்போம்.
Reply
#49
மிக நல்ல தொடர் தமிழ்வாணன் தொடருங்கள்
[b][size=18]
Reply
#50
இன்றைய ஐந்தாவது தொடரில் கட்டுரை பகுதியொன்றையோ அல்லது செய்திதொகுப்பு ஒன்றையோ இணையதளத்தில் வடிவமைப்பது பற்றி பார்ப்போம்.

இங்கு இதுவரை சில சொற்களை மட்டுமே வெளியீடாக காண்பித்தோம். இனிமேல் ஒரு வாக்கியத்தை காண்பிக்கவேண்டிவரும்போது அதனை அடுத்த வரிக்கும் எடுத்துச்செல்லவேண்டிவரும். இவ்வேளைகளின் போது
எனும் மூலகத்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே இப்போது அறிந்திருப்பீர்கள். இவ்வாறு தேவையான வரிகளை விட்டு எழுத அத்தனை தடவைகள் இம்மூலகத்தை பயன்படுத்தலாம். இதற்கு முடிவு மூலகம் பயன்படுத்ததேவையில்லை. அதேபோல் இவ்விரண்டு வரிகளாக இடைவெளி விட
வையும் பயன்படுத்தலாம்.

மூலகத்தின் பிரதான பயன்பாடு பந்திகள் அமைக்கும்போது பயன்படுத்துவதற்கு ஆகும். அதற்குள்ளே அதனது பண்புகளை (Attributes) மாற்றுவதன் மூலம் அப்பந்தியை வலப்புறமாக இடப்புறமாக மத்திக்கு அல்லது இருப்பக்க சமப்படுத்தல் (Right, Left, Center or Justify) செய்யலாம்.

கட்டுரைகளின் தலைப்புகளுக்கு உபதலைப்புகளுக்கு தொடக்கம் <h6> வரை பயன்படுத்தலாம் என ஏற்கனவே பார்த்திருந்தோம். பந்திகளுக்கு இடையே கிடைக்கோடுகள் இடுவதற்கு
எனப்படும் மூலகத்தை பயன்படுத்தலாம்.

இதுபற்றிய விளக்கதை பெறுமுகமாக பின்வரும் மீயுரையை பரிசோதித்து பார்க்க.

<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<title>தமிழ்வாணனின் பக்கம்</title>
</head>

<body bgcolor="ffccff" text="blue">
வணக்கம் இது HTML தொடர் - 05.


<h1> வெள்ளைப்புலிகள்
<font face="Arial Unicode Ms, Latha" size="2">
<p align="left">
உலக வங்கியின் கொழும்பு வதிவிடப்பிரதிநிதி பீற்றர் ஹரோல்ட்டை வெள்ளைப்புலி|யென முத்திரை குத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான முயற்சியில் பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகள் முனைப்புடன் இறங்கியுள்ளன. இந்நடவடிக்கைக்கு பீற்றர்ஹரோல்ட் இலங்கையின் ஐக்கியத்துக்கும், இறைமைக்கும் மாறாகப் பேசியுள்ளதோடு, பிரிவினைக்கு ஆதரவாகச்செயற்படுகின்றார் என்பதே பேரினவாதிகளின் விளக்கமாகும். இவ்வாறு பேரினவாதிகள் போடும் கூச்சலுக்கு, அண்மையில் கொழும்பில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றிற்கு பீற்றர் ஹரோல்ட் வழங்கிய பேட்டியில் கூறிய சில விடயங்களே காரணமாகும். அவர் அப்பேட்டியில் 'உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் ஒரு வகையிலான உத்தியோகப்பற்றற்ற அரசு இருக்கின்றது என்ற உண்மைப் பிரகாரமும், அரசாங்கத்துடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அது ஒரு தரப்பு என்பதாலும், சட்டப்படியான பங்குதாரராக இருப்பதற்கு விடு தலைப்புலிகளுக்கு தகுதி உண்டு." என்றும் கூறியமை தொடர்பாகவே பௌத்த பேரினவாத சக்திகள் தற்பொழுது பீற்றர் ஹரோல்ட் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி விடுதல் என்பதில் முனைப்புடன் களத்தில் குதித்துள்ளன.


<p align="justify">
இத்தனைக்கும், பீற்றர் ஹரோல்ட் தான் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியானது திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பேட்டியில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகளைத் தான் பிரயோகிக்கவில்லையெனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, பீற்றர் ஹரோல்ட் கூறியதாக வெளியான தகவலில் தவறு ஏதும் உண்டா? என்பதும் கேள்விக்குரியதே. ஏனெனில் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்றை செய்து கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளைச் சமபங்காளிகளாக ஏற்று பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளது. இவை கடந்த அரசாங்கத்தின் போது நடந்தவையாகத் தற்போதைய அரசாங்கம் தட்டிக்கழித்து விடவும் முடியாது. ஏனெனில் யுத்த நிறுத்த உடன்பாடு இன்னமும் அமுலிலுள்ளது. முன்னைய உடன்பாட்டில் எதுவித மாற்றமும் செய்யப்பட்டதாகவும் இல்லை.


Quote:இவை ஒரு புறம் இருக்க பீற்றர் ஹரோல்ட் கூறியிருப்பது போன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உத்தியோகபற்றற்ற அரசு ஒன்று இருக்கின்றது என்பதை எவருமே நிராகரித்துவிட முடியாது. ஏனெனில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கென ஒரு சிவில் நிர்வாகமும், காவல்துறை, நிதித்துறை, நீதித்துறை, அரசியல்துறை உட்பட பல்வேறு துறைகளுமுள்ளன.
<p align="justify">
அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் சோதனைச் சாவடியில் அனுமதி பெற்றாக வேண்டும். இதேசமயம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்புடன் கூடியது என்பதை சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளும், தெளிவுபடுத்துபவையாகவே உள்ளன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்வோர், அங்கிருந்து வருவோர் இராணுவச்சோதனைச் சாவடியில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். பொதிகளைச் சோதனையிட அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு அரசிற்குள் ஆயின் இப்பதிவுகளும், சோதனைகளும் ஏன்? எல்லைப்பகுதிபோன்றுநடவடிக்கை ஏன்?


</font>
</body>
</html>


இங்கு மூன்றாவது பந்தி இரண்டு பக்கத்தாலும் உள்சென்றிருப்பதை கவனிக்கலாம். இதற்கு <blockquote> எனும் மூலகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தொடரில் இது பற்றி மேலதிக விடயங்களை பார்ப்போம்.
Reply
#51
<!--c1-->CODE<!--ec1--><p align="justify">

<blockquote><!--c2--><!--ec2-->

இவை இரண்டையும் கற்றுக்கொண்டேன் நன்றி.. அடுத்த பகுதி எப்பவரும்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Arrow
[b][size=18]
Reply
#52
kavithan Wrote:<!--c1-->CODE<!--ec1--><p align="justify">

<blockquote><!--c2--><!--ec2-->

இவை இரண்டையும் கற்றுக்கொண்டேன் நன்றி.. அடுத்த பகுதி எப்பவரும்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Arrow

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை புதிய தொடரை தரவேற்றுவது என தீர்மானிக்கவில்லை. தற்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எதிர்பார்க்கலாம்.
Reply
#53
நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#54
நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#55
நன்றி தமிழ்வாணன் தொடருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#56
இங்கு தமிழ்வாணன் அண்ணா கூறியது போல் அவரால் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் பதில் கூறமுடியும் எனின் நான் சிறிது முயற்சிக்கிறேன்
Reply
#57
இத்தொடரில் முன்னரே குறிப்பிடப்பட்டு இருக்கும் என நம்புகிறேன் <B>HTML</B> என எழுதுவதன் மூலம் நீங்கள் விரும்பிய எழுத்துக்களை தடிப்பாக எழுதலாம் என அதையே இப்படியும் எழுதிப்பாருங்களேன் HTML .
Reply
#58
நீங்கள் எழுதும் எழுத்துக்கள் சாய்ந்த நிலைக்கு இருக்கவேண்டும் எனின் <I>HTML</I> இப்படி எழுதுவதன் மூலம் எழுத்துக்களை சாய்ந்த நிலைக்கு மாற்றிவிடலாம். அதையே HTML எழுதுவதன் மூலமும் செய்யலாம்
நன்றி
Reply
#59
ஆம் அதைப்போன்றே நீங்கள் எழுதும் சொற்களின் கீழ் அடிக்கோடிட விரும்பின் HTML எழுதலாம்.
Reply
#60
இதை உதாரணத்தின் உதவியுடனேயே விளக்கிவிடுகிறேன் புரிந்துகொள்ளாவிடின் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் உதாரணமாக: ஒட்சிஐனை இரசாயனக்குறியீடாக எழுத விரும்பின் இப்படி எழுதலாம் O<SUB>2</SUB>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)