Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகளீர் தினம் எதற்கு.. ??
#61
எழுத்து பிழைகள் அதிகம். மன்னிக்கவும்.

தென்றலாய் இருந்தோம், பலன் என்ன?? நான் முதலில் கூறியது போல, இருபாலர்களிலும் அனைவரும் நல்லவர்கள் அல்ல. பொதுவாக நாங்கள் ஒரு விடயம் பற்றி பேசும் போது, % பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் போது, பெண்ணடிமை செய்யும் ஆண்களே, ஆண்களை மதிக்காமல் நடக்கும் பெண்களை விட அதிகம் காணபடுகிறார்கள். சரியா??
[size=16][b].
Reply
#62
நல்ல ஆழமான அருமையான கருத்து தமிழ் நிலா :wink:
. .
.
Reply
#63
thamizh.nila Wrote:அம்மா சீதனம் கேட்ட மகனுக்கு என்ன வாயில நாங்கள் யாழ் சமையள் அறையில் செய்த அல்வாவா இருக்கு?

அம்மாவையும், மனைவியையும் சண்டை போடாமல் பார்க்க தெரியாமல். சும்மா, எதுக்கெடுத்தாலும் பெண்களையே குற்றம் சொன்னால் எப்படி? கையாலாகாதவன் என்று சொன்னால் தப்பா?

தங்கச்சி நீங்கள் கூறிய கருத்துகளிள் உண்மை இல்லாமல் இல்லை ஆனாலும் மேற்கூறிய இரு கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை....கொஞ்சம யோசிங்க...அம்மா சீதனம் என்டு வாங்கி தன்னுடைய கணக்கிலா? போட்டு வைக்கிறா...இல்லையே.தனது மகனும் மருமகளும் பிற்காலத்தில் நல்லா இருக்க வேண்டும் என அவர்களின் வங்கி கணக்கிலே தானே போட்டு வைக்கிறா....(பேரம் பேசி வாங்குவது தவறுதான்)


மற்றது மாமி மருமகள் சண்டை--இதில் கணவன் யாருக்கு சப்போட் பண்ண வேண்டும் என எதிர்பhர்கிறீர்கள் பெத்த தாய்க்கா.? அல்லது கட்டிய மனைவிக்கா...? இருவருமே அவனின் இரு கண்கள் போல (கொஞ்சம் OVER இல்லை.....) மாமி மருமகள் சண்டை சும்மா FRIENDLY MATCH அடுத்த நிமிடமே சமரசமாகி விடுவாhகள் இதற்குள் எதுக்கு ஆண்களை நுளைத்து BIG MATCH ஆக்கப் பாக்கிறீங்கள்........
நான் சொன்னதில் பிழையில்லையே.....................!!!
...............
Reply
#64
Quote:இருவருமே அவனின் இரு கண்கள் போல (கொஞ்சம் OVER இல்லை.....)
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#65
வணக்கம்!
நான் கூறவந்த கருத்து இங்கு திசை திருப்பப்பட்டுள்ளதாய் உணர்கின்றேன். நான் சொன்னது இதைதத்தான் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பாரதியில் கவிதையில் சொன்ன பெண்களை விட அதிகம் வளர்ந்து விட்டார்கள் என்றே..அதிலும் விட இன்று எனக்கு தெரியக் கூடியவாறு பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம் என்பது தான் உண்மை.புகலிடத்தில் பெண்கள் மேழைத்தேய கலாச்சாரத்தினுள் வீழ்வதையும் ஈங்கிலேயருக்கு நிகராக ஆடை அணிவதையும் புகைப்பிடிப்பதையும் ஏன....யும் பெண்களுக்கு இருக்கும் சுகந்திரத்தின் உச்சமாகவே கருதுகின்றேன். ஒரு ஆண் சமூதாயத்தில் மிகவும் ஓர் கேவலமாக சித்தரிக்கப்படுகின்றாhன். சீதனக் கொடுமை பற்றி சொன்னீர்கள் அதற்க்கு காரணம் யார்? நீங்கள் தான் தாய் சீதனம் கேட்டால் மகன் வாயில் அல்வாவா இருக்கு என்று நீங்கள் கேட்டது போல இருந்தது.. மகன் தாயிடம் அதை சொன்னால் தாய் என்ன சொல்லுவார் தெரியுமா? உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு நீ என்ன செய்யப் பேnகின்றாய் என்று கேட்பாள்...எங்களது சமுகத்தில் இருக்கும் சீதனக் கொடுமையை நான் ஆதரிக்க வில்லை அது தவறு தான் அதை யாரும் சரியேன்று வாதாட முடியாது அதை ஆண்கள் மீது பொடுவதை தான் எதிர்க்கிறேன்... வெறும் தமிழக நாடகங்களை வைத்து ஆண்களை எடை போடுவது தவறு... ஆண்கள் மிகவும் பாவப்பட்ட பிறப்புக்களாகவே கருது கின்றோம்.. சம உரிமை கேட்ட பெண்கள் இன்று முழு உரிமையை யும் எடுத்ததால் தான் இந்த நிலை உலகில் பெண்கள் புரட்சி செய்தும் கிடைக்காத உரிமைகள். சாதாரண நவீன வாழ்வில் கிடைத்து விட்டது என்பது உண்மை.. நான் இந்திப் பெண்கள் பற்றி இங்கு கறிப்பிடவில்லை ஈழத்தவர்களையும் புகலிடத்தவரையும் தான் சொல்கின்றேன்.. இந்தியாவில் இன்னும் பெண்ணடிமை இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#66
Quote:தங்கச்சி நீங்கள் கூறிய கருத்துகளிள் உண்மை இல்லாமல் இல்லை ஆனாலும் மேற்கூறிய இரு கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை....கொஞ்சம யோசிங்க...அம்மா சீதனம் என்டு வாங்கி தன்னுடைய கணக்கிலா? போட்டு வைக்கிறா...இல்லையே.தனது மகனும் மருமகளும் பிற்காலத்தில் நல்லா இருக்க வேண்டும் என அவர்களின் வங்கி கணக்கிலே தானே போட்டு வைக்கிறா....(பேரம் பேசி வாங்குவது தவறுதான்)

இதே அம்மா, தன் மகளுக்கு வரன் பார்க்கும் போது, தன் மகளின் மாமியாரை எப்படி வசை பாடுவா?

அது என்ன மகன், மருமகளின் எதிர்காலத்திற்கு? கட்டின மனைவியை காப்பாற்ற தெரியாத ஒரு ஆண், முதலில் தான் ஆண் என்று சொல்வதை நிறுத்த வேண்டும். இரண்டாவது இப்படிபட்ட ஒருத்தனுக்கு எதற்கு திருமணம்???


அப்படியே மகன் , மருமகளை பற்றி கவலை படுவதானால், அவ குடுக்க வேன்டியது தானே. எதற்க்காக பெண்ணை பெற்றவரை வதைக்க வேண்டும்???

Quote:மாமி மருமகள் சண்டை சும்மா FRIENDLY MATCH அடுத்த நிமிடமே சமரசமாகி விடுவாhகள் இதற்குள் எதுக்கு ஆண்களை நுளைத்து BIG MATCH ஆக்கப் பாக்கிறீங்கள்........

Friendly Match a?அப்படி சொல்லி நீங்கள் தப்பிக்க பார்க்கிறீர்களா? உண்மையில் அவர்கள் நிஜத்தில் உறவாவதில்லை. சூழ்நிலை காரணங்களால் ஒற்றுமையாய் இருப்பது போல் வாழ்கிறார்கள். ஆண்களை விட பெண்களுக்கு ரோசம், மானம், சூடு, சுறனை எல்லாம் அதிகம். வீட்டு ஆண்களின் கவுரவத்திற்காக அவர்கள் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் நடிக்க வேண்டிய சந்தர்ப்பம். அவ்வளவே? ஆனால் இருவரின் மனதிலும் எத்த்னை ரணங்கள் இருக்கும். இதை நீங்கள் தலையிட்டு தீர்க்காவிடில் பிறகு என்ன, ஆனைYஇறவு சமர் தேவலை

Quote:பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பாரதியில் கவிதையில் சொன்ன பெண்களை விட அதிகம் வளர்ந்து விட்டார்கள் என்றே

எத்தனை சதவீதமான பெண்கள் நீங்கள் சொன்ன போல் வாழ்கிறார்கள்?

Quote:உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு நீ என்ன செய்யப் பேnகின்றாய் என்று கேட்பாள்...

அண்ணன் தான் தங்கைக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் நீங்கள் கூறிய படி பார்த்தால், தங்கைக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்றால், உழைத்து கொடுங்கள். மனைவியிடம் உங்களை விற்றா கொடுக்க வேண்டும். அதை விட ஒரு ஈன பிழைப்பு இருக்குமா உலகத்திலே??

உங்கள் தங்கைக்கு நீங்கள் அண்ணனா? அல்லது உங்கள் மனைவியின் தந்தையோ/அண்ணனோ அண்ணனா??

நீங்கள் கோவிக்க வேண்டாம். எனக்கு உங்கள் கருத்து விளங்கவில்லை. அதனால் தான் விரிவாக கேட்கிறேன். தவறாக நினைக்காமல், எனக்கு விளங்கபடுத்துங்கள்.

Quote:பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம்

இந்த காரணங்களை விளக்கி கூற முடியுமா அண்ணா?? சும்மா சண்டை பிடிக்க கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். இது மிகவும் சுவாரசியாமான ஒரு தலைப்பு. அனைவரும் இதில் தங்கள் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். சியாம் அண்ணா எங்கே?

Quote:புகலிடத்தில் பெண்கள் மேழைத்தேய கலாச்சாரத்தினுள் வீழ்வதையும் ஈங்கிலேயருக்கு நிகராக ஆடை அணிவதையும் புகைப்பிடிப்பதையும் ஏன....யும் பெண்களுக்கு இருக்கும் சுகந்திரத்தின் உச்சமாகவே கருதுகின்றேன்.

அப்ப நிலவன் அண்ணா, ஆணகளின் மேலைத்தேய நாட்டத்தையும் நீங்கல் வெறுக்கிறீர்கள் தானே??

Quote:நான் இந்திப் பெண்கள் பற்றி இங்கு கறிப்பிடவில்லை ஈழத்தவர்களையும் புகலிடத்தவரையும் தான் சொல்கின்றேன்.. இந்தியாவில் இன்னும் பெண்ணடிமை இருக்கு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை

இந்திய பெண்களை வெளியே தெரியும் படி அடிமை படுத்துகிறார்கள். ஈழ பெண்களையும், புலத்தில் வாழும் ஈழ பெண்களையும் தெரியாமல் அடிமைப்படுத்துகிறார்கள் என்பதே என் கருத்து. கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில் எத்தனை அடிமை தனங்கள்? இல்லை என்று உங்களால் கூற முடியுமா??

கடவுள் நம்பிக்கை என்பது வேறு. மூட நம்பிக்கை என்பது வேறு. அது போல தான். ஆண்களும் பெண்களும் எமது பண்பாடை பாதுகாக்க வெண்டும். ஆனால் சில விடயங்கல் பெண்களை அடிமை படுத்த உருவாக்க பட்டன. அவற்றை களை பிடுங்க வேண்டும்.

என்னோட ஒருத்தரும் சண்டை போடாதிங்கோ. நான் நல்ல பிள்ளை. தெரியாததை உங்களிடம் கேட்கிறேண்.
[size=16][b].
Reply
#67
Quote:நான் கூறவந்த கருத்து இங்கு திசை திருப்பப்பட்டுள்ளதாய் உணர்கின்றேன்.
Nilavan

உணருரதென்ன உண்மை குடும்பச்சண்டை தொடங்கீட்டுது
ஆளை வீடுங்கோப்பா புட்டாளை எறிவாங்க என்னலை ஏலாது
சமயல்காறிவேற இங்க நிக்கிறா
:wink: :wink: :wink:
[b]
Reply
#68
Quote:உணருரதென்ன உண்மை குடும்பச்சண்டை தொடங்கீட்டுது
ஆளை வீடுங்கோப்பா புட்டாளை எறிவாங்க என்னலை ஏலாது
சமயல்காறிவேற இங்க நிக்கிறா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
Quote:உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு நீ என்ன செய்யப் பேnகின்றாய் என்று கேட்பாள்

இக்கருத்தை நான் மீளப் பெற்றுக் கொள்கிறேன்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#70
Quote:
Quote:பல குடும்பங்கள் பிரிவதற்க்கு (கணவன்-மனைவி) பெண்களே காரணம்

இந்த காரணங்களை விளக்கி கூற முடியுமா அண்ணா?? சும்மா சண்டை பிடிக்க கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். இது மிகவும் சுவாரசியாமான ஒரு தலைப்பு. அனைவரும் இதில் தங்கள் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். சியாம் அண்ணா எங்கே?
களத்தின் கருத்தினை அறிந்தவன் நான் ஒரு கருத்தில் களமாடும் போது சண்டை என்று நான் எடுப்பதில்லை. அது எனது கருத்துக்களை முன் வைக்க எனக்கு கிடைத்த சந்தர்ப்பமாய் பார்க்கிறேன் . நூலக கணனியை பாவிப்பதால் உடனே பதில் தர முடியவில்லை..
புகலிடத்தில் விவாகரத்துக்கு காரணம் பெண்களும் ஆண்களும் தான் அதில் பேரும் பங்கு வகிப்பது பெண் என்பது மறுக்க முடியாத உண்மை. எனக்கு தெரிந்த வரை பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. தாயகத்தலி; இருந்து தனது மனைவியை அழைத்து கல்வி கற்ப்பிக்கின்றனர் இங்கிருக்கும் பல ஆண்கள். அப்படி கல்வி கற்ற அவர்களுக்கும் சாதாரண தொழிற்ச் சாலைகளில் வேலை செய்யுமு; ஆண்களுக்கும் பிரச்சினை. அல்லது தேவையில்ல கற்பனையில் பெண்கள் வாழ்வது. அதை விட தாயகத்தில் இருக்குமு; ஆண்களின் உறவுகளுக்கு அவர்கள் உதவுவதை ஒரு காரணம் காட்டி சண்டை எடுப்பது...வேலைக் களைப்புடன் வந்திருக்கும் ஆண் இவர்கள் இப்படி கதைக்கு கோபப் படுவது உண்மைதான்.. ஆனால் ஆணின் களைப்பை உணர பெண் தவறி வந்த உடனேயே சண்டை அல்லது கதையை சொல்லிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#71
Quote:அப்ப நிலவன் அண்ணா, ஆணகளின் மேலைத்தேய நாட்டத்தையும் நீங்கல் வெறுக்கிறீர்கள் தானே??

நிச்சயாமாக ஆணே பெண்னே தமிழ் கலைகலை மிதிப்பதை வெறுக்கிறேன். இதில் நீங்கள் பெண்கள் பற்றி கதைத்ததால் பெண்களைப் பற்றி மட்டும் சொன்னேன் . எனக்கு ஆண் பெண் வித்தியாசம் பார்க்கக தெரியாது யாராக இருந்தாலும் எனக்கு தெரிந்ததை தெரிந்த படி எழுதுவேன்

Quote:இந்திய பெண்களை வெளியே தெரியும் படி அடிமை படுத்துகிறார்கள். ஈழ பெண்களையும், புலத்தில் வாழும் ஈழ பெண்களையும் தெரியாமல் அடிமைப்படுத்துகிறார்கள் என்பதே என் கருத்து. கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வையில் எத்தனை அடிமை தனங்கள்? இல்லை என்று உங்களால் கூற முடியுமா??

கடவுள் நம்பிக்கை என்பது வேறு. மூட நம்பிக்கை என்பது வேறு. அது போல தான். ஆண்களும் பெண்களும் எமது பண்பாடை பாதுகாக்க வெண்டும். ஆனால் சில விடயங்கல் பெண்களை அடிமை படுத்த உருவாக்க பட்டன. அவற்றை களை பிடுங்க வேண்டும்.

என்னோட ஒருத்தரும் சண்டை போடாதிங்கோ. நான் நல்ல பிள்ளை. தெரியாததை உங்களிடம் கேட்கிறேண்.
மன்னிக்கனும் தமிழ்.நிலா
இது சண்டையல்ல கருத்து மோதல்... தமிழ் பண்பாடு எவரையும் அடிமைப்ப டுத்த வில்லை. அதே நேரம் பெண்கள் தாங்களாகவே அதற்க்குள் அடை பட்டுக்கிடக்கின்றனர். நான் இப்படி செய்தால் எனது சமுகம் என்னை எப்படி பார்க்குமு; என்று ஓர் அச்சத்தில் இருக்கின்றனர்.(ஒரு சிலர்) இந்த அச்சத்தை களைந்தவர்கள் தமிழ் காலாச்சாரத்தின் எல்லையை தாண்டி விட்டனர். வெறும் ஆடையலங்காரங்களில் தமிழ் கலாச்சாரம் இருப்பதாய் சொல்லம் முட்டாள் நானல்ல. எங்கள் கலாச்சாரம் ஆங்கிலேயரால் மதிக்கப்படுகின்றது ஆனால் எம்மவர்களால் மிதிக்கப்படுகின்றது. இப்போது புகலிடத்தில் இருப்பது தமிழ் கலாச்சாரம் இல்லை. "தமிழ்ப்பல்காலாச்சாரம்" இப்படியாய் காலாச்சாரம் இருக்கையில்...
இந்தியப் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதை ஏற்க்கும் நீங்கள் எமது பெண்கள் சுகந்திரமாய் வாழ்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றீர்கள். காரணம் என்ன? உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் சுகந்திரமாய் இல்லையா? காலாச்சாரம் உங்களை கட்டுப்படுத்துகிறதா? அப்படியாயின் அது எந்நத விகையில்உங்களை கட்டுப்படுத்து கின்றது என்பதை சொல்லுங்கள்....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#72
யார் என்னதான் வியாக்கியானம் சொன்னாலும், எவ்வளவு பட்டிமன்றம் வைத்தாலும், உலகில் பெண்ணடிமை உள்ளதை மறுக்கமுடியாது. எமது சமூகத்துக்குள் மட்டும் என்று பார்த்தாலும்(புலத்திலும், தாயகத்திலும்) பெண்ணடிமை நிறையவே உள்ளது.
முக்கிய காரணம் : உழைப்பவர் ஆணாக உள்ளதுதான். பெண் ஆணில் தங்கி வாழ்வதுதான்.

பெண்கள் சுயமாக எப்போது வாழ முடிவெடுக்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு விடுதலை. ஆனால் ஆண்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டார்கள், ஏனெனில் சட்டங்களையும், நியமங்களையும் உருவாக்குவது முற்றுமுழுக்க ஆண்களே.

இந்தக் களத்திலேயே அதிக இடங்களில் இதனைப் பற்றி கருத்தாடியாயிற்று. எனினும் ஆணாதிக்கமும், பெண்ணடிமையும் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். இல்லாவிடில் இந்த விவாதங்கள் அர்த்தமற்றவையாகும்.

பண்பாடு, கலாச்சரம், வாழ்வுமுறை என்பன இயங்கியல் தத்துவத்திற்கு உட்பட்டன. காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும், அல்லது புதுப்பிக்கப்படும். எமது சமூகம் சிறு சிறு மாற்றங்களையும் வன்மையாக எதிர்க்கும், என்றாலும் மாற்றங்கள் வந்துதான் ஆகும்.

கடந்த 20 வருட காலத்தை எடுத்தால், பெண்களுக்கு உரிமை கூடக் கிடைத்திருக்கிறது, அதற்காக அவர்கள் ஆணுக்குரிய அனைத்துரிமைகளையும் பெற்றுவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.


கடைசியாகக் கருத்துத் தலைப்புக்குரிய எனது பதிவு.
பெண்கள் தினம், மற்றும், தாயார், தந்தையர், காதலர் தினங்கள் போன்றவை வாழ்த்துமடல் விற்பனை நிலையங்களால் போலியாக உருவாக்கப்பட்டவை. கவனித்துப் பார்த்தால் இத் தினங்கள் பண்டிகை காலங்களைத் தவிர்த்துத்தான் வருகின்றன. வாழ்த்துமடல் விற்பனைக்காக உருவாக்கப்பட்டவையே இவையென்பது எனது கருத்து.

பாடசாலைகளில் இத் தினங்களைப் பற்றி சிறுவயதிலேயே அறிமுகப் படுத்துவதால், சிறுபிராயத்திலிருந்தே வாழ்துமடல் கொடுப்பதும், பூங்கொத்து கொடுப்பதும் கட்டாயமாகிவிட்டது. எனவே வாழ்த்துமடல் விற்பனை நிலையங்கள் எல்லா மாதங்களிலும் வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#73
யதார்த்தத்தை அப்படியே சொல்லியுள்ள கிருபன்ஸ் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லமாட்டேன். யதார்த்தம் என்பதை அப்படியே எடுத்துரைத்த உங்கள் வரிகளுக்கான வலிமையை வாழ்த்து என்ற சொல்லில் போட்டு வதைக்கவில்லை.
சபாஸ்.....உங்கள் எண்ணம் போன்ற கருத்து இங்கு பல இடத்தில் பகிரப்பட்டும் இன்னும் பெண்கள் உரிமையென்று கதைக்கப்படுகின்ற போது அடக்கமே ஆழுமையாகிறது.
:::: . ( - )::::
Reply
#74
Quote:அதே நேரம் பெண்கள் தாங்களாகவே அதற்க்குள் அடை பட்டுக்கிடக்கின்றனர். நான் இப்படி செய்தால் எனது சமுகம் என்னை எப்படி பார்க்குமு; என்று ஓர் அச்சத்தில் இருக்கின்றனர்

அண்ணா, நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அப்படி பெண்கள் தாங்களாகவே அடைபட்டு இருப்பதன் காரணத்தையும் கூறி உள்ளேன்.

அப்படி விடுதலை பெறும் பெண்களுக்கு கிடைக்கும் பெயர் என்ன? அப்பாவும் அம்மாவும் உயிரோட இருக்க வேண்டும் என்றால், இதை செய்யாதே, எத்தனை குடும்பங்களில் இது நடக்கின்றது.


Quote:.(ஒரு சிலர்) இந்த அச்சத்தை களைந்தவர்கள் தமிழ் காலாச்சாரத்தின் எல்லையை தாண்டி விட்டனர்.

அப்படி எல்லை தாண்டியவர்களும் ஒரு சிலரே. பெரும் பாலும் புலத்தில் தான் இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அதற்கு பெண்கள் மேலேயே குற்றம் சொல்ல முடியுமா அண்ணா? அவர்களில் செயல்களுக்கு பின்னால் காரணங்கள் ஒன்றும் இல்லை என சொல்ல உங்களால் முடியுமா?

Quote:எமது பெண்கள் சுகந்திரமாய் வாழ்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றீர்கள். காரணம் என்ன?

எது அண்ணா சுதந்திரம்?? புலத்தை எடுத்து கொண்டால் பல விதமான சூழ்நிலையில் இருக்கும் குடும்பங்கள் உள்ளன.

1. உங்கு உள்ள ஒரு ஆண் மகன், அங்கு போய் ஒரு பெண்ணை திருமணம் செய்து அழைத்து வருகிறார். அவவும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. வேலை போகும் பெண் எனில், வீட்டு வேலைகளிலும் ஆண்கள் பங்கு எடுக்க வேண்டும். சரியா? ஆனால் இது எத்தனை குடும்பங்களில் நடக்கின்றது அண்ணா? வேலைக்கு போய் வந்தால் இவருக்கு மட்டுமா அண்ணா களைப்பு?

இப்படியான ஒரு வாழ்க்கையில் அந்த பெண் கத்தாமல் என்ன தான் செய்வாள்? கத்துவதை நான் சரியெண சொல்வதில்லை. ஆனால் அவள் தன் நாட்டில் இருந்த போது, இவர் அங்க போய் தேவயில்லாமல் நிJஅத்தை சொல்லாஅமல், அங்க வா இது செய்கிறேன் அது இது என்றால் , அந்த பெண் தான் என்ன செய்வா??

நான் தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்கு கல்வி நிமித்தமாக சென்று இருக்கிறேன். இந்த காரணம் தான் புலத்தில் இருந்து கல்யாணமாகி வந்த பெண்களால் முன் வைக்க பட்டுள்ளது.

சரி இவையை விடுவம்.

2. புலத்தில் பல காலங்களாக வசிப்பவர்கள். அவர்களில் பலருக்கு பெரிதாக பிரச்சனை இல்லை. பெரும்பாலும் பெண்களும் உழைக்கிறார்கள். வீடு வாங்கினால் அரைவாசி பணம் அவர்களும் செலுத்துகிறார்கள். ஆகவே கிருபன் அண்ணா கூறியது போல் பெண்கள் தங்கள் காலில் நிற்கும் போது அடிமை தனம் என்பது நேரடியாக வீட்டில் இருந்து வர முடியாது. ஆனால் வேலை என்று போகும் போது, அல்லது சமூகம் என்று வரும் போது நடக்காமலா இருக்கிறது?

3.அடுத்து பெரும் பாலானவர்கள் யோசிக்காமல் குற்றம் சுமத்துவது இளைஞர்கள் மேல். பெரும்பாலும் பெண்கள் மேல்.

புலத்தில் ஆண் புகைப்பிடித்தால் அது "சரி ஆன் பிள்ளை தானே, இளம் வயசு" அல்லது "போக போக சரிஆகி விடும்". ஆண்களுக்கு என்று வரும் போது அது பொதுவாக ஒரு health issue. பெண்கள் என்று வரும் போது அது கலாச்சாரம், பண்பாடு, மதம்.. என்ன அண்ணா இது நியாயம்? புகை பிடிப்பதை நான் சரியென கூற வரவில்லை. ஆனால் பெண் புகை பிடிக்கும் போது வரும் கலாச்சாரம், பண்பாடு..ஆண் புகைக்கும் போது எங்கே போய் விடுகிறது. தராசு சமனா க இல்லையே அண்ணா..இதுவே ஒரு வகை அடிமைத்தனம் தானே..

விதண்டா வாதம் என நினைக்காமல் சிந்தியுங்கள். இப்படி தான் , இதை தான் நான் மறை முகமான அடிமை வாழ்வு என்றேன்.

படித்தென்ன பட்டம் பெற்று என்ன, இப்படி செய் இல்லை எனில் நாங்கள் மருந்து குடிப்போம் என்று கூறும் போது, ஒரு பெண்ணிற்கு தன் சுதந்திரமா? பெற்றவர்களின் உயிரா பெரிதாக படும்? சொல்லுங்கள்

கிருபன் அண்ணா, தங்கள் கருத்துக்களில் நிஜம் உள்ளது.

[size=16][b].
Reply
#75
[quote=thamizh.nila] படித்தென்ன பட்டம் பெற்று என்ன, இப்படி செய் இல்லை எனில் நாங்கள் மருந்து குடிப்போம் என்று கூறும் போது, ஒரு பெண்ணிற்கு தன் சுதந்திரமா? பெற்றவர்களின் உயிரா பெரிதாக படும்? சொல்லுங்கள்

இப்படியான நிலைமை ஒன்றை எனது சிநேகிதி ஒருவர் கையாண்ட விதத்தை பாருங்கள்.

அவர் அப்போது இலங்கையில், கண்டியில் ஒரு விஞ்ஞான நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தார். அவரது ஆய்வு பூச்சி மருந்து குடித்தவர்களுக்கு எவ்வாறு மரணம் விளைகிறது என்பது பற்றியதாகும். பேராதெனிய மருத்துவ நிலையத்துக்கு பூச்சிமருந்து குடித்த ஒருவரை கொண்டுவந்த உடனேயே அவருக்கு தொலைபேசி அழைப்பு வரும். மருந்து குடித்தவர் மரணமடைய முதல் வண்டி பிடித்து போய் இரத்தம் எடுத்து வரவேண்டும். நிறையப்பேர் இப்படி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சிப்பதில்லை. அதனால் அவருக்கு போதுமான அளவு வேறு வேறு ஆட்களின் இரத்தம் கிடைப்பதில்லை.

கொழும்பில் அவரது பெற்றோர் வாழ்ந்து வந்தனர். வார இறுதியில் கொழும்புக்கு போனால் பெற்றோரோ "கலியாணம் செய்" என்று ஒரே தொல்லை. அவர்கள் காட்டும் எவரும் இவருக்கு பிடிக்கவில்லை. கடைசியாக ஒரு ஞாயிற்று கிழமை தந்தை அந்த ஆயுதத்தை எடுத்தார். அது தான் <b>பூச்சிமருந்து</b>

மகள் என்ன செய்தார் தெரியுமா?
"சரி இதை குடிக்கிறதெண்டால் குடியுங்கள். ஆனால் குடிச்சுப்போட்டு பேராதெனிய ஹொஸ்பிற்றலுக்கு கொண்டு வரச்சொல்லுங்கள். எனக்கு ஆட்கள் காணாமல் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு கண்டிக்கு வந்து விட்டார்.
இது நடந்தது 12 .வருடங்களுக்கு முதல். இன்று அவர் சர்வதேச அளவில் பிரபலமான நரம்பியல் விஞ்ஞானி. கடந்த வருடம் தனக்கு பிடித்தமானவரை பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறர்.

ஆகவே "உன்னுடைய வாழ்க்கையை அழிக்க விடு. அல்லது நான் சnகிறேன்", என்று நிற்கும் படு மோசமான சுயநலவாத பெற்றோரை பெண்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு தாங்களாகவே "வாழ்ந்தது காணும் போய்ச்சேருங்கள்" என்று அனுப்பி வைக்க வேண்டும்.
Reply
#76
அவவிட பெற்றோர் பேருக்கு தான் பயமுறுத்தியிருக்கிறார்கள்? ஆனால் அனைவரும் அப்படி இல்லையே?

அவவுக்கு அவட பெற்றோரை பற்றி நன்றாக தெரிந்து இருக்கு :mrgreen:

ஆனால் அவவுக்கே 12 வருடம் எடுத்து இருக்கா? :mrgreen:
[size=16][b].
Reply
#77
Quote:முக்கிய காரணம் : உழைப்பவர் ஆணாக உள்ளதுதான். பெண் ஆணில் தங்கி வாழ்வதுதான்.

என்ன ராசா ம......போ யோவ் இப்ப உலகத்தில நம்ம நாடு உட்ப்பட எல்லா இடமும் பொட்டையள் தான் அதிகமா வேலையில் உள்ளனர் தம்பி நீர் சிலீப் பண்ணி ரென் இயர் ஆகுதாக்கம்
உங்க பெடியள் எல்லாம் சும்மா சவுண்டு குடுத்துக்கொண்டு திரியினம்
நீர் உட்பட :evil: :evil: :evil: :evil:


:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#78
தாத்தா நீங்கள் கூறுவது கூற சண்டை வர காரணமாக உள்ளது. மனைவி தன்னை விட அதிகமாக உழைப்பதை எத்தனை ஆண்கள் எதிர்க்காமல் இருக்கிறார்கள்?
[size=16][b].
Reply
#79
thamizh.nila Wrote:அவவிட பெற்றோர் பேருக்கு தான் பயமுறுத்தியிருக்கிறார்கள்? ஆனால் அனைவரும் அப்படி இல்லையே?

நஞ்சு குடிப்பேன் என்று மிரட்டும் பெற்றோர் தமது பெயர், புகழ், பணம், சாதி, சமயம் போன்றவற்றிற்காக தமது பிள்ளைகளின் மகிழ்வான வாழ்வை பலி கொடுக்க துணிந்தவர்கள். அவர்கள் மிகவும் சுயநலவாதிகள். ஒருபோதும் தமது உயிரை இழக்கப்போவதில்லை.


தமது பெற்றோர் தமது நல்வாழ்வை நாசம் செய்ததால் நஞ்சு குடித்த இளம் பிள்ளைகளை பற்றி பெருமளவில் அறிந்திருக்கிறோம். ஆனால் மகள் தமக்கு பிடிக்காத ஒருவரை திருமணம் செய்ததால் நஞ்சு குடித்த பெற்றோரை நான் ஒரு முறை கூட கேள்விப்பட்டது இல்லை. நஞ்சு குடிப்பேன் என்று மிரட்டிய பெற்றோர், மகள் மீறினால் செய்வதெல்லாம் அடியாட்களை வைத்து தொல்லை கொடுப்பது, பொய் பெட்டிசன் எழுதி தொல்லை கொடுப்பது, அப்பா அம்மாவை "நீ தானடி பிள்ளைகளை கெடுத்தாய்" என்று அடிப்பது "இனிமேல் அவள் எங்கள் மகள் இல்லை" என்று ஊரெல்லாம் சொல்லித்திரிவது போன்றவை தான்.


thamizh.nila Wrote:ஆனால் அவவுக்கே 12 வருடம் எடுத்து இருக்கா? :mrgreen:

தமிழ் நிலா,
அவவுக்கு தனக்கு பிடித்தமானவரை கண்டுபிடிக்கவும் குடும்ப வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கவும் தான் 12 வருடம் எடுத்ததே தவிர பெற்றோரின் அனுமதிக்காக அவ காத்திருக்கவில்லை.
Reply
#80
12 வருட கதை சும்மா சொன்னேன் அண்ணா. நீங்கள் சொல்வது சரி அண்ணா, ஆனாலும் அவர்கள் அப்படி சொல்லும் போது பாவம் பிள்ளைகள் என்ன தான் செய்வார்கள்
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)