04-24-2003, 02:27 PM
பூ விழுந்த மனசு கவிதை தொகுப்பிலிருந்து ஓரு கவிதை
அழகே
சுகமாய் நீ அங்கே
சுமையுடன் நான் இங்கே
அருகில் இருந்திருந்தும் நாம்
அகன்றே வாழந்திருந்தோம்
அதனால்தானோ இன்றுவரை
நாம் பிரிந்தே இருக்கின்றோம்.
என்னை பிடிக்கவில்லை உனக்கு
என் இதயம் பிடிக்கவி;ல்லை உனக்கு
என் கவிதை பிடிக்கின்றது
என் கனவுகள் பிடிக்கின்றது
ஏன் அவை உன்னை புகழ்வதாலா
கன்கள் காட்டிநின்றாய்
உன்தன் இதழ்கள் குவித்து வைத்தாய்
என் உள்ளம் கொள்ளைபோக
நான் கைகள் விரித்து நின்றேன்
அதனால்தானோ
நீ கவிதை கேட்கின்றாய்
என்தன் கனவைக்கேட்கின்றாய்
இளமை சோதிக்கின்றாய்
என்தன் நட்பை கேட்கின்றாய்
கள்ளமில்லா உன்தன்
சின்ன உள்ளத்தினூள் நானூம்
சில மணிநேரம் இருக்ககேட்டேன்
இல்லையில்லை என்று
நீயும் எட்டி உதைக்காத குறையாய் சொன்னாய்
நாணித்தலைகுனிந்தே நானூம்
வீதியெங்கும் அலைந்தேன்
சோகத்தீயில் உள்ளம்
தன்னை தேற்றிக்கொள்ள எண்ணி
வார்த்தை தடாகத்தினூள்
முக்குளித்துக்கொண்டது
உன் அருகில் நின்ற நாட்கள்
உன்னை அருகிவைத்த நாட்கள்
எனக்கு கவிதை தந்ததம்மா
நானூம் ஒரு கவிஞனாகிகொண்டேன்
விலாசமற்ற எனக்கு நீயும்
உலகை விலாசமாக்கி எனக்குள்
புதிய பரிணாமத்தை தோற்றுவித்துக்கொண்டாய்
நான் கனவில் கைகோர்த்து
நிஜத்தில் புன்னகைத்து
உள்ளத்தால் அழுதுகொள்கின்றேன்
நன்றி ஓன்று சொல்ல உனக்கு
என்னில் வார்த்தை ஓ;ன்றும் இல்லை
தமிழில் கடன்கேட்டும்
வார்த்தை போதுமாகிவிடவில்லை
உன் விழிகள் பார்த்த எனக்கு
வேற்று மொழிகள் அறியவில்லை
அதனால் பஞ்ச வாழ்வில்
நானூம் நொந்து சாகின்றேன்
அழகே
சுகமாய் நீ அங்கே
சுமையுடன் நான் இங்கே
அருகில் இருந்திருந்தும் நாம்
அகன்றே வாழந்திருந்தோம்
அதனால்தானோ இன்றுவரை
நாம் பிரிந்தே இருக்கின்றோம்.
என்னை பிடிக்கவில்லை உனக்கு
என் இதயம் பிடிக்கவி;ல்லை உனக்கு
என் கவிதை பிடிக்கின்றது
என் கனவுகள் பிடிக்கின்றது
ஏன் அவை உன்னை புகழ்வதாலா
கன்கள் காட்டிநின்றாய்
உன்தன் இதழ்கள் குவித்து வைத்தாய்
என் உள்ளம் கொள்ளைபோக
நான் கைகள் விரித்து நின்றேன்
அதனால்தானோ
நீ கவிதை கேட்கின்றாய்
என்தன் கனவைக்கேட்கின்றாய்
இளமை சோதிக்கின்றாய்
என்தன் நட்பை கேட்கின்றாய்
கள்ளமில்லா உன்தன்
சின்ன உள்ளத்தினூள் நானூம்
சில மணிநேரம் இருக்ககேட்டேன்
இல்லையில்லை என்று
நீயும் எட்டி உதைக்காத குறையாய் சொன்னாய்
நாணித்தலைகுனிந்தே நானூம்
வீதியெங்கும் அலைந்தேன்
சோகத்தீயில் உள்ளம்
தன்னை தேற்றிக்கொள்ள எண்ணி
வார்த்தை தடாகத்தினூள்
முக்குளித்துக்கொண்டது
உன் அருகில் நின்ற நாட்கள்
உன்னை அருகிவைத்த நாட்கள்
எனக்கு கவிதை தந்ததம்மா
நானூம் ஒரு கவிஞனாகிகொண்டேன்
விலாசமற்ற எனக்கு நீயும்
உலகை விலாசமாக்கி எனக்குள்
புதிய பரிணாமத்தை தோற்றுவித்துக்கொண்டாய்
நான் கனவில் கைகோர்த்து
நிஜத்தில் புன்னகைத்து
உள்ளத்தால் அழுதுகொள்கின்றேன்
நன்றி ஓன்று சொல்ல உனக்கு
என்னில் வார்த்தை ஓ;ன்றும் இல்லை
தமிழில் கடன்கேட்டும்
வார்த்தை போதுமாகிவிடவில்லை
உன் விழிகள் பார்த்த எனக்கு
வேற்று மொழிகள் அறியவில்லை
அதனால் பஞ்ச வாழ்வில்
நானூம் நொந்து சாகின்றேன்
[b] ?

