![]() |
|
நன்றி ஓன்று சொல்ல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நன்றி ஓன்று சொல்ல (/showthread.php?tid=8410) |
நன்றி ஓன்று சொல்ல - Paranee - 04-24-2003 பூ விழுந்த மனசு கவிதை தொகுப்பிலிருந்து ஓரு கவிதை அழகே சுகமாய் நீ அங்கே சுமையுடன் நான் இங்கே அருகில் இருந்திருந்தும் நாம் அகன்றே வாழந்திருந்தோம் அதனால்தானோ இன்றுவரை நாம் பிரிந்தே இருக்கின்றோம். என்னை பிடிக்கவில்லை உனக்கு என் இதயம் பிடிக்கவி;ல்லை உனக்கு என் கவிதை பிடிக்கின்றது என் கனவுகள் பிடிக்கின்றது ஏன் அவை உன்னை புகழ்வதாலா கன்கள் காட்டிநின்றாய் உன்தன் இதழ்கள் குவித்து வைத்தாய் என் உள்ளம் கொள்ளைபோக நான் கைகள் விரித்து நின்றேன் அதனால்தானோ நீ கவிதை கேட்கின்றாய் என்தன் கனவைக்கேட்கின்றாய் இளமை சோதிக்கின்றாய் என்தன் நட்பை கேட்கின்றாய் கள்ளமில்லா உன்தன் சின்ன உள்ளத்தினூள் நானூம் சில மணிநேரம் இருக்ககேட்டேன் இல்லையில்லை என்று நீயும் எட்டி உதைக்காத குறையாய் சொன்னாய் நாணித்தலைகுனிந்தே நானூம் வீதியெங்கும் அலைந்தேன் சோகத்தீயில் உள்ளம் தன்னை தேற்றிக்கொள்ள எண்ணி வார்த்தை தடாகத்தினூள் முக்குளித்துக்கொண்டது உன் அருகில் நின்ற நாட்கள் உன்னை அருகிவைத்த நாட்கள் எனக்கு கவிதை தந்ததம்மா நானூம் ஒரு கவிஞனாகிகொண்டேன் விலாசமற்ற எனக்கு நீயும் உலகை விலாசமாக்கி எனக்குள் புதிய பரிணாமத்தை தோற்றுவித்துக்கொண்டாய் நான் கனவில் கைகோர்த்து நிஜத்தில் புன்னகைத்து உள்ளத்தால் அழுதுகொள்கின்றேன் நன்றி ஓன்று சொல்ல உனக்கு என்னில் வார்த்தை ஓ;ன்றும் இல்லை தமிழில் கடன்கேட்டும் வார்த்தை போதுமாகிவிடவில்லை உன் விழிகள் பார்த்த எனக்கு வேற்று மொழிகள் அறியவில்லை அதனால் பஞ்ச வாழ்வில் நானூம் நொந்து சாகின்றேன் - vaiyapuri - 06-18-2003 கவியது அருமை... பரணி ! வாழ்த்துக்கள். ஏக்கம் கொண்டால் தாக்கியழிப்பதுவும் தாக்கம் வந்தால் தேக்கியழிப்பதுவும் காதலுக்கு கைவந்த கலை ! என்னைக்கவர்ந்த வரிகள் இவை.. Quote:என்னை பிடிக்கவில்லை உனக்கு BEST OF LUCK ! - sethu - 06-19-2003 தரமான கவிதைக்குப்பாராட்டுகள் பரணி - vaiyapuri - 06-22-2003 பாராட்டினதும் பராராட்டினியள் பரணிய இந்தப்பக்கமும் காணயில்ல :!: :?: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - jeya - 08-15-2003 வையாபுரி ! உங்களுடைய கவிதையும் நல்லாக தான் இருக்கிறது Re: நன்றி ஓன்று சொல்ல - AJeevan - 08-28-2003 [b]கவி தந்த மயக்கம் Karavai Paranee Wrote:பூ விழுந்த மனசு கவிதை தொகுப்பிலிருந்து ஓரு கவிதை Trickle Kiss - Take a sip of a favourite drink and trickle it slowly into partner's mouth while kissing. Re: நன்றி ஓன்று சொல்ல - AJeevan - 08-28-2003 [size=18]<b>குளம்பொலி கேட்குமுன்னே..........</b> இன்னும் எனது இதயத்தில் உன் நினைவு தங்கியிருக்கிறது மழை நின்ற பிறகும் காய்ந்து போகாத நிலம் போல .............. இன்றும் எனது எழுத்துக்களில் உனது நினைவுகளைத்தான் கனவுத் தூரிகையில் காயவைக்கிறேன்............... நினைவிருக்கிறதா? அன்றொரு நாள் நீ வழுக்கி விழப் போன போது ஆதரவிற்கு நான் கைகளை நீட்டினேன்................... நீயோ தங்கப்பட்டைக் கடிகாரம் எனது கரங்களில் கட்டியிருக்கிறேனா என்று சோதனை செய்தாய்.................. நான் பைத்தியகாரன் சம்யுக்தயைக் கவர வந்த பிருதிவிராஜன் போல உன்னைக் கவர வந்தேன்............ பின்னர்தான் தெரிந்தது என் குதிரையின் குளம்பொலி கேட்குமுன்னே என்னை விவாகரத்து செய்தது......... இந்த பைத்திய மனசு பாடிப் பறந்த பைங்கிளிக்காக ராகம் ராகம் இசைக்கிறது........... என் ஏக்கப் பெருமூச்சுகளில் நான் கருகிக் கொண்டிருக்கிறேன் நீண்ட சாலையில் தனிமைப் பயணம்.......... அமுத சுரபியில் அட்சய பாத்திரம.......... ஊமை விழிகளில் உருவக உவமை............ காலம் கழிகிறது கனவு சிதைகிறது பாதை தெரிகிறது பயணம் தொடர்கிறது இதயம் அழுகிறது தனிமை சுடுகிறது நெட்ட நெடுஞ்சாலையில் நான் மட்டும் தனியாக........... குளம்பொலி கேட்குமுன்னே நீ போய் விட்டாய் எனை மறந்து......... அஜீவன் - Manithaasan - 08-28-2003 அஜீவன் கவிதை மிகமிக நன்று... - sOliyAn - 08-28-2003 குளம்பொலியில் அஜீவனினின் மனக் கொதிப்பு குழம்பொலியாகவும் கேட்கிறது.. - shanthy - 08-30-2003 கமராக்கண்களிலிருந்து கவித்துளிகள் அவை கண்ணீர் சுமந்து வந்துள்ளது. வரிகள் அருமை. வாழ்த்துக்கள். கமாராக்கலைஞனே வருக கவியோடும் தருக நற்கவிகளும். எனக்குப் பிடித்த வரிகள் இன்னும் எனது இதயத்தில் உன் நினைவு தங்கியிருக்கிறது மழை நின்ற பிறகும் காய்ந்து போகாத நிலம் போல .............. - Paranee - 08-31-2003 குளம்பொலி கேட்குமுன்னே . . . அண்ணன் அஜீவனை அழவதை;து போனவளை வைது கொள்வதற்கு வார்த்தைகள் தேடுகின்றேன். இல்லையே தமிழில் கெட்ட வார்த்தைகள். எனினும் விலகிப்போனவளால் அண்ணன் இங்கு ஒரு விதையை நட்டுவிட்டார். அது விருட்சமாகட்டும். வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் - aathipan - 11-08-2003 ஒவ்வொரு கலைஞனுக்குப்பி;ன்னும் ஒரு கவிஞன் இருக்கிறான் என்பது எவ்வளவு உண்மை. இத்தனைநாட்களாக இந்தக்கவிதையைப்படிக்காது விட்டுவிட்டேனே. படித்ததும் நெஞ்சி; ஒருசோகம்மெதுவாகப்படர்நததுவிட்டது. அது எதனால் - இளைஞன் - 11-12-2003 காதல் கவிதைக்கு களத்தில் யாருண்டு? என்று கேட்டால் பரணியும், நளாயினியும் என்று பலருரைக்க நானறிந்தேன்!!! மென்மைதான் இவர் கவிதையில் மெருகூட்டல். காதல் அனுபவம் கொண்டதால், கவிதையில் மூழ்கித் திரிகிறீர்கள். தொடர்க! இவர்கள் இப்படியென்றால், அஜீவன் அண்ணா அட்டகாசமாக அசத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் அனைவர்க்கும். |