Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
kamal
#21
<b>மதுரன், முதலில் ஏன் மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கலும் தேவையென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பாவிக்கும் பொருட்களுக்கும், எங்கள் கல்வித்தேவைக்குமே பெயர் தேடுகின்றோம். பாவிக்காவிட்டால் எங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தேவையில்லை (பெயர் கூடத் தேவையில்லை).

கொக்காரை
பண்ணாடை
காவோலை
பனம் வட்டு
பனம் மட்டை
பிணாட்டு
பனங்காஇ பணியாரம்


இவற்றை ஆங்கிலமயப்படுத்த தேவையில்லை, காரணம், ஆங்கிலேயனுக்கு இவை தேவையில்லை.

அதே நேரத்தில், கட்டுமரம், வெற்றிலை, கறி, காசு, சுருட்டு, கூலி போன்ற சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே பாவிக்கின்றார்கள்.

கட்டுமரம் - catamaran
வெற்றிலை - betal
கறி - curry
காசு - cash
சுருட்டு - cherrot
கூலி - coolie

அதாவது ஒரு மொழி வளரும்போது, வேற்றுமொழிகளில் இருந்து சொற்களைக் கடன்வாந்கியே வளர்கின்றது.

இன்று நாங்கள் பேசும் தமிழும், பண்டைய தமிழும் ஒன்றா? தமிழ் தூய மொழி என்று கூறமுடியுமா? வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ் செழுமை பெற்றிருக்கமுடியுமா?

தமிழ் எழுத்துக்களைச் செம்மை செய்தவரே ஒரு அந்நியர்தான். வீரமா முனிவர் என்பவர்தான் தமிழ் எழுத்துவடிவங்களை ஒழுங்கமைத்தவர்.

தனித்தமிழ் என்று வெளிக்கிட்டால் நாங்கள் இன்னமும் பின்னோகியே போவோம். தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படக்கூடிய சொற்களை அப்படியே எடுப்பதுதான் நல்லது.

மேலும், நவீன தொழில்னுட்பங்கள் வளரும் வேகத்திற்கு எமது தமிழாக்கம் ஈடு கொடுக்க முடியாததால்தான், இன்றும் பலவற்றுக்கு தமிழ்பதங்கள் இல்லை. இப்படியேபோனால் நாங்கள் மொழிபெயர்ர்பில்தான் காலத்தை ஓட்ட வேண்டி வரும்.</b>
<b> . .</b>
Reply
#22
stalin Wrote:கமலின் முத்தக்காட்சிபற்றி குறிப்பிடப்படுகிறது. இன்றைய தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் அருவருப்பான ஆபாசகாட்சிகளிலும் பார்க்க காதலரின் காதல ;வெளிப்பாடாக கலைநயத்தினூடாக முத்தகாட்சியை சினிமாவில் காட்டுவது தப்பில்லை

பெரும்பாலான தமிழ்பட்ங்கள் ஆபாசத்தை சந்தைப்படுத்தவே வெளிவருகின்றன. கமலின் படங்களை கலைக் கண்ணோடு பார்க்கிறோம் என்று சொல்வது நகைப்புக்கிடமானது.

ஏன் காலைக்கடன் கழிக்கும் காட்சிகளையும் கலைநயத்தோடு படம்பிடிக்கலாமே :wink:
<b> . .</b>
Reply
#23
kirubans Wrote:[quote=Mathuran]நல்லாத்தான் கைதட்டுறீங்கள் கரி. அதுசரி எங்கை இருந்துதான் இப்படி நல்ல உடல்ப் பாவனைகளை

smiley - குறுநகையி என்று யாழ் களத்தில் பாவிக்கப்படுகின்றது.

ஏற்றுக்கொள்வோமா அல்லது விவாதித்து நேரத்தை விரயம் செய்வோமா?

பெரும்பாலானோர்க்கு எது புரிகிறதோ அதனைத்தான் பாவிக்க வேண்டும் என்பது என்கருத்து. 8)

முக நயம்:
முக நயம் என்பது முகத்தில் உள்ள அங்கங்களின் அசைவுகளை குறிக்கும் சொல். கண்ணின் அசைவு, மூக்கின் அசைவு, வாயின் அசைவு என முகத்தில் உள்ள அங்கங்களின் அசைவை குறிக்கும் சொல் முகநயம்.

குறுநகை:
குறுநகை என்பது முகத்தின் ஒரு தனிப்பட்ட பாகத்தில் நிகளும் அசைவு. அதனால் அவற்றை குறுநகை என அழைத்தும் இருக்கலாம்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#24
சில art filim என சொலலப் படற படங்களில் அதை கூட காட்டுகிறார்கள்
Reply
#25
stalin Wrote:சில art filim என சொலலப் படற படங்களில் அதை கூட காட்டுகிறார்கள்

நல்ல வேளை. அப்படியான கலைப்படங்களைப் பார்க்குமளவிற்கு மனம் இன்னும் விகாரமடையவில்லை.
<b> . .</b>
Reply
#26
kirubans Wrote:<b>மதுரன், முதலில் ஏன் மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கலும் தேவையென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பாவிக்கும் பொருட்களுக்கும், எங்கள் கல்வித்தேவைக்குமே பெயர் தேடுகின்றோம். பாவிக்காவிட்டால் எங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தேவையில்லை (பெயர் கூடத் தேவையில்லை).

கொக்காரை
பண்ணாடை
காவோலை
பனம் வட்டு
பனம் மட்டை
பிணாட்டு
பனங்காஇ பணியாரம்


இவற்றை ஆங்கிலமயப்படுத்த தேவையில்லை, காரணம், ஆங்கிலேயனுக்கு இவை தேவையில்லை.

அதே நேரத்தில், கட்டுமரம், வெற்றிலை, கறி, காசு, சுருட்டு, கூலி போன்ற சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே பாவிக்கின்றார்கள்.

கட்டுமரம் - catamaran
வெற்றிலை - betal
கறி - curry
காசு - cash
சுருட்டு - cherrot
கூலி - coolie

அதாவது ஒரு மொழி வளரும்போது, வேற்றுமொழிகளில் இருந்து சொற்களைக் கடன்வாந்கியே வளர்கின்றது.

இன்று நாங்கள் பேசும் தமிழும், பண்டைய தமிழும் ஒன்றா? தமிழ் தூய மொழி என்று கூறமுடியுமா? வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ் செழுமை பெற்றிருக்கமுடியுமா?

தமிழ் எழுத்துக்களைச் செம்மை செய்தவரே ஒரு அந்நியர்தான். வீரமா முனிவர் என்பவர்தான் தமிழ் எழுத்துவடிவங்களை ஒழுங்கமைத்தவர்.

தனித்தமிழ் என்று வெளிக்கிட்டால் நாங்கள் இன்னமும் பின்னோகியே போவோம். தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படக்கூடிய சொற்களை அப்படியே எடுப்பதுதான் நல்லது.

மேலும், நவீன தொழில்னுட்பங்கள் வளரும் வேகத்திற்கு எமது தமிழாக்கம் ஈடு கொடுக்க முடியாததால்தான், இன்றும் பலவற்றுக்கு தமிழ்பதங்கள் இல்லை. இப்படியேபோனால் நாங்கள் மொழிபெயர்ர்பில்தான் காலத்தை ஓட்ட வேண்டி வரும்.</b>

நீங்கள் உங்கள் கல்விக்காகத்தான் தமிழை பேசுவதாக சொல்கின்றீர்கள். ஒவ்வொரு புதிய சொற்களுக்கும் கலைச்சொற்கள் கண்டுபிடிக்க படுகின்றன. கொம்பியூட்டர்= கணணி இப்படி புதிய சொற்கள் பிறக்கின்றன. அவற்றை யாரும் பயன்படுத்தாது விட்டால் அவை வெளியில் வராது. எந்த மொழி பயன்பாட்டில் உள்ளதோ அந்த மொழியே வழரும் என்பது பொது விதி. நீங்கள் கல்வி கற்பது தமிழ் அல்லாத வேற்று மொழியில். நான் வாழ்கின்ற நாட்டில் ஆங்கில சொல்லான டிஜிற்றல் என்னும் சொல்லை டிகித்தால் என்பார்கள். ஏன் அவர்கள் அப்படியே டிஜிற்றல் என்று சொல்லலாம் தானே. அவர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் அவர்களின் மொழி காலப்போக்கில் ஆங்கிலமாக மாறி விடும் என்னும் அச்சமே அதற்கான காரணம். சில வேளைகளில் நீங்கள் இப்படியும் ஒரு கேள்வியை என்னிடம் கேட்கலாம். ஐரோப்பியர்கள் மொழிபெயர்ப்பதனை போன்று தமிழர்களும் இரண்டு மூன்று எளுத்துக்கள் மருபிய மாதிரி கலைச்சொற்களை உருவாக்கலாமே என. அவர்களின் மொழி இந்து ஐரோப்பிய மொழியின் வட்டத்துள் வருகின்றது. தமிழ்மொழி திராவிட மொழி வட்டத்திற்குள். எனவே கலைச்சொற்களை அப்படியே உருவாக்கினால், தமிழ் மொழியின் வரலாறே மாறி விடும்.

அடுத்த விடயம். வீரமா முனிவர், ஒரு இத்தாலியரானாலும். அவர் தமிழ் என்னும் வட்டத்துக்குள் வந்து தனது பெயரைக்கூட மாற்றி வீரமா முனிவர் என்ற பின்னர்தான் அதனைச் செய்தார். அவர் செய்த விடயமானது வழம்படுத்தலுக்கான முயற்ச்சியே. ஒரு மொழி அந்தந்த காலங்களுக்கான வளர்ச்சியினை அடய வேண்டும் என்கின்ற விதிகளுக்கு உட்பட்டு அவரின் தமிழுக்கான சேவை உள்வாங்கப்பட்டது. அவரால் தமிழ் சொற்கள் எந்தவொரு பொருள் சிதவினையும் சந்திக்கவில்லை. அவரை வரவேற்ற தமிழர்கள் ஏன் கமலை புறக்கணிக்கின்றார்கள் என்று கொஞ்சமாவது சிந்தியுங்கள்.

பிறமொழிகளின் உதவி இன்றி தமிழ் வளர்ந்திருக்க முடியாதா?
தமிழால் பிறமொழிகளின் உதவி இன்றி தனித்து இயங்கக் கூடிய பண்பு அதற்கு உண்டு என்பதனால்த்தான் அதற்கு செம்மொழி என்னும் கௌரவம் கிடத்தது. சமஸ்க்கிருதம் தான்வாழ வழி தெரியாமல் ஒடிவந்து, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே தமிழினுள் புகுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழரிடையே புகமுயன்று . கடைசியில் முளுமையாக புக முயன்று தோற்றதற்கான சான்றுதான். சமஸ்கிருத மந்திரங்கள். அது போன்ற நிலை ஆங்கிலத்தினாலும் ஏற்பட்டு விட கூடாது என்பதே தமிழனின் இன்றய அச்சத்திற்கான காரணம். முதலில் நல்லது செய்வது போல வருவார்கள். பின்னர் அப்படியே தங்கி, தானே ஆட்சி செய்வார்கள். உங்களுக்கும்நான் சொல்வது விளங்குமென நினைக்கின்றேன். இது சிந்துவெளி நாகரீகம் என்னும் நூலில் புலப்பட்டுள்ளது.

எனவே தமிழில் உள்ள கலைச்சொற்களை முடிந்த வரை பயன் படுத்துவோம். கமல் என்னும் ஒரு வேற்று மனிதனுக்காக தமிழை வெறுக்கலாம.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#27
நான் தமிழ் பாவிப்பதனை விரும்பாவிட்டால் இக்களத்திற்கே வந்திருக்கவே மாட்டேன்.

எனினும் அருவி என்ற சொல் உள்ளபோது நீர்வீழ்ச்சி என்று waterfall ஐ நேரடித் தமிழ்படுத்துவதனையும் ஏற்கமுடியாது. http://www.tamilvu.org/ இல் உள்ள கலைச்சொற்கள் பல இப்படியான நேரடி மொழிபெயர்ப்பில்தான் உருவாக்கப்பட்டுள்ளன, எனவே அவை எவ்வளவு தூரம் ஏற்றுகொள்ளப்படுமெனத் தெரியவில்லை.
<b> . .</b>
Reply
#28
ஏன்தான் இப்படி அடிபடுறீங்களே தெரியாது..
கமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் பெயர் வைத்தாரோ
யாருக்கு தெரியும்? ஒருவேளை படத்தில் அவரின் பெயர் தான்
மும்பை எக்ஸ்பிரஸ்சோ?? :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
vasisutha Wrote:ஏன்தான் இப்படி அடிபடுறீங்களே தெரியாது..
கமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் பெயர் வைத்தாரோ
யாருக்கு தெரியும்? ஒருவேளை படத்தில் அவரின் பெயர் தான்
மும்பை எக்ஸ்பிரஸ்சோ?? :roll: :roll:

கிறுக்கு தனமா அந்தாள் அப்படி பெயர் வைத்து கொண்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#30
kirubans Wrote:நான் தமிழ் பாவிப்பதனை விரும்பாவிட்டால் இக்களத்திற்கே வந்திருக்கவே மாட்டேன்.

எனினும் அருவி என்ற சொல் உள்ளபோது நீர்வீழ்ச்சி என்று waterfall ஐ நேரடித் தமிழ்படுத்துவதனையும் ஏற்கமுடியாது. http://www.tamilvu.org/ இல் உள்ள கலைச்சொற்கள் பல இப்படியான நேரடி மொழிபெயர்ப்பில்தான் உருவாக்கப்பட்டுள்ளன, எனவே அவை எவ்வளவு தூரம் ஏற்றுகொள்ளப்படுமெனத் தெரியவில்லை.

அருவி என்பதன் சரியான விளக்கம் தெரியவில்லை. சிலவேளை இப்படி இருக்கலாம். அரவம் அருவுதல்= நகர்தல்= அருவி

அருவி= உயரம் குறைந்த பகுதுகளிலிருந்து செறிவாக குறைந்த வேகத்துடன் கூடிய நீரின் வீழ்ச்சியாக இருக்கலாம்


நீர்வீழ்சி= உயர்ந்த பகுதியில் இருந்து வேகத்துடன் கூடிய அடர்த்தியான நீரின் வீழ்ச்சியினை குறிக்கலாம்.

இது எனது கருத்தே. என்னிடம் தமிழ் அகராதி இல்லை. தமிழ் அகராதியினை பார்த்தால் இவற்றிற்கு சரியான பொருள் கொடுக்கப் பட்டு இருக்கும். தமிழில் இருக்கின்ற எந்த ஒரு சொல்லும் சரியான முறயிலேயே உருவாக்கப் பட்டு இருக்கும்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#31
Mathuran Wrote:நல்லாத்தான் கைதட்டுறீங்கள் கரி. அதுசரி எங்கை இருந்துதான் இப்படி நல்ல உடல்ப் பாவனைகளை எடுத்து வாறீங்களோ தெரியவில்லை.
உண்மையை யார் சொன்னாலும் இப்படிதான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்!

இங்கு இருந்துதான்
http://www.smileycentral.com/?lang=en
Reply
#32
தகவலுக்கு நன்றி கரி. நல்ல விடயங்களுக்கு உணர்ச்சி வசப்படுவது தவறில்லை.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#33
கமல் திரைப்படத்தின் தலைப்பினை மாற்றட்டும். பின்னர் தமிழ் மக்கள் எல்லோரும் அவரிம் திரைப்படம் விரும்பினால் பார்ப்பார்கள். அதனைவிடுத்து ஜெயலலிதாவின் முதுகுக்கு பின்னால் நின்று தமிழர்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன், நேற்றய தவறிற்காக,
நாளய நேர்மைக்காக.

அன்புடன் மதுரன்
இப்ப திருமாவளவன் ஜெயலிலாதா பின்னாலாயாம் அரசியல்வாதி சந்தர்ப்பவாதி கலைஞன் கலைஞன்தான்-ஸ்டாலின்
Reply
#34
இதெல்லாம் அவர்களாகவே உணரவேண்டியது..
கூப்பாடு போட்டோ மிரட்டியோ தமிழ் உணர்வை வளர்க்க முடியாது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
stalin Wrote:கமல் திரைப்படத்தின் தலைப்பினை மாற்றட்டும். பின்னர் தமிழ் மக்கள் எல்லோரும் அவரிம் திரைப்படம் விரும்பினால் பார்ப்பார்கள். அதனைவிடுத்து ஜெயலலிதாவின் முதுகுக்கு பின்னால் நின்று தமிழர்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன், நேற்றய தவறிற்காக,
நாளய நேர்மைக்காக.

அன்புடன் மதுரன்
இப்ப திருமாவளவன் ஜெயலிலாதா பின்னாலாயாம் அரசியல்வாதி சந்தர்ப்பவாதி கலைஞன் கலைஞன்தான்-ஸ்டாலின்

அன்பான ச்டலின் அவர்களுக்கு. தாங்கள் திருமாவளவன் ஜெயலலிதாவின் முதுகிற்கு பின்னால் என எங்கு படித்தீர்கள். நீங்கள் சொல்லும் விடயம் சில வேளை அது தமிழ் (தற்ஸ் தமிழ்) என்னும் இணய ஊடகத்தில் படித்தேன். அத் தகவலினை ஆதாரம் காட்டி, நான் சொல்ல வருவதை முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். அதாவது திருமாவளவன் என்னும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வரிடம் சுனாமிநிதிக்கென நன்கொடை வளங்கினார் என்பதுவே செய்தி. இந்த செய்தியினை நீங்கள் எவ்வாறு புரிந்து என்ன கற்பனை பண்ணுகின்றீர்களோ எனக்கு தெரியாது. விடுதலைச்சிறுத்தைகள் என்பது தனி அமைப்பு. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது தனி அமைப்பு. திருமாவளவன் தமிழ்நாட்டு மக்களின் துன்பத்தை துடைப்பதற்கு தமிழ்நாட்டின் முதல்வரை சந்திப்பதற்கும். தமிழினையே எதிற்கின்ற கமலகாசன் போன்றவர்கள் ஜெயலலிதாவின் தமிழ்மறுப்பினை புகழ்ந்துபாடும் செயலுக்கும் வேறுபாடு காணாத உங்களிடம், எந்தவகையிலான புரிதலினை எதிர்பார்க்கமுடியும்?

மொத்தத்தில் கமலுக்காக நீங்களும் வரிந்துகட்டுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. கமல் என்னும் சாமானியனுக்காக தமிழ்த்தாயினை பளித்து இளிக்குன்ற மூடர்கள் காலில் நீங்கள் விளலாமோ?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#36
Mathuran Wrote:
vasisutha Wrote:ஏன்தான் இப்படி அடிபடுறீங்களே தெரியாது..
கமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் பெயர் வைத்தாரோ
யாருக்கு தெரியும்? ஒருவேளை படத்தில் அவரின் பெயர் தான்
மும்பை எக்ஸ்பிரஸ்சோ?? :roll: :roll:

கிறுக்கு தனமா அந்தாள் அப்படி பெயர் வைத்து கொண்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.

<b>மதுரன் நாங்க நினைச்சது சரிதான்.. இதோ இன்றைய விகடனில் வந்த கமலின் பேட்டி.. :roll: .

------------------------

[b]சினிமாக்காரர்களை மிரட்ட அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு! </b>

<i>கமல் புது நியாயம்! </i>

எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கமலின் அழகே அதுதான். பளிச் பளிச்சென வந்து விழுகின்றன பதில்கள்!

தடதடவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் தயாராகிற மும்பை எக்ஸ்பிரஸ் பட வேலைகளில் இருந்த கமலுடன் பேசியதிலிருந்து...

<b>மும்பை எக்ஸ்பிரஸ்... என்ன விசேஷம்? </b>

மும்பைதான் கதையின் களம். இந்தியாவின் வர்த்தக வாசல். குரோட்டன்ஸ் களும், போன்சாய்களும் வீட்டுக்குள் வளர்க்கிற நகரம். இந்தியாவின் மிகப் பெரிய குப்பம். விஞ்ஞானத்தின் எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கிற... கிடைக்கிற இடம் மும்பை. ஆனாலும் அது பற்றி எதுவும் அறியாத சில கோடி மக்கள் தெருக்கோடியில் கிடக்கிற நகரம். வாழ்க்கையின் அற்புதங்களையும் அபத்தங்களையும் நையாண்டி பண்ணுகிற படம். சிரிச்சுட்டே சிந்திக்கலாம்.

நான் எக்ஸிபிஷன்ல மரணக்கிணற்றில் பைக் ஓட்டி வித்தை காட்டுற ஆளு.<span style='color:red'> என் பேரு அவினாசி. ஆனா, மும்பை எக்ஸ்பிரஸ்னுதான் என்னைக் கூப்பிடுவாங்க என் பைக்கும் இதில் ஒரு கேரக்டரா நடிச்சிருக்கு!


<b>படப்பிடிப்பில் மோட்டார் பைக் ஓட்டும்போது நிறைய ரிஸ்க் எடுத்தீங்களாமே? </b>

ரிஸ்க் இல்லாம வாழ்க்கை இல்லையே! நிறைய காட்சிகளை டூப் போட்டு பண்ணலாம்னு யோசனை சொன்னாங்க. ஆனா, சில விஷயங்களை நானே பண்ணலைன்னா எனக்குத் தூக்கம் வராது. அது என் பலம் அல்லது பலவீனம். எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் ஒரு ரிஸ்க்கான காட்சிக்குத் தயாரானேன். பைக்கில் என் பின்னால் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். பைக்ல சீறிக் கிளம்பினப்போ மிஸ் ஆகிட்டது. நான் மட்டும்னா தப்பிச்சிருப்பேன். பின்னாடி இருந்த பையனுக்கு எதுவும் ஆகிடக் கூடாதேனு அவன் விழாம கை வெச்சுத் தடுத்தபோது விழுந்து என் கை எலும்பில் ஃபிராக்சர்! கைய விடுங்க... அந்தக் காட்சி பிரமாதமாக வந்தது!


<b>திரும்பவும் உங்கள் படத்தின் பெயர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கே?</b>

ஏன் இப்படி நடக்குதுனு எனக்கு நிஜமாவே புரியலை. சண்டியர் என்கிற தலைப்பு, ஓர் இனத்தைக் குறிக்குதுனு அப்போ அபத்தமா சொன்னாங்க. சண்டித்தனம் பண்ற யாரும் சண்டியர்தான்னு சொன்னேன்... அவங்க கேட்கலை. அதை அப்புறம் விருமாண்டினு மாற்றியதால் அந்தப் பேர் இன்னும் தெளிவாக, குறிப்பிட்ட ஓர் இனத்தை அடையாளம் காட்டியது. அப்புறம் வசூல்ராஜானு பேர் வெச்சதுக்கு டாக்டர்கள் எல்லாம் கோவிச்சுக்கிட்டாங்க. திருடானு கூப்பிட்டா இவங்க ஏன் திரும்பிப் பார்க்கிறாங்கனு தெரியலை. வசூல் பண்ற டாக்டரே இல்லையா? சாதாரண ஜனங்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்... எது உண்மை என பளிச்னு தெரியும். அந்தக் கலாட்டா முடிஞ்சுது... இப்போ அடுத்தது!


மும்பை எக்ஸ்பிரஸ்னு பேர் வெச்சேன். அது ஆங்கிலத் தலைப்புனு மாத்தச் சொல்றாங்க. நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த நினைக்கிறேன். குருதிப்புனல்னு பேர் வெச்சப்போ என்னை யாரும் பாராட்டலை. மஹா நதினு கூடச் சொல்லலை... மகாநதினு படம் எடுத்தவன் நான்.


இப்போ இந்தப் படத்தில் கதையே மும்பையைச் சுற்றித்தான் நடக்குது. என் பேரே படத்தில் அதுதான். அதுக்காக நிறைய செலவு செய்தாச்சு. திடீர்னு பேரை மாத்துப்பானு சொன்னா எப்படிங்க? முதல்வர் சினிமாவுக்கு ஆதரவா இந்த விஷயத்தில் அறிக்கை விட்டுட்டாங்க என்கிற தெம்பில் நான் இதைச் சொல்லல. வீம்பு பண்ற ஆள் இல்லை நான். நான் உண்மையான தமிழ்ப்பற்று உள்ள தமிழன். ஆனால், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி சிறந்ததாக இருந்தாலும் என் தமிழ் மட்டுமே போதாது. ஆங்கிலம்தான் நான் மற்ற மாநில நண்பர்களுடன் தொடர்புகொள்கிற மொழி. வழக்கத்தில் இருக்கிற சொற்களை என்ன பண்ண முடியும்?


போராட்டம் நடத்தறவங்களோட முனைப்பு எனக்குப் புரிகிறது. ராகேஷ், ரோகேஷ்னு பிள்ளைகளுக்குப் பெயர் வைக்காமல் தமிழில் பெயர் சூட்டுவதிலிருந்து அதைத் தொடங்கலாம். தமிழ் வழியில் கல்வி, தமிழில் பேசுவது தவறில்லை என்பதையெல்லாம் கொண்டு வாருங்கள். அப்புறம் சினிமாவைப் பார்க்கலாம்! தமிழ் மேல் பற்று வைத்திருக்கிற என்னைத் தயவு செய்து எல்லோரோடவும் சேர்த்துடாதீங்க. கலைஞர் சொன்ன மாதிரி தமிழ்தான் எனக்கு வாள். அந்த வீச்சு எனக்கு உண்டு. ஆங்கிலம் கேடயம். அது தற்காப்புக்காக! இந்தப் படத்தின் பெயரையும் நான் மாத்திட்டா அப்புறம் இதெல்லாம் கேலிக்கூத்து மாதிரி ஆகிடும். போராடுகிறவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது இதுதான்... என்னைப் புரிந்துகொள்ளுங்கள்!ÕÕ

<b>சினிமாவும் அரசியலும் ஏன் இப்படி எதிரும் புதிருமா இருக்கு? </b>

இது ரொம்பப் பழசு! பராசக்தியில் பேசப்படாத அரசியலா? மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!னு பாடினார் எம்.ஜி.ஆர். எந்த மூன்றெழுத்து? அரசியலில் இருப்பவர்களை சினிமாவைப் பற்றிப் பேசாதேனு தடுக்க முடியாது. சினிமாவில் இருப்பவர்களையும் அரசியலுக்குப் போகாதீங்கனு நிறுத்த முடியாது. இப்போ பல படங்களில் நம் ஹீரோக்கள் ஸ்கிரீனைப் பார்த்து ஆவேசமா அரசியல் பேசறாங்க. பஞ்ச் டயலாக் விடறாங்களே!

முன்னே ஒரு முனைப்போட அரசியல் பேசினாங்க. இப்போ பல பேருக்கு சி.எம். ஆகணும்னு ஆசை. எல்லோரும் அரசியலில் மூக்கை நுழைப்பது அதிகமாகி விட்டது. அதுவும் ஒரு தொண்டனா ஆரம்பிச்சு படிப்படியா தலைவனா ஆகணும்னு நினைப்பதில்லை... ஆரம்பமே தலை தான்!


அதனால் அரசியலுக்குள் சினிமாவோ, சினிமாவுக்குள் அரசியலோ வரத்தான் செய்யும். சினிமாக்காரர்களை மிரட்ட அரசியல்வாதிகளுக்கும் உரிமை உண்டு. அது கருத்துச் சுதந்திரம். வரும்போது கனிவான விமர்சன மாக வந்தால் சரி... காழ்ப்புடன் வருவதுதான் பிரச்னை. ஏன் இவ்வளவு கடுமை காட்டறாங்கனு தோணுது!

<b>திருமணம் என்கிற சடங்கி லேயே உடன்பாடில்லைனு சொன்னீங்க! ஆனாலும், இரண்டு முறை திருமணம் செய்து பிரிஞ்சிருக்கீங்க?</b>

ஆமா! எனக்கு அதில் உடன்பாடில்லை, இப்போதும்! ஆனாலும், இந்தச் சமூகத்தில் வாழ வேண்டி, சில விஷயங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டியது தேவையாகிறது. அப்படி ஆனதுதான் என் கல்யாணம். இப்போ நாங்க பிரிஞ்சுட்டாலும், அப்போ இருந்த அன்பும் காதலும் பொய்யாகிவிடாது. நான் உண்மையாகக் காதலித்தேன். குழந்தைகள் பெற்றோம். எல்லாம் சரியாக இருந்தது போல் இருந்தது. பிறகு கருத்து வேறுபாடுகளால், தவிர்க்க முடியாததாகிவிட்டது பிரிவு!

<b>பிரிவைச் சரி பண்ணணும்னு தோணலையா?</b>

தோணாம எப்படி இருக்கும்? தவறுகளைச் சரி செய்வதுதானே வளர்ச்சி! குறைந்தபட்சம் தோல்வியையாவது ஒப்புக் கொண்டாகணும். Ôஹே ராம்Õ படம் சூப்பர் ஹிட்னு சொன்னா அது என்னை நானே ஏமாற்றிக்கொள்வது. அதுக்காக, அந்தப் படத்தை உழைப்பில்லாமல், ஈடுபாடு இல்லாமல் எடுத்ததாக அர்த்தமில்லை. சில தவறுகளைச் சரி செய்யலாம். சிலவற்றைச் செப்பனிட முடியாமலே போகும். என் திருமண வாழ்க்கை அப்படிச் செப்பனிட முடியாத ஒன்றாகிவிட்டது.

<b>பிரிவுக்குக் காரணம்தான் என்ன? </b>

ம்... சுருக்கமா சொல்லணும்னா ஈகோ!


<b>அவ்வப்போது ஏதாவது ஒரு பெண்ணுடன் இணைத்துப் பேசப்படுகிறீர்கள்... இப்போது புதிதாக கவுதமி! </b>

பெண்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது! நான் பெண்களோடு சேர்ந்து வளர்ந்தவன். அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலினு என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்... இருப்பார்கள். எனக்குக் காதல் இன்னமும் இருக்கிறது. உணர்வுகள் இன்னும் இருக்கின்றன. இது மனித இயற்கை!

என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!
</span>

thanks:
Vikatan.com
Reply
#37
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#38
சரி அவரே சொல்லி போட்டார், அவர் அட்த்தவருக்காக வாழ்வதில்லை என்று. இதனை பாரதியின் கவிதை ஒன்றுடன் முடிப்பது நன்று.

சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் ஆழ்தல் கண்டும்
சிந்தை இரங்காரடி
கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றல் அன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி, கிளியே
நாளில் மறப்பாரடி. :wink: :wink: :wink:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)