![]() |
|
kamal - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: kamal (/showthread.php?tid=5007) Pages:
1
2
|
kamal - stalin - 02-25-2005 சினிமாவை சினிமாவாக காட்ட முயலும் கமலை ஊக்குவிக்க வேண்டும் தமிழ்நாட்டு தமிழர்கள் நாளந்தம் காப்பி சர்டிபிகட் ஆபிஸ் காலேஜ் என்று ஆங்கிலம் கலந்து பேசபவர்கள் ஒரு மும்பாய் எகஸ்பிரஸ் என்ற படத்துக்குகாக கமலை எதிர்ப்பது வேதனைக்குரியது கமலின் புரட்சி சினிமா பயணம் தொடர வாழ்த்துவோம் - Mathuran - 02-25-2005 கமல் திரைப்படத்தின் தலைப்பினை மாற்றட்டும். பின்னர் தமிழ் மக்கள் எல்லோரும் அவரிம் திரைப்படம் விரும்பினால் பார்ப்பார்கள். அதனைவிடுத்து ஜெயலலிதாவின் முதுகுக்கு பின்னால் நின்று தமிழர்களுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம். - stalin - 02-26-2005 திருமாவளவன் ராமாதாஸ் போன்றவர்கள் ஈழத்தை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நல்ல ஒரு கலைஞனை தூற்ற கூடாது. ஜெயலிலதா பின்னால் என்பது அப்பட்டமான வதந்ததி ; சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களிலும் பாhக்க கமல் மிகவும் தமிழ் பற்றுள்ளுவர் - வியாசன் - 02-26-2005 தம்பி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் அசிங்கத்தை புகுத்துபவர் கமல் சில விடயங்களை அவர் செய்திருக்கலாம். 84 களில் ஒருசில இயக்கப் போராளிகள் அவரிடம் உதவிகேட்கச் சென்றபோது துரத்தியடித்தவராம் கமல். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக முத்தக் காட்சியை ஆரம்பித்து வைத்த பெருமையும் சாட்சாத் கமலைச் சாரும் :oops: :oops: - sinnappu - 02-26-2005 Quote:stalin அப்பு என்ன காது குத்துறீறோ அப்புக்கு 2 காதிலையும் குத்தியாச்சு :twisted: :twisted: :twisted: :mrgreen: :mrgreen: - Mathuran - 02-26-2005 stalin Wrote:திருமாவளவன் ராமாதாஸ் போன்றவர்கள் ஈழத்தை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நல்ல ஒரு கலைஞனை தூற்ற கூடாது. ஜெயலிலதா பின்னால் என்பது அப்பட்டமான வதந்ததி ; சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களிலும் பாhக்க கமல் மிகவும் தமிழ் பற்றுள்ளுவர் தமிழ் பற்று உள்ளவர் தான் ஆங்கிலத்தில் தனது திரைப்படத்துக்கு பெயர் வத்தாரா? யாருக்கு காது குத்த பார்க்கின்றார். நான் என் மனதை திறந்து சொல்கின்றேன். கமலின் திரைப்படங்களை பார்த்து அவரின் அவரின் ரசிகனாகவே இருந்தேன். அதுவும் எங்கள் அப்பா அவரின் திரைப்படம் என்றால் விரும்பி பார்ப்பார். அவற்றை பார்த்து பார்த்து நானும் அவரின் ரசிகனானேன். நான் அவரின் நடவடிக்கைகளை சண்டியர் திரப்படத்தில் இருந்து அவதானித்து வருகின்றேன். வேண்டும் என்றே வம்பு செய்கின்றார். தமிழின் மீது பற்றுள்ளவர் எனில் திரைப்படத்தின் பெயரினை மாற்றட்டும். அதை விடுத்து விதண்டாவாதம் செய்தால், அவர் செய்யட்டும். நாமும் அவரின் திரைப்படத்தை பார்ப்பதை தவிர்ப்போம். - Mathuran - 02-26-2005 எனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்களை கையாள்வதற்கு. புலம்பெயர் நாடுகளில் இளையவர்கள் நாங்களாகவே ஒரு பொதுவான அமைப்பு ஒன்று உருவாக்கி. தமிழை காத்திடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம். பல தமிழ் இளைஞ்ஞர்கள் இது விடயம்க ஆராந்தோம். சில திரைபடம் திரயிடுபவர்களையும் நாடி இது தொடர்பாக பேசுவதென முடிவு செய்துள்ளோம். - shiyam - 02-26-2005 viyasan Wrote:தம்பி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் அசிங்கத்தை புகுத்துபவர் கமல் சில விடயங்களை அவர் செய்திருக்கலாம். 84 களில் ஒருசில இயக்கப் போராளிகள் அவரிடம் உதவிகேட்கச் சென்றபோது துரத்தியடித்தவராம் கமல். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக முத்தக் காட்சியை ஆரம்பித்து வைத்த பெருமையும் சாட்சாத் கமலைச் சாரும் :oops: :oops:ஆமாம் சிலோன் நாய்களே வெளியே போங்கடா எண்டு கத்தினவராம் :twisted: :twisted: - Mathuran - 02-26-2005 shiyam Wrote:viyasan Wrote:தம்பி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் அசிங்கத்தை புகுத்துபவர் கமல் சில விடயங்களை அவர் செய்திருக்கலாம். 84 களில் ஒருசில இயக்கப் போராளிகள் அவரிடம் உதவிகேட்கச் சென்றபோது துரத்தியடித்தவராம் கமல். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக முத்தக் காட்சியை ஆரம்பித்து வைத்த பெருமையும் சாட்சாத் கமலைச் சாரும் :oops: :oops:ஆமாம் சிலோன் நாய்களே வெளியே போங்கடா எண்டு கத்தினவராம் :twisted: :twisted: புன்னகை மன்னனல்லவோ? Re: kamal - hari - 02-26-2005 stalin Wrote:சினிமாவை சினிமாவாக காட்ட முயலும் கமலை ஊக்குவிக்க வேண்டும் தமிழ்நாட்டு தமிழர்கள் நாளந்தம் காப்பி சர்டிபிகட் ஆபிஸ் காலேஜ் என்று ஆங்கிலம் கலந்து பேசபவர்கள் ஒரு மும்பாய் எகஸ்பிரஸ் என்ற படத்துக்குகாக கமலை எதிர்ப்பது வேதனைக்குரியது கமலின் புரட்சி சினிமா பயணம் தொடர வாழ்த்துவோம்இதையும் கொஞ்சம் வாசிக்கவும்! http://www.yarl.com/forum/viewtopic.php?t=3972 நீர் கமலின் தீவிர ரசிகன் போல தெரிகிறது, அவரை பின்பற்றி உங்கள் தலைப்பையும் ஆங்கிலத்தில் போட்டுள்ளீர்! - Nitharsan - 02-26-2005 கமல் ஒரு சிறந்த நடிகன் என்பது எல்லோருக்கும் தெரியும் அனால் அவர் ஒரு சிற்ந்த தமிழ்ன என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வார்ததைக்கு வார்தை சினிமாத்தனமான பேச்சால் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மக்களின் பிரதிநிதிகளான ராமதாசும் திருமாவளவனும் சொல்வது அரசியல் நாடகமாகத்தான் தெரியும்... நேசமுடன் நிதர்சன் - kirubans - 02-26-2005 <b>எப்படிப் பெயர் வைத்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள்? மும்பாய் அதிவேகத் தொடரூந்து?? அவசரம் மும்பாய்? கடுகதி மும்பாய்?? கமல் ஒரு சிறந்த நடிகன் என்பது உண்மை. அவர் என்றுமே தன்னை மக்களின் சேவகன் என்று சொன்னதில்லை. தமிழ் எங்கள் மூச்சு என்று ஆரம்பித்த திராவிடக் கட்சிகள் என்று எங்குபோய் நிற்கின்றன என்பது சொல்லித் தெரியவேண்சியதில்லை. தனித்தமிழில்தான் எல்லாவற்றையும் எழுதவேண்டும், பேசவேண்டும் என்றால் நாங்கள் முன்னேறமுடியாது. அதற்காக ஆங்கிலமோகத்திற்கு அடிமையாக வேண்டும் என்பது அர்த்தமல்ல. இயலுமானவரை தமிழைப் பிரயோகிக்க வேண்டும். உதாரணமாக கலைச் சொற்களைத் தமிழில் கட்டாயம் எழுத வேண்டும் என்று சொன்னால் மொழிபெயர்ப்பில்தான் காலம் கழியும்.சில விடயங்களை தமிழில் சொல்வதைவிட ஆங்கிலத்தில் சொன்னால்தான் பலருக்குப் புரிகிறது. இது தமிழ்நாட்டில் மிக அதிகம். தாய்மொழிக்கல்வியை அமுல்படுத்தாதனால்தான் இந்நிலை ஏற்பட்டது. </b> - Mathuran - 02-26-2005 எந்த சொல்லும் சொல்வதில் கடினம் இல்லை அன்பர் [size=18]<b>கிருபன்ஸ்</b> அவர்களே. மும்பாயில் இருந்து அதி வேக தொடரூந்து. என பெயர் வைத்தாலும் பொருந்தும். ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள், எந்த ஒரு சொல்லையும் திரும்ப திரும்ப சொல்லும் பொழுது அச் சொல்லானது நமது நாவிற்கு நண்பனாகிவிடும். சொன்னத சொல்லுமாம் கிளிப்பிள்ளை. தொடர்ந்து ஒரு சொல்லை சொன்னால் அது உங்களுக்கு பழக்கப்பட்டு விடும். அதனாலே தமிழிலுள்ள கலைச் சொற்களை கண்டு பிடித்து சொல்வதில் என் போன்றோருக்கு ஒன்றும் கடினம் இல்லை. எனவே கமல் தனது திரை படத்திற்கு மும்பயில் இருந்து அதி வேகதொடரூந்து என்றுதான் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அல்ல. வேறு பொருள் தரக்கூடிய பெயர்கூட வைத்துக்கொள்ளலாம். தமிழ் மீது பற்றுடயவன் தமிழில்த்தான் பெயர் வைத்துக்கொள்வான். தமிழில் திரைப்படங்கலுக்கு பெயர் வைத்துக்கொள்ளுங்கள் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் சொல்லிய சில நாட்களிலேயே வேண்டும் என்றே தனது படத்திற்கு, ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்தான் கமல் என்பது நினைவில் நிற்கட்டும். திராவிடகட்சிகள் பற்றி சொன்னீர்கள். மிகவும் வேடிக்கையான உங்களின் வாதம் இது. திராவிட கட்சிகளை நம்பியா நமது தமிழ்த்தாய் உயிர் வாழ வேண்டும். வேண்டுமானால் திராவிட கட்சிகளும் தமிழ்தாயை பாதுகாக்கலாமேயொளிய. தமிழ்த்தாய் திராவிட கட்சிகளிற்கு சொந்தமானது அன்று. தமிழ் துரோகிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும். எந்த நாட்டில் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்கள் தமிழ்த் தாயின் துரோகிகளே. சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம். - hari - 02-26-2005 <img src='http://smileys.smileycentral.com/cat/36/36_1_55.gif' border='0' alt='user posted image'> - Mathuran - 02-26-2005 நல்லாத்தான் கைதட்டுறீங்கள் கரி. அதுசரி எங்கை இருந்துதான் இப்படி நல்ல உடல்ப் பாவனைகளை எடுத்து வாறீங்களோ தெரியவில்லை. - tamilini - 02-26-2005 <img src='http://smileys.smileycentral.com/cat/36/36_1_55.gif' border='0' alt='user posted image'> :mrgreen: :mrgreen: :mrgreen: - kirubans - 02-26-2005 <b> உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், தனித்தமிழில்தான் எல்லாமே எழுத வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக டிஜிடல் கமராவைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது தமிழ் பதங்களை இயலுமானவரை பாவிக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் பலவற்றுக்கு என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காகப் பலர் முழுனேரமாக உழைக்கக் கூடும் (http://www.tamilvu.org/). என்றாலும் தமிழ்பதங்களை தேடுவதற்கு அல்லது உருவாக்குவதற்கு நேரத்தை வீணாக்குவதைவிட அந்த நேரத்தில் உருப்படியான விடயங்களைச் செய்யலாம் என்பது என்கருத்து. சிலவேளை தமிழில் படித்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது! விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தமிழன் ஈடுபட்டாலும், அதனை ஆங்கிலத்தில்தான் பிரசுரிக்க வேண்டும். யாராவது கீழ்வருவனவற்றுக்கு சரியான தமிழ் பதங்களைத் தந்து உதவ முடியுமா? Digital Camera Mega Pixels Optical Zoom Digital zoom Auto Focus Auto White Balance Exposure Control Shot-to-Shot Delay camera - புகைப்படக் கருவி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது (இப்போது புகையும் பாவிப்பதில்லை, படலமும் பாவிப்பதில்லை) </b> - kirubans - 02-26-2005 [quote=Mathuran]நல்லாத்தான் கைதட்டுறீங்கள் கரி. அதுசரி எங்கை இருந்துதான் இப்படி நல்ல உடல்ப் பாவனைகளை smiley - குறுநகையி என்று யாழ் களத்தில் பாவிக்கப்படுகின்றது. ஏற்றுக்கொள்வோமா அல்லது விவாதித்து நேரத்தை விரயம் செய்வோமா? பெரும்பாலானோர்க்கு எது புரிகிறதோ அதனைத்தான் பாவிக்க வேண்டும் என்பது என்கருத்து. 8) - Mathuran - 02-26-2005 kirubans Wrote:<b>இவை புதிய ஆங்கிலச் சொற்கள் இவற்றிற்கான தமிழ் சொற்களின் பாவனை எனக்கு அவசியம் தேவைப்படுவது இல்லை. அதனால் நான் இவற்றிற்கான தமிழை சொற்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தவில்லை. வெகு விரைவில் இவற்றிற்கான தமிழ் ஆக்கங்கள் உங்களுக்கு தரப்படும். புகைப்பட கருவி= போட்டோ கமறா. திரைப்பட கருவி= வீடியோ கமறா. எனக்கு இந்த சொற்களை ஆங்கிலத்தில் எவ்வாறு அளைப்பார்கள் என்று உங்களால் கூற முடியுமா? கொக்காரை பண்ணாடை காவோலை பனம் வட்டு பனம் மட்டை பிணாட்டு பனங்காஇ பணியாரம் இப்படியும் ஒரு சிலர் தமிழ் பேசுகின்றார்களே. நீங்கள் சொல்லும் டிஜிற்றல் இவர்களுக்கு புரியுமா? அன்று கிராமங்களில் மக்களால் உரையாடப்பட்ட மொளழிகளின் உதவியால்த்தான் இன்று பலர் நகரங்களை நோக்கி படையெடுத்த பின் அவர்களையும் அவர்களின் தூய்மையான மொழியினையும் கேலியும் கிண்டலும் செய்திடும் மாந்தர்கள். அவர்களையும் அவர்களாக வாழ விடாது, எதோ ஒருவருக்கும் புரியாத மொழி ஒன்றை உருவாக்கி, அவர்களை நிற்கதி நிலைக்கு தள்ளிய மானிடநேயத்திற்கு புறம்பான மனிதரல்லவா? ஆங்கில மோகம் கொண்டு அலைகின்ற மனிதர்கள். தான் மேலே ஏறிட பயன் பட்ட ஏணியை காலால் உதைவதுதான், மானுட தர்மம் என்றால். கமல காசன் மும்பாய் எக்ஸ் பிரஸ் என்று பெயர்வைப்பதில் குற்றம் காண்பது எமது மடமை என ஒதுங்கி கொள்கின்றேன். ஐக்கிய நாடுகள் சபை கூட எல்லா மொழிகளையும் தகுந்த மரியாதை கொடுத்தே கௌரவிக்கின்றது.ஆனால் தமிழை காத்திட வேண்டிய நீங்களோ. கேள்வி கேட்கின்றீர்கள். ஆங்கிலம் பொது மொழி அதனை யாரும் பேச வேண்டாம் என சொல்லவில்லை. ஆங்கிலேயரிடமோ, இல்லை பிறரிடமோ பேசும் பொழுது, ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் தமிழனோடு பேசும் போதாவது, உங்களால் தமிழில் பேசிட முடியாதா? - stalin - 02-26-2005 கமலின் முத்தக்காட்சிபற்றி குறிப்பிடப்படுகிறது. இன்றைய தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் அருவருப்பான ஆபாசகாட்சிகளிலும் பார்க்க காதலரின் காதல ;வெளிப்பாடாக கலைநயத்தினூடாக முத்தகாட்சியை சினிமாவில் காட்டுவது தப்பில்லை |