02-25-2005, 07:46 PM
பெற்றோரே !
முன்னோர்கள் உங்களுக்கு
ராமாயணம்
சொன்னதெல்லாம்
வெறும் கதைக்குத் தானா!
பத்துதலை
கொண்டதால் மட்டும்
இராவணனை
இராட்சதன் என்றீர்கள்!
உங்கள்
மிதிலையின் சீதைகள்
மயக்கும்
மாயமான்கள் ஆனதை
எப்போதறீவீர்கள்???
இப்போதெல்லாம்
இராவணன்கள்
சிறையெடுக்கப் படுகின்றார்கள்.
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.
ஏய்!
மூடக் கம்பனே!
நெருப்புக்கும் கற்புக்கும்
எப்படி
சம்பந்தம் வைத்தாய்?
எந்த
நெருப்பும் எங்கள்
சீதைகளைத் தொடவில்லை.
நெருப்பல்லவா
தனக்குத் தானே
சுடு போட்டுக்கொள்கின்றது.
பெய்யெனச் சொல்லாமலே
மழையும்
பொழிகிறது.
பழமொழிகள் எல்லாமே
பழையமொழிகள் தானா?
உங்கள்
பொன்மொழியும் பழமொழியும்
எங்களுக்கு
பொய்மொழிகளாய் தானே
தெரிகின்றன.
பெற்றோரே!
இன்னும்
உங்கள் தங்கக் கூண்டுகள்
திறபடா விட்டால்
பாவம்
உங்கள் சீதைகள்
சிறையுடைக்கும் அவசரத்தில்
தங்கள்
திசைகளையும் அல்லவா
இழந்துவிட போகிறார்கள்.
விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
தவறு!!!
புரிபவனுக்கு சொந்தமானதல்ல.
அவனின்
சுழ்நிலைக்கே பந்தமானது.
என்ன செய்வதாய்
உத்தேசம் ?
இன்னும் உங்களின்
பஞ்சாங்கப் பரண்விட்டு
இறங்கிவர சம்மதமில்லையெனின்
உங்களுக்காக
இரங்கற்பா பாடுவதன்றி
வேறுவழி
தோன்றவில்லை.
பழமை பழையதென்று
புத்தாறில் குதிப்பதெனில்
ஆற்றுக்குள்
உங்கள் அஸ்தியை மட்டுமல்ல
உங்களையே
கரைப்பதுதான் புத்திசாலித்தனம்.
-தயா ஜிப்ரான் -
முன்னோர்கள் உங்களுக்கு
ராமாயணம்
சொன்னதெல்லாம்
வெறும் கதைக்குத் தானா!
பத்துதலை
கொண்டதால் மட்டும்
இராவணனை
இராட்சதன் என்றீர்கள்!
உங்கள்
மிதிலையின் சீதைகள்
மயக்கும்
மாயமான்கள் ஆனதை
எப்போதறீவீர்கள்???
இப்போதெல்லாம்
இராவணன்கள்
சிறையெடுக்கப் படுகின்றார்கள்.
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.
ஏய்!
மூடக் கம்பனே!
நெருப்புக்கும் கற்புக்கும்
எப்படி
சம்பந்தம் வைத்தாய்?
எந்த
நெருப்பும் எங்கள்
சீதைகளைத் தொடவில்லை.
நெருப்பல்லவா
தனக்குத் தானே
சுடு போட்டுக்கொள்கின்றது.
பெய்யெனச் சொல்லாமலே
மழையும்
பொழிகிறது.
பழமொழிகள் எல்லாமே
பழையமொழிகள் தானா?
உங்கள்
பொன்மொழியும் பழமொழியும்
எங்களுக்கு
பொய்மொழிகளாய் தானே
தெரிகின்றன.
பெற்றோரே!
இன்னும்
உங்கள் தங்கக் கூண்டுகள்
திறபடா விட்டால்
பாவம்
உங்கள் சீதைகள்
சிறையுடைக்கும் அவசரத்தில்
தங்கள்
திசைகளையும் அல்லவா
இழந்துவிட போகிறார்கள்.
விலங்குடைக்கும்
வேகத்தில்
துகில்களையல்லவா
உரிந்துவிடப் போகின்றார்கள்.
தவறு!!!
புரிபவனுக்கு சொந்தமானதல்ல.
அவனின்
சுழ்நிலைக்கே பந்தமானது.
என்ன செய்வதாய்
உத்தேசம் ?
இன்னும் உங்களின்
பஞ்சாங்கப் பரண்விட்டு
இறங்கிவர சம்மதமில்லையெனின்
உங்களுக்காக
இரங்கற்பா பாடுவதன்றி
வேறுவழி
தோன்றவில்லை.
பழமை பழையதென்று
புத்தாறில் குதிப்பதெனில்
ஆற்றுக்குள்
உங்கள் அஸ்தியை மட்டுமல்ல
உங்களையே
கரைப்பதுதான் புத்திசாலித்தனம்.
-தயா ஜிப்ரான் -
.
.!!
.!!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&