![]() |
|
இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் - - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் - (/showthread.php?tid=5013) Pages:
1
2
|
இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் - - Thaya Jibbrahn - 02-25-2005 பெற்றோரே ! முன்னோர்கள் உங்களுக்கு ராமாயணம் சொன்னதெல்லாம் வெறும் கதைக்குத் தானா! பத்துதலை கொண்டதால் மட்டும் இராவணனை இராட்சதன் என்றீர்கள்! உங்கள் மிதிலையின் சீதைகள் மயக்கும் மாயமான்கள் ஆனதை எப்போதறீவீர்கள்??? இப்போதெல்லாம் இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். பத்தாந்தலை வீணைக்கு மயங்கிய நவீன சீதைகளால். ஏய்! மூடக் கம்பனே! நெருப்புக்கும் கற்புக்கும் எப்படி சம்பந்தம் வைத்தாய்? எந்த நெருப்பும் எங்கள் சீதைகளைத் தொடவில்லை. நெருப்பல்லவா தனக்குத் தானே சுடு போட்டுக்கொள்கின்றது. பெய்யெனச் சொல்லாமலே மழையும் பொழிகிறது. பழமொழிகள் எல்லாமே பழையமொழிகள் தானா? உங்கள் பொன்மொழியும் பழமொழியும் எங்களுக்கு பொய்மொழிகளாய் தானே தெரிகின்றன. பெற்றோரே! இன்னும் உங்கள் தங்கக் கூண்டுகள் திறபடா விட்டால் பாவம் உங்கள் சீதைகள் சிறையுடைக்கும் அவசரத்தில் தங்கள் திசைகளையும் அல்லவா இழந்துவிட போகிறார்கள். விலங்குடைக்கும் வேகத்தில் துகில்களையல்லவா உரிந்துவிடப் போகின்றார்கள். தவறு!!! புரிபவனுக்கு சொந்தமானதல்ல. அவனின் சுழ்நிலைக்கே பந்தமானது. என்ன செய்வதாய் உத்தேசம் ? இன்னும் உங்களின் பஞ்சாங்கப் பரண்விட்டு இறங்கிவர சம்மதமில்லையெனின் உங்களுக்காக இரங்கற்பா பாடுவதன்றி வேறுவழி தோன்றவில்லை. பழமை பழையதென்று புத்தாறில் குதிப்பதெனில் ஆற்றுக்குள் உங்கள் அஸ்தியை மட்டுமல்ல உங்களையே கரைப்பதுதான் புத்திசாலித்தனம். -தயா ஜிப்ரான் - - வியாசன் - 02-25-2005 ஐயோ ஜிப்ரான் நீங்கள் 10 ஐ தாக்குகிறீர்கள் வாளை எடுக்கப்போகுது. என்ன உங்களுக்கும் அல்வா கொடுக்கப்பட்டுவிட்டதா? கவிதையை அனுபவித்து எழுதியதுபோல இருக்கு. நன்றாக உள்ளது. - Thaya Jibbrahn - 02-25-2005 இது அந்த இராவணன் இல்லை வியாசன். நீங்கள் வீணாக இராவணனின் கோப வட்டத்திற்குள் என்னையும் தள்ளி விடப் பார்க்கின்றீர்கள். - Nada - 02-25-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin--> என்ன உங்களுக்கும் அல்வா கொடுக்கப்பட்டுவிட்டதா? கவிதையை அனுபவித்து எழுதியதுபோல இருக்கு. நன்றாக உள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன ஜிப்ரான் காதல் கவிதைகள் எல்லாம் கலக்கலாக இருக்கிறது. வியாசன் கேட்டதுபோல அல்வா தந்தார்களா யாராவது? அட்டகாசம் கவிதை - tamilini - 02-25-2005 ஏன் சீதைகள் இங்கு போகப்பொருளாய் கடத்தப்படவா.? கற்பிழந்திருக்க கு}டும் என்று கணவன் சந்தேகப்படவா..?? சீதைகள் இங்கு வேண்டாம் சந்தேகப்படும் கணவனை திருப்பி கேள்வி கேட்டிட புதுமைப்பெண்கள் வேண்டும் என்நிலையிலும் தன் நிலை தளர மாட்டோம் என்று நிருபீக்க கணவனின் பிழைகளை தட்டிக்கேட்க புதுமையாய் பெண்கள் வேண்டும். இராவணனனை சிறையெடுக்க ஏது தேவை பெண்மைக்கு மாயை கொண்ட இராவணன்கள் நாய் போல் பின்னால் அலைகையில் பெண்மை தம்மைச்சுற்றியுள்ள விலங்குகளை தகர்க்க தான் துடிக்கிறது விலங்குகளாய் மாறிடவல்ல..?? சிறை உடைப்பது திசைமாறிட அல்ல பெண்மையி;ன் திறன் காட்டிட நெறி தவறுவதற்காய் பெண்மை சிறை உடைக்க தேவையில்லை பெண்கள் என்றும் மாயமானாய் அல்ல உங்கள் பார்வையில் உள்ளது மாயை விலக்கிவிட்டால் புரியும் உண்மை நிலை பெய்யென மழை பெய்வதும் நில்லென சு}ரியன் நிற்பதும் கதைகளில் கு}ட பெண்மையால் தான் முடியுமா..?? ஏன் ஆண்மைக்கு சக்தியில்லையா.. இல்லை உங்களில் கற்பில்லையா?? நிருபித்து காண்பியுங்கள் கற்பினை புரிய வைத்திட மழைபொழிவது பெரிதல்ல உங்களவளின் கற்பினை கணித்திட உங்களிற்கு வக்கில்லையா..?? எதுக்கு இயற்கையை வைத்து பரிசோதனை..?? உங்கள் புரிந்துணர்வால் புரிந்து கொள்ளுங்கள். உங்களிற்குரியவளின் கற்பின் ஆழத்தை..?? கணவன் சொன்னதற்காய் கைகட்டி வாய் பொத்தி சேவகம் செய்திடும் நிலையில் இங்கு இன்று பெண்மைகள் இல்லை கணவன்கள் யாவும் ராமன்கள் அல்ல சொன்னவுடன் தீயில் குழித்திட பெண்கள் எல்லாம் கண்ணகிகள் அல்ல மீண்டும் வருவான் எனக்காத்திருக்க மீண்டும் வந்த பின் ஏற்றுக்கொள்ள. ராமன்களாய் வேண்டாம் மனிசனாய் இருந்தால் மதித்து நடப்பாள் மாயை என்று மானாய் பார்த்தால் மாயையும் அல்ல மானும் அல்ல மனிசி என நிருபிக்க வேண்டியது பெண்மையின் கடமை
- Thaya Jibbrahn - 02-25-2005 கணவன் தவறை தட்டிக்கேட்டல் புதுமைப்பெண் கடமையென களத்திலோர் குரல் உரத்தொலித்ததே.தவறை தட்டியென்ன முட்டியே கேட்கலாம்.ஆனாலும் இங்குள்ள கேள்வி அதே தவறை புரிவதற்கு சரிநிகர்சமானம் கேட்பதைப் பற்றித்தான். சகோதரி தமிழினியின் கருத்தும் எனது கருத்தும் ஒன்று தான். ஆனால் சகோதரி கவிதையை மேலோட்டமாக படித்துவிட்டு பிழையான கோணத்தில் விளங்கி கொண்டுள்ளார் என்றே நினைக்கின்றேன். நான் முன்னரே கருத்தாடல் ஒன்றில் குறிப்பிட்டது போல் ஒன்றிரண்டு சம்பவங்களை கூறி ஆண்கள் இப்பிடித்தான் பெண்கள் இப்பிடித்தான் என எந்த முடிவுகளையும் கூறிவிடமுடியாது. இந்தக் கவிதை எழுதுவதற்கும் சில புறநிலைச் சம்பவங்கள் தூண்டுகோலாக இருந்தன. நாம் வாழும் சு10ழ்நிலையில் இவ்வாறான சம்பவங்களுமஇ உண்டென்பதை ஏற்றுத்தானேயாக வேண்டும். - tamilini - 02-25-2005 எந்த நெருப்பும் எங்கள் சீதைகளைத் தொடவில்லை. நெருப்பல்லவா தனக்குத் தானே சுடு போட்டுக்கொள்கின்றது. விலங்குடைக்கும் வேகத்தில் துகில்களையல்லவா உரிந்துவிடப் போகின்றார்கள். முடிந்தவரை படித்து தான் எழுதினம். எமது பதில் இப்படியான.. ஒரு சில கருத்துக்ளிற்கு.. எதிர்க்கருத்து. பெற்றோர்களிற்கு அவர்களது நிலைமையை மாற்றிட நீங்கள் கருத்துச்சொல்லலாம். நீங்கள் சொல்லப்போற கருத்து பெண்களது தன்மையை பாதிக்காதவண்ணம் இருத்தல் வேண்டும் அல்லவா..?? விலங்கை உடைக்க வீதியில் இறங்கிப்போராடுவாள். துகில் உரிகிற அளவிற்கு மிருகங்களாய் பெண்கள் இல்லை. ! ![]() சரிநிகர் சமனாய் இருப்பதற்காய். பெண்மை எங்கும் தறிகெட்டு அலைந்ததாய் இல்லை.
- Thaya Jibbrahn - 02-25-2005 எங்கும் இல்லை என்று கூறாதீர்கள் தமிழினி. வேண்டுமென்றால் நீங்கள் அறியாமலிருக்கலாம். அதற்காக எல்லா பெண்களும் இப்படித்தான் என்பது என் வாதமல்லவே. அத்துடன் நம் பெற்றோர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க இதிகாசங்களைத் தான் பண்பாடு கலாச்சாரம் என்ற பெயர்களில் திணித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.இவற்றின் மீதான ஒரு எதிர்வினாவாகவே இது நோக்கப்பட வேண்டும். பெண்கள் தவறுசெய்கிறார்கள் என்றால்.. அதற்கு தூண்டுகோலாக இருப்பது எது என்ற போக்கிலேயே இந்த ஆக்கம் உள்ளது. தொடரந்து உங்கள் கருத்தை முன்வையுங்கள். இது தொடர்பில் உங்களுடன் கருத்தாடல் செய்ய ஆவா உள்ளது. ஒரு தலைப்பை தொடங்கி கருத்தாடல் ஆரோக்கியமாக இருக்கும் என எண்ணுகின்றேன். - tamilini - 02-25-2005 கண்டிப்பா விலங்குகளை உடைக்கிறன் என்று வெளிக்கிடுறவர்கள்.. அந்த நிலைக்கு போகமாட்டார்கள் என்பது நம்ம கருத்து நாங்கள் யாதார்த்தத்தை சொல்கிறம்.. கண்டிப்பா புரட்சி என்று வெளிக்கிடுபவர்கள் பிறர் தவறாக விமர்சிக்க கு}டியவாறு நடக்கார். தாங்கள் செய்கிற தவறுகளை சிலர் விடுதலை விலங்குடைக்கிறம் என்ற பெயரில் போட்டுக்கொள்ளலாம். பெற்றோர்கள் பஞ்சாங்கமாய் இருக்கிறார்கள். இருப்பார்கள் அது அவர்களின் கடமையின் வடிவாமாய் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளை அது ஆண்களாய் இருந்தாலும் சரி பெண்களாய் இருந்தாலும் சரி சரியான பாதையில் சென்றிட அட்வைஸ் பண்ண வேண்டியது கண்டிக்க வேண்டியது அவர்களின் கடமை பொறுப்பு. இப்படி விலங்கை உடைக்கிறன் என்ற பெயரில் சேலையை உரியிற பொருள்பட நாங்கள் எங்கையும் எந்த சம்பவத்தையும் இதுவரை கேட்கவில்லை.. இப்படிப்பட்ட் கவிவரிகள் உண்மையான.. விடுதலை நோக்கம் கொண்ட பெண்களையும் பாதிக்க கு}டும். இதிகாசங்கள் அவற்றின் உண்மைத்தன்மைகள். கற்பனைத்தன்மைகள்.. பெண்களின் இயலுமை இயலாமை பற்றி பெற்றோருக்கு எடுத்து சொல்ல வேண்டியது உங்களைப்போன்றவர்களின் கடமை அத்துடன் பெண்களின் கடமையும் கு}ட. ஆனால் இப்படி பெற்றோரை பயப்படுத்திற மாதிரி பெண்களது விலங்குடைப்பு என்ற பதத்திற்கு.. வித்தியாசமான.. ஒரு கருத்தை வைப்பது அல்லது இழிவுபடுத்துவது (கண்டிப்ப அந்த வார்த்தை இழிவுபடுத்துவது மாதிரி தான்) போன்ற வரிகள் தேவையற்றது என்பது நம்ம கருத்து.
- KULAKADDAN - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பெற்றோரே! இன்னும் உங்கள் தங்கக் கூண்டுகள் திறபடா விட்டால் பாவம் உங்கள் சீதைகள் சிறையுடைக்கும் அவசரத்தில் தங்கள் திசைகளையும் அல்லவா இழந்துவிட போகிறார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சில இடங்களில் இதுவும் சரியான காரணம். கவிதை பதில் கவிதை இரண்டுக்கும் பாராட்டுகள்...தொடரட்டும் பணி.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Thaya Jibbrahn - 02-25-2005 விலங்குடைக்க புறப்பட்டவர்கள் விலங்குத்தனமாய் நடப்பதாய் எந்தக்கருத்தும் முன்வைக்கப்படவில்லையே. எமது பண்பாடு நாகரீகம் பற்றி தெளிவான அறிவின்றி இளம் சந்ததியிடம் அது கொண்டு செல்லப்படும் போதுää அவர்கள் பண்பாட்டின் தொன்மையை அதில் உள்ள நல்ல விடயங்களையும் வெறுக்க நேரிடலாம். அதைத்தான் பெண்களின் பிரச்சனையை மையப்படுத்தி... விலங்குடைக்கும் வேகத்தில் துகில்களையல்லவா உரிந்துவிடப் போகிறார்கள் என பூடகமாய் சொல்லப்பட்டுள்ளது. அதனை நேரடியாக பெண்கள் நிர்வாணமாய் வீதியில் போவது என எழுதியிருப்பதாய் அர்த்தம்கொள்ளலாகாது. ஆக்கம் சொல்ல முனைவது என்னவென்றால் பெண்கள் செல்ல வேண்டிய செல்நெறி அவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக நாம் இன்னமும் பழைய பஞ்சாங்க கதைகளை பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் இங்கே மேற்கத்தேள மண்ணிலே உள்ள அரைகுறை வாழ்க்கை தான் தங்கள் விடுதலை என எண்ணி பிழையான பாதையில் செல்லலாம். செல்கின்றார்கள். சட்டி சுடுவதாக துள்ளிக்குதித்த மீன் அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடக்கூடாது பெண்கள் விடுதலையென்பது. - kavithan - 02-25-2005 கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.. கருத்தை நான் கவினிக்கலை ஆளை விட்டுங்கோ.... பதில் கவிதையும் நன்று.. தொடருங்களுங்கள் வாதத்தை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sinnappu - 02-26-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் நினைச்சன் என்ர வில்லனுக்கு பூசை நடக்கிதாக்கம் எண்டு வந்து பாத்தா சொதப்பீட்டீங்கப்பா:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :wink: :wink: - Thaya Jibbrahn - 02-26-2005 சின்னப்பு! உங்கட ஆதங்கம் புரியுது. ஒருக்கா உங்கட வில்லனுக்கு அறம் பாடுவமோ???? - sinnappu - 02-26-2005 அப்பு 10 :evil: யை..................... வேண்டாம் வேண்டாம் மனுசன் எங்க எண்டு திரியுது :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - shiyam - 02-26-2005 sinnappu Wrote:<!--emo&கவலைபடாதையுங்கோ அவருக்கும் ஒருகவிதை தயாவை கேட்டால் போச்சு தயா தமிழினி சரியான போட்டி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் - - Mathuran - 02-26-2005 Thaya Jibbrahn Wrote:பெற்றோரே !இராவணன் உண்மயிலயே நல்ல ஒரு அரசன். அத்தோடு நல்ல இரக்கம் கொண்ட அரசன். சிவனின் மீது அதிக பக்தி உடயவர். நல்ல மன உறுதி படைத்தவர். உண்மயாகவே இராமயணம் சித்தரிக்கப பட்ட நாடகம். இராமன் இலங்கை வந்தான் என்பது உண்மையே. ஆனால் சீதையை சிறை மீட்பதற்காக அல்ல. சீதை இராமனின் மனைவியே அல்ல. இதை பற்றிய ஆதாரம் மேலும் கிடைக்க பெறும் பட்சத்தில் தர முயலுகின்றேன். - shiyam - 02-26-2005 என்னமதுரன் புது கதை விடுறீர் இராமாயணமே ஒரு புருடா அதுக்கை எங்கை இராமன் இலங்கை வந்தவன் Re: இராவணன்கள் சிறையெடுக்கப் படுகின்றார்கள். -தயா ஜிப்ரான் - - வெண்ணிலா - 02-26-2005 Mathuran Wrote:. சீதை இராமனின் மனைவியே அல்ல. . [b]உண்மையா? :?: - tamilini - 02-26-2005 Quote:சீதை இராமனின் மனைவியே அல்ல. இதை பற்றிய ஆதாரம் மேலும் கிடைக்க பெறும் பட்சத்தில் தர முயலுகின்றேன். ம் நானும் இதுபற்றி அறிந்தன்.. பட் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.. மகளோ ஏதோ என்று.. என்று கேட்ட நினைவு அப்படியா தம்பி..?? :mrgreen: |