Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
தயவு செய்து களம் தொடர்பான பிரச்சனைகளை களத்தில் தீர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை இங்கு களத்தில் சுட்டிக்காட்டுங்கள். அவ்வாறில்லாது அவர் அப்படி எழுதுகின்றார், இப்படி எழுதுகின்றார் என்று தொலைபேசியில் களநிர்வாகத்தினரை அழைத்து பேசுவது போன்ற விடயங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இது பலமுறை நடைபெற்றதால் இங்கு குறிப்பிடவேண்டியதாகப் போகின்றது.
நன்றி
மோகன்
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
கள உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
ஒரே கருத்தினை கொண்ட விடயங்களை ஒரு தலைப்பின் கீழேயே
கருத்தாடல் செய்யுங்கள்.
பொருத்தமான களப்பிரிவின் கீழ் புதிய விடயங்களை ஆரம்பியுங்கள்.
உதாரணமாக நகைச்சுவை என்ற களப்பிரிவின் கீழே நகைச்சுவையான
கருத்தாடல்களையும் கருத்துக்களையும் மட்டுமே வையுங்கள்.
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
கள உறுப்பினர்களுக்கு வணக்கம்..
களத்தில் ஆங்கிலத்தில் செய்திகள் போடுவது தொடர்பாக
பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
[size=15]தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்...
என்பது கள நிபந்தனைகளில் ஒன்று.
எனவே கள உறுப்பினர்கள் தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில்
கருத்துகளை வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அவ்வாறு வைக்கப்பட்டால் எவ்வித அறிவித்தல்களும் இன்றி
அக்கருத்து நீக்கப்படும் என அறியத்தருகிறோம்.
நன்றி
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
[b]3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
சில கருத்துக்களில் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தயவு செய்து எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தவறாது குறிப்பிடுங்கள்
Posts: 343
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
[size=18][b]தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடாது இருக்குமாறு கள உறவுகளை அன்பாக கேட்டுகொள்ளுகிறோம்.
நன்றி.