Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
தாயே! எமையே சிதைத்ததேன்?
நீயே! பகையாய் அழித்ததேன்??
வாழ்வு தந்தாய்! வளங்கள் தந்தாய்!!
வல்லமை நீயே தந்தாய்.
உந்தன் மடி ஏறிநின்று
உலகையே ஆழ வைத்தாய்.
உறவாக நீயிருந்தாய்
உதறிடவேன் மனம் துணிந்தாய்?
தீதென்ன செய்தோம் நாமோ
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ?
தாய்மடியில் சேயாய் வாழ்ந்தோம்
இரந்துண்டு வாழ்வதா?
கடல்வென்று ஆண்ட மண்ணை
கடல்கொண்டு போவதா?
பகைவென்று வீரம் செய்தோம்
பகைநீயாய் ஆவதா?
வசந்தத்தை வரமாய் கேட்டோம்
வஞ்சித்து துன்பத்தை நீதந்தால் தகுமோ?
தயா ஜிப்ரான்
.
.!!
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
நல்லது தயா ஜிப்ரான் எங்கே நீங்களும் ஒரு கலீல் ஜிப்ரான் என்பதை நிருபியுங்கள் பார்ப்போம்
; ;
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
கவிதைக்கு வாழ்த்துக்கள் தயா ஜிப்ரான்.
தங்கள் கவிதை ரீரீஎன்னில் அடிக்கடி ஒலிக்கும் சுனாமிதுயரின் பாடலான
'கடலே எழுந்தே வீழ்ந்ததேன்"
என்ற மெல்டில் அமைந்துள்ளது. இதை இன்னொரு வடிவில் இசைகலந்து பாடலாக்கலாம்.
'கடலே எழுந்தே வீழ்ந்ததேன்" பாடலின் மெட்டில் உங்கள் கவிதையை பாடிப்பார்த்தேன். நன்றாகவே பாடலுக்கான ஏற்ற இறக்கங்கள் வருகிறது.
:::: . ( - )::::
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கவிதைக்கு வாழ்த்துக்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம்,
தயா ஜிப்றான் அண்ணன் அவர்களே! உங்கள் கவிதை சிறப்போ சிறப்பு. சுனாமியை பற்றி பல கவிதைகள் இந்த யாழ் களத்தில் உலாவுகின்றன. அவற்றில் தங்கள் கவியும் ஒரு தாரகை ஒளியாய் ஒளிர்கின்றது. யாழில் பல நல்ல தேர்ந்த பறப்பு கொண்ட கவிக்குருவிகளும், இப்போதுதான் மெல்ல சிறகை அடிக்கும் குருவிகளும் யாழ் என்னும் பூங்காவில் உலவி மகிழ்கின்றன. நீங்களும் சுதந்திராமாய் பறவுங்கள், இனிய பல சேதிகளை கொண்டு வாருங்கள். உங்களை என்றும் வாழ்த்துகின்றோம்.
அன்புடன்
மதுரன்
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
நன்றி நண்பர்களே! இந்தக் களத்தில் எங்கே என்னை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களோ எனப் பயந்தேன். பரவாயில்லை நண்பனாய் அரவணைத்துக்கொண்டீர்கள். நன்றிகள். இனி நான் படித்த படைத்த ஆக்கங்களுடன் சந்திக்கின்றேன்.
.
.!!