Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்கள் முன்வர வேண்டும்
#41
குருவி வீட்டில் நன்றாக பழிவாங்கப்படுவது புரிகிறது. அதற்காக பொதுவான அரங்கில் இவ்வாறான பிற்போக்குத் தனங்களை வாதங்கள் என்று அடுக்கக் கூடாது. நீங்கள் எழுதிய கருத்துக்களை நீங்களே ஒரு முறை ஒட்டுமொத்தமாக படித்துப்பாருங்கள்.
.
.!!
Reply
#42
இங்ப என்ன நடக்கிறது.. ஒன்றும் புரியல.. சோ கதைச்சு ஒரு முடிவுக்கு வாங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#43
Thaya Jibbrahn Wrote:குருவி வீட்டில் நன்றாக பழிவாங்கப்படுவது புரிகிறது. அதற்காக பொதுவான அரங்கில் இவ்வாறான பிற்போக்குத் தனங்களை வாதங்கள் என்று அடுக்கக் கூடாது. நீங்கள் எழுதிய கருத்துக்களை நீங்களே ஒரு முறை ஒட்டுமொத்தமாக படித்துப்பாருங்கள்.

எங்களுக்கு வீட்டிலும் பழிவாங்கல் இல்லை...கூட்டிலும் இல்லை... இது பிற்போக்கு வாதமும் அல்ல...உண்மையைச் சொல்லக் கோரம் கோரிக்கை...அபிரிமிதமான சிந்தனைகள் செயலாகி விளைவுகள் தர காலம் எடுக்கும் எனவே எது இப்ப தேவையோ எது யதார்த்தமோ எது சாத்தியமோ அந்த வழியில் சிந்தியுங்கள்....கருத்தை வையுங்கள் உபயோகமாக இருக்கும்...! நாம் தூக்கினாலும் தூங்காவிட்டாலும் துலங்கக் கூடிய ஜென்மங்கள் தான்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
வலு இழப்பு வலு விரயம் என்பவற்றை நிறுவனம் எனும் ஒரு தளத்தில் மட்டும் நின்று நோக்குதல் புத்தியுள்ளவருக்கு ஏற்றதன்று. வீடு எனும் தளத்திலும் நின்று நோக்க வேண்டும். நீங்கள் சொல்லவது போல பெண்கள் எங்களால் முடியாது தான். எனவே நாங்கள் வீட்டிலேயே இருக்க நீங்கள் எல்லா வளங்களும் வலுவும் உள்ள றோபோக்கள் உழைத்து கொண்டு வாருங்கள் என இருந்திருக்கலாம். அப்படியா இருக்கிறார்கள். இங்கே புதிய ச10ழநிலையிலும் நிறுவனங்களின் கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுத்து உழைத்து வருகின்றார்கள். இதனால் அந்த வீட்டில் ஏற்படக்கூடிய வலுவேற்றம் பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுவான சிந்தனைகள் பற்றித்தான் நாங்கள் இங்கே வாதிடுகின்றோம். அதனால் எங்கள் தனிப்பட்ட தொழில்சார் திறமைகள் பற்றி விளம்பத் தேவையில்லை. குருவி! நீங்கள் வாத்திற்கு இழுப்பதனால் சொல்கிறேன். கனடா இந்தியா இலங்கை டுபாய் நாடுகளில் கிளைகளை கொண்ட நிறுவனமொன்றை நிர்வகித்து வருபவன் நான். பல பெண்கள் பணியாற்றுகின்றார்கள். நீங்கள் சொல்வதைப் போல எந்த வலுவிழப்பும் எனது நிறுவனத்திற்கு ஏற்பட்டதில்லை.
இன்று ஆண்களுக்கு உடல்நம் மேலும் பல காரணங்களால் வேலை இழப்பு ஏற்பட்ட பின்னர் எத்தனை பெண்கள் குடும்ப சுமையை தாங்கி வெற்றிகரமாக குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார்கள். ஒரு சில பெண்கள் விடுகின்ற தவறுகளை ஒட்டுமொத்தப் பெண்களின் தவறு என முத்திரை குத்தி முழுமையான பெண் இனத்தின் திறமைகளையும் உரிமைகளையும் மழுங்கடித்தல் என்பது ஒரு வளர்ந்து வரும் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஏற்றதன்று. தளபதி சு¨10சை கூறிய கருத்தை உங்கள் வாதத்திற்கு துணையாக சேர்த்திருந்தீர்கள். தளபதி சொன்னது பெண்களின் பங்களிப்பு பற்றி விளக்குவதற்கு. இயற்கையாக ஏற்படும் அவ்வாறன அசௌகரியங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பெண்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்தார்கள். நீங்கள் அதன் மறுபக்கத்தை உங்களுக்கு வசதியாக மாற்றிப்போட்ட பெண்களால் இயலாது என்பதாக வாதாட வருகின்றீர்கள். என்னாச்சு குருவி உங்களுக்கு?

இதற்காக பெண்கள் செய்வது எல்லாம் சரி என்பது அல்ல என் வாதம். புலம்பெயர்ந்த மண்ணில் பல சீர்கேடுகளுக்கு பெண்களே மூலகாரணமாக இருக்கின்றார்கள். ஆனால் அவற்றை காரணம் காட்டி ஒட்டுமொத்த பெண்களின் உரிமைகளையும் அவர்களின் திறமைகைளை கொச்சைப்படுத்துவதையும் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதை ஒரு ஆரோக்கியமாக விவாதக் களமாக மாற்ற .. விதண்டாவாத ரீதியில் தர்க்கம் புரிவது தவிர்க்கப்படல் வேண்டும். இல்லையெனிலோ வீண் சர்ச்சைக்களமாக இது மாறுவது இந்த களத்தின் நோக்கத்தி;ற்கு ஏற்றதல்ல.

சரியான விடயத்தை யார் சொன்னாலும் அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதென்பது ஆரோக்கியமான வாதத்திற்கு முக்கிய அம்சம். நான் பிடித்த முயலுக்கு 3 கால் தான் இருந்தது என்றால் யாரால் என்ன தான் செய்ய முடியும்??????????
.
.!!
Reply
#45
நாங்க என்ன சொல்லவாறம் என்பது உங்களுக்குப் புரியவில்லை...பெண்களைப் பற்றிய ஒரு அபரிமிதத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருத்தைப் பரப்பாது எது யதார்த்தமோ எது தேவையோ எது அவசியமோ எது தேவையான நல்ல மாற்றத்துக்கு வழிகோலுமோ அதைச் சொல்லுங்கள்.. பெண் விடுதலை பெண் உரிமை என்றும் ஆண் அடக்குமுறை...ஆண் எதிரி...ஆண் ஆதிக்க வெறியன்...ஆண் கொடியவன் இப்படியான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைப் பரப்பாதீர்கள்...! இன்று ஒரு பெண்ணுடன் தூய்மையான எண்ணத்துடன் உள்ள ஒரு ஆண் கூட மனம் விட்டுப்பேச முடியாத நிலை...அப்படியானவர்களைக் கூட கெட்டவனோ கொடியவனோ என்றுதான் முதலில் பெண்கள் சிந்திக்கின்ற நிலை...இது ஒரு வளமான புரிந்துணர்வுக்கு உதவப் போவதில்லை...!

அன்று பெண்கள் தங்கள் அறியாமைக்குள் கட்டுண்டு முடங்கிக் கிடந்த காலத்தில் கூட அவளை வெளியே கொண்டுவரத் தூண்டியவனும் ஆண்தான்...அவன் அடக்கி ஒடுக்குபவனாக இருந்திருந்தால் அதைச் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை...!ஆனால் இன்று நல்ல புரிந்துணர்வுக்கு வழியிருந்தும் இப்படியான வெற்றுக் கோஷங்களால் ஆண் - பெண் புரிந்துணர்வு என்பது தூரப் போவது அவசியமற்றது...!

தளபதி சூசையின் கூற்று..யதார்த்ததைச் சொல்கிறது...என்ன நடந்ததோ அதைச் சொல்கிறது...! அவர்கள் ஒரு அபரிமிதத் தோற்றத்தைக் காட்ட விரும்பவில்லை...ஆம் களத்தில் பெண் போராளிகளுக்கு சில பிரச்சனைகள் ஆண் போராளிகளை விட இருக்குத்தான்...அதையும் சமாளிக்கக் கூடிய வல்லமையை நாம் வளர்த்திருக்கிறோம் என்பதுதான் அவரின் கூற்றின் அர்த்தம்...அதற்காக பெண் போராளிகள் ஆண்களுக்கு சமனா எல்லாம் செய்தனர்...எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளாமலே சாதித்தனர் என்று கதையளக்கவில்லை...அதற்காகத்தான் அதை அங்கு சுட்டிக்காட்டினோம்...!

நீங்கள் சிலர் இதைத்தான் சொல்கின்றீர்கள்.. பெண்கள் பற்றிய யதார்த்தப் பார்வையைக் காட்டாமல் தேவைக்கு அதிகமான தோற்றத்தை அளிக்கிறீர்கள்...அது நல்லத்தல்ல...என்பதே எமது கருத்து...பெண்களுக்கு பலவீனம் இருக்கு ஆனால் அதை சமாளிக்கக் கூடிய திறனை சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று உங்களில் எவராவது சொல்லி இருக்கிறீங்களா...இல்லையே...பெண்கள் எதையும் சாதிப்பாங்க...ஆனா ஆண்கள் விடுறாங்க இல்ல...இதுதான் உங்க வாதத்தின் தொனி...பெண்ணியம் என்று பேசுவோரின் கூச்சலும் இதுவே....இது உலகுக்கு அவசியமா...????! அதில் யாதார்த்தம் இருக்கா...???! இதற்கு விடை தேடத்தான் எமது வாதமே ஒழிய நாம் இங்கு விதண்டாவாதம் செய்ய வரவில்லை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
Quote:உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...!
என்ன குருவியாரே இது உதைக்குது.. ஏன் பெண்ணால தன்னைக்காப்பாற்ற முடியாது.. இதெல்லாம் நம்ம மாதிரியாக்களிட்டை வாயாது.. ஆண்களை நம்பி வழவேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு கிடையாது.. பெண் தன்னைத்தானே சரியாய் புரிஞ்சு கொண்டால்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
kuruvikal Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836
கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

ஐயா குருவி மேற்படி வாசகங்கள் நாங்கள் சொன்னதில்லை. நீங்களே திருவாய் மலர்ந்தது தான். அது தான் நான் சொன்னேன் .. நீங்கள் எழுதியவற்றை நீங்களே ஒட்டுமொத்தமாக வாசித்துப் பாருங்கள் என்று. நீங்கள் மேற்சொன்ன கருத்துக்கும் கடைசியாக சொல்ல வருவதற்கும் எவ்வளவு முரண்பாடுகள்

என்ன குருவி.. நீங்கள் பேசுவது என்ன என்பது உங்களுக்காவது புரிகிறதா? பெண்கள் உடலியல் ரீதியான பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பெண்களுக்கு சமஉரிமை என்பதெல்லாம் கோரக்கூடாது. உள்ளதை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்றீர்கள். இப்போது என்னவென்றால் எங்களுக்கு விளக்கம் போதவில்லை... நீங்கள் பெண்களுக்கு யாதார்த்த அடிப்படையில் உள்ளதை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். உண்மையில் எனக்கு விளக்கம் போதவில்லைத் தான்..... நீஙகள் முன்னொன்று பின்னொன்றாய் சொல்பவற்றை விளங்கிக் கொள்ள.

நாங்கள் சொல்வதைத்தான் நீங்களும் இறுதியில் சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அதை உங்கள் வாத்திறமையால் நாம் சொல்வதை விட வித்தியாசமாக எதையோ சொல்வது போல பாவ்லா காட்டுகின்றீர்கள்.

இனியும் இதில் கதை வளர்ப்பது எனக்கு நன்றாக படவில்லை. நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி நான் விடை பெறுகின்றேன்.

உடல் உளவியல் என வாழ்வியலின் அனைத்து அம்சங்களையும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் பெண்கள் ஆண்கள் என தாழ்வு உயர்ச்சி சொல்ல எந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இல்லை. ஆனால் நடைமுறையில் பெண்களுக்கு அந்த சரியாசனம் வழங்கப்படவில்லை. ஆனால் எமது தேசத்தை பொறுத்த வரையில் பெண்கள் அந்த நிலையை சரியான முறையில் தக்க வைத்து வருகின்றாரகள். பெண்களின் உடலியல் ரீதியான உபாதைகளை காரணம் காட்டி அவர்களின் திறமைகளை கொச்சைப்படுத்த வேண்டாம். அவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இலக்கை அடையும் பக்குவம் பெண்களுக்கு உண்டு. அதை தளபதி சு10சையின் கருத்து மூலம் குருவி அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனவே
ஆண் பெண் என்பது வெறும் உடலியல் வேறுபாடேயொழிய வேறொன்றில்லை.
.
.!!
Reply
#48
tamilini Wrote:
Quote:உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...!

என்ன குருவியாரே இது உதைக்குது.. ஏன் பெண்ணால தன்னைக்காப்பாற்ற முடியாது.. இதெல்லாம் நம்ம மாதிரியாக்களிட்டை வாயாது.. ஆண்களை நம்பி வழவேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு கிடையாது.. பெண் தன்னைத்தானே சரியாய் புரிஞ்சு கொண்டால்.. :wink:

பெண்கள் மனவலிமை மிக்கவர்கள் என்றால் ஏன் தற்கொலைகளின் வீதம் பெண்கள் மத்தியில் அதிகம்....மனச்சோர்வு...தம்மைத்தாமே தாழ்வாக எண்ணும் சிந்தனைகள் என்று பெண்கள் தங்களைத் தாங்களே மட்டம் தட்டும் சிந்தனைகள் அதிகம்...அது அவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளைத் தாங்களே வெளிக்காட்ட தடையாகவும் இருந்துவிடுகிறது...! அதை குறைக்க சமூகத்தில் பெண்களின் தூண்டுதலைக்காட்டிலும் ஆண்களின் பங்களிப்புடனான புரிந்துணர்வின் பாலான ஊக்கம் என்பன அவசியம் அது இல்லாமல் பெண்களால் சிலவற்றைத் தனித்துச் சாதிக்கக் கூடிய நிலை இன்னும் உலகில் இல்லை...! அதைவிடுத்து ஆண்களை எதிரியாக ஆதிக்க சக்தியாக கொடியவனாக வல்லாதிக்க சக்தியாக விபரிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்...அது ஆண்கள் மனதளவில் பெண்கள் மீதான தங்கள் கரிசணையை இழக்கவே வழிபண்ணும்...!

அதைவிட பெண்கள் ஆண்களுடன் நேரடியாக மோதினால் வெல்வது கடினம்...இப்போ இரண்டு ரவுடிகளுடன் இரண்டு பெண்களை மோதவிட்டால் ரவுடி என்ன பண்ணுவான்...உங்களால் அங்கு வெல்ல முடியுமா...உங்களுக்குத் தற்காப்புக் கலை தெரிந்திருந்தாலும் கூட அது கடினம்...அப்படியான சந்தர்ப்பங்களில் எதைக் கொண்டு உங்களைப் பாதுகாப்பீர்கள்...???! துப்பாக்கி வைத்தா சுட முடியும்...சாதாரண நடைமுறைக்களைக் கவனியுங்கள்...உலகில் அநேகம் வீதித் திருட்டுக்களுக்கு இரையாபவர்கள் பெண்கள்...ஏன்...???! அதிகம் தமது உடமைகளைத் தவற விடுபவர்கள் பெண்கள் ஏன்....???! உங்களுக்கு உண்மையான வலிமையிருந்தால் இவற்றைத் தவிருங்கள்...சட்டத்தையோ பொலீசையோ எதிர்பார்க்காதீர்கள்...அது எப்பவும் உங்க கூடவே சுத்த முடியாது....! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
[quote="Niththila"]வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா

என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?



நித்திலா சரி உங்களையே கேட்கின்றேன் அப்போ யாரிடம் கேட்கின்றீர்கள் பெண்களுக்கு உரிமை கொடு என்று. உங்கள் உரிமையை அப்போ யார் பறித்து வைத்துள்ளார்கள். சற்று விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். :oops: Cry :oops: Cry
Reply
#50
வசம்பு நீங்கள் நித்திலா ஆகியோர் கேட்கும் கேள்விகள் எனது பார்வையில் வெறும் Logic. ஒருவர் சொல்வதை இன்னொருவர் தனது வாதத்திறமையால் மடக்கி விடலாம். ஆனால் அவர் சொல்ல வந்த விடயம் அப்படியே தானே இருக்கப் போகின்றது. எனவே உண்மையான பிரச்சனையை உணர்ந்து அதை நிவர்த்தி செய்யத்தக்கதான உரையாடல்களே முக்கியம் பெறுகின்றன. வெறும் பட்டிமன்றம் போல எனது பக்கம் சார்ந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக வாதத்திறமைகளை முன்வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
.
.!!
Reply
#51
Vasampu Wrote:[quote=Niththila]வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா

என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?



நித்திலா சரி உங்களையே கேட்கின்றேன் அப்போ யாரிடம் கேட்கின்றீர்கள் பெண்களுக்கு உரிமை கொடு என்று. உங்கள் உரிமையை அப்போ யார் பறித்து வைத்துள்ளார்கள். சற்று விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். :oops: Cry :oops: Cry

வசம்பு அண்ணா பெண்கள் தங்களுக்கு சுதந்திரம் வேணுமென்றா அதைத்தாமாகவே எடுத்துக் கொள்ளலாம். 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதைத்தரும் படி ஆண்களைக் கேட்கத் தேவயில்லை. இது என்ர கருத்து ஆனா அதே சுதந்திரத்தை ஒரு பெண் பயன்படுத்த முயலும் போது தான் ஆண்கள் பெண்னை அடக்க முற்படுகின்றனர். இதுதான் கூடாது எண்டு பெண்ணிலை வாதிகள் கூறுகினம் :evil: :evil:
. .
.
Reply
#52
பெண்களுக்கு எதுக்கு சுதந்திரம் வேணுமக்கா? :?
Reply
#53
poonai_kuddy Wrote:பெண்களுக்கு எதுக்கு சுதந்திரம் வேணுமக்கா? :?

நினைச்ச நேரம் சீரியல் பாக்கத்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#54
பெண்களுக்குச் சுதந்திரம் வேணும் சுதந்திரம் வேணும் என்று எல்லோரும் தொண்டை கிழியக்கத்துகிறார்கள். ஆனால் அவர்களிலை அநேகர் அந்தச் சுதந்திரம் என்பது எது என்பதை வரையறை செய்யத் தவறிவிடுகிறார்கள். அல்லது அவர்கள் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.

முதலில் பெண்களுக்குச் சுதந்திரம் யாரிட்டை இருந்து கிடைக்வேணும்? அநேகமாய் எல்லோரும் ஆண்களிடமிருந்துதான், ஆணாதிக்கத்திடமிருந்துதான் என்று சொல்கிறார்கள். அது எவ்வளது தூரத்திற்கு உண்மையான நிலைப்பாடு. உதாரணமாக வரதட்சனை என்ற விடயத்திலை மாமியார்களின் கொடுமைகள்தான் அதிகளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

மற்றது இங்கை தாயகத்தைப் பொறுத்தவரையில் அநேகமாய் பெண்விடுதலைப் பற்றிக் கதைப்பவர்கள் அமெரிக்காவிலை பெண்கள் இப்படி இருக்கினம். லண்டனிலை அப்படி இருக்கினம். இங்கை நாங்கள் மட்டும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஒப்பிதடுதல் சரியா? மேலைத்தேய கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பவற்றோடு எமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பெண்விடுதலை பேசுதல் சரியா?
--
--
Reply
#55
சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று தான். அதனை நாம் உபயோகிக்கும் முறையில் தான் மற்றைய விடயங்கள் அமைகின்றன. எவரும் எவரையும் அன்பால் கட்டிப் போடலாமேயன்றி அதிகாரத்தால் ஒன்றும் செய்து விட முடியாது. பல விடயங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது குறைவு. மேலெழுந்த வாரியாக பார்த்து விட்டு முடிவெடுக்கின்றோம். பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒரு ஆண் கெட்டுப் போய் விட்டால் அது அவனை மட்டுமே பாதிக்கின்றது. ஆனால் ஒரு பெண் கெடடுப் போய் விட்டால் அது அவளைச் சேர்ந்த அனைவரையும் பாதிக்கின்றது. அதனால்த்தான் முன்னோர்கள் பெண்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அதைக் கூட தாய்மார்களே செய்கின்றார்கள். உண்மையை கூறுங்கள் ஒரு பெண் பிள்ளை மீது கட்டுப்பாடுகள் போடுவது வீட்டில் அப்பாவா? அம்மாவா? அது கூட அவர்களின் பாதுகாப்பிற்காகத்தான். ஆனால் திருமணத்தின பின் பெண் தான் மகாராணி. எங்கே மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வீட்டில் அம்மா மீதா அப்பா மீதா கூடுதல் பிரியம் வைத்திருக்கின்றோம். எல்லா அம்மாக்களும் எம்மை மிரட்டி வைக்க பாவிக்கும் சொற்பதம் அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்றே போட்டு விடுவார் என்று சொல்லிச் சொல்லியே அப்பாவைப் பற்றி ஒரு வில்லன் இமேஜ் உருவாக்கி விடுவார்கள். பிள்ளைகளும் அதை நம்பி அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவர்களை அறியாமலேயே பயம் வரும் அதனால் அம்மா தான் தெய்வம். இப்படி பெண்கள் ஆண்களின் பல பலவீனங்களை வைத்து நிறைய தமது விடயங்களை வென்றெடுக்கின்றார்கள். அப்படியிருந்தும் பெண்கள் திருப்தியடைவதில்லை. பிரச்சினைகளுக்குக் காரணமானவர்களே பிரச்சினை பிரச்சினை என்றால் பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பது? தாய்க் குலங்களே ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்து சிந்திப்பீர்களா??????????

Cry Cry Cry Cry
Reply
#56
Thusi Wrote:பெண்களுக்குச் சுதந்திரம் வேணும் சுதந்திரம் வேணும் என்று எல்லோரும் தொண்டை கிழியக்கத்துகிறார்கள். ஆனால் அவர்களிலை அநேகர் அந்தச் சுதந்திரம் என்பது எது என்பதை வரையறை செய்யத் தவறிவிடுகிறார்கள். அல்லது அவர்கள் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.

முதலில் பெண்களுக்குச் சுதந்திரம் யாரிட்டை இருந்து கிடைக்வேணும்? அநேகமாய் எல்லோரும் ஆண்களிடமிருந்துதான், ஆணாதிக்கத்திடமிருந்துதான் என்று சொல்கிறார்கள். அது எவ்வளது தூரத்திற்கு உண்மையான நிலைப்பாடு. உதாரணமாக வரதட்சனை என்ற விடயத்திலை மாமியார்களின் கொடுமைகள்தான் அதிகளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.



மற்றது இங்கை தாயகத்தைப் பொறுத்தவரையில் அநேகமாய் பெண்விடுதலைப் பற்றிக் கதைப்பவர்கள் அமெரிக்காவிலை பெண்கள் இப்படி இருக்கினம். லண்டனிலை அப்படி இருக்கினம். இங்கை நாங்கள் மட்டும் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஒப்பிதடுதல் சரியா? மேலைத்தேய கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பவற்றோடு எமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பெண்விடுதலை பேசுதல் சரியா?

இதைத்தான் அக்கா நானும் சொன்னனான். ஆனா உங்களை மாதிரி கோர்வையாக சொல்லத் தெரியேல்லை.

பெண் சுதந்திரம் அடைய வேணும் எண்ட கருத்தே பிழை ஏனெண்டா பிறக்கேக்க எல்லாரும் சுதந்திரமாய்தான் பிறக்கிறம்.

சட்டமும் அப்படித்தான் சொல்லுது. ஆனா இந்த சுதந்திரம் நடைமுறை வாழ்க்கையில ஏன் ஆளுக்கு ஆள் வேறுபடுது..
. .
.
Reply
#57
' Wrote:
kuruvikal Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836
கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
.
யாரைக்குருவியண்ணா பாதுகாத்துக் களைத்து கவலைப்படுகிறீர்கள் ? அனுதாபப்பட்டே அலுத்துப்போன குருவிகள் பாவம் நண்பர்களே விட்டுவிடுங்கள். வாழ்ந்து போகட்டும்.
:::: . ( - )::::
Reply
#58
ASWINI2005 Wrote:
' Wrote:
kuruvikal Wrote:http://www.yarl.com/forum/viewtopic.php?p=57836#57836
கொஞ்ச நெஞ்ச அனுதாபம் உள்ள ஆண்களின் அனுதாபத்தையும் இழக்கப் போறியள் எண்டது தான் உண்மை...! சட்டத்தால் உங்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் பாதுகாப்பளிக்க முடியும்... உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

யாரைக்குருவியண்ணா பாதுகாத்துக் களைத்து கவலைப்படுகிறீர்கள் ? அனுதாபப்பட்டே அலுத்துப்போன குருவிகள் பாவம் நண்பர்களே விட்டுவிடுங்கள். வாழ்ந்து போகட்டும்.

பெண்கள் மீது குறிப்பா தமிழ் பெண்கள் மீது இந்தக் களத்துக்கு வரமுதல் நல்ல ஒரு அபிப்பிராயம் இருந்தது...இப்ப அறவே இல்ல...! அதை அடிக்கடி புறூவ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க... நன்றி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#60
Vasampu Wrote:. எங்கே மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வீட்டில் அம்மா மீதா அப்பா மீதா கூடுதல் பிரியம் வைத்திருக்கின்றோம். எல்லா அம்மாக்களும் எம்மை மிரட்டி வைக்க பாவிக்கும் சொற்பதம் அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்றே போட்டு விடுவார் என்று சொல்லிச் சொல்லியே அப்பாவைப் பற்றி ஒரு வில்லன் இமேஜ் உருவாக்கி விடுவார்கள். பிள்ளைகளும் அதை நம்பி அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவர்களை அறியாமலேயே பயம் வரும் அதனால் அம்மா தான் தெய்வம். இப்படி பெண்கள் ஆண்களின் பல பலவீனங்களை வைத்து நிறைய தமது விடயங்களை வென்றெடுக்கின்றார்கள். அப்படியிருந்தும் பெண்கள் திருப்தியடைவதில்லை. பிரச்சினைகளுக்குக் காரணமானவர்களே பிரச்சினை பிரச்சினை என்றால் பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பது? தாய்க் குலங்களே ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்து சிந்திப்பீர்களா??????????



Cry Cry Cry Cry

வசம்பு அண்ணா நீங்க சொல்லுற மாதிரி எங்கட வீட்டில இல்லையே :?

இங்கு அம்மாதான் கண்டிப்பு அப்பா பெண் பிள்ளைகள் போற இடம் எப்படியோ தெரியாது அதால வீட்டில் சுதந்திரமாகவும் செல்லமாகவும் இருக்க வேண்டும் என்பார்.அம்மா கூட நல்லம் தான் ஆனால் கண்டிப்பு கூட. அதுக்காக அவ அப்பவை முன்னிறுத்தி அவரை வில்லானாக்கவில்லை :roll:

ஒரு விடயத்தை செய்ய விடாது தடுத்தால் அது ஏன் செய்யக் கூடாது என்ற விளக்கம் தருவா. இந்தக் கண்டிப்பு பெண்களாகிய எமக்கு மட்டுமில்லை அண்ணாக்களுக்கும் உண்டு :!:

ஸோ எல்லா அம்மாக்களும் அப்பாவை வில்லனாக்குறேல்லை. :wink:

அதை விட அது என்ன பெண் கெட்டுப்போனால் அந்தக் குடும்பமே கெட்டுது எண்றியள்

பெண் பலகாரமா கெட்டுப் போக :?: :?: :?: :?:
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)