அசுவினி... முதலில குருவிகள் சொல்ல வந்ததை விளங்கிக் கொள்ள முனையுங்க... உங்களை உங்கட விருப்பத்துக்கு எதிராக நடக்கச் சொல்லேல்ல...உங்கட விரும்பம் என்பது எது சார்ந்து எழுகிறது என்பதே இப்ப கேள்வி.... பெரும்பாலும் வாழும் சூழல் சார்ந்துதான் எழ முடியும்....அங்கு உங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடிய சுதந்திரம்...அதாவது கட்டுப்பெட்டித்தனம் இல்லாத சூழல் இருக்கென்று எடுத்துக் கொண்டால்...அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துறீங்க.... வளமானதாக... உங்களுக்கு உபயோகமானதாக...நல்ல எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறதாக என்றால்...நல்லது வரவேற்கிறோம்...! அப்படி நீங்கள் கட்டுப்பெட்டித்தனம் இல்லாமல் உருவாகும் போது உங்கள் இன அடையாளங்கள் பற்றி நீங்கள் என்ன அறிந்து கொள்ள விரும்பினீர்கள்...அல்லது அவை உங்களுக்கு அவசியம் இல்லை என்று விட்டுவிட்டீர்களா..???! அப்படி அறிந்து கொள்ள விரும்பி அறிந்து நீங்கள் கடைப்பிடிக்க விரும்பும் உங்கள் இன கலாசார பண்பாட்டு விழுமியங்கள் என்ன...???! ஒரு பெண்ணாக அல்லது ஆணாக எவற்றை நீங்க தெரிவு செய்ய முனையுறீங்க...ஏன்...??!
இப்போ தாலி என்ற விசயத்தை எடுத்துக் கொண்டால்....அதை நீங்கள் ஒரு அடையாளமாக ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்கள் என்ன...ஒருவேளை நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால்...அவை உங்களை எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று எண்ணுறீங்க... அதற்கும் நீங்கள் அனுபவிக்கும் கட்டுப்பெட்டி இல்லாத்தனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன..அது அதை எந்தளவில் பாதிக்கும்...??!
உங்கள் சிந்தனையின்பால் நீங்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னான மேற்குலக கலாசார வழி வந்த பல சோடித் தேர்வு வாழ்வை அங்கீகரிக்கிறீங்களா...அப்படி அங்கீகரித்தால் அதற்குக் காரணம் என்ன... இல்லை என்றால் அதற்குக் காரணம் என்ன...??!
கட்டுப்பெட்டித்தனத்தில் இல்லாத ஆனால் இப்போ நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தினால் நீங்கள் பெறும் நன்மை என்ன...??! அதை நீங்க கட்டுப்பெட்டித்தனத்தில் இருந்தால் பெறவே முடியாது என்று எண்ணுறீங்களா..???!
ஒன்றைக்க கவனியுங்க...நாங்க சொல்வது கருத்து...அதை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை... உங்கள் பார்வைக்கு தாலி கட்டுப்பெட்டித்தனம் என்றால் எங்களுக்கு மோதிரம் மாற்றுதலும் கட்டுப்பெட்டித்தனம் தான்...அது அவசியம் இல்லை இரண்டு உள்ளங்கள் ஒன்றுக்கு ஒன்று உண்மையாக இருக்க...! அங்கு
கலியாணம் சடங்கு என்பனவும் அவசியம் இல்லை...கணவன் மனைவி என்ற நிலையும் அவசியம் இல்லை...இவையாவுமே ஒருவகையில் கட்டுப்பெட்டித் தனம் தான்...! இல்லை எங்கிறீங்களா.....??! ஒரு கூட்டமாக ஆடுகள் மாடுகள் போலவே வாழலாம்...அது கட்டுப்பெட்டி இல்லா மிகவும் சுதந்திர நிலை...! அதையே எதிர்பார்க்கிறீங்களா...இல்லை மேற்குலக அரைகுறைகளை எதிர்பார்க்கிறீங்களா...???!
நீங்க குளிருக்க சேலை உடுத்த முடியாது என்றால் பிறகேன் திருமணச் சடங்குகளுக்கு சேலை உடுக்கிறீங்க....பரத நாட்டியக் கூத்துக்கு உடுக்கிறீங்க...அது அவசியம் இல்லை...குளிருக்கு சிகரட் அடித்து வைனும் பியரும் அடித்தாத்தான் வாழ முடியும் என்றால்...அது சுத்த கட்டுப்பெட்டித்தனம்...அவையில்லாமல் எத்தனையோ ஆயிரம் உயிரினங்கள் குளிருக்க வாழுதுகள்...! நீங்க எங்களைக் கட்டுப்பெட்டிகள் என்றால் நாங்கள் உங்களைக் கட்டுப்பெட்டிகள் என்று காட்ட ஆயிரம் உதாரணங்கள் இருக்கு...இப்ப கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரமுடியும் என்றால் தாருங்க...பிறகு சொல்லுறம் யார் கட்டுப்பெட்டி என்று...! மேற்குலக கட்டுப்பெட்டித்தனமும் நமக்குத் தெரியும் கீழத்தேய நாகரிகமும் நமக்குப் புரியும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>