![]() |
|
மதி கொண்ட விழி திறவீரோ...??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மதி கொண்ட விழி திறவீரோ...??! (/showthread.php?tid=5493) |
மதி கொண்ட விழி திறவீரோ...??! - kuruvikal - 02-01-2005 <img src='http://kuruvikal.yarl.net/archives/walking-fire.jpg' border='0' alt='user posted image'> <b>ஆணுக்குப் பெண் ஒருவனுக்கு ஒருத்தி அற்புதமாய் இயற்கையது ஒரு விதி சமைக்க சதி செய்து விதி மறுக்கின்றார் வரம்பில்லா மதியாளர்...! வேதனைகள் வாழ்வாக வேடிக்கை உலகாக பூமி உருள்கிறது அரை நொடிப் பொழுதினில் அகிலமெங்கும் பல கோல நாடகங்கள் அரங்கேறுது இளசுகள் நமக்கோ தலை சுத்துது....! பாட்டன் பாட்டி காலமது கற்காலம் என்றாலும் நற்காலம் இது கணணிக் காலமாம் கண்டதெல்லாம் காட்சியாக களிப்பது எதுவுமின்றி மனுதர்மம் வாழ்வுக்கு வழிதேடி முகாரி இசைக்குது...! சமத்துவமாம் என்று நுதல் கொண்ட குங்குமம் அடையாளம் இழக்குது இடை கொண்ட சேலை விடைபெற்றுக் கொள்ளுது தடையென்று தாலி தடை தாண்டி ஓடுது....! அன்புக்கு ஒருத்தி ஆயுள் வரை அவளே துணைவி காலம் போய்.... மணிக்கு ஒன்று மாற்றிக் கொள்கின்றார் சந்திக்குச் சந்தி கணணியில் காவல் இருக்கின்றார் விழி மூடா மதி மூடிகள்...! படியும் தாண்டாள் பத்தினி மூடநம்பிக்கை என்றாக படிப்படியாய் பத்தினிகள் பலகாலம் ஏறி இறங்கின்றார் நாளைக்கு ஒரு கரம் பிடிக்க விவாகரத்துக்கு....! தெருவோர நாய் கூட கட்டுவிட்டு ஓடினால் பதறிய சமூகம் கட்டறுந்து போகுது கலிகால முன்னேற்றம் கண்டு புதிய உலகு படைக்கவாம்...! பாவம்... அந்த அப்பு ஆச்சி காலத்து காக்கை தன் பரம்பரை இன்னும் அந்த ஆலமரக்கிளையில் அதே கொள்ளி செருகி கூடு கட்டுது அதற்கு கலியென்று மாற கற்றுக் கொடுக்கவில்லை இயற்கை...! மனிதன் மட்டும் மாறிவிட்டான் பதறாமல் பாவங்கள் பண்ணக் கற்றுவிட்டான் கலி வந்த குடியாகி கவிழாமல் காப்பாற்ற மார்க்கம் ஏதோ....???! கல்விக்கண் உள்ளீரே மதி கொண்ட விழி திறவீரோ உம் கதி தான் அறிவீரோ...?!</b> நன்றி --- http://kuruvikal.yarl.net/ Re: மதி கொண்ட விழி திறவீரோ...??! - shiyam - 02-01-2005 Quote:சமத்துவமாம் என்று குருவியாரோ நானும் உம்மை ஏதோ புது யுகத்தின் நவீன இறக்கை கட்டி பறக்கும் பதிய குருவி என நினைத்து ஏமாந்து விட்டேன் நீரும் பத்தோடு பதினொன்றாக பழைய குருவியா??? hock:
Re: மதி கொண்ட விழி திறவீரோ...??! - kuruvikal - 02-01-2005 shiyam Wrote:Quote:சமத்துவமாம் என்று இறக்கை கட்ட வேண்டியது பொட்டுக்கும் பூவுக்கும் அல்ல வேட்டுக்கும் சால்வைக்கும் அல்ல அறிவுக்கு...! பொட்டையும் பூவையும் வேட்டியையும் சால்வையும் கலற்றி எறிந்து விட்டதென்பது நவீனத்துவத்தின் சின்னமாகாது...! நவீனமாய்க் கற்றுத் தேறுவதே சிறந்தது... தேவையான பாதிப்பில்லா தனித்துவ அடையாளங்களை அறிவீனம் என்று தூக்கி வீசவது அறிவல்ல அறிவீனம்...! :wink:
- shiyam - 02-01-2005 தேவை யான பாதிப்பில்லாதனித்துவ அடையாளங்கள் என்று நீர் சொல்வது தாலியையும் சேர்த்தா?? Re: மதி கொண்ட விழி திறவீரோ...??! - shiyam - 02-01-2005 kuruvikal Wrote:பொட்டும் சேலையும் பாதிப்பில்லாத விடயம்தான் நீர் சந்தண பொட்டுடனும் வேட்டியுடனுமா திரிகிறீர்??shiyam Wrote:Quote:சமத்துவமாம் என்று - kuruvikal - 02-01-2005 shiyam Wrote:தேவை யான பாதிப்பில்லாதனித்துவ அடையாளங்கள் என்று நீர் சொல்வது தாலியையும் சேர்த்தா?? நிச்சயமாக...அரைக்கிலோ தங்கத்திற்கு...புலிப்பல் காவ முடியும் எனும் போதும் கால்கிலோ தங்கத்திற்கு தங்கச் சுட்டிகள் காவ முடியும் எனும் போதும் தாலி ஒன்றும் அவமானச் சின்னமல்ல.. அன்பானவனின் பரிசு...! பாதிப்பும் ஏதும் இல்லை...! அறிவுக்கோ....அறிவீனத்துக்கோ...சுயத்துக்கோ...! :wink:
Re: மதி கொண்ட விழி திறவீரோ...??! - kuruvikal - 02-01-2005 shiyam Wrote:kuruvikal Wrote:பொட்டும் சேலையும் பாதிப்பில்லாத விடயம்தான் நீர் சந்தண பொட்டுடனும் வேட்டியுடனுமா திரிகிறீர்??shiyam Wrote:Quote:சமத்துவமாம் என்று சந்தனம் விபூதி சமயச் சின்னக்கள்...கோவிலுக்குப் போனால் சாள்சும் தான் பூசுறார் நாமும் தான் பூசுறம்...! ஏன் கையுக்கு நகப்பூச்சும் வாய்க்கு இதழ்பூச்சும்...கண்ணுக்கு கண்மையும்...உங்க வீட்டுச் சொத்தா...ஊரான் சொத்துத்தானே...அவற்றை எப்படி உங்கடை ஆக்கினீங்கள்...???! அவையெல்லாம் உங்களுக்கு நாகரீகமாகப்பட உங்க வீட்டுப் பொட்டுமட்டும் அந்நியமாய்ப் படுகுதோ...???! வெள்ளைக்காரி வைச்சுக்காட்டிட்டா ஒட்டித்திரிவியளாக்கும்....நாகரிகம் அவை போதிச்சாத்தான் உங்களுக்கு விளங்குமென்றால்...நாளைக்கே நாலு மொடலைப் பிடிச்சு பொட்டு ஒட்டி அனுப்புறத்துற்கு கொஞ்ச டொலர் போதும்...செய்யுறம்...! முதலில எதை எதைப் பின்னபற்ற வேணும்...எது எங்கட தனித்துவ அடையாளம்...அதைப் பின்பற்றுவதால் என்ன தீமை வரப்போகுது என்று ஆராய்ஞ்சிட்டு கதைக்கிறது நல்லது...உபயோகமானது...! :wink:
- shiyam - 02-01-2005 தமிழனின் தனித்துவ அடையாளங்களில் பொட்டும் தாலியும் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் நக புச்சும் இதழ் கண்மை எல்லாம் ஊரான் சொத்தல்ல எமது பாரம்பரிய பெண்களின் அலங்கார வகையில் அடங்குகிறது இன்று இவை மேலை நாட்டவரால் நவீனத்துவ பட்டிருக்கின்றன அவ்வளவுதான் - shiyam - 02-01-2005 kuruvikal Wrote:நிshiyam Wrote:தேவை யான பாதிப்பில்லாதனித்துவ அடையாளங்கள் என்று நீர் சொல்வது தாலியையும் சேர்த்தா?? புலிப்பல்லும் சுட்டியும் நாம் காவவில்லைபெண்ணிற்கு தாலி என்பது அவமான சின்னமே - வியாசன் - 02-01-2005 சமத்துவமாம் என்று நுதல் கொண்ட குங்குமம் அடையாளம் இழக்குது இடை கொண்ட சேலை விடைபெற்றுக் கொள்ளுது தடையென்று தாலி தடை தாண்டி ஓடுது....! அன்புக்கு ஒருத்தி ஆயுள் வரை அவளே துணைவி காலம் போய்.... மணிக்கு ஒன்று மாற்றிக் கொள்கின்றார் சந்திக்குச் சந்தி கணணியில் காவல் இருக்கின்றார் விழி மூடா மதி மூடிகள்...! படியும் தாண்டாள் பத்தினி மூடநம்பிக்கை என்றாக படிப்படியாய் பத்தினிகள் பலகாலம் ஏறி இறங்கின்றார் நாளைக்கு ஒரு கரம் பிடிக்க விவாகரத்துக்கு....! குருவியாரே பல நற்கவிதைகள் தந்துவிட்டு ஏனோ ஒரு பண்டைய பொண் இடிமைத்தனத்துக்கு வக்காலத்து வாங்கும் கவிதை தருகிறீர். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி பண்டைய தமிழன் ஆணுக்காய் படைத்திட்ட பக்கசார் சட்டங்கள் ஒருவனுக்கு ஒருத்தி எத்தனை ஆண்கள் ஒருத்தியுடன் வாழ்கின்றனர். ஆண் பல பெண்பளுடன் வாழ்வதற்காக தாசியென்று ஒரு இழிகுலத்தை உருவாக்கிளான். எத்தனை பெண்கள் பாலியவிகாத்தில் சிறுவயதில் திருமணம் செய்து சிறுவயதில் கணவனை இழந்து தங்கள் ஆசைகளை அடக்கி இறுதிவரை கன்னியாய் வாழ்ந்திருப்பர். எங்கள் சம்பிரதாயங்கள் அபண்களை அடக்கி ஆள உருவாக்கப்பட்டது. அவைகளில் பழுதானவற்றை களைவோம் வெளியிலிருந்து நல்லவற்றை பெறுவோம் ஒரு நல்ல ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்குவோம். தயவுசெய்து நீங்களும் அடக்கு முறைக்கு வக்காலத்து வாங்காதீர்கள். - kuruvikal - 02-01-2005 shiyam Wrote:தமிழனின் தனித்துவ அடையாளங்களில் பொட்டும் தாலியும் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் நக புச்சும் இதழ் கண்மை எல்லாம் ஊரான் சொத்தல்ல எமது பாரம்பரிய பெண்களின் அலங்கார வகையில் அடங்குகிறது இன்று இவை மேலை நாட்டவரால் நவீனத்துவ பட்டிருக்கின்றன அவ்வளவுதான் ஒமோம் இதுவும் சொல்லுவீங்க இன்னும் சொல்லுவீங...உங்கட பூஞ்சு கஸ்தூரி மஞ்சள் தான்...அதை இப்பவும் பூசுறீங்களோ...கைப்பூச்சு மருதாணிதான் அதை இப்பவும் பூசுறீங்களோ...தலைப்பூச்சு கறிவேப்பிலை எண்ணெய்தான்...அதைத்தான் இப்பவும் பூசிறீங்களோ...நீங்க இப்ப பூசுறதுகளுக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல...! அனைத்தும் அசேதன, சேதனச் சேர்வைகளால் ஆனவை...சூழல் மாசாகிறத்திற்கு (ஓசோன் சிதைவுக்கு) முக்கிய காரணமான CFC யை தாராளமாக வெளியேற்றிய பெருமைக்குரியவை...! தாலி அவமானச் சின்னமல்ல...அடையாளச் சின்னம்...கணவனை நினைவுபடுத்தும் சின்னம்...அவன் தன் கூடவே எப்போதும் இருக்கிறான் என்று நினைவுபடுத்தும் சின்னம்..மேற்கில் கூட ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு...காதலிக்கு நெக்கிளஸ் அணிவிப்பார்கள்...அவர்கள் அதை அவர்களின் அன்புப்பரிசாக அடையாளச் சின்னமாக பாவித்து அணிவார்கள்...மோதிரம் அணிவார்கள்...ஆக நீங்க தான் இப்போ புதிசா தாலி அவமானச் சின்னம் தடை எங்கிறீர்கள்...! இருக்கும் இருக்கும் கணவன் இருக்கத்தக்கதாகவே இன்னொருத்தனோட நெருங்கிப் பழக அது தடையாத்தான் இருக்கும்...அவன் கேட்பான் இல்லா இது யாருடைய என்று....இல்ல இது என்ன என்று... அப்ப மேலும் சில பொய்கள் சொல்லிச் சமாளிக்க வேண்டிய அவஸ்தை போலும்...குறிப்பாக பெண் விடுதலை பேசுவோர் இரண்டை முதலில் விட்டெறியச் சொன்னனர்...ஒன்று பொட்டு... இரண்டாவது தாலி....இரண்டு பெண்களை அடையாளப்படுத்தும் சின்னங்கள்... அவற்றை விட்டெறிந்துவிட்டால் தங்கள் ஏமாற்று வித்தைகளுக்கு செளகரியம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்....! அதனால் நன்மை பெறும் ஆண்களும் அதற்கு கொடிபிடிக்கின்றனர்...! ஒரு பொட்டும் ஒரு தாலியும்...உங்களுக்கு என்ன செய்து போடும்.. அவையென்ன அவ்வளவு பாரமா...இல்ல அணிவதற்கு நேரமா எடுக்கும்...இல்ல அணிவதால் ஏதாவது உடல் நலப்பாதிப்பா அல்லது உள நலப்பாதிப்பா வருகிறது... வந்திருந்தால் எங்கள் பாட்டா பாட்டி அப்பா அம்மா எல்லாம் லூசுகளாக எல்லோ இருந்திருப்பர்....! பொலீஸ்காரன் ஏன் சின்னம் அணிகிறான்...இராணுவ வீரன் ஏன் சின்னம் அணிகிறான்...புலிவீரன் ஏன் சின்னம் அணிகிறான்....கொடி வைத்திருக்கிறான்...அவமானத்துக்கல்ல...அடையாளத்துக்கு....அந்த வகையினதே இவையும்...ஆண்கள் கூட இப்போ திருமணத்தின் பின் கைமாறி மோதிரம் அணிவார்கள்...அது உலகெங்கும் தற்போதும் கூட பெண்களுக்கு ஒரு ஆண் பற்றிய அடையாளச் சின்னமாக விளங்குகிறது...எங்கள் ஆண்கள் மேலதிகமாக ஒன்றைக் கழுத்தில் மாட்டினால் கூடத் தவறில்லை....பாவம் மனைவி எனது அடையாளத்தைச் சுமக்கிறாளே என்று நீங்க கருதினால்...உண்மையான அன்புக்குரியவானாய் இருந்தால் அவள் அடையாளச் சின்னமாய் அவள் விரும்புவதை நீங்களும் அணிவீர்களே அன்றி...விட்டெறி என்று கோசம் போட மாட்டீர்கள்....! உங்கள் கோசங்களுக்குப் பின்னால் ஏதோ ரகசியக் காரணக்கள் இருக்கு...மற்றும் படி இவை வெற்றுக் கோஷங்கள்...! அண்மையில் ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை சந்தித்து உரையாடிய போது தனது கணவன் இறந்து 20 வருடங்கள் ஆகியும் அவர் தந்த நெக்கிளசும் மோதிரமும் தன்னை எப்போதும் அவரின் நினைவோடையே இருக்க வைத்துவிட்டதாகக் கூறி அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டினார்...! நெக்கிளசையும் கொண்டு வந்து காட்டினார்...அவர் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த விதமே அவருக்கு அவர் கணவன் மீதிருந்த அன்பை அக்கறையை பாசத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது...! இன்று என்ன நடக்கிறது... காதலர்கள்.. பாய் பிரண்ட் என்று திருமணத்தின் முன்னும் பின்னும் சுத்தும் கட்டாக்காலி நாய்களுக்கு (நாய்க்குக் கூட பட்டி கட்டிய சமூகம்) வக்காளத்து வாங்கிவிட்டு பெண் கற்பழிப்பு... பாலியல் துன்புறுத்தல்...கணவன் மோசக்காரன்..ஆண் ஆதிக்கம்...ஆண் வெறியன் என்று பட்டம் சூட்டி தங்கள் வக்கிரங்கள் தீர்த்துக்கொள்ள வழிதேடுகின்றனர்...! தாலி ஒரு சின்னமாய் மட்டுமன்றி ஒரு பெண்ணின் அலைபாயும் மனதை அவள் கணவனுக்கு நிகராய் இருந்து சீரிய பாதையில் ஒழுக்கம் நோக்கிய உயர்வாழ்வியல் கோலத்துக்கு வழிநடத்தும் வழிகாட்டியும் கூட....எங்களைக் கேட்டால் சொல்லுவம் பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கும் ஒன்றை கழுத்தில் மாட்டுங்கள்....அதற்காக தாலி ஒருபோதும் அவமானச் சின்னமாக இருந்ததில்லை...இருக்கப் போவதும் இல்லை.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 02-01-2005 பெண் அடக்குமுறையாளரே உமக்கு தெரியுமா திருமணம் செய்த ஆண்கள் காலுக்கு மெட்டி அணியவேண்டுமாம் அதை முதலில் பழக்கத்துக்கு கொண்டுவாரும். பெண்களுக்கு அவையெல்லாம் உங்களால் அடக்கி ஆளப்படுவதற்கு (தாலி பொட்டு பூ) எல்லாம் தேவை மெட்டி அணிவதற்கு உங்களுக்கு சிரமம் அது ஆண்களுக்கு அடக்குமுறைச்சின்னம்அதனால்விட்டுவிட்டீர்கள். இந்த குளிர்நாட்டில் திருமணத்துக்கு பெண்கள் புடவையுடன் வருகின்றனர். எத்தனை ஆண்கள் வேட்டியுடன் வருகின்றனர். நீங்களெல்லாம் பழமைவாதம் பேசுகிற பெண் அடக்குமுறையாளர்கள். நீரும் ஊர்க்குருவிதான் உன காட்டிவிட்டீர் உயரப்பறந்தாளும்.................... - வியாசன் - 02-01-2005 தம்பி குருவியாரே நீர் தடம் புரள்கிறீர். கலாச்சாரம் உருவாக்கப்படுவது ஒவ்வொரு நாட்டு காலநிலையுடனும் சம்மந்தப்பட்டது. இந்த நாட்டு குளிரில் புடவையுடன் வெளியே செல்லமுடியுமா? ஒரு ஆணும் பெண்ணும் தப்பு செய்யுமபோது பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள். ஒரு திருமணம் செய்த ஆண் ஏன் வேறு ஒருவெண்ணிடம் செல்ல வேண்டும்.? நீங்கள் சொல்லலாம் அந்த பெண்ணிடம் ஆண் திருப்தி அடையவில்லையென்று அப்படியானால் நீங்கள் பெண் திருப்திஅரடந்தாளா ? என்று யோசனை செய்கிறீர்களா? தவறுகள் ஆண்களிடம்தான் இருக்கின்றது. கருத்துக்கள் உங்கள் உள்மனதிலிருந்து வெளிவரவேண்டும் கவிஞன் உண்மையானவனாக இருக்கவேண்டும். கண்ணதாசன் போல் தவறுகளை ஒப்புக் கொள்ள தெரிய வேண்டும் உங்கள் உள் மனதை கேளுங்கள் - kuruvikal - 02-01-2005 உண்மையில் எங்களுக்குக்கு கண்ணதாசனை தனிப்பட்ட வாழ்க்கையை வைத்துப் பிடிக்காது....அந்த வகையில் அது தட்ட வேண்டிய கேஸ்...! இன்று பெண்களில் சேலை அணிபவர்கள் யாரென்று பார்த்தால் எங்கள் அம்மா காலத்து ஆக்கள் தான்....மற்றவர்களுக்கு சேலையே உடுத்தத் தெரியாதாம்...அது பெருமையாம்...!!! ஏன் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்த உலகமெல்லாம் சுற்றும் போதும் சேலைதானே உடுப்பாராமே....அவருக்கு குளிரவில்லையோ...??? ஏன் குளிருக்க சேலை உடுக்க முடியாது தேமல் வெயார் அணிந்து அழகாக உடுக்கலாம்...ஏன் பப்புக்குப் போகும் போது கால்குறையாப் போக முடியுது அப்ப குளிராதது சேலைகட்டத்தான் குளிருமோ...???! அதுபோக... ஆண்கள் எல்லோரும் சுத்தவாளிகள்...கலாச்சாரப் பிரியர்கள் என்று சொன்னமா அவைக்கும் தான் அங்க கவிதையில் எழுதி இருக்கு.... தாசிக்குடி என்பது இன்று வழக்கத்தில் இல்லை...அது சட்டவிரோதம்...சட்டத்தை மீறினால் மண்டையில் போடு...! அதற்கு மேல் அதைப்பற்றிப் பேசிச்சமாளிக்க நாம் உங்களைப் போல விரும்பவில்லை...அப்படிச் செய்யவில்லையோ...அதைத் தடுக்க முடியாது...! தாலி பொட்டு சேலை இவைகளை நீங்கள் ஆண் வழங்கும் அவமானச் சின்னங்கள் பொருட்கள் என்று ஒதுக்கினால்... பெண்களே உங்கள் உயிரையும் விடுங்கள்...அங்கும் 50% ஆண் இருக்கிறான்...அவனின் பாரம்பரியம் இருக்கிறது...அதற்கு விடுதலை கொடுக்கிறீர்களா முதலில்....! மிகுதி பிறகு பேசுவம்...! :wink:
- வியாசன் - 02-01-2005 நீர் நான் சொன்னவற்றை விட்டு வருகிறீர். இந்திரா காந்தி சேலையுடன் சுற்றியது உண்மை. சரி நீர் வேட்டியுடன் முதலில் நடமாடும் அதற்கு பிறகு மற்றவையை பேசுவோம். வஞ்சனை செய்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி பெண்களை திருத்துவதற்கு முதலில் ஆண்களைத்திருத்துங்கள். தம்பி ஆடைகள் கலாச்சாரங்கள் ஒவ்வொரு நாட்டின் காலநிலைக்கு தக்கவாறு உருவாக்கப்பட்டது. கருத்துக்காக எழுதக்கூடாது. உணர்ந்து எழுதவேண்டும். இங்கு வாழும் தமீழ் பெண்கள் எந்த வித்தில் குறைந்தவர்கள் ஆண்களைவிட கூடுதலான பொறுப்புக்களை சுமக்கின்றார்கள். - kuruvikal - 02-01-2005 viyasan Wrote:நீர் நான் சொன்னவற்றை விட்டு வருகிறீர். இந்திரா காந்தி சேலையுடன் சுற்றியது உண்மை. இப்ப பாரதி இருந்திருந்தா இப்படித்தான் படித்திருப்பான்.. வஞ்சி நீவிர்... வஞ்சனை செய்வீரடி...வாய்ச்சொல்லில் வீரிகளடி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வியாசன் - 02-01-2005 குருவியாரே நான் வசிக்கும் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் சுவிஸில் பல காலமாக வசித்த ஒருவர் ஈழத்திலிருந்து ஒரு பெண்ணை வரவழைத்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு தன்னுடைய மனைவி வெளியே செல்வது பிடிக்காது. அதனால் அவர் அந்த பெண்மணியை ஜேர்மன் மொழி படிக்கக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணை அவர் வீடடில்வைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். பயந்த சுபாபம் கொண்ட அந்த பெண் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட சித்தசுவாதீனமாக ஆரம்பித்து விட்டார். சம்மந்தப்பட்ட நபர் அந்த நிலையிலும் வீட்டை பூட்டிவிட்டு தொலைக்காட்சியினதும் வானொலியினதும் சத்தத்தை அதிகரித்துவிட்டு அடித்து துன்புறுத்துவார். பக்கத்துவீடுகளில் வெளிநாட்டுக்காரர் இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. யாராவது இதை பொறுக்கமுடியாமல் கேட்டால் வீட்டை மாற்றி விடுவார். இப்படியாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு தடவை அடிக்கும்போது அந்தப் பெண்ணினுடைய மண்டை உடைந்துவிட்டது. அப்போதும் அவர் அந்தப்பெண்ணை அறையில் பூட்டிவிட்டார். இரத்தம் பெருக்கெடுத்து ஆடைகள் எல்லாம் நனைந்துவிட்டது. . அவது கவனிக்கவில்லை. தாகத்தில் அந்தப் பெண் யன்னலை திறந்து வெளியே இருந்தவர்களை கூப்பிட்டு சைகையால் தண்ணீர் கேட்க நிலைய உணர்ந்த துருக்கி நாட்டுக்காரர் வந்து சம்மந்மதப்பட்ட நபரை பயமுறுத்தி மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்தப்பெண் சட்டத்தின் உதவியுடன் பிரிந்து வாழ்கிறார். நீங்கள் சொல்வீர்களா கல்லானலும் கணவன் புல்லானாலும் புருசன் சேர்ந்து வாழ வேண்டுமென்று. சொன்னாலும் சொல்வீர்கள்.- - kuruvikal - 02-01-2005 இப்படியெல்லாம் கொடுமை பண்ணுவார்களா...அவன் மனிதன் தானே...அவனை அடித்தால் எப்படி வலிக்கும் அதைப் போல பலமடங்கு வலிக்கும் அவனை நம்பி அவன் அன்புக்காக ஏங்கி வந்தவளுக்கு என்பது தெரியாதா...???! அப்படித் தெரியவில்லை ஆனால் அவன் சாதாரண மனிதன் கிடையாது...ஆஸ்பத்திரிக் கேஸ்...! அதைக் கட்டிக்கிட்டு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிஷன் என்று சொல்ல நாம் என்ன முட்டாள்களா...நாம் முதலே சொல்லுவிட்டோம் பெண்களுக்கு உடல் உளப்பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களை தூக்கி எறி என்று கோருவது பற்றித்தான் இப்போ கதைக்கின்றோம்...என்று...! இப்படியான கணவன்களை எறிவதில்லை உயிரோடு புதைக்க வேண்டும்..அப்பதான் புத்தி வரும்...! :roll: hock:
- shiyam - 02-01-2005 தாலி அவமானச் சின்னமல்ல...அடையாளச் சின்னம்...கணவனை நினைவுபடுத்தும் சின்னம்...அவன் தன் கூடவே எப்போதும் இருக்கிறான் என்று நினைவுபடுத்தும் சின்னம்..மேற்கில் கூட ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு...காதலிக்கு நெக்கிளஸ் அணிவிப்பார்கள்...அவர்கள் அதை அவர்களின் அன்புப்பரிசாக அடையாளச் சின்னமாக பாவித்து அணிவார்கள்...மோதிரம் அணிவார்கள்...ஆக நீங்க தான் இப்போ புதிசா தாலி அவமானச் சின்னம் தடை எங்கிறீர்கள்...! இருக்கும் இருக்கும் கணவன் இருக்கத்தக்கதாகவே இன்னொருத்தனோட நெருங்கிப் பழக அது தடையாத்தான் இருக்கும்...அவன் கேட்பான் இல்லா இது யாருடைய என்று....இல்ல இது என்ன என்று... அப்ப மேலும் சில பொய்கள் சொல்லிச் சமாளிக்க வேண்டிய அவஸ்தை போலும்...குறிப்பாக பெண் விடுதலை பேசுவோர் இரண்டை முதலில் விட்டெறியச் சொன்னனர்...ஒன்று பொட்டு... இரண்டாவது தாலி....இரண்டு பெண்களை அடையாளப்படுத்தும் சின்னங்கள்... அவற்றை விட்டெறிந்துவிட்டால் தங்கள் ஏமாற்று வித்தைகளுக்கு செளகரியம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்....! அதனால் நன்மை பெறும் ஆண்களும் அதற்கு கொடிபிடிக்கின்றனர்...! ஒரு பொட்டும் ஒரு தாலியும்...உங்களுக்கு என்ன செய்து போடும்.. அவையென்ன அவ்வளவு பாரமா...இல்ல அணிவதற்கு நேரமா எடுக்கும்...இல்ல அணிவதால் ஏதாவது உடல் நலப்பாதிப்பா அல்லது உள நலப்பாதிப்பா வருகிறது... வந்திருந்தால் எங்கள் பாட்டா பாட்டி அப்பா அம்மா எல்லாம் லூசுகளாக எல்லோ இருந்திருப்பர்....!(kuruvikal) மேற்கு நாடுகளில் ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு அன்பு பரிசாகத்தர் நெக்லஸ்மேற்கு நாடுகளில் ஆண்கள் அன்பு பரிசாகத்தான் நீர் சொன்ன நெக்லஸ்ம் மணிகககூடும் மோதிரமும் கொடுக்கிறார்கள் அதேபோல் பெண்களும் நினைவு பரிசு வழங்குவார்கள் ஆனால் திருமணத்தன்று யாரும் தாலியையோ மெட்டியையோ பொட்டையோ திணிப்பதுபோல் மேலை நாட்டு திருமணங்களில் எதையும் யபரும் திணிப்பதில்லை.அது சரி ஏன் மனைவிக்கு மட்டும்தான் அடையாள சின்னமா?? நீங்களும் பாரம்பரிய அடையாள சின்னமாக திருமணத்தில் காலில மெட்டியும் கெண்டையும் போட வேண்டியது தானே??அடுத்தது அடுத்தவனுடன் நெருங்கிபழக தாலி தடையா என்று கேட்டுள்ளீர்(கவனிக்கவும்)தாலி ஒண்டும் எச்சரிக்கை மணி(அலாம்) அல்ல உரியவர் திறப்பு போடாமல் மற்றவர்கள் தொட்டதும் கீயோ கீயோ...எண்டுகத்த ஒரு பெண் தன் இன்னெருவனுடன் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நீர் நித்திரையிலிருக்கும் போதே உம்மை தாண்டி போய்வருவாள் அதற்கு தாலி ஓண்டும் தடை இல்லை.(அவள் ஏன் கணவன் இருக்கும்போ ஏன் இன்னெருவனை தேடுகிறாள்என்பது இது வேறாக ஆராயப்பட வேண்டிய விடயம் பாலியல் சம்பத்தப்பட்டது)ஆயிரம்போர் முன்பு தாலிகட்டிய அனைவரும் அப்படியே அதே கணவனுடன் வாழ்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்;??போர் வீரருக்கு ஆணோ பெண்ணோ அவர்கள் செய்த வீர செயலிற்காக அடையாளமாய் பதக்கம் குத்துவார்கள் ஒரு பெண் உம்மை திருமணம் செய்தது வீரச்செயலா??தாலியும் பொட்டும் அடையாளம் குத்த???போர் வீரரை சாதாரண மக்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டவே சீருடை ஒரு பெண்ணை பார்த்தாலே தெரியுமே அது பெண் எனறு பிறகேன் சீலையை சீருடை என்கிறீர்??நிறைவாக ஊரில் பாட்டா பாடடி செய்த பழக்க வழக்கங்கள் எல்லாம் சரியானவை என்கிறீரா??[/quote] - வியாசன் - 02-01-2005 நான் ஊருக்கு போயிருந்தபோது உறவினர்கள் கூறினர் வெளிநாடுகளிலிருந்து இருபாலாரும் விவாகரத்து பெற்றுவந்து வேறுதிருமணம் செய்கின்றார்களாம். அவர்கள் விவாகரத்துக்கான காரணம் சொல்கிறார்களாம் ஆணாயிருந்தால் தன்னுடைய மனைவிக்கு பைத்தியம் அதனால் விவாகரத்து பெற்றதாக பெண்ணாயிருந்தால் தன்னுடைய முதல் கணவன் ஏற்கனவே விவாகம் செய்து அவருக்கு வேறு மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றனர் என்பது அவர்கள் சொல்லும் காரணமாம். எமது நாட்டில் அடங்கி வாழ்ந்த இருபகுதியும் இங்கு வந்துவுடன் என்ன செய்வது என்பது தெரியாமல் நடந் கொள்கிறார்கள். இது நமது இனத்துக்கு ஆரோக்கியமானதல்ல. இருபகுதியினரும் உணர்ந்து தேவையானவற்றை கடைப்பிடித்து தேவையற்றதை கiவிடுவது நல்லது |