02-01-2005, 03:32 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/walking-fire.jpg' border='0' alt='user posted image'>
<b>ஆணுக்குப் பெண்
ஒருவனுக்கு ஒருத்தி
அற்புதமாய் இயற்கையது
ஒரு விதி சமைக்க
சதி செய்து விதி மறுக்கின்றார்
வரம்பில்லா மதியாளர்...!
வேதனைகள் வாழ்வாக
வேடிக்கை உலகாக
பூமி உருள்கிறது
அரை நொடிப் பொழுதினில்
அகிலமெங்கும் பல கோல நாடகங்கள்
அரங்கேறுது
இளசுகள் நமக்கோ
தலை சுத்துது....!
பாட்டன் பாட்டி காலமது
கற்காலம் என்றாலும்
நற்காலம்
இது கணணிக் காலமாம்
கண்டதெல்லாம் காட்சியாக
களிப்பது எதுவுமின்றி
மனுதர்மம் வாழ்வுக்கு வழிதேடி
முகாரி இசைக்குது...!
சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது....!
அன்புக்கு ஒருத்தி
ஆயுள் வரை அவளே துணைவி
காலம் போய்....
மணிக்கு ஒன்று மாற்றிக் கொள்கின்றார்
சந்திக்குச் சந்தி கணணியில்
காவல் இருக்கின்றார்
விழி மூடா மதி மூடிகள்...!
படியும் தாண்டாள் பத்தினி
மூடநம்பிக்கை என்றாக
படிப்படியாய் பத்தினிகள்
பலகாலம் ஏறி இறங்கின்றார்
நாளைக்கு ஒரு கரம் பிடிக்க
விவாகரத்துக்கு....!
தெருவோர நாய் கூட
கட்டுவிட்டு ஓடினால்
பதறிய சமூகம்
கட்டறுந்து போகுது
கலிகால முன்னேற்றம் கண்டு
புதிய உலகு படைக்கவாம்...!
பாவம்...
அந்த அப்பு ஆச்சி காலத்து
காக்கை தன் பரம்பரை
இன்னும் அந்த ஆலமரக்கிளையில்
அதே கொள்ளி செருகி
கூடு கட்டுது
அதற்கு கலியென்று மாற
கற்றுக் கொடுக்கவில்லை இயற்கை...!
மனிதன் மட்டும் மாறிவிட்டான்
பதறாமல் பாவங்கள்
பண்ணக் கற்றுவிட்டான்
கலி வந்த குடியாகி
கவிழாமல் காப்பாற்ற
மார்க்கம் ஏதோ....???!
கல்விக்கண் உள்ளீரே
மதி கொண்ட விழி திறவீரோ
உம் கதி தான் அறிவீரோ...?!</b>
நன்றி --- http://kuruvikal.yarl.net/
<b>ஆணுக்குப் பெண்
ஒருவனுக்கு ஒருத்தி
அற்புதமாய் இயற்கையது
ஒரு விதி சமைக்க
சதி செய்து விதி மறுக்கின்றார்
வரம்பில்லா மதியாளர்...!
வேதனைகள் வாழ்வாக
வேடிக்கை உலகாக
பூமி உருள்கிறது
அரை நொடிப் பொழுதினில்
அகிலமெங்கும் பல கோல நாடகங்கள்
அரங்கேறுது
இளசுகள் நமக்கோ
தலை சுத்துது....!
பாட்டன் பாட்டி காலமது
கற்காலம் என்றாலும்
நற்காலம்
இது கணணிக் காலமாம்
கண்டதெல்லாம் காட்சியாக
களிப்பது எதுவுமின்றி
மனுதர்மம் வாழ்வுக்கு வழிதேடி
முகாரி இசைக்குது...!
சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது....!
அன்புக்கு ஒருத்தி
ஆயுள் வரை அவளே துணைவி
காலம் போய்....
மணிக்கு ஒன்று மாற்றிக் கொள்கின்றார்
சந்திக்குச் சந்தி கணணியில்
காவல் இருக்கின்றார்
விழி மூடா மதி மூடிகள்...!
படியும் தாண்டாள் பத்தினி
மூடநம்பிக்கை என்றாக
படிப்படியாய் பத்தினிகள்
பலகாலம் ஏறி இறங்கின்றார்
நாளைக்கு ஒரு கரம் பிடிக்க
விவாகரத்துக்கு....!
தெருவோர நாய் கூட
கட்டுவிட்டு ஓடினால்
பதறிய சமூகம்
கட்டறுந்து போகுது
கலிகால முன்னேற்றம் கண்டு
புதிய உலகு படைக்கவாம்...!
பாவம்...
அந்த அப்பு ஆச்சி காலத்து
காக்கை தன் பரம்பரை
இன்னும் அந்த ஆலமரக்கிளையில்
அதே கொள்ளி செருகி
கூடு கட்டுது
அதற்கு கலியென்று மாற
கற்றுக் கொடுக்கவில்லை இயற்கை...!
மனிதன் மட்டும் மாறிவிட்டான்
பதறாமல் பாவங்கள்
பண்ணக் கற்றுவிட்டான்
கலி வந்த குடியாகி
கவிழாமல் காப்பாற்ற
மார்க்கம் ஏதோ....???!
கல்விக்கண் உள்ளீரே
மதி கொண்ட விழி திறவீரோ
உம் கதி தான் அறிவீரோ...?!</b>
நன்றி --- http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->