Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
மதுரன் நீங்கள் சொல்வது சரி. ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்...இது ஒரு சமூகத்துக்கான போராட்டம். ஆனால் மாயா போன்றவர்கள் இதை தங்களின் குழப்பமான கருத்துகளால் ஆண்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றிவிடுவார்களோ என்பது தான். அப்படி ஒரு நிலைமை எதிர்பார்ப்பதற்கு எதிர்மறையான விளைவுகளையே உண்டு பண்ணும். மேற்கத்தேய நிலைமைகளுடன் எங்களை ஒப்பிட முடியாது. நாங்கள் ஒட்டுமொத்தமாக இன்னமும் ஏராளமான விடயங்களுக்காக போராட வேண்டிய நிலைமையில் உள்ளவர்கள்.
வேண்டிக்கொள்வதெல்லாம்.... பெண்ணியம் பேசும் பெண்கள் எல்லாம் வெறுமனே பேச்சில் நின்று விடாமல் செயலில் காட்ட முன்வரவேண்டும். நான் பார்த்த அளவில்.. பல பெண்களுக்கு பெண்ணியம் பேசுதல் பொழுதுபோக்கு. கல்வி கற்கும் காலத்தில் ஏராளமாக பேசுவார்கள். திருமணம் செய்து Settle ஆனவுடன் ஆட்களை காணவே முடியாது. பின்னர் புதிதாக பெண்ணியம் பேச வருபவர்கள் அவளை கணவன் அடிமைப்படுத்துவதாக றீல் விடுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு நீண்டகாலம் இந்த போராட்டத்தை தொடர்ந்து சென்று சமூகம் எனும் கூடத்தில் நிகழ்த்தப்படும் மாற்றங்களை அவதானிக்க கூடிய சரியான வழிகாட்டல் தலைமை பெண்ணியவாதிகளிடம் இல்லை. தங்கள் வாழ்வு சரியாக அமைந்துவிட்டால் கப்சிப் ஆகிவிடுகிறார்கள். இதனால் ஆர்வமுள்ள மற்ற பெண்களும் இவர்கள் காட்டிய பாதையில் ஆண்களை எதிரிகளாக நோக்கும் நிலை. நாமாவது ஏதேனும் இராமரின் அணிலாய் ஏதேனும் செய்யலாம் என்றால் நித்திலா போன்றவர்கள் நீங்கள் யார் எங்களுக்கு விடுதலை பெற்றுத்தர? என்கிறார்கள். இதில் நித்திலாவின் கோபம் நியாயமானது. ஆனால் நீங்கள் தனித்து நின்று இந்த சமூகப்பிணிக்கு மருந்து தேடக்கூடிய மனோபலம் நீண்ட காலம் இதைத்தொடரும் பக்குவம் உங்களுக்கு உண்டாக வேண்டும். என் போன்றவர்கள் உங்களுக்கு என்றும் உறுதுவையாய் இருப்போம். வழிகாட்டிகளாய் அல்ல. வழி தொடர்பவர்களாய். ஏனெனில் உங்களுக்கு வழி காட்ட நாங்கள் யார்??????????
.
.!!
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
பெண்ணியம் பேசுதற்கு
பெற்றோல் செலவு கேட்கிறார்கள்.
பார்த்தாயா பாரதி!
உன்
பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை.
உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள் கவிதைகளிலேயே
வலம் வருகின்றார்கள்
பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை கைகோர்த்தபடி
இங்கோ
இராவணர்கள் சிறையெடுக்கப்படுகிறார்கள்
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.!!
.
.!!
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா
உங்களை மாதிரி கவிதையாக பதில் சொல்லத்தெரியாட்டிலும் என்ர கருத்து பெண்களை காலம் காலமாக நீங்கள் அடக்கித்தான் வைத்திருக்கிறீங்க என்பதை நீங்கள்தான் அவைக்கு சம உரிமை கொடுக்கிறதா வேண்டாமா என்று கருத்து சொல்லும் போது வெளிக்காடுகிறீர்கள்.
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா?
. .
.
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
இல்லை நித்திலா. நீங்கள் பிரச்சனையின் ஆழத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். என்பார்வையில் ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் எனும் சொற் பிரயோகங்களே வேறு வேறானவை. இதில் ஆணாதிக்கம் எனும் போது அதற்கு ஆண்கள் தான் காரணகர்த்தாக்களாக முடியும். ஆனால் பெண்ணடிமைத்தனம் ஏனம் போது அது இரண்டு வகையாகப் படுகிறது. 1) ஆண்கள் பெண்களை அடிமைகளாக எண்ணும் எண்ணக்கரு. 2) பெண்களே தங்களை அடிமைகள் போல உருவகம் செய்து கொள்வது.
இதில் இரண்டாவது வகையானதே இப்போது பெரும் பிரச்சனையாக இருப்பது. இதற்கும் காரணம் பெண்களல்ல. சமுதாயம் தான். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என காலத்திற்கு ஒவ்வாத பலவற்றையும் பெண்கள் தலையில் திணித்து வைத்துள்ளது தான். எனவே தான் சொல்கிறேன் ஆண்களை எதிரிகளாக வசை பாடாமல் பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து தீர்வு தேட புறப்பட வேண்டும். இதில் வீணாண கோசங்கள் அவசியமில்லை. காலம் காலமாக கலை இலக்கியம் போன்றவற்றில் பெண்கள் பாடுபொருளாகத் தானே இருந்திருக்கின்றீர்கள். நீங்கள் பாடுபவர்களாக வெளிவாருங்கள். சமுதாயஅந்தஸ்து எனும் கதிரை கைப்பற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பாருங்கள் இந்த உலகம் எப்படியுள்ளது என்பதை.
ஆனால்... நான் சொல்லும் சமுதாய அந்தஸ்து எனும் கதிரையை கைப்பற்றிக் கொண்ட பல பெண்களும் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்பதே என் எண்ணம்.
.
.!!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சும்மா சமாளிப்புக் கருத்தெழுதாமல் பெண்கள் எங்கெங்கே தமது உரிமைகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள்...அதற்கும் ஆண்களுக்கும் என்ன தொடர்பு... இவற்றை கொஞ்சம் விபரமாகச் சொல்கிறீர்களா...???!
எங்களுக்கென்னவோ பெண்களுக்கு என்று ஒரு சுதந்திரம் தனிய இந்த உலகில் இல்லை...மனிதனுக்கு என்று ஒரு சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவாக உண்டு...அதைப் பாவிக்கும் அனுபவிக்கும் அளவுகள் தான் வேறுபடுகின்றன...! உண்மையில் ஊதிய விடயத்தில் கூட பெண்கள் குறித்த இலக்கை ஆண்களுக்கு ஒத்த வகையில் அடைந்தால் மட்டுமே சம சம்பளம் கோர முடியும்...! ஆனால் உண்மையில் அப்படியாகவா நடக்கிறது...! சும்மா அந்தரங்கச் செயலாளர் என்று அழகான பெண்களை நியமிக்கின்றார்கள்...ஆண்களுக்கு அந்தத் துறையில் வேலை வாய்ப்பே இல்லை...அதேபோல் விமானப் பணிப்பெண்களாக ஆண்களை விடப் பெண்கள் அதிகம் கடமை புரிகின்றனர்...தாதிகளாக...ஆசிரியர்களாக...இப்படிப் பலதைக் குறிப்பிடலாம்...இவையாவும் வியர்வை சிந்தா சொகுசு வேலைகள்...!ஆனால் பொறியியலாளர்களாக...கடின தொழிலாளர்களாக கட்டிடப்பணியாளர்களாக வீதி பராமரிப்பு... சுரங்கப் பணியாளர்களாக ஆண்கள்தான் அதிகம் மாடாய் உழைக்கின்றனர்...இங்கு கூட பெண்கள் வேலைக்கு அமர்ந்தால் இலகு வேலைகள் தான் அளிக்கப்படுகின்றன...ஏன் இந்தப் பாகுபாடு...! சும்மா பெண் சமத்துவம் பெறத் தயாராகி விட்டாள் என்று கூவுவதற்கு முதல் உங்களை உள உடல் ரீதியாக தயாராக்கிக் கொள்ளுங்கள்...ஆண்களுக்கு நிகராக பணிபுரிய...! அதுவரைக்கும் கம் என்று இருக்கிறீங்களா காணும்...!
அதுமட்டுமன்றி பெண்கள் அந்த லீவு இந்த லீவு என்று பல வசதிகளை வேலைத்தளங்களில் பெற்றுக்கொள்கின்றனர்...ஆண்களுக்கு அவற்றில் பாதி கூடக் கிடையாது... தொழிற்சாலைகளில் கடின வேலைகளில் இன்றும் ஆண்கள் தான் செயற்படுத்தப்படுகின்ற பரிதாப நிலை காணப்படுகிறது...குடிப்பதில் புகைப்பிடிப்பதில் விவாகரத்தில் எல்லாம் பெண்கள் தேவைக்கு அதிகமாகவே சுதந்திரம் பெற்றுவிட்டனர்...ஆனால் பெண் என்பதற்காக காலா காலமாக அனுபவிக்கும் சலுகைகளுக்கு ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பதும் பெண்கள் அதை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் வருத்தமளிப்பத்துடன் அதற்காக பெண்கள் வருந்துபவர்களாகவும் இல்லை...! அவை ஆண்களை அவர்களின் உரிமைகளை கணிசமான அளவு பாதிப்பதாகவே தெரிகிறது...!
உண்மையில் இப்போ சம உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் ஆண்கள்தான் தரந்தாழ்த்தப்பட்டு இருக்கிறார்கள்...என்பதை எல்லோரும் நிஜ உலக உதாரணங்களை வைத்துக் கவனிக்கத் தவறாதீர்கள்...!  hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:சும்மா சமாளிப்புக் கருத்தெழுதாமல் பெண்கள் எங்கெங்கே தமது உரிமைகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள்...அதற்கும் ஆண்களுக்கும் என்ன தொடர்பு... இவற்றை கொஞ்சம் விபரமாகச் சொல்கிறீர்களா...???!

நானும் ஒத்து கொள்கிறேன் ...........இதை பற்றி நானும் எழுத இருந்தன்..........
இலங்கையில் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே சம்பளம்....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004

வணக்கம்,
குருவிகளே உங்கள் ஆதங்கம் எமக்கு புரிகின்றது. ஆனால் சமூக சட்டங்களிற்குள் உட்பட்டு தானே பெண்கள் தங்கள் சேவைகளை புரிகின்றார்கள். ஒரு நாட்டின் குடிமகக்களிற்கு அவர்களிற்கு பிடிக்கின்ற வேலைதனை தேர்தெடுக்கும் உரிமை உண்டு. அந்த வேலைதனை ஒரு நபருக்கு வழங்குவதா இல்லையா என்னும் முடிவினை எடுக்கும் அதிகாரமும் வேலை கொடுக்கும் அதிகாரிக்கு உண்டு. அனால் அந்த நபர் அவர் புரிய வேண்டிய வேலைக்கு ஏற்ற தகுதிகள் இருந்தும். அவர் வேறு காரணங்களிற்காக புறக்கணிக்க படுகின்வாரேயானால். வேலை கொடுப்பவர் வேலை விண்ணப்பித்த நபருக்கு சரியான காரணங்களை காண்பிக்க வேண்டும். அன்னால் சம்பள்ம் என்பது செய்யும் வேலைக்கான உதியம். எனவே இரு பாலாரும் ஒரு வேலையினை புரிகின்ற பொழுது, அங்கே ஊதிய அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதனைத்தான் நான் தவறு என்று சொல்லுகின்றேன். ஒரு சமூகத்தில் ஒருமனிதரின் இயலாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். எல்லோராலும் எல்லாம் முடியும் என்பதனை இங்கே யாராலும் சொல்லிவிட முடியாது. சமூகம் சரியான முறையில் செயல் வடிவம் பெற வேண்டுமாயின். எல்லோரையும் இணைத்து பாகுபாடுகள் இன்றி. நிறப்பாகு பாடு, பாலியல் பாகுபாடு, வலியோர் எளியோர் பாகுபாடு இப்படி நீண்டு கொண்டே செல்லும். ஒரு நாடு எல்லோரயும் எந்த பாகு பாடும் இன்றி அணைத்து சென்றாலே. அது நல் நாடு, இல்லையேல் அது வெறும் சுடுகாடு. சட்டங்களை சரியாக வகுத்து, அதன் தர்மத்தின் அடிப்படையில் நேர்மையுடன் நடந்தால். நிச்சயம் நாம் எல்லோரும் நல்ல குடிமக்களாக திகளலாம்.
அன்புடன்
மதுரன்
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
குருவிகளுக்கும் தம்பி குளக்காடனுக்கும் பணிவாக நன் தெரிவிப்பது என்னவென்றால் .. நீங்களும் அந்தப் பெண் மாயா போலவே கோசங்களான வாதங்களையே முன் வைக்கின்றீர்கள்.
சரி நீங்கள் சொன்ன வாதங்களுக்கு ஒவ்வொன்றாக வருகின்றேன்
குருவி! நீங்கள் சில தொழில்களைக் குறிப்பிட்டு சொகுசான வேலைகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த வேலைகள் ஆண்களுக்கு கிடைப்பதில்லை என்றும் விசனம் தெரிவித்திருந்தீர்கள். உண்மையில் நடப்பது என்ன தெரியுமரீ அவ்வாறான வேலைகளில் ஆண்களை அமர்த்தினால் கிடைக்க கூடிய ஊதியத்திலும் குறைவான ஊதியமே அப்பெண்களுக்கு கிடைக்கின்றது. எனது நண்பர்கள் பல பேர் அவ்வாறான தொழில்களில் உள்ளனர். உண்மையில் அவர்களை விட மிகவும் சிறப்பாக தொழில்புரியும் பெண்கள் குறைவான ஊதியத்தில் பணி புரிகின்றனர். நிறுவனங்கள் பெண்களை விரும்பி அவ்வாறான தொழிலுக்கு அமர்த்துவதற்கு காரணங்களில் ஒன்று மேற்படி குறைந்த ஊதியம் என்றாலும் பலருக்கு தெரியாத முக்கிய காரணம் அவர்கள் மூலமாக மற்றைய போட்டி நிறுவனங்களுக்கு எதிரான பல அந்தரங்க வேலைகளை அவர்கள் மூலம் இலகுவில் ஆற்ற முடிகின்றது. அதனால் தான் பல நிறுவனங்களில் பெண்கள் அவ்வாறான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். நீங்கள் நினைப்பது போல அவர்கள் சொகுசான வேலைகளில் இலகுவாக சம்பாதிக்கவி;ல்லை.
நீங்கள் சொன்ன மற்றைய வாதம்: சில கடினமான தொழில்களில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்கள் இல்லையென்று. தயவுசெய்து அவ்வாறன பெண்கள் பணியாற்றாத தொழில் துறைகளை எனக்கு பட்டியலிட்டு காட்ட முடியுமா? நான் அந்தந்த துறைகளில் பணியாற்றும் பெண்களின் பெயர்களை பட்டியலிட்டுத் தருகின்றேன். நீங்கள் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்கின்றீர்கள் குருவி. எனக்குத் தெரிய கட்டிட வேலை வீதி அமைக்கும் பணி பார ஊர்தி செலுத்தல் என அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் நுழைந்து விட்டார்கள். இப்போது பிரச்சனை என்னவென்றால் அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதனாலேலே பெண்கள் இலகுவாக அந்த தொழில்களில் நுழையக் கூடியதாக உள்ளது. இது பற்றி மேற்கத்தேய பெண்கள் அமைப்புகள் குரல் கொடுப்பது உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா?
அடுத்து நீங்கள் சொன்ன வாதம்: பெண்கள் எடுக்கும் அந்த லீவு இந்த லீவு பற்றியது. குருவி! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பெண்களுக்கு அவ்வாறான லீவுகள் வழங்கப்பட வேண்டுமா? இல்லையா? இதனை நீங்கள் அதனை அங்கீகரிக்காது போனால் நீங்கள் ஒரு பெண்ணுக்கு மகனாகவோ சகோரனாகவோ கணவனாகவோ இருப்பதற்கு அருகதையற்றவர்.
சரி இனி எனது வாதத்திற்கு வருகின்றேன். மேலே நான் குருவியுடன் தர்க்கம் செய்தது எல்லாம் சட்ட ரீதியாக இன்னமும் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றி. ஆனால் இவற்றை எல்லாம் காரணங்கள் கூறி நடைமுறையில் எங்கள் பெண்கள் பண்ணுகின்ற லொள்ளுகளுக்கெல்லாம் அடிபணிய வேண்டுமென்பதி;ல்லை. தமிழ் பெண்கள் அதுவும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் ஒன்றை முக்கியமாக உணர்ந்து கொள்ள கடமைப்பட்டவர்கள். உங்களுக்கு கிடைத்திருக்கின்ற இந்த சுதந்திரம் என்பது நீங்களோ அல்லது எங்கள் பரம்பரையோ நினைத்துப்பார்க்காத ஒன்றுதான். அதற்காக அதனை விரயம் செய்யும் உரிமை உங்களுக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு "சந்தனம் மிஞ்சினால் தடவடா......... எனம் கணக்கில் திரிய வேண்டாம்.
.
.!!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிகள் இந்த நூற்றாண்டில் தான் இருக்கின்றன... பெண்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைத்தளம் வரை சொகுசானது எதுவோ அதைத்தான் நாடுகின்றனர்...! பொறியியல் படிக்கும் பெண்களின் தொகை உளவியல் படிக்கும் பெண்களின் தொகையவிட மிகமிகக் குறைவு...காரணம் கேட்டா அது கஸ்டமாம்...!
எங்கள் கருத்தை அவதானமாகக் கவனியுங்கள்..வீதிபரிகரிப்பு...சுரங்கத் தொழில்...மோட்டார் பொறியியல்...கட்டடப் பொறியியல் என்று ஆண்கள் தான் அதிகம் வேலைப்பழுக்களைச் சுமக்கின்றனர்....! பெண்கள் அனைத்துத் துறையிலும் சம பங்களிப்புக் கோரும் போது வேலைகளும் பழுக்களும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்...! அந்த வகையில் 50 % அந்தரங்கச் செயலாளர் பதவிகள் ஆண்களுக்கும்....50% சுரங்கத் தொழிலாளர்களாக பெண்களும் அமர்த்தப்பட வேண்டும்...ஆனால் அது நடப்பதில்லை...காரணம் கேட்டால் பெண்களால் ஆண்களைப் போல கடினமாகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாதாம்...பிறகெதற்கு 50% கேட்கிறீர்கள்...வாயால் வங்காளம் போறீர்கள் என்பதே எமது கேள்வி...!
ஒரு பெண்ணுக்கு ஆண் உதவுவதும் இரங்குவதும் அவள் சம உரிமையோடு இருக்கிறாள் என்ற காரணத்தால் அல்ல..அது சாதாரண உயிரனப் பண்பால் எழுவது இயற்கையானது...! ஒரு பெண்ணுக்கு கணவனாக...மகனாக...தந்தையாக இருக்க சாதாரண மனிதனாக இருந்தால் போதும் சட்டங்கள் கொண்டு வரும் செயற்கைத்தனமான மனிதாபிமானம் தேவையில்லை...அதற்கு....! அதனால் எந்தப் பலனும் உண்மையாக மனதளவில் கிடைக்கப் போவதில்லை...!
பெண்கள் லீவு என்பது சாதாரண விடயம் அல்ல...அண்மையில் கூட பிரித்தானிய வர்த்தக மற்றும் தொழிலாளர் ஒன்றியம் இதற்கு முக்கியம் கொடுத்து ஒரு அறிக்கை விட்டது...! சம்பளம் எனப்து பால் வேறுபாட்டுக்கு இணங்க வேறுபட இதைத்தான் (லீவு) முக்கியமாகக் காட்டி இருந்தது...! முக்கிய பொறுப்புக்களில் உள்ள பெண்கள் இப்படி நீண்ட லீவுகளில் செல்லும் போது அவர்களால் ஏற்படும் மனிதவலு இழப்பை யார் ஈடுசெய்வது... கடவுளா...அதனால்தான் பெண்களுக்கு முக்கிய பொறுப்புக்களை அளிக்க முடியாமல் இருக்க வேண்டி உள்ளது...! அதேபோல் பெண்கள் தலையிடி காய்ச்சல் என்று அடிக்கடி சிறிய லீவுகள் எடுப்பதாலும் வேலைக் குழப்பங்கள் ஏற்படுவதால் பெறப்படும் இலக்குப் பாதிக்கப்படுகிறது...இதற்கான நட்டத்தை யார் பொறுப்பேற்பது...??!
இப்படிப் பல நடைமுறைப் பிரச்சனைகள் பெண்களை வேலைக்கு அமர்ந்தும் இடங்கள் சந்திக்கின்றன...! இதை நாமும் தான் தினமும் காண்கிறோம்..எங்களுக்கே கதையளக்கிறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
Niththila Wrote:வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா
உங்களை மாதிரி கவிதையாக பதில் சொல்லத்தெரியாட்டிலும் என்ர கருத்து பெண்களை காலம் காலமாக நீங்கள் அடக்கித்தான் வைத்திருக்கிறீங்க என்பதை நீங்கள்தான் அவைக்கு சம உரிமை கொடுக்கிறதா வேண்டாமா என்று கருத்து சொல்லும் போது வெளிக்காடுகிறீர்கள்.
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா? இதோ இதுதான் நீங்கள் விடுகின்ற முழு பிழைநீங்களே உங்களால் முடியாது இயலாது என்று பல விடயங்களில் ஒதுங்குவது பலவிடயங்களில் முடியுமா முடியாதா என ஆயிரம் சந்தேகங்கள் பின்னர்அப்பாவி ஆண்களை( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )குறைகூறுவது எல்லாம் முடியும் என்று செய்யுங்கள் அதன் பின பெண்ணடிமை என்கிற சொற்பதமே தானாக இல்லாது போய்விடும்.
; ;
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
shiyam Wrote:Niththila Wrote:வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா
உங்களை மாதிரி கவிதையாக பதில் சொல்லத்தெரியாட்டிலும் என்ர கருத்து பெண்களை காலம் காலமாக நீங்கள் அடக்கித்தான் வைத்திருக்கிறீங்க என்பதை நீங்கள்தான் அவைக்கு சம உரிமை கொடுக்கிறதா வேண்டாமா என்று கருத்து சொல்லும் போது வெளிக்காடுகிறீர்கள்.
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா? இதோ இதுதான் நீங்கள் விடுகின்ற முழு பிழைநீங்களே உங்களால் முடியாது இயலாது என்று பல விடயங்களில் ஒதுங்குவது பலவிடயங்களில் முடியுமா முடியாதா என ஆயிரம் சந்தேகங்கள் பின்னர்அப்பாவி ஆண்களை( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )குறைகூறுவது எல்லாம் முடியும் என்று செய்யுங்கள் அதன் பின பெண்ணடிமை என்கிற சொற்பதமே தானாக இல்லாது போய்விடும்.  :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
எனக்கு ஒன்று புரியவில்லை. யார் தான் கடினமான வேலைகளை தெரிவு செய்கிறார்கள். அவர் அவர் தகுதி கிடைக்கின்ற சந்தர்ப்பம் என்பவற்றில் தானே வேலை தங்கியுள்ளது. தெரிவு செய்ய விட்டால் நான் கூட எனக்குப்பிடித்த இலகுவான வேலையை தான் தெரிவு செய்வேன். ஏன் எந்த முட்டாள் பிள்ளை கூட அப்படித்தான் செய்யும். குருவி நீங்கள் மட்டுமென்ன பெண்கள் செய்யமுடியாத வேலைகளை எல்லாம் உங்கள் தலையில் இழுத்துப்போட்டுக் கொண்டா செய்கின்றீர்;கள். பெண்கள் விடுமுறை கோருவதால் ஏற்படும் மனிதவலு இழப்பு பற்றியெல்லாம் வேதனைப்படுகின்றீர்கள். அந்தந்த நிறுவனங்களே எதுபற்றியும் சிந்திக்காமல் காப்புறுதிகள் அவற்றை ஈடு செய்து லீவு வழங்குகின்றார்கள். நீங்கள் உங்கள் ஊதியத்தை பறித்து அவர்கள் விடுமுறையில் செல்வது போல அதிக சிரமம் எடுக்கின்றீர்கள். இப்போது புரிகிறது..... பெண்கள் ஏன் இந்த பிரச்சனையை சமூப்பிரச்சனையாய் நோக்காது ஆண்களை எதிரிகளாய் பார்க்கின்றார்கள் என்று.
.
.!!
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம்,
தாயா ஜிப்றான் அண்ணா அவர்களே, உங்கள் பார்வை சரியானதுவே, எனினும் குரிவிகளும் தனது அனுபவங்களின் ஊடாக கருத்துக்களை பகிறுகின்றார். எனவே அவர் சில வேளைகளில் பெண்களால் பாதிக்கபட்டும் இருக்கலாம். ஆகயால் அவரின் தளத்தில் நின்று பார்கின்ற பொழுது, அவருக்கு தப்பாக படுகின்றதோ என்னமோ. நான் சொல்ல கூடியது இதுதான், பலம் பலவீனம் என்பது இரு பாலரிடத்திலும் உண்டு. பெண்கள் விடயத்தில் முதலாளிகள் நடந்து கொள்வது வேடிக்கையானதும் வினோதமானதுமானது. அப்படியாயின் இனிவரும் காலங்களில் பெண்களே முதலாளிகளாக மாறவேண்டிய நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் சமத்துவமான ஒரு சமூகம் உருவாகலாம். மனிதாபிமானத்தில் என்ன இயற்கை செயற்கை வேண்டியுள்ளது. பல்வேறு நாட்டினரை ஒரு சமூகம் உள்வாங்குவது இயற்கை மனிதாபிமானம் என்றால், எவ்வாறு பெண்கள் விடயத்தில் அது செயற்கையான மனிதாபிமானமாக மாறியது.
அன்புடன்
மதுரன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் இருவரும்... பெண்கள் என்பதற்காக அவர்களுக்கு இல்லாததுகளையெல்லாம் வரவழைக்க வாதாடுகிறீர்கள்...நடமுறைகளை கவனித்து பேசுவதாகத் தெரியவில்லை...! உங்களைப் போலவே எல்லோரும் இலகு வேலைக்களைத் தேடினால் கடின வேலைகளை யாராம் செய்வது...அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வது யார்...??!
பெண் என்பதற்காக தொழில்பாகுபாடு வழங்கப்படக் கூடாது...அவர்கள் எல்லா வேலைகளிலும் சமமாக உட்கார வைக்கப்படுவதோடு எதிர்பார்க்கும் இலக்கை பூர்த்தி செய்ய அவர்களை ஊக்கிவிக்க வேண்டுமே தவிர...இல்ல நான் எனக்கு விரும்பினதத்தான் இலகுவானதைத்தான் செய்வன் என்றால் நீங்கள் விரும்பாததுகளை கடினமானதுகளை ஆண்களோ செய்வது...ஏன் ஆண்களுக்கு நீங்கள் விரும்புவதை விரும்பத் தெரியாதோ... ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது வேவை வழங்களை நடமுறைப்படுத்தும் போதுதான் இத்தகைய பிரச்சனைகளின் உண்மை முகம் தெரியும்...சும்மா வீட்டில் இருந்து கட்டுரைகளை பலவாறு தீட்டலாம்...அதில் பயனில்லை...எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்...இதைத்தான் பெண்களும் சில ஆண்களும் காலம் காலமாகச் செய்து வருகின்றனர்...!
நீங்கள் என்னதான் சொன்னாலும் பலவீனம் என்று வருகின்ற போது பெண்கள் உடல் உளப் பலவீனம் என்று ஆண்களை விட அதிகமே வெளிப்படுத்துகின்றனர்...! இதனால் பெறப்படும் மனித வலு மாறுபடுகின்றது...உதாரணத்துக்கு 10 பெண்களை கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் 10 ஆண்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு...குறிப்பாக காலம்... விரயம் என்று பெண்களால் அதிகம் செலவுகள் ஏற்படும்...ஆண்களைக் காட்டிலும்...!
அப்படி இருக்க... தொழில் நிறுவனங்களில் சம்பளம் என்பது பெண்களுக்கு எவ்வாறு சமமாக அளிக்கப்பட முடியும்...???! அப்ப வேலை செய்யாமலே சம்பளமா வேண்டும் எங்கிறீர்கள்..! பெண்களுக்கு லீவுகள் மூலம் சும்மா இருக்கவே நல்ல சம்பளம் கிடைக்கும்...ஆனால் அதனால் இழக்கப்படும் மனித வலுவை பல நிறுவனங்கள் ஆண்களிடம் இருந்தே கறக்கின்றன...இதனால் ஆண்கள் மேலதில வேலைப்பழுவைச் சுமக்க நேரிடுகிறது....! அண்மையில் கூட ஒரு தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது ஒரு பெண் மேற்பார்வையாளர் ஒருவர் கனத்த பெட்டிகள் அடுக்கும் பிரிவில் ஆண்களை மட்டும் ஈடுபடுத்திக் கொண்டு இலகு பெட்டிகள் அடுக்கும் பிரிவில் பெண்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்..இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளரருக்குச் சுட்டிக்காட்டிய பின் அந்தப் பெண் மேற்பார்வையாளர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு...பெட்டிகள் அடுக்குவதில் சம அளவு பெண்களும் ஆண்களும் ஒரு ஒழுங்கில் ஈடுபடுத்தப்பட்டு வழமை போலவே இலக்குகளும் எட்டப்பட வாய்ப்பும் அளிக்கப்பட்டது...!
இப்படிப் பல விடயங்கள் பல இடங்களிலும் பெண் என்பதற்காக சலுகைகள் என்ற அடிப்படையில் இன்னமும் நடந்து வருகின்றன...! இவையாவும் களையப்பட்டு பெண்கள் ஒரு துறைக்குள் நுழைந்து விட்டால் அங்கு கெட்டித்தனம் பேசாமல்...பெறப்பட வேண்டிய இலக்கு நோக்கி செயற்படக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு...அப்படிச் செய்யாமல் சம சம்பளம் இல்லை...பாகுபாடு என்றெல்லாம் பிதட்டுவதில் அர்த்தமில்லை...!
காப்புறுதி நட்ட ஈடு என்பதற்கெல்லாம் இலாபம் முக்கியம்...இலாபம் பெற பெறப்பட்ட வேண்டிய உற்பத்தி இலக்கு முக்கியம்...உற்பத்தி இலக்கை அடைய வளம் வலு முக்கியம்...இதில் மனித வளம் வலுவில் இழப்புகள் கண்டால்...இலாபம் எப்படியாம் வரும்...ஆக பெண்களுக்கு காப்புறுதி என்பது கூட ஆண்களின் மேலதிக உழைப்புத்தான்....!
பெண்கள் இயற்கைத்தனமாக இருக்க மனிதாபிமானம் தானே பிறக்கும்...பெண்கள் செயற்கைத்தனமா இருந்தால் மனிதாபிமானமும் செயற்கைத்தனமாகத்தான் இருக்கும்.... சமூகத்துக்குச் சமூகம் சில வெற்றுவேட்டுகளத் தவிர பெரும்பாலும் பெண்கள் இயற்கைத் தனமாத்தான் இன்னும் இருக்காங்க....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:காப்புறுதி நட்ட ஈடு என்பதற்கெல்லாம் இலாபம் முக்கியம்...இலாபம் பெற பெறப்பட்ட வேண்டிய உற்பத்தி இலக்கு முக்கியம்...உற்பத்தி இலக்கை அடைய வளம் வலு முக்கியம்...இதில் மனித வளம் வலுவில் இழப்புகள் கண்டால்...இலாபம் எப்படியாம் வரும்...ஆக பெண்களுக்கு காப்புறுதி என்பது கூட ஆண்களின் மேலதிக உழைப்புத்தான்....!
பெண்கள் இயற்கைத்தனமாக இருக்க மனிதாபிமானம் தானே பிறக்கும்...பெண்கள் செயற்கைத்தனமா இருந்தால் மனிதாபிமானமும் செயற்கைத்தனமாகத்தான் இருக்கும்.... சமூகத்துக்குச் சமூகம் சில வெற்றுவேட்டுகளத் தவிர பெரும்பாலும் பெண்கள் இயற்கைத் தனமாத்தான் இன்னும் இருக்காங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
வணக்கம்,
அப்படியாயின் உங்கள் பதில் தான் என்ன? பெண்களால் மனித வலு வீணடிக்க படுகின்றது என்கின்றீர்கள? அப்படியாயின் உங்களுக்கு இங்கே உதாரணம். வடநோர்வேயில் மிகவும் கடினமான வேலை. மீன்வெட்டி சுத்தம் செய்யும் தொழில் அங்கே நமது தமிழ் பெண்களும், ஆண்களுக்கு சரி நிகராக வேலை செய்தார்கள். அதிலும் ஒரு ஆண்டில் மட்டும் நமது நாட்டை சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவரே கூடுதலான மீன்களை வெட்டினார் என்னும் செய்தி இந்நாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்டன. ஏன் ஆண்களால் அந்த பெண்மணியுடன் போட்டி போட முடியவில்லை. பெண்களாலும் எல்லாம் முடியும். இயற்கயாய் அவர்களுக்கு சில இடர்பாடுகள் இருக்கிண்ரது என்பதற்காக. இப்படி அவர்களை தாழ்த்தி பேசுவது நன்றன்று. மனம் உண்டானாலால் இடம் உண்டு. நீங்கள் பெண்களை பற்றி அதுவும் நம் தமிழ்பெண்களை பற்றி அறியவேண்டுமாயின். வடநேர்வே சென்று அங்கே உள்ள் மீன் தொளில்ச்சாலைகளில் விசாரிக்கலாம். ஆண்களும் நன்றாக வேலை செய்தார்கள், ஆனால் நமது பெண்களைப்போலன்று. எனவே இதைவிட என்னால் எதுவும் சொல்லிவிட முடியாது.
அன்புடன்
மதுரனன்
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Niththila Wrote:என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க.?
உடற்பலத்தால் பெண்களை இதுவரைகாலமும் கூட அடக்கியாளும் ஆண்கள் தானே தம்மால் அடக்கி வைத்திருக்கப்படும் பெண்களுக்கு உரிமைகளை கொடுக்க முடியும்? பெண்கள் அவர்களாகவே அடக்குமுறையை உடைத்துக்கொண்டு உரிமை பெற்றால் அந்த தேவை இருக்காது தான். என்ன சொல்கிறீர்கள் நித்திலா?
Niththila Wrote:ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
நாம் தானே வருமானத்திற்காக ஆண்டவனையே படைத்தோம். எங்களுக்கு யாரும் உரிமைகளை தரவேண்டியதில்லையே. அவை ஆண்களாகிய எம்முடையது தானே.
Niththila Wrote:இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா?
மமதையல்ல, இயற்கை. எளியோரை வலியோர் அடக்குதல் வாழ்வின் நிலைப்பாடு. தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வழியில்லாத கீரையையும், வாழையையும் நாம் வெட்டி கறியாக்கி உண்ணுகினறோம். கோழியையும், மீனையும் கூட கொன்று உண்கின்றோம். மனிதரிடையேயும் எளியோரை அடக்கி வேலைவாங்கி வசதியாக வாழ்கின்றோம். சரி பெண்ணாக பிறந்த உங்கள் கதி? வலியோராக மாறுங்கள். வழி தெரியாவிட்டால் வன்னி சென்று நகர்காவலராக பயிற்சி பெற்று வாருங்கள். மனதிலும் உடலிலும் வலிமை வரும்.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
kuruvikal Wrote:பெண் என்பதற்காக தொழில்பாகுபாடு வழங்கப்படக் கூடாது...அவர்கள் எல்லா வேலைகளிலும் சமமாக உட்கார வைக்கப்படுவதோடு எதிர்பார்க்கும் இலக்கை பூர்த்தி செய்ய அவர்களை ஊக்கிவிக்க வேண்டுமே தவிர...இல்ல நான் எனக்கு விரும்பினதத்தான் இலகுவானதைத்தான் செய்வன் என்றால் நீங்கள் விரும்பாததுகளை கடினமானதுகளை ஆண்களோ செய்வது...ஏன் ஆண்களுக்கு நீங்கள் விரும்புவதை விரும்பத் தெரியாதோ... ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது வேவை வழங்களை நடமுறைப்படுத்தும் போதுதான் இத்தகைய பிரச்சனைகளின் உண்மை முகம் தெரியும்...சும்மா வீட்டில் இருந்து கட்டுரைகளை பலவாறு தீட்டலாம்...அதில் பயனில்லை...எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்...இதைத்தான் பெண்களும் சில ஆண்களும் காலம் காலமாகச் செய்து வருகின்றனர்...!:
குருவிகள்,
நீங்கள் வழக்கமாக நல்ல அறிவுபுர்வமான கருத்துக்களை தானே எழுதுவீர்கள்? பெண்களின் காரணமாக ஏதோ ஒரு தாக்கமா? தங்கள் சிந்தனை திறனை இவ்வாறான தாக்கங்கள் பாதிக்க விடக்கூடாது.
kuruvikal Wrote:நீங்கள் என்னதான் சொன்னாலும் பலவீனம் என்று வருகின்ற போது பெண்கள் உடல் உளப் பலவீனம் என்று ஆண்களை விட அதிகமே வெளிப்படுத்துகின்றனர்...! இதனால் பெறப்படும் மனித வலு மாறுபடுகின்றது...உதாரணத்துக்கு 10 பெண்களை கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் 10 ஆண்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு...குறிப்பாக காலம்... விரயம் என்று பெண்களால் அதிகம் செலவுகள் ஏற்படும்...ஆண்களைக் காட்டிலும்...!
அப்படி இருக்க... தொழில் நிறுவனங்களில் சம்பளம் என்பது பெண்களுக்கு எவ்வாறு சமமாக அளிக்கப்பட முடியும்...???! அப்ப வேலை செய்யாமலே சம்பளமா வேண்டும் எங்கிறீர்கள்..! பெண்களுக்கு லீவுகள் மூலம் சும்மா இருக்கவே நல்ல சம்பளம் கிடைக்கும்...ஆனால் அதனால் இழக்கப்படும் மனித வலுவை பல நிறுவனங்கள் ஆண்களிடம் இருந்தே கறக்கின்றன...இதனால் ஆண்கள் மேலதில வேலைப்பழுவைச் சுமக்க நேரிடுகிறது....! அண்மையில் கூட ஒரு தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது ஒரு பெண் மேற்பார்வையாளர் ஒருவர் கனத்த பெட்டிகள் அடுக்கும் பிரிவில் ஆண்களை மட்டும் ஈடுபடுத்திக் கொண்டு இலகு பெட்டிகள் அடுக்கும் பிரிவில் பெண்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்..இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளரருக்குச் சுட்டிக்காட்டிய பின் அந்தப் பெண் மேற்பார்வையாளர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு...பெட்டிகள் அடுக்குவதில் சம அளவு பெண்களும் ஆண்களும் ஒரு ஒழுங்கில் ஈடுபடுத்தப்பட்டு வழமை போலவே இலக்குகளும் எட்டப்பட வாய்ப்பும் அளிக்கப்பட்டது...!
இப்படிப் பல விடயங்கள் பல இடங்களிலும் பெண் என்பதற்காக சலுகைகள் என்ற அடிப்படையில் இன்னமும் நடந்து வருகின்றன...! இவையாவும் களையப்பட்டு பெண்கள் ஒரு துறைக்குள் நுழைந்து விட்டால் அங்கு கெட்டித்தனம் பேசாமல்...பெறப்பட வேண்டிய இலக்கு நோக்கி செயற்படக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு...அப்படிச் செய்யாமல் சம சம்பளம் இல்லை...பாகுபாடு என்றெல்லாம் பிதட்டுவதில் அர்த்தமில்லை...!
காப்புறுதி நட்ட ஈடு என்பதற்கெல்லாம் இலாபம் முக்கியம்...இலாபம் பெற பெறப்பட்ட வேண்டிய உற்பத்தி இலக்கு முக்கியம்...உற்பத்தி இலக்கை அடைய வளம் வலு முக்கியம்...இதில் மனித வளம் வலுவில் இழப்புகள் கண்டால்...இலாபம் எப்படியாம் வரும்...ஆக பெண்களுக்கு காப்புறுதி என்பது கூட ஆண்களின் மேலதிக உழைப்புத்தான்....!
பெண்கள் இயற்கைத்தனமாக இருக்க மனிதாபிமானம் தானே பிறக்கும்...பெண்கள் செயற்கைத்தனமா இருந்தால் மனிதாபிமானமும் செயற்கைத்தனமாகத்தான் இருக்கும்.... சமூகத்துக்குச் சமூகம் சில வெற்றுவேட்டுகளத் தவிர பெரும்பாலும் பெண்கள் இயற்கைத் தனமாத்தான் இன்னும் இருக்காங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
பெண்களுக்கு ஆண்களிலும் பார்க்க உடற்பலம் சாதாரணமாக குறைவு. அதே வேளை மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல், கவனம் செலுத்துதல், நுட்பமான காரியங்களை செயதல், கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் என்பவற்றில் அவர்கள் ஆண்களிலும் மிகவும் சிறப்பானவர்கள். உளவியல், மருத்துவம், முகாமைத்துவம், உயிரியல் விஞ்ஞானம், குழந்தைகளுக்கு கற்று கொடுத்தல், சிறிய இலத்திரனியல் கருவிகள் செய்தல் போன்றவற்றில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள்.
பெண்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது பற்றி ஒரு விவாதம் எழுந்தது. பெண்கள் கடலுக்குள் இறங்கக்கூடாது என்ற மூடநம்பிக்கை ஒரு புறம். மற்றும் இவர்கள் நீச்சலில் சிறப்படைவார்களா, என்ற சந்தேகம் மறுபுறம். தலைவரிடம் பிரச்சினை போக அவர் பழக்கிக் கொடுக்கும் படி சொல்லிவிட்டு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்களின் நீச்சல் திறனை சோதிக்க ஏற்பாடும் செய்தார்.
பெண்கள் அதுவரை ஆண்கள் நீந்திய தூரத்துக்கும் மேலாகவும், குறுகிய காலத்திலும் நீந்தி சாதனை ஏற்படுத்தி காட்டினார்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யூட்...கடவுளே என்று பெண்களால் எங்களுக்கு பாதிப்பு இல்லை நன்மைகள் தான் அதிகம் கிடைத்துள்ளன....! அதற்காக சமூக நிலையில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எப்படியெல்லாம் நடக்க முயல்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுவது தவறன்று...! இதனால் அவர்கள் செய்யும் தவறுகள் என்று இனங்காணப்படுபவை மாற்றங்கள் பெற இலகுவாக இருக்கும் இல்லையா...!
பெண்கள் கடலில் இறங்கக் கூடாது என்று யாரும் சொன்னதாக எங்கள் காதுகளுக்குக் கேட்டதில்லை...அவங்கள் தான் கடலில் போனா வாந்தி வரும் என்று சொல்லிப் போகாமல் விட்டுவிடுவார்கள்...அண்மையில் தளபதி சூசை கூட ஆனையிறவு தரையிறக்கம் தொடர்பில் பெண் போராளிகள் வாந்தி மயக்கம் என்று அதிகம் சிரமங்களைச் சந்தித்தும் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகக் கூறியிருந்தார்..! இங்கே அதுதான் முக்கியம்... வீணான விவாதங்கள் அல்ல...பெண் என்பதற்காய் இல்லாத ஒன்றை பெரிதாகக் காட்டுவதிலும் பார்க்க உள்ளதைக் காட்டி அதற்குப் பரிகாரம் தேடுவதே நன்று...அதனால் பெண்கள் தாழ்த்தப்படுகிறார்கள் என்றோ இல்ல இரண்டாம் தரமாக எண்ணப்படுகிறார்கள் என்றோ அர்த்தமில்லை...உண்மை நிலையை ஆராயாமல் விட்டால் தேவையான மாற்றங்களும் விருப்பமான விளைவுகளும் பின் தள்ளியே போகும்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
நித்திரை கொள்றவய எழுப்பலாம். நித்திரை போல கிடக்கிறவய எழுப்பேலாது மதுரன். என்ன செய்வதாய் உத்தேசம்
.
.!!
|