01-24-2005, 07:19 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/help.jpg' border='0' alt='user posted image'>
<b>அன்பே உன்னை அரவணைக்க
அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன்
ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா
அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன்
அடுத்தவர் கண்படா உன்னிலை
எனக்குள் கட்டிவைத்தேன்
சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க
நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன்
மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய்
உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன்
அந்திநேர தென்றலாய் நீவர
தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச்
சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...!
மொத்தத்தில் அன்பே உன்னை ஆசானாக்கி
ஆசை ஆசையாய் பாடங்கள் படிக்கலானேன்
வாழ்க்கையெனும் சாதனைக் களத்தில்
நினைந்ததையெல்லாம் பெற்றிட
உந்துணை பலமாகும் என்றெண்ணி
உச்சி வானம் வரை சுதந்திரமாய் சிறகடிக்கலானேன்...!
ஆனால்... அன்றொரு கணம்....
அன்புக்கு என்ன விலை என்று
நீ கேட்க நான் மிரண்டேன்
அத்தனையும் தகர்ந்து தள்ளாடினேன்
இன்று...
அன்புக்கு யாசிக்கும்
யாசகனாய் பூமியில் சரிகிறேன்...!
அன்னை மடி மட்டும் மீண்டும்
தனதாக்கித் தாங்கிக் கொள்கிறது...! </b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
<b>அன்பே உன்னை அரவணைக்க
அழகாய் மனதோடு பூட்டி வைத்தேன்
ஆர்ப்பரிக்கும் ஆழி கூடக் கொள்ளிடா
அலைகளாய் நினைவலைகள் அடுக்கி வைத்தேன்
அடுத்தவர் கண்படா உன்னிலை
எனக்குள் கட்டிவைத்தேன்
சிப்பிக்குள் முத்தாய் நீ ஜொலிக்க
நானும் ஜொலிப்பத்தாய் உணர்வு கொண்டேன்
மாசற்ற மனதோடு கூடிவிட்டதாய்
உன்னை எனதாக்கி மகிழ்ந்து கொண்டேன்
அந்திநேர தென்றலாய் நீவர
தென்னங்கீற்றாய் நானிருந்து தெம்மாங்கு பாடிச்
சுகந்தம் பெறுவதாய் நானுணர்ந்தேன்...!
மொத்தத்தில் அன்பே உன்னை ஆசானாக்கி
ஆசை ஆசையாய் பாடங்கள் படிக்கலானேன்
வாழ்க்கையெனும் சாதனைக் களத்தில்
நினைந்ததையெல்லாம் பெற்றிட
உந்துணை பலமாகும் என்றெண்ணி
உச்சி வானம் வரை சுதந்திரமாய் சிறகடிக்கலானேன்...!
ஆனால்... அன்றொரு கணம்....
அன்புக்கு என்ன விலை என்று
நீ கேட்க நான் மிரண்டேன்
அத்தனையும் தகர்ந்து தள்ளாடினேன்
இன்று...
அன்புக்கு யாசிக்கும்
யாசகனாய் பூமியில் சரிகிறேன்...!
அன்னை மடி மட்டும் மீண்டும்
தனதாக்கித் தாங்கிக் கொள்கிறது...! </b>
நன்றி - http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->