12-18-2004, 12:00 AM

வெகு விரைவில் கவிஞர் ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் "பூகம்ப பூக்கள்" கவிதை தொகுப்பு உங்களுக்காக மின்னூல் வடிவில் கவிதை தோட்டத்தில் மலரவுள்ளது.
விடுதலை போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் படிப்பவர்களின் நரம்புகளில் சூடேற்றும், நெஞ்சங்களில் சிலிர்ப்பூட்டும் பாடல்களைக் காலத்தின் குரலாக, காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் படைப்பாக ஆதவன் கல்வி நிலையத்தின் உதவியுடன் கவிஞர் 2000 ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இப் படைப்பை நூலாக வெளியிட்டார்.
கவிஞர் அவர்கள் மரபிலக்கியத்தில் ஊறித்திளைத்தவர்கள் ஆனாலும் நவீன இலக்கியத்தை மறுதலிப்பவர் அல்லர். அவரும் தனது கவிதைக்குள் நவீன உத்திகளையும் புதுமைகளையும் புகுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய தமிழ் கவிதை மரபினையும் மீறாமல் கவிதை வடிப்பதில் வல்லவர்.
சிந்து, குறள் வெண்பா போன்ற யாப்பு வடிவங்களில் இயற்றப்பட்டவை இக்குறும்பாக்கள். அத்தோடு பண்டிதர் அவர்கள் சமுக, அரசியல் செய்திகளை மிகவும் சுவைபட கூறி உள்ளார் இந்நூலில்.
சமூகத்தில் குடிப்பழக்கத்தினால் அப்பாவி குடும்பங்கள் எதிர் நோக்கும் சீரழிவை எப்படி நயம்பட உரைத்துள்ளார் பாருங்கள்
கொட்டில் வீட்டில் நெருப்பு வைத்து வைத்து விட்டான்- மனைவி
கொண்டை கூட அறுத்தெறிந்து விட்டான்!
வெட்டிரும்பு போட்டுவந்த சுப்பா - ஆனால்
விடிந்தெழும்பும் போது நல்ல அப்பா!
அரசியலையும் போராளிகள் தியாகத்தையும் எப்படி சொல்கிறார் பாருங்கள்
பாவிகட்காய் யேசுமுத்தன்
பட்டி ஆடும் மீட்க புத்தன்
ஆவி வெந்து தெய்வமானார் அன்று- அவரை
அகிலமேத்தும் மதங்களமைத்தின்று!
பாவித்தமிழர் எங்களுக்காய்
பட்டி மந்தை எங்களுக்காய்
சாவைத்தழுவும் வேங்கை என்னும் சுத்தர் - நாளை
தமிழர் வணங்கும் மதத்து யேசு, புத்தர்!
யாழ் இந்துக் கல்லூரியில் ஒரு விழாவில் கவிஞர் அவர்கள் பாடிய ஒரு பாடல் [ காலம்:ஜனாதிபதி பிரேமதாசாவின் அணியில் இருந்து அத்துலத்து முதலி சிறீமாவுடன் சேர்ந்து கொண்டு பிரேமாவை எதிர்த்த காலம்]
சிறீமா ஒரு மா! பிறேமா ஒரு மா!
மாவும் மாவும் அரைபடலாமா?
மாவை அரைக்க மா எழலாமா?
வாதிடலாமா? மோதிடலாமா?
உலக்கையில் ஒட்டிய ஒருமா சிறீமா - அச்சு
உலக்கையில் ஒட்டிய ஒருமா சிறீமா
உலக்கையால் உதைபடும் ஒருமா பிறேமா!
ஆமா தர்மம் சும்மா விடுமா?
எங்களை வாட்டிய கறுமம் விடுமா?
இப்படி அருமையாக நகைச்சுவையாக கவிதைகளை வடிக்கும் ஒரு புலவர் தான் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள். என்ன நீங்கள் தயாரா அவரின் பூகம்ப பூக்கள் கவிதை தொகுப்பை படிக்க , சுவைக்க.
மேலும் ஒரு விடயம் , இவர் எழுதிய எழிலி என்ற நூல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வெகு விரைவில் உங்களுக்காக... கவிதை தோட்டத்தில்
http://www.kavithan.yarl.net

[b][size=18]