<span style='font-size:30pt;line-height:100%'>மாவீரர் </span>
<img src='http://www.yarl.com/forum/files/maveerar.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>
தலைவன் வழியில் நீர் சென்றீர்
தமிழ் மானம் காக்க
உம் உயிரை ஈர்த்தீர்.
தன்மானம் உள்ள தமிழனாய்மிளிர்கிறீர்.
கரும்புலியாகி..!
கப்பல்களில் வெடித்தீர்.
முகாங்களில் புகுந்தீர்
குண்டுடன் சிதறினீர்.
ஏன்
விமானமும், விமானதளங்களையும் தகர்த்தீர்.
அங்கு உங்களின் வீரமும் தீரமும்
உங்கள் மரணத்தால் எழுதப்பட்டது.
கடற்புலியாகி..!
கடலில்
கண்ணி வைத்து காத்திருக்கும்
கடற்படைக்கு சவாலக மிளிர்ந்தீர்.
கரையோர மக்களுக்கும்
கடலால் கரை கடந்த மக்களுக்கும்
இடிமின்னலாய் அடித்து தாக்கி
வெட்டி வீழ்த்தி
வீரம் பேசிய
டோறாக்களுக்கும், கப்பல்களுக்கும்
உங்களின் மரணத்தால்
வேட்டு வைத்தீர்கள்.
தரைப்புலியாகி...!
விட்டு வைத்த இடத்தை
அந்த வெட்டி ரத்வத்தையின்
ஆலோசனையோடு
ஆக்கிரமிப்பு செய்யத போது
ஆக்ரோசமாக போரிட்டு
அம்புட்டு இராணுவத்தையும்
அடித்து கலைத்தீரே...
கொன்று குவித்தீரே
அதில் உங்கள் தியாகம் மறக்க முடியாதது.
ஓயாமல் ஓயாத அலைகளாய்
தவளாமல் தவளை பாய்ச்சலாய்
முறியாமல் முன்னேறி பாய்ச்சலாய்
எவ்வளவு முகாங்களை தாக்கி அழித்து
எம்மை வாழவைத்து
நீர் உறங்குகிறீர்.
ஆறடி மண்ணில்.</span>
கவிதன்
21/11/2004
http://kavithan.yarl.net/