![]() |
|
மாவீரர்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மாவீரர்.....! (/showthread.php?tid=6404) |
மாவீரர்.....! - tamilini - 11-17-2004 <img src='http://eelamweb.com/maveerar/images/maveerar_head.gif' border='0' alt='user posted image'> [b]மாவீரராய் நம் முன்னே... மறவர்கள் இவர்கள்.. மனிதர்களாய் வாழ்ந்து காட்டிய... மரணத்தால் மரணிக்க முடியாத மானிடங்கள் இவர்கள்.... ! தமிழனாய் வாழ்ந்து.. தமிழிற்காய் வாழ்ந்து.. தமிழற்காய் தங்களை அற்பணித்த... தன்னலமற்ற மனிதர்கள்...! மானமிழந்து மற்றவர்க்கு மணிடியிட மாட்டோம் என்று.. நஞ்சினை நெஞ்சினில் சுமந்து.. சாவினில் வரலாறு படைக்கும்... சாதனையாளர்கள் இவர்கள்... ! புதிதாய் தமிழன் வரலாறு எழுதிட உதிரத்தை மையாய் வழங்கியவர் சுதந்திரத்திற்காய் தம் உயிரை வழங்கியவர் நம் மனக்கண் முன்னே மாவீரர் என்ற நாமம் கொண்டு வாழ்ந்திடும் காவலர்கள் இவர்கள்...........! www.tamilini.blogspot.com - Sriramanan - 11-18-2004 தமிழினி கவிதை நன்றாக இருக்கிறது. பாரட்டுக்கள் - MEERA - 11-18-2004 தமிழினி பாரட்டுக்கள். .... - MEERA - 11-18-2004 தமிழினி பாராட்டுக்கள். - kavithan - 11-18-2004 அக்கா மாவீரர்களுக்ககா நீங்கள் எழுதிய கவிதை நன்றாக இருகிறது அவர்களின் கவிதைகளை தொடர்ந்து வழங்க என் வாழ்த்துக்களும் நன்றிகளும். - வெண்ணிலா - 11-18-2004 அக்கா கவிதை சூப்பர். தொடர்ந்து எழுதுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-18-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/மாவீரர்.jpg' border='0' alt='user posted image'> பருவ வயதில் மீசை அரும்பும் காலத்தில் குளப்படி மறந்தாய் குறும்புகள் துறந்தாய் கூடிக் குலாவும் கொள்கை மறந்தாய் தாய் மண் விட்டோடி அடைக்கலம் தேட மறந்தாய் அகதியாகி பீ ஆர் வாங்கி அழகான பெண்ணெடுக்க மறந்தாய் காரும் வீடும் வேண்டாத சகவாசமும் களிம்பும் கழுத்தோடு சைக்கிள் செயினும் பியரும் கானும் பப்பும் பீசாவும் இவை அனைத்தும் மறந்தாய் நீ அறிந்ததெல்லாம் தலைவன் மொழியும் தாயக விடுதலையும் விடுதலையின் தேவையும் தர்மமும்...! அந்த வயதில் இவ்வளவும் விளங்குமா... சாத்தியமா... வினவுகின்றார் சிலர் அவருக்கு சாட்சியாயும் நீயே....! நிச்சயம்... தலைவன் பாசறையில் பறவைக்கும் புரியும் தாய் மண்ணின் விடுதலையின் பெறுமதி....! பார்.... நீ பயிற்சிக்காய் ஏகையில் கத்தித் திரிந்த கூடித் திரிந்த வரப்போரக் கரிக்குருவி இத்தனை கொடூரங்கள் கண்டும் அண்டை நாட்டிலா தங்சமடைந்தது..???! அழிந்த கூடுகள் செம்மையாக்கி சீராக வாழவில்லை...!!!!! அதுக்கு ஆசை நீ மிதித்த மண்ணோடு உறவாட.... ஐந்தறிவென்றாலும் நன்றி இருக்கு தனக்காய் வாழ்ந்தவனுக்காய் தான் வாழ....! மண்ணிற்காய் மக்களுக்காய் எத்தனை மருத்துவர்கள் எத்தனை இஞ்சினியர்கள் எத்தனை எக்கவுண்டன்கள் கையில் பட்டமில்லை மனதோடு கனவுகள் சுமந்து.... தாய் மண் மானம் காக்க களத்தோடு கருவி எடுத்து ஆக்கிரமிப்பின் விளைவறிந்து வினை அறிந்து எதிரி தம் பாசறை கலங்கடித்து கரும்புலியாய் கடற்புலியாய் தரைப்புலியாய் வான் புலியாய் வீறுகொண்டு பாய்ந்திருப்பர்....! அவர்கள் மண்ணின் மைந்தர்கள் மாவீரரான வீரத்தாய்ப் புதல்வர்கள்...! வீர வசனம் பேசி எட்ட நின்று கூத்தடிக்கும் கூட்டமல்ல களத்தோடு கூடி நின்று மரணத்தால் கதை எழுதிய காவியங்கள்...! உங்கள் இலட்சியம் சுமக்க தாய் மண் சுமப்பாள் இன்னும் ஆயிரம் ஆயிரம் வீரர்கள் உங்களைப் போலவே தீரத்துடன்....! உங்கள்... வீர இலட்சியம் நிறைவேறும் உறங்குங்கள் கண்மணிகளே நான்.... வீர தாலாட்டுப் பாட வேண்டும் இன்றேல் நாவொடிந்து வீழ்ந்திடுவேன்....! - tamilini - 11-18-2004 நம்ம கவிதையை பாத்த பாராட்டியவர்களுடன் குருவிகளின் கவிதைக்கும் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-18-2004 குருவிகளின் கவிதைக்கு நன்றிகள் வர வேண்டும்.......! - tamilini - 11-19-2004 வர வேண்டும்.. நீங்கள் மீண்டும். எம் மண்ணில் மைந்தர்களாய்.. ஈழம் விடிந்தபின் மீண்டும்.. விடுதலை என்னும் வேள்வியிலே உயிர்களை ஆகுதியாக்கிய உத்தமர்கள்.. மீண்டும் நம் மண்ணில் வரவேண்டும்.. குண்டுகள் ஏந்திய உடல்கள்... புன்னகை சொரிந்திட வாழ்வைத் தொலைத்திட்ட நம் சந்ததி வழியைக்கண்ட பின் உங்களை இழந்திட்ட உறவுகள்... உயிரோடு இருக்கையில்.. மீண்டும் நீங்கள் வரவேண்டும்.. இலட்சிய வேள்வியில்.. இன்னல்கள் பல கண்டும்.. ஈழத்திற்காய் விதையானீர் முளையாகி மீண்டும் வரவேண்டும்.. இடிகளும் வெடிகளும் தாங்கி.. இன்னல்கள் சுமந்த ஈழத்தாய்.. பசுமையாய் இருக்கையில்... பார்த்து ரசிக்க நீவீர் வரவேண்டும்.. பகைவன் என்னும் கொடியவன் வென்று புலிக்கொடி வானில் பறந்திட அதனை ஆராதனை செய்திட மீண்டும் நீங்கள் இங்கே வரவேண்டும்.. துப்பாக்கிக்கு இரையாகிப்போன.. உங்கள் உடல்கள் துள்ளி விளையாட வேண்டும்.. தூய்மையான ஈழ மண்ணில். தலைவனை ஒருவனாய் கொண்டு.. கொள்கைக்காய் உயிர் நீத்தவர்கள்.. தலைமுறை பல கண்டு தமிழ் மண்ணில் வாழ மீண்டும் வர வேண்டும்.. உரிமைக்காய் நீத்த உங்கள் உயிர்கள்.. உரிமை பெற்ற உணர்வுடன் மீண்டும் வர வேண்டும்.. ஈழம் மலர்ந்த பின் மழலைகளாய் எம் மண்ணில் வாழ்வாங்க வாழ மீண்டும் ஒரு முறை உங்களை எம் மண் உரிமையுடன் தங்கிட நீங்கள் தவழ்ந்திட வேண்டும்....! www.tamilini.blogspot.com - kuruvikal - 11-19-2004 கனவோடு போனவர் நினைவுகள் நனவாக அவர்கள் ஆன்மா மீளும் தம் உறவுகளின் உறவாய்...! அதுவும் ஈழத்தில் தமிழீழ இராச்சியத்தில் அதுவரை அவர்கள் உறங்கட்டும்...! - ramya - 11-19-2004 தமிழினி,குருவி இருவரினதும் கவிதை நல்லாயிருக்கு - Jaya - 11-19-2004 <b>kuruvikal</b>, <b>tamilini</b>, இருவரின் கவிதைகளும் உணர்வுபூர்வமாக இருக்கின்றன. நன்றிகள் தமிழினியின் கவிதை கணணுக்கும் அழகாக தென்படுகின்றது. அன்புடன் Jaya 8) - tamilini - 11-19-2004 உங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள் ஜெயா மற்றும் றம்யா.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jaya - 11-20-2004 கார்த்திகை இருபத்தியேழு கார்த்திகை இருபத்தியேழு காலத்தை வென்றவரின் கார்த்திகையிருபத்தியேழு காத்திருந்துதொழு காத்திருந்து தொழு காவல்தெய்வங்களின் கார்த்திகையிருபத்தேழைக் கைகூப்பித்தொழு வீரம் செறிந்த மண்ணிலே வீழ்ந்த நல்ல விதைகளே வீழ்ந்து விருட்சம் ஆகியே வீசும் காற்றில் கலந்தீரே சாவை சவாலிற்கழைத்து சாவிற்கே மணியடித்து சாதனை சமைத்த சோதியே சாந்தமான சண்ட மாருதியே நட்ட நடு நிசியிலும் நடுக்காட்டின் பிடியிலும் நதியோடைகளின் கரையிலும் நம்நாடு முழுவதும் எங்களைக்காக்கவென்று எதிரிபடைகளைவென்று எமக்காக உனைக்கொன்ற எம்காவல்தெய்வங்களே மாவீரா நீ மரணம் வென்றாய் மாவீரா நீ மறுசனனம் கண்டாய் சாகாத வரம் பெற்ற சாதகனே சரணடைகின்றோம் உந்தன் பாதத்திலே. தளத்தில் உள்ள இனிய நல்ல தமிழ் நெஞ்சங்களுடன் சேர்ந்து எனது கவிதைக்காணிக்கை. அன்புடன் Jaya - kavithan - 11-20-2004 அக்கா கவிதை நன்றாக இருகிறது அதுவும் மாவீரர்களுக்காக நீங்கள் எழுதியது உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று முடித்தது ஒரு புதுமையாக இருகிறது. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கவிதைகள் அனைத்தும் தற்போது மிக மிக நன்றாக இருகின்றது. - kavithan - 11-20-2004 ஜெயா உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து கவிதை படையுங்கள். ஆரம்பத்தில் வரும் போது ஆர்ப்பாட்டமாக வந்தீர்கள் மாவீரர்களுக்கான நீங்கள் படைத்த கவிதைக்கு நன்றிகள். - Jaya - 11-20-2004 நன்றி கவிதன் உங்களின் பாராட்டுக்கள் எனக்கு உற்சாகமூட்டுகின்றது. நீங்களும் கவிதை எழுதுகின்ற திறன் கொண்டுள்ளீர்கள் என்று அறிவேன் நீங்களும் எழுதுங்களேன். நான் தற்சமயம் எனது மகளுடன் சேர்ந்து சிறுவர்களிற்கான கவிதைகளும் பாடல்களும் நாக்குருட்டிகளும் எழுதிக் கொண்டிருக்கின்றேன் அன்புடன் Jaya - kavithan - 11-20-2004 Jaya Wrote:நன்றி கவிதன் நல்லது உங்கள் கவிதைகள் களதில் மலரட்டும் .. எனது கவிதைகளா இடையிடை மலரும் தோட்டத்தில் தற்போது நேரம் கிடைக்காததால் பல நாட்கள் மலரவில்லை பார்ப்போம்..... ஒரு கொஞ்சமா எழுதுவம் பெரிதா அனுபவம் இல்லை... எல்லாம் யாழில் கற்றவையே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 11-20-2004 Quote:பெரிதா அனுபவம் இல்லை... மிஸ்டர் கணனுக்கு அனுபவம் இல்லை...?? :roll: :roll: |