Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!
#21
<b>வீரப்பன் முகத்தை முதன்முதலில் பார்த்த மகள்.</b>

<img src='http://www.thatstamil.com/images24/veerappan-prabha250.jpg' border='0' alt='user posted image'>

வீரப்பனின் இளைய மகள் பிரபா முதல் முறையாக தனது தந்தையின் முகத்தைப் பார்த்து கதறி அழுதார்.

காட்டு ராஜாவாக திகழ்ந்த வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் வித்யாராணி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பிரபா (வயது 12) கடலூரில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

பிரபா இதுவரை தனது தந்தையை நேரடியாக பார்த்ததில்லை. செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்துள்ளார்.

முதலில் பிரபா செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆனால் விசாரணை என்ற பெயரில் போலீஸார் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் வழக்கறிஞர் புருஷோத்தமன் என்வரது உதவியுடன் பிரபா சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில் வீரப்பன் கொல்லப்பட்டதையடுத்து பிரபா, மூலக்காடு அழைத்துவரப்பட்டார். அங்கு தந்தையின் முகத்தை முதலும், கடைசியுமாக தனது தந்தையின் முகத்தை நேரில் பார்த்து கதறி அழுதார் பிரபா.

முதல் முதலாகப் பார்க்கும்போது பிணமாக பார்க்கும்படியாகி விட்டதே என்று அச் சிறுமி கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கலங்க வைத்தது.

இதேபோல மூத்த பெண்ணான வித்யாராணியும் கோவையிலிருந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவரும் தந்தையின் உடலைப் பார்த்து கதறினார்.

<img src='http://www.thatstamil.com/images24/veerappandaughterprabha250.jpg' border='0' alt='user posted image'>

பள்ளியிலிருந்து வெளியேற்றப்படும் பிரபா:

<img src='http://www.thatstamil.com/images24/veerappan-vidyarani300.jpg' border='0' alt='user posted image'>

தாய் முத்துலட்சுமியுடன் பிரபா (பழைய படம்)

இதற்கிடையே பிரபாவை பள்ளியில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் பிரபா இவர் வீரப்பனின் மகள் என்பது பள்ளியின் முதல்வர் தவிர வேறு நிர்வாகிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. முதல்வர் இந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்திருந்தார்.

பள்ளி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி பிரபா படித்து வந்தாள். இந் நிலையில் இப்போது பிரபா யார் என்ற உண்மை வெளியாகிவிட்டதால், இனி தங்கள் பள்ளியில் அச் சிறுமி படித்தால் அவளுக்கும் மற்ற மாணவ,மாணவிகளால் பிரச்சனை உருவாகலாம் என்று கூறி அவளது டிசியைத் தந்து வெளியேற்ற பள்ளி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இதற்கு அந்த வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கல்வியாண்டு முடிவதற்குள், எந்தத் தவறும் செய்யாத ஒரு மாணவியின் டிசியை இடையில் தந்து அவளை வெளியேற்ற பள்ளி நிர்வாகத்துக்கு உரிமையில்லை என்று கூறியுள்ள அவர், நீதிமன்றத்தையும் நாடுவார் என்று தெரிகிறது.

<b>இதெல்லாம் எந்த வகை ஜனநாயகமங்கோ....???!</b> - our view

thatstamil,com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
http://www.maalaimalar.com/asp/news/dis_ne...asp?artid=27866

வீரப்பன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது இந்தியில்.. உலகம் எவ்வளவு பாஸ்ட்டா போகுதில்லை...??? 8) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
தகவல்களுக்கு நன்றி
[b][size=18]
Reply
#24
<b>ஜெயலலிதாவுக்கு வீரப்பன் அனுப்பிய கேசட்</b>

முதல்வர் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டு உயிர் பிச்சை கோரி வீரப்பன் கேசட் அனுப்பியதாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

வீரப்பன் தேடுதல் வேட்டை மிகத் தீவிரமானதையடுத்து தனது மனைவி முத்துலட்சுமியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவிடம் மன்னிப்பும், உயிர் பிச்சையும் கோரி வீரப்பன் கேசட் அனுப்பினான். முத்துலட்சுமி மூலம் இந்த கேசட் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தக் கேசட்டில் வீரப்பன் கூறியிருந்ததாக முத்துலட்சுமி கூறியதாவது: மதிப்புக்குரிய அம்மா, இதுவரை தங்களைத் தவறுதலாக பேசியதற்காக மிகுந்த வருத்தம் அடைகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகள்தான் வாழப் போகிறேன். அதற்காக நான் பொது மன்னிப்பு கேட்கவில்லை. நான் செய்த தவறுக்கு தண்டனை கொடுங்கள். ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் தண்டனை கொடுங்கள். அவ்வளவு காலம்தான் நான் உயிருடன் இருப்பேன்.

வாழ்வின் கடைசி நாட்களையாவது நான் என் மனைவி மற்றும் குழந்தைகளோடு செலவிட்டு மடிகிறேன். அதற்காக தங்களிடம் மன்றாடி இந்த உதவியைக் கேட்கிறேன். எனக்கு ஒரு சிறையில் ஒரு தனி அறை ஒதுக்கி அங்கு மனைவி, குழந்தைகள் வந்து பார்த்து செல்ல அனுமதித்தால் போதும் என்று வீரப்பன் கூறியிருந்ததாக முத்துலட்சுமி கூறுகிறார்.

இந்த கேசட் குறித்து ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

thatstamol.com


<b>இப்படி எத்தனை உண்மைகள் உறங்குகின்றனவோ...???!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
வீரப்பன் சமாதியை பார்ப்பதற்கு தினந்தோறும் மக்கள் குவிவதால், சமாதியை கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோர் கடந்த 18-ந்தேதி இரவு தர்மபுhp மாவட்டம் பாப்பா ரப்பட்டி அருகே உள்ள பாடி என்னும் இடத்தில், ஒரு ஆம்புலன்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தபோது தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அவர்களது உடல்கள் தர்மபுhp அரசு மருத்துவமனையில் பிரேத பாpசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீரப்பனின் உடல் அவனது மனைவி முத்து லட்சுமியிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் வீரப்பன் உடல் கடந்த 20-ந் தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்து உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பல் வேறு பகுதிகளில் இருந்தும் வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அவனது உறவினர்களும் ஏராளமான பொதுமக்களும் தினமும் வந்து பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் வெளிமாநில, மற்றும் வெளி நாட்டு பத்திhpக்கையாளர் களும் வீரப்பன் புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். இதனால் வீரப் பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. வேன் மற்றும் பல்வேறு வாகானங்களில் ஏராளமானோர் மூலக்காட்டுக்கு வந்து வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வைவிட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், தர்மபுhp மாவட்டம் ஏமனு}ர், நெருப்பூர், அந்தியூர் ஆகிய பகுதிகளிலும் இருந்தும் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் நாள்தோறும் வீரப்பன் சமாதிக்கு வந்து வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்அஞ்சலி செலுத்தியும், ரோஜh மலர் பூச்செண்டுகள் வைத்தும், கற்பூரம் கொளுத்தியும், வீரப்பன் உடல் புதைக் கப்பட்ட இடத்தில் மண்ணை எடுத்து நெற்றியில் பூசி வழி பட்டும் செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் அந்த இடத்தில் இருந்த மண்ணையும் எடுத்துச் செல்கிறhர்கள்.

இதனால் எதிர்காலத்தில் வீரப்பன் புதைக்கப்பட்ட இடம் கோயிலாக மாறினாலும் ஆச்சாpயப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது. வீரப்பனை பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவி வந்தாலும், ஏராளமானோர் அவனை ஏழைகளுக்கு உதவுபவ னாகவும், சாமியாகவே பலர் தங்கள் மனதில் நினைத்துள்ளனர். சிலர் வீரப்பன் சாமி என்று அழைக்கின்றனர்.

வீரப்பனை பிடிக்கவே முடியாது என்று இருந்த சூழ்நிலையில் அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும், அவனை பார்க்க முடியாமல் போனவர்கள் அவனது சமாதியையாவது பார்த்துவிட்டு போகலாம் என்ற ஆர்வத்திலும் வீரப்பன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்துவிட்டு செல்வதாக தொpவித்தனர். இதனால் வீரப்பன் உயிருடன் இருக்கும்போது இருந்த பரபரப்பு தற்போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்த போதும் தொடர்கிறது.

¿ýÈ¢ - ¾¢É¸Ãý
Reply
#26
சன நாயகத்தின் பெயரால் மக்கள் சகதிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்... தங்கள் கருத்தை... தங்களுக்குத் தேவையானதை... தங்கள் நியாயத்தை வெளியிடவும் தங்கள் விருப்பத்தை கேட்கவும் நிறைவு செய்யவும் யாரும் இன்றி ஏமாற்றப்படுபவர்களாக.. அநாதைகளாக.... தவிப்பதே வீரப்பன் போன்ற தீவிரவாதிகளை மக்கள் நேசிக்கத் தூண்டுகிறது....! இதை உணரும் நிலையிலும் சன நாய் அகப் பேய்கள் இல்லை....அவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளியின் தூரத்தையே இந்தச் சம்பவங்கள் புட்டுப்புட்டு வைக்கின்றன....! தமிழகம் என்ன அகிலம் எங்கும் மக்கள் தேடுவது தங்களுக்கான உண்மைத் தலைவனையே...தங்கள் கருத்துக்களை மதித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒருவரையே.....! :evil: :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)