Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'><b>சந்தனக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை!</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>பல போலிஸ்காரர்களைக் கொன்று குவித்த, நக்கீரன் பத்திரிக்கையின் சர்க்குலேஷனை அதிகரித்த, சன் டி.வி ரேட்டிங்க்ஸை 96 பேட்டியின் மூலம் (இன்னும்) அதிமாக்கிய, ரஜினிகாந்தால் அரக்கன் என்று வர்ணிக்கப்பட்ட, ராமதாஸால் தமிழன் என்று பாராட்டப்பெற்ற, விவேக் போலிஸைக் கிண்டலடிப்பதற்கு அடிக்கடி உபயோகப்பட்ட, இன்னும் பற்பல விதங்களில் பல்வேறு விதமாக பலருக்கு உதவிய, உதவிகள் வாங்கிய...சந்தனக்கடத்தல் புகழ் வீரப்பன் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!
இது அதிமுக அரசாங்கத்தின் இரும்புக்கரத்துக்கு வெற்றி என்று ஜெயா டி.வியில் இன்றிரவு செய்திகள் வாசிக்கப்படும் நேரத்தில்...வீரப்பனின் மரணத்தில் புதைந்து கிடைக்கும் மர்மமான கேள்விகள் என்ற ரீதியில்வாசிக்கப்பட இருக்கிற சன் டி.வியின் செய்திகளையும், எப்படிக் கொன்றான்,யாரால் கொல்லப்பட்டான், மனைவி மகளின் பேட்டி என்று இன்னும் சில நாட்களுக்கு பத்திரிக்கை உலகமே அல்லோல்கலப்பட இருக்கும் இந்த சரித்திர நிகழ்வின் பின்விளைவுகள், உங்களை நோக்கிப் படையெடுக்க பதுங்கி இருக்கிறது என்பதைப்பகிர்ந்து கொள்கிறேன். ('ப'னாவுக்குப் 'ப'னா...!)</span>
நன்றி
http://arunviews.blogspot.com/2004/10/blog...og-post_18.html
[b][size=18]
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
அது சரி வீரப்பனின் கதையை வைத்து யாராம் படம் எடுப்பது?? :roll: :roll:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40191000/jpg/_40191442_veerappanap203b.jpg' border='0' alt='user posted image'>
Koose Muniswamy Veerappan
<b>Indian bandit 'killed by police'</b>
Veerappan has evaded capture for two decades
Police in the southern Indian state of Tamil Nadu say they have shot dead one of India's most wanted men, the bandit known as Veerappan.
Police say he was killed along with three associates in a jungle forest.
Veerappan, a Tamil, was accused of more than 100 murders - as well as kidnapping, smuggling and poaching - and had been on the run for 20 years.
The Indian government had offered a 50m rupee ($1.1m) reward for any information leading to his arrest.
Special Task Force chief K Vijay Kumar said police surrounded Veerappan and his associates near the village of Paparapatti, some 320km (200 miles) southwest of Madras, the state capital.
"We announced on the speakers fitted to our jeeps that since he was surrounded and there was no way he could escape, he and his associates should give themselves up," Mr Kumar told the AFP news agency
"There was silence for about a minute and then, there was firing from the other side. We took cover and returned the fire, killing Veerappan and his three associates," he said.
The bodies had been taken to Dharmapuri hospital, he added.
Police had been hunting Veerappan in forests on Tamil Nadu's border with the neighbouring state of Karnataka.
The Tamil Nadu chief minister is expected to make a statement soon.
A tall, wiry man with a trademark handlebar moustache, Veerappan had been considered the country's most ruthless and daring bandit.
He was involved in the kidnapping two years ago of former state minister of Karnataka, H Nagappa, who was found dead after three months in captivity.
He was also involved in the kidnapping for a famous film star, Rajkumar, four years ago.
The film star was released after 108 days of captivity, allegedly for a huge ransom.
Veerappan is said to have offered to surrender to police twice - once in the late 1980s and then in 2001.
There had been allegations that he had close links with some banned extremist Tamil nationalist groups as well as the Tamil separatist group of Sri Lanka, the LTT. (இது பிபிசியின் லொள்ளு...!)
<b>LIFE OF CRIME </b>
Killed first elephant aged 14
Accused of smuggling ivory worth $2.6m and sandalwood worth $22m
Escaped from behind the bars in 1986 by killing four policemen and an unarmed forest official in their sleep
Operated mainly in the forests bordering states of Karnataka and Tamil Nadu
bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
kuruvikal Wrote:There had been allegations that he had close links with some banned extremist Tamil nationalist groups as well as the Tamil separatist group of Sri Lanka, the LTT. (இது பிபிசியின் லொள்ளு...!)
இல்லையே; இது முன்னரும் பேசப்பட்டது
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
மேலதிக செய்தி:
வீரப்பனும் அவனது சகபாடிகளும் காட்டிலிருந்து வந்து மருத்துவக் காவுவண்டியில் ஏறியவுடன் அவர்களைத் தமிழகக் காவல்த்துறையினர் சுற்றி வளைத்தனர் எனவும் தான் சுற்றி வளைக்கப்பட்டதையுணர்ந்த வீரப்பன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தி தமிழக ஊடகவியலாளர்களின் ஊகமாகக் கூட இருக்கலாம் ஆனால் இப்படி நடப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு......
<b>
?
- . - .</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.webulagam.com/news/regional/images/2002/03/0703_Veerappan.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மேலதிக செய்தி:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை
தர்மபுரி:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வந்த சந்தனக் கடத்தல் மன்னன் கூசை முனியசாமி என்ற வீரப்பன் (வயது 65) நேற்றிரவு தமிழக அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவனது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கௌடா, கோவிந்தன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆம்புலன்சில் சுற்றிய வீரப்பன்:
நேற்று இரவு 10 மணியளவில் தர்மபுரி மாவட்டம் ஒகேனகல் அருகே பாப்பாரப்பட்டி காட்டுப் பகுதியில் பாடி என்ற இடத்தில் வீரப்பனும், அவரது கும்பலும் ஒரு வாகனத்தில் நடமாடுவதாக அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் அதிரடிப் படையினர் 4 ஜீப்களில் அங்கு விரைந்தனர். அப்போது ஒரு ஆம்புலன்ஸ் (எஸ்.கே.எஸ். ஆம்புலன்ஸ், சேலம்) அங்கு சென்று கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் காட்டுக்குள் ஆம்புலன்ஸ் எப்படி வந்தது என்று சந்தேகப்பட்ட விஜயக்குமார் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
ஆனால், அந்த ஆம்புலன்ஸ் நிற்கவில்லை, மாறாக உள்ளே இருந்தவர்கள் அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். கன நேரத்தில் தங்களை சுதாரித்துக் கொண்ட அதிரடிப்படையினர் தங்கள் வேன்களில் பதுங்கினர்.
ஆம்புலன்ஸிசில் வீரப்பன் கும்பல் இருப்பதை உணர்ந்து கொண்ட அதிரடிப் படையினர் அவர்களை சரணடையுமாறு கூறினார்.
ஆனால் வீரப்பன் கும்பல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிரடிப் படையினர் அந்த ஆம்புலன்ஸை நோக்கி பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். சரமாரியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆம்புலன்ஸ் சல்லடையானது.
சுமார் அரை மணி நேரம் இச் சண்டை நீடித்தது. அதன் பின்னர் ஆம்புலன்ஸிலிருந்து நடந்த துப்பாக்கிச் சூடு நின்று போனது.
இதையடுத்து அதிரடிப்படையினர் வேனைத் திறந்து பார்த்தபோது, வீரப்பன் மற்றும் கும்பல் உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது.
உடனடியாக அந்த உடல்களை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அதிரடிப் படையினர் கொண்டு சென்றனர்.
மீசையில்லா வீரப்பன்:
வீரப்பனும் அவரது கூட்டாளி சேத்துகுளியானும் வழக்கமான மீசை, தாடியுடன் இல்லாமல் ட்ரிம் செய்யப்பட்ட சிறிய மீசையுடன், மிகவும் திடகாத்திரமான தோற்றத்தில் காணப்பட்டனர்.
4 பேரின் உடல்களும் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அதன் பிறகு வீரப்பனின் உடலை அவரது மனைவி முத்துலட்சுமியிடம் ஒப்படைக்க அதிரடிப்படை முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் 20 ஆண்டு கால வீரப்பன் அட்டகாசம் முடிவுக்கு வந்துள்ளது.
Thatstamil.com
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
சந்தனக்கடத்தல் வீரப்ப¨É சுðடு ¦¸¡ýÈÐ ¦ºö¾¢ §¸ðடு ¸Å¨Ä¾¡ý..
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Thiyaham Wrote:kuruvikal Wrote:There had been allegations that he had close links with some banned extremist Tamil nationalist groups as well as the Tamil separatist group of Sri Lanka, the LTT. (இது பிபிசியின் லொள்ளு...!)
இல்லையே; இது முன்னரும் பேசப்பட்டது
பேசப்பட்டது சரி.. நிரூபிக்கப்படவில்லை... அதுதவிர புலிகளை தான் தடை செய்துவிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து மூன்றாம் தர வன்முறைக் குழுக்களுடன் அவர்களுக்கு தொடர்பிருப்பதாக ஒரு பிரச்சாரத்தையே செய்து தனது மக்களை ஏமாற்ற முனைந்தது இந்திய ஆளும் வர்க்கம்....!
இப்போ பிரித்தானியாவில் புலிகள் தடை என்பதற்காக உலகில் எங்கு குற்றச்செயல் நடந்தாலும் அங்கெல்லாம் புலிகளை எந்தளவுக்குச் சாத்தியமோ அந்தளவுக்கு எந்த ஆதாரமும் இன்றி இணைப்பதும் நடக்கும் படுகொலை அனைத்தையும் புலிகள் தலையில் போட்டுப் பிரச்சாரம் செய்வோரை ஊக்கிவிப்பதிலும் பிபிசி முன்னணி வகிப்பதும் கண்கூடு... அதன் தொடர்ச்சிதான் இது... ஒன்று உண்மை.. வீரப்பன் கும்பல் போன்றதல்ல புலிகள்... அப்படி நினைக்கும் இந்தியர்களை பிரித்தானியர்களை நாம் சந்தித்திருக்கின்றோம்...ஜெயலலிதா கருணாநிதி போன்ற மறைமுகக் கள்ளரைவிட வீரப்பன் போன்ற வெளிப்படைக் கள்வர்கள் பலமடங்கு திறம்....! மக்களுக்குச் சேதம் அதிகமாய் இருப்பது முன்னையவர்களால் அன்றி பின்னையவர்களால் அல்ல...! இதுகும் ஏதோ ஒரு அரசியல் சதி இல்லாமலா நடந்திருக்கும்...எவ்வளவு பணம் கைமாறிச்சே.....என்னென்ன நடந்தேறிச்சே....எல்லாம் பாரத மாதாவுக்கே வெளிச்சம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
shanmuhi Wrote:சந்தனக்கடத்தல் வீரப்ப¨É சுðடு ¦¸¡ýÈÐ ¦ºö¾¢ §¸ðடு ¸Å¨Ä¾¡ý.. வீரப்பன் என்னதான் செய்திருந்தாலும் ஒரு தமிழன் என்கின்ற போது மனசுக்கு வேதனையாகத்தான் இருக்கின்றது
குருவிகள் சொல்லுவது 100 விகிதம் சரி
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மேலதிக செய்தி
வீரப்பனை கொன்ற 'ஆபரேஷன் கூட்டுப்புழு': விஜயக்குமாரின் 'திகில்' பேட்டி
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகள் 3 பேரும் தமிழக அதிரடிப் படையினரால் நேற்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நால்வரும் தர்மபுரி மாவட்டம் ஓகேனகல் அருகே பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்து பாடி வனப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் வைத்து கொல்லப்பட்டனர்.
உளவாளிகள், போலீஸ் நெட்வோர்க், ஊருருவல், போலி ஆம்புலன்ஸ் என ஒரு மெகா திகில் சீரியலுக்கு இணையான பல ஆச்சரியங்களுடன் நடத்தப்பட்டுள்ளது இந்த எண்கௌன்டர்.
வீரப்பனின் கதையை முடிக்க அதிரடிப்படை போட்ட இந்த பகீர் திட்டத்தின் பெயர் 'Oணீஞுணூச்tடிணிண ஞிணிஞிணிணிண' ('ஆபரேசன் கூட்டுப்புழு')
இந்தத் திட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து இன்று தர்மபுரி அதிரடிப்படை சிறப்பு முகாமில் அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் விரிவான பேட்டியளித்தார். அப்போது கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, வீரப்பனை சுட்டுக் கொன்ற தமிழக அதிரடிப்படை காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ஆபரேசன் கூட்டுப்புழு குறித்து விஜயக்குமார் கூறியதாவது:
வீரப்பன் வழக்கமாக உலவும் வனப் பகுதிகளை விட்டு விட்டு அவனுக்கு அதிக ரிஸ்க் உள்ள, அவன் அதிகம் தலைகாட்டாக கிழக்குப் பகுதி காடுகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் நாங்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கினோம்.
இந்தப் பகுதிகளுக்கு அவன் அவ்வளவாக வருவதில்லை என்பதைப் பயன்படுத்தி அங்குள்ள லோக்கல் ஆசாமிகளுடன் கலந்தோம். அவர்களைக் கொண்ட ஒரு பெரிய உளவு நெட்வோர்க்கை உருவாக்கினோம். வீரப்பன் நடமாடும் கிராமங்களுக்குள்ளும் அதிக ரிஸ்க் எடுத்து அதிரடிப்படையினர் மாறு வேடங்களில் ஊடுருவினர்.
தோட்ட வேலை பார்ப்பவர்களாக, கூலிகளாக அவர்கள் கிராமங்களுக்குள் கலந்தனர். எங்களது உளவு நெட்வோர்க்குடன் இணைந்து இவர்கள் தகவல்களை சேகரித்தனர்.
குறிப்பாக முருகேசன் என்ற அதிரடிப்படை வீரர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, வீரப்பனுக்கு நேரடியாக உதவும் ஆட்களுடன் பழகி, அவர்களுக்கு நெருக்கமானார். அவர்கள் மூலமாக நிறைய தகவல்களை எங்களுக்குத் திரட்டித் தந்தார்.
மேலும் தமிழகம், கொள்ளேகால், பெங்களூரில் உள்ள சிறைகளில் உள்ள சிலர் மூலமாகவும் வீரப்பனுக்கு நெருக்கமானவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. (தமிழக சிறைகளில் தமிழ் தேசிய இயக்கத் தீவிரவாதிகளும், கர்நாடகத்தில் வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டவர்களும், கொள்ளேகாலில் வீரப்பனின் ஆதரவாளர்கள் பலரும் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). இந்த விஷயத்தில் நான் அதிக விவரம் தர முடியாது.
வீரப்பனுக்கு கண்ணில் பிரச்சனை இருப்பது எங்கள் உளவு நெட்வோர்க்குக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவனுக்கு சிகிச்சை தரலாம் என்று சொல்லி அவனை காட்டை விட்டு வெளியே கொண்டு வர முயன்றோம்.
அவனது ஆதரவு கும்பலை வைத்தே அவனை அஞ்செட்டி, பண்ணாரி போன்ற இடங்களுக்கு 'சிகிச்சைக்காக' கொண்டு வர முயன்றோம். ஆனால், அந்தத் திட்டங்கள் தொடர்ந்து தோற்றன.
ஆனாலும் எங்கள் முயற்சி தொடர்ந்தது. 1 வாரத்திற்கு முன் மேற்குப் பகுதி காட்டுக்கு வீரப்பனை வரவைக்க முயற்சித்தோம். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. ஆனாலும் நாங்கள் துவளவில்லை.
தொடர்ந்து முயற்சி செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு அருகே உள்ள பாடி வனக் கிராமத்திற்கு வீரப்பனை வரவைக்க முயற்சி செய்தோம். இந்த முறை எங்கள் முயற்சிக்குப் பலன் கிடைத்து.
இதையடுத்து எங்களது அதிரடிப் படையைச் சேர்ந்த ஒரு வீரரை ஏற்பாடு செய்து காவல்துறை ஏற்பாடு செய்த போலி ஆம்புலன்ஸ் வண்டியில் வீரப்பனையும், கும்பலையும் காட்டுக்கு வெளியே வரவழைத்தோம்.
பாடி பகுதியில் அதிரடிப் படையைச் சேர்ந்த காவலர்கள், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில் இரவு 10.20மணிக்கெல்லாம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுவிட்டனர்.
வீரப்பன் வந்த ஆம்புலன்ஸ் வேன் இரவு 10.40 மணிக்கு அப்பகுதிக்கு வந்தது. இதையடுத்த போலீஸார் ஆம்புலன்ஸை சுற்றி வளைத்து வீரப்பன் கும்பலை சரணடைய உத்தரவிட்டனர். ஆனால் அவன் மறுத்து விட்டு துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.
மீண்டும் ஒரு முறை சரண் அடையுமாறு வீரப்பன் கும்பலுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவன் மறுத்து விட்டான். இதையடுத்து 10.50 மணிக்கு தமிழக அதிரடிப்படை வீரர்கள், ரெமிங்டன் பம்ப் கன் எனப்படும் சரமாரியாக புல்லட்டுகளை வெளியேற்றும் வகையிலான துப்பாக்கிகளால் சுட்டனர்.
11.10 வரை துப்பாக்கி சூடு நீடித்தது. இதில் வீரப்பனும், அவனது கும்பலும் உயிரிழந்தனர்.
வேனை ஓட்டி வந்தவர் எங்களது அதிரடிப் படை வீரர் என்பதால் அவர் வேனை எங்கள் படையினர் அருகே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, உடனே வெளியில் குதித்துவிட்டார்.
அவர், வீரப்பன் கும்பலுடன் அரை மணி நேரத்திற்கு முன்பு தான் சேர்ந்தார். அவருக்கும், வீரப்பன் கும்பலுக்கும் எந்தவித முன் தொடர்பும் கிடையாது. அவரை வீரப்பன் கும்பலிடம் அறிமுகப்படுத்தி சேர்த்துவிட்டது எங்களது உளவு நெட்வோர்க் தான். இதற்கு மேல் அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்க முடியாது.
முழுக்க முழுக்க தமிழக அதிரடிப் படையின் மிகச் சிறந்த, துல்லியமான, புத்திசாலித்தனமான உளவு நடவடிக்கைகள் காரணமாக வீரப்பனை இந்த முறை எங்களால் எளிதாக வளைக்க முடிந்தது. அவனை சுட்டுக் கொல்வது எங்களது நோக்கமல்ல, சரணடைய வைக்கத்தான் முயன்றோம். ஆனால் முடியாததால் சுட்டுக் கொன்றோம்.
மேலும், வீரப்பன் கும்பலில் 4 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்குள் சில பிரச்சினைகளும் இருந்ததும் எங்களுக்குத் தெரியவந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சேதுமணி என்பவர் வீரப்பனை விட்டுப் பிரியும் மனநலையில் இருந்தார்.
சந்திரே கௌடாவும் அவரது பெற்றோருடன் சேரும் மன நிலையில் இருந்தார்.
சேத்துக்குளி கோவிந்தனுக்கு வீரப்பனுக்குப் பதில் தானே தலைவனாகும் ஆசை வந்து விட்டது. இந்த பிளவை மையமாக வைத்துத் தான் எங்களது உளவு நெட்வோர்க் வெற்றிகரமாக செயல்பட்டது.
மேலும், தென் ஆற்காட்டைச் சேர்ந்த சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுடன் வீரப்பன் தொடர்பு கொண்டதும் எங்களுக்குத் தெரிய வந்தது.
எங்களது இந்த நடவடிக்கை 4 வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. மிகச் சரியான, ரகசியமான முறையில் செயல்பட்டு வெற்றிபெற்றோம். இந்த நடவடிக்கையில் எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் மிக முக்கியப் பங்கு வகித்தார்.
அத்தோடு காவலர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைத்துரை, எனது கார் டிரைவர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, சந்திரமோகன், ராஜேஷ் கண்ணா, டி.எஸ்.பி. உசேன், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சம்பத் உள்பட பலரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
இவர்களில் டி.எஸ்.பி. உசேனின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. அதேபோல, டி.எஸ்.பி. திருநாவுக்கரசு பல நாட்கள் இரவுகளில் காடுகளில் தங்கி வீரப்பன் கும்பல் குறித்து தகவல் சேகத்துள்ளார். அவர்களுக்கு நான் வீர சல்யூட் செய்ய கடமைப்பட்டவன்.
அத்தோடு அதிரடிப்படையின் சமையல்காரர் முதல் எஸ்.பி. வரையிலான அனைவரையும் நான் வணங்குகிறேன். அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர், அவர்கள்தான் இந்த நடவடிக்கையின் ஹீரோக்கள். அனைவருக்கும் எனது சல்யூட்.
அத்தோடு வீரப்பன் வேட்டையை முன்னின்று நடத்தி இதற்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்த எனது குருநாதர் வால்டேர் தேவாரம், கர்நாடக முன்னாள் அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பித்ரி, சஞ்சய் அரோரா உள்ளிட்ட முன்னோடிகள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்களைத் தெவித்துள்ளார். படையினரை அவர் கவனித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் விஜயக்குமார் உணர்ச்சிவசப்பட்டவராய்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.thatstamil.com/images24/vijaykumaar300.jpg' border='0' alt='user posted image'>
இவர்தான் வீரப்பனைக் கொன்ற தமிழக அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி விஜய்குமார்... இவர் சென்னை நகர பொலீஸ் அதிகாரியாக இருந்த போது பல தாதாக்களை கொன்று அரசியல்வாதிகளின் வெறுப்பைச் சம்பாதித்து வீரப்பனைப் பிடிக்க என்று கூறி ஜெயலலிதா அரசால் காட்டுக்கு இடமாற்றம் பெற்றவர்...! ஒரு நேர்மையான பொலீஸ் அதிகாரியாக தொழிற்பட்டிருந்தால் உண்மையில் இவருடைய சேவைக்காக இவரைப் பாராட்டலாம்....! உண்மை எதுவோ யாம் அறியோம்....!
<img src='http://www.thatstamil.com/images24/vijaykumar200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>வீரப்பன் தற்கொலை செய்து கொண்டானா...?
[b]போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட வீரப்பன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது.
ஆஸ்துமா அதிகமாகி உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தர்மபுரி அருகே ஏதோ ஒரு மருத்துவமனைக்குச் செல்லவே ஆம்புலன்சில் வந்திருக்கிறான் வீரப்பன்.
வீரப்பனின் மிரட்டலுக்கு பயந்து ஆம்புலன்ஸை அனுப்பியவர்களே, மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அதிரடிப்படையினருக்கும் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.
தன்னை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்ததும் முதலில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப நினைத்த வீரப்பன், அது முடியாமல் போகவே தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதை அதிரடிப்படை மறுக்கிறது. தாங்கள் நடத்திய தாக்குதலில் தான் அவன் இறந்தான் என்கிறது. </b>
<img src='http://thatstamil.com/images24/veerappan330.jpg' border='0' alt='user posted image'>
வீரப்பன் தலையில் குண்டுபாய்ந்த விதம்...!
<b>தகவல் தந்தோம் தீர்மானிக்க வேண்டியது நீங்கள்...!</b>
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>அரசியல் தொடர்புகளை விசாரிப்போம்: கர்நாடகம்</b>
வீரப்பன் கொல்லப்பட்டதற்கு தமிழக அதிரடிப்படை மட்டும் காரணமல்ல. கர்நாடக அதிரடிப் படையும்தான் காரணம் என்று கர்நாடக மாநில காவல்துறை டிஜிபி போர்கர் கூறியுள்ளார்.
வீரப்பன் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன் இரவோடு இரவாகக் கிளம்பி அதிகாலையில் அவர் தர்மபுரி வந்துள்ளார்.
<b>வீரப்பனின் அரசியல் தொடர்புகள்:</b>
இதற்கிடையே வீரப்பனின் அரசியல் தொடர்புகள், அவனது பண பேரங்கள் குறித்து விசாரணக்கு உத்தரவிடப் போவதாக கர்நாட முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் தமிழக, கர்நாடக எல்லையில் நிலவி வந்த பதட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக கர்நாடக, தமிழக போலீசாருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரப்பனின் சாவோடு சில உண்மைகளும் புதைந்துவிடாமல் தடுக்கும் வகையில் அவனது அரசியல், பணத் தொடர்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட இருக்கிறோம் என்றார்.)
<b>ஜெவுடன் தரம்சிங் பேச்சு:</b>
பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை தரம்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதற்கிடையே வீரப்பன் கும்பலில் இடம்பெற்று அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அவனது கூட்டாளி சந்திரே கௌடாவின் உடலை அடையாளம் காட்டவும் உடலைப் பெறவும் அவனது தந்தையை அதிரடிப் படையினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வீரப்பனின் கூட்டாளிகளில் ஒருவரான சந்திரே கௌடாவின் சொந்த ஊர் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் ஆகும். சந்திரே கௌடா சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் கௌடாவின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
கௌடாவின் வீட்டுக்கு உறவினர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இந் நிலையில் கௌடாவின் தந்தையை அதிரடிப் படையினர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கௌடாவை அடையாளம் காட்டுமாறும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறும் கௌடாவின் தந்தை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>செத்தும் சாதித்த வீரப்பன்..!</b>
<img src='http://www.thatstamil.com/images24/veerappan250.jpg' border='0' alt='user posted image'>
என்னை உயிருடன் பிடிக்கவே முடியாது, எனது பிணத்தைத்தான் காவல்துறையால் கைப்பற்ற முடியும் என்று தான் விடுத்த சவாலை நிறைவேற்றிவிட்டான் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
தேவாரத்தின் தலையை கொய்யாமல் விட மாட்டேன் என்று கருவியிருந்தவன் வீரப்பன். அதேபோல கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக இருந்த சங்கர் பித்ரியையும் கொல்லாமல் சாக மாட்டேன் என்று கர்ஜித்தவன் வீரப்பன்.
மேலும் என்னை யாராலும் உயிருடன் பிடிக்க முடியாது. காவல்துறை மட்டுமல்ல ராணுவமே வந்தாலும் என்னை உயிருடன் பிடிக்க முடியாது. முடிந்தால், நான் செத்தால் எனது உடலை வந்து காவல்துறையினர் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று சவால் விட்டிருந்தான் வீரப்பன்.
இப்போது வீரப்பனின் அந்த சவால் வென்றிருக்கிறது.
வீரப்பனைப் பிடிக்க பல கோடிகளை செலவழித்தும், முடியாமல் திணறிய தமிழக அதிரடிப்படை இப்போது வீரப்பனை பிணமாகத்தான் பிடித்திருக்கிறது.
வீரப்பன் கொல்லப்பட்டதற்காக அதிரடிப்படையினர் மகிழ்ச்சியடைந்தாலும், அவனை உயிருடன் பிடிக்க முடியாதது இந்தப் படைக்குக் கிடைத்த சறுக்கல்தான்.
உயிருடன் பிடிபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தால், அவனுக்கு பின்னால் இருந்து இயங்கிய, அவனை வைத்து பலன் கண்ட பல பண முதலைகள், கரை வேட்டிகளின் வண்டவாளம் வெளியில் வந்திருக்கும்.
<b>மிருகம் செத்தது: பிரமிளா நாகப்பா</b>
இதற்கிடையே வீரப்பனால் கொல்லப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி கூறுகையில்,
வீரப்பன் என்ற மிருகம் செத்திருக்கிறது. கடவுள் தண்டனை வழங்கிவிட்டார். இன்னும் பல உயிர்கள் பலியாவதற்கு முன்பாக அவனைக் கொன்றது மிகவும் சந்தோஷம். அவனை உயிரோடு பிடித்திருந்தால் பல ரகசியங்கள் வெளியில் வந்திருக்கும். இனி அந்த ரகசியங்கள் அப்படியே புதைந்து போகும்.
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 439
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மனைவியிடம் ஒப்படைக்கப்படும் வீரப்பனின் உடல்
தர்மபுரி:
சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது மனைவி முத்துலட்சுமி சில உறவினர்களுடன் தர்மபுரி வந்தார்.
முத்துலட்சுமி சென்னையில் வசித்து வருகிறார். நேற்றிரவு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் சோகத்தில் மூழ்கிய முத்துலட்சுமி தர்மபுரி விரைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த அவரைச் சந்திக்க நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அவரைப் படமெடுக்க முயன்ற நிருபர்களை முத்துலட்சுமி கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
இதையடுத்து அவரை தனி அறைக்குக் கொண்டு சென்றனர் போலீசார். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின் வீரப்பனின் உடல் முத்துலட்சுமியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. வீரப்பனுக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல சேத்துக்குளியானின் உறவினர்களும் அவனது உடலைப் பெற்றுச் செல்ல மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அண்ணன் மனு:
இதற்கிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரப்பனின் அண்ணன் மாதையன், வீரப்பனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வீரப்பனுக்கு உதவியதாக மாதையன் கைது செய்யப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந் நிலையில் தம்பியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் செல்ல அனுமதி கோரியுள்ளார்.
கிராமத்தினர் கோஷம்:
இதற்கிடையே வீரப்பனின் உடல் வைக்கப்பட்டுள்ள தர்மபுரி மருத்துவமனைக்கு அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் வந்தனர். அவர்கள் வீரப்பனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி அழுது புலம்பினர்.
ஆனால், அவர்களை மருத்துவமனைக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதே போல வீரப்பன் உடலைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் தர்மபுரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
வீரப்பன் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நிருபர்கள், போட்டோகிராபர்கள், அதிரடிப்படையினர், போலீசார் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வீரப்பன் உடல் வெளியே எடுத்து வரப்படும்போது எப்படியாவது பார்த்து விடுவது என்ற முடிவல் இருக்கும் பொது மக்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இதனால் தர்மபுரி அரசு மருத்துவமனை முன் மிகப் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மருத்துவமனை முன் கூட்டம் காரணமாக போக்குவரத்து வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டது.
தமிழ்த் தீவிரவாதியின் குடும்பம் வருகை:
இதற்கிடையே வீரப்பனுடன் கொல்லப்பட்ட சேதுமணி தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் தேடப்பட்ட சேதுமணி இப்போது வீரப்பனுடன் சேர்ந்து மரணம் ஏய்தியுள்ளார்.
அவரது உடலை அடையாளம் காட்ட அவரது குடும்பத்தினரை ஜெயங்கொண்டத்தில் இருந்து போலீசார் அழைத்து வந்துள்ளனர். உடலையும் அவர்களிடமே ஒப்படைக்கவுள்ளனர்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
வீரப்பன் உடல் புதைக்கப்பட்டது
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் இன்று மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அதிகாலையில் புதைக்கப்பட்டது. வீரப்பனின் உடலை அவனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல போலீஸார் அனுமதிக்காததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் உடல்கள் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் வீரப்பனின் உடல் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் கொடுக்கப்பட்டது.
வீரப்பனின் உடலை முத்துலட்சுமி கண்ணீருடன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வீரப்பனின் உடல் மூலக்காடு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று இரவு 8 மணியளவில் வீரப்பனின் உடல் மூலக்காடு வந்து சேர்ந்தது. அவனது உடலைப் பார்த்ததும் குழுமியிருந்த வீரப்பனின் உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வீரப்பன் உடலைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.
ஆனால் கிராம எல்லையிலேயே போலீஸார் வீரப்பன் பிணம் வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இப்படியே மயானத்திற்குக் கொண்டு போய் தகனம் செய்து விடுங்கள் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி போலீஸாருடன் கடுமையாக வாதாடினார். இந் நிலையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் சுகுமாறன் ஆகியோர் வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவருடன் அங்கு வந்தார்.
அவர்கள் வீரப்பன் குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பேசினர். மேலும், வீரப்பன் உடலை எரிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் வழக்கு, விசாரணை வந்தால் உடலை மீண்டும் தோண்டியெடுக்க வசதியாக புதைக்கத்தான் போகிறோம்.
வீரப்பன் குடும்ப குல வழக்கப்படி பகலில்தான் பிணத்தை அடக்கம் செய்வார்கள். எனவே போலீஸார் அதைத் தடுக்கக் கூடாது. வீரப்பனை சுட்டதுடன் அவர்களது வேலை முடிந்து விட்டது. புதைப்பதா, எரிப்பதா, எப்போது இறுதிச் சடங்குகளை செய்வது என்பது வீரப்பனின் குடும்ப விஷயம் என்று கடுமையாக வாதாடினர்.
இருப்பினும் போலீஸார் மிகவும் உறுதியாக இருந்தனர். பிணத்தை கிராமத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இந் நிலையில் அங்கு வந்த சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலுடன் வீரப்பன் குடும்பத்தினரும், கொளத்தூர் மணியும் பேசினர். இதையடுத்து பிணத்தை அங்கேயே வைத்திருந்து விட்டு காலையில் அடக்கம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனால் ஆம்புலன்ஸ் கிராம எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 6.30 மணியளவில் வீரப்பன் உடல் மூலக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. கோவை சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள வீரப்பனின் சகோதரர் மாதையன் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, மகள்கள் வித்யாராணி, பிரபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேபோல, சேத்துக்குளி கோவிந்தனின் உடல் மூலக்காடு அருகே உள்ள கோரப்பள்ளம் என்ற இடத்தில் நேற்று இரவு 8 மணிக்கு எரியூட்டப்பட்டது. சேதுமணியின் உடல் அரியலூர் மாவட்டம் காட்டம்பாடி கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. மற்றொரு கூட்டாளியான சந்திரே கௌடாவின் உடல் சத்தியமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.
thatstamil.com
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>வீரப்பனின் பணம், ஆயுதங்கள் கதி என்ன?</b>
வீரப்பனும் அவனது நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டுவிட்டாலும் இன்னும் அவனது ஆட்கள் சிலரும், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தினரும், வீரப்பனின் ஆயுதங்களும், கோடிக்கணக்கான பணமும் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆட்களையும் ஆயுதங்கள், பணத்தை தேடும் பணியில் அதிரடிப்படையினர் தொடர்ந்து ஈடுபடவுள்ளனர். இதனால் அதிரடிப்படையை உடனே கலைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட்டுவிட்டது.
யானை தந்தம், சந்தன மரங்கள் கடத்தியதில் ஏராளமான பணம் ஈட்டிய வீரப்பன் பின்னர் ஆட்களைக் கடத்தி லட்சங்களைப் பறித்து வந்தான். பின்னர் கோடிகளுக்கு முன்னேறிவிட்டான். குறிப்பாக ராஜ்குமாரை விடுவிக்க அவனுக்கு ரூ. 4 கோடி தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவன் வசம் பல கோடி ரூபாய் இருந்தது உறுதி.
மேலும் ஏராளமான துப்பாக்கிகள், கண்ணி வெடிகள், தோட்டாக்களும் வைத்திருந்தான் வீரப்பன்.
இந்தப் பெரும் பணத்தையும் ஆயுதங்களையும் காட்டுப் பகுதி கிராமங்களில் தனக்கு மிக நெருங்கியவர்களிடம் பதுக்கி வைத்திருந்தான். மேலும் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே இவற்றை புதைத்தும் வைத்திருந்தான். இப்போது இவற்றை ட்ரேஸ் செய்து கையப்படுத்துவது எப்படி என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறது அதிரடிப்படை.
மேலும் காட்டுப் பகுதியில் தனி தமிழ்நாட்டுக் கொடியையும் ஏற்றினார்கள் வீரப்பனுடன் இருந்த தமிழ் தேசிய விடுதலைப் படையினர். இவர்கள் தொடர்ந்து காட்டில் தான் பதுங்கியிருக்கிறார்கள். இவர்களையும் பிடிக்க அதிரடிப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
<b>வீரப்பன் முன்பே பிடிபட்டானா..?</b>
இதற்கிடையே வீரப்பனை பல மாதங்களுக்கு முன்பே அதிரடிப்படை பிடித்துவிட்டதாகவும், இப்போது ஜெயலட்சுமி விவகாரத்தில் காவல்துறையின் பெயருக்கு பெரும் களங்கம் நேர்ந்துள்ளதால், விஷயத்தை திசை திப்ப வீரப்பனை எண்கௌன்டர் போட்டு கதையை முடித்துவிட்டனர் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
<b>சேத்து மணி கையில் பா.ம.க சின்னம் :</b>
வீரப்பனுடன் சுட்டுக் கொல்லப்பட்ட சேத்து மணியின் கையில் பி.எம்.கே. என்ற பச்சை குத்தப்பட்டு அருகில் மாம்பழச் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால் இவன் பாமகவைச் சேர்ந்தவன் என்றும், அவனுக்கு பா.ம.கவினருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், சேத்துமணியை கொன்றுவிட்டு, கையில் இந்த பச்சையைக் குத்தியதே போலீஸாகத்தான் இருக்க முடியும் என்கின்றனர் பா.ம.கவினர்.
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>கொண்டாட்டத்தில் வீரப்பனின் கிராமம்</b>
இத்தனை ஆண்டுகளாய் வீரப்பனுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னாவாகி வந்த வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தம் கிராம மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
வீரப்பனின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள கொள்ளேகாலை அடுத்த கோபிநத்தமாகும். இங்கு தமிழர்களும் கன்னடர்களும் சமமான அளவில் வசிக்கின்றனர்.
இக் கிராமத்தில் வீரப்பனுக்குச் சொந்தமாக 19 ஏக்கர் நிலம் உள்ளது. வீரப்பன் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அதிரடிப் படையினர் கோபிநத்தத்துக்கு வந்து விசாரணை என்ற பெயரில் கிராம மக்களை அடிக்கடி பயங்கரமாக துன்புறுத்தி வந்தனர்.
வீரப்பனுக்கு உதவியதாக பல குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். அதே போல போலீசிடம் தன் ஆட்களைக் காட்டிக் கொடுத்ததாக சந்தேகப்பட்ட வீரப்பனும் தனது ஆட்களை வைத்து இந்த ஊரைச் சேர்ந்த பலரை கொன்றிருக்கிறான்.
இப்படி இரு பக்கமும் அடி வாங்கி வதைபட்ட இந்தக் கிராமத்தினர் வீரப்பன் கொல்லப்பட்ட செய்தி வந்தது முதல் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து வருகின்றனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும்மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஊரைச் சேர்ந்த, வீரப்பனின் சித்தி மாரக்காள் நிருபர்களிடம் பேசுகையில்,
வீரப்பனால் இந்தக் கிராமத்திற்கு எந்த பயனுமில்லை. அதிரடிப்படையினரால் தொல்லை ஏற்பட்டதுதான் மிச்சம். எனவே வீரப்பனை சுட்டுக்கொன்றதில் எங்களுக்கு வருத்தம் இல்லை. இனிமேல் நாங்கள் எந்தத் தொல்லையுமின்றி, நிம்மதியாக இருப்போம் என்றார்.
வீரப்பனின் முன்னாள் கூட்டாளி கோவிந்தராஜ் பேசுகையில்,
வீரப்பனைக் காட்டிலும் அதிரடிப் படையினரால்தான் நாங்கள் பல தொல்லைகளை அனுபவித்தோம். எங்களது குழந்தைகளின் படிப்பு பாழானது. 40 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்தும், எங்களால் பட்டா பெற முடியவில்லை.
வீரப்பன் கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது. இருப்பினும் அதை வெளிப்படையாக தெரிவித்தால் அதிரடிப் படையினரால் மீண்டும் தொல்லை ஏற்படும் என்ற பயம் இருக்கிறது. எனவே, வீரப்பன் இறந்தது மகிழ்ச்சி என்று கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இனியாவது கிராம மக்கள் பிரச்சினையின்றி, நிம்மதியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் ஓப்பனாக.
வீரப்பன் இங்கு பிறந்திருந்தாலும் இக் கிராமத்துக்குள் அவன் நுழைந்து பல ஆண்டுகளாகின்றன. கிராமத்தில் தொடர்ந்து ரகசிய போலீஸ் கண்காணிப்பு இருந்ததால் உள்ளே வருவதைத் தவிர்த்தே வந்தான். பிரச்சனைகளை ஆட்களை அனுப்பி பேசுவதே அவன் வழக்கம். போலீசுக்கு உளவு சொல்பவர்களையும் ஆள் வைத்தே கதையை முடித்து வந்தான் வீரப்பன்.
வீரப்பனை 15 வயதில் பார்த்திருக்கிறோம் என்று இக்கிராமத்தைச் சேர்ந்த ஐயன்துரை, படையாச்சி ஆகியோர் கூறுகின்றனர். அதற்குப் பின் உள்ளே வந்ததே இல்லையாம்.
thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|