10-07-2004, 11:20 PM
<b>தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல்</b>!
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் நேற்றுப் பகல் அதிரடிப் பாய்ச்சல் நடத்தியிருக்கின்றனர்.
தலைநகர் பிராங்க்பேர்ட்டில் உள்ள அவரது வீடு ஜேர்மன் காவல்துறையினரால் திடீரென முற்றுகையிடப்பட்டது. வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களையும் சோதனை செய்யவேண்டும் என்ற பெயரில் அவர்கள் அள்ளிச்சென்றனர்.
சம்பந்தப்பட்ட பெண் ஊடகவியலாளரையும், அவரது கணவரையும் நீதிமன்றில் ஆஜராகும்படி தெரிவிக்கும் நீதிமன்ற உத்தரவையும் காவல்துறையினர் அவர்களிடம் கையளித்தனர்.
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது.
31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் ரமேஷ் வவுனியன் (வயது 36) இலங்கை, வவுனியாவில் பிறந்தவர்.
நீண்டகாலம் ஜேர்மனியில் வசித்துவரும் இவர்கள் ஜேர்மன் பிரஜைகளாவர். அவர்களின் சிறுபிள்ளைகளான பார்த்தீபன் (திலீபன்) என்ற மகனும், வவுனிதா என்ற மகளும் கூட ஜேர்மன் பிரஜைகளே. இவர்களது வீடே நேற்று சுற்றிவளைக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல்களோடு இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே ஜேர்மன் காவல்துறையினர் இவர்களது வீட்டைச் சுற்றிவளைத்தனர் என்று கூறப்படுகின்றது. சுமார் இருபத்தைந்து காவலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் சகிதம் அதிரடிப் பாய்ச்சல் நடத்தினர்.
அச்சமயம் கணவர் ரமேஷ் வவுனியன், தனது வேலைத்தளமான டிராக்டர் கம்பனியில் பணியிலிருந்தார். காவல்துறையினர் அங்கு சென்று அவரை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீடு அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது. இணையத்தள வானொலிக்கான கருவிகள் மற்றும் ஊடகவியலாளரின் இலத்திரனியல் கருவிகள் உட்பட வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் - நிலத்தில் விரித்திருந்த தரைவிரிப்பு உட்பட சகலவையும் - பொலீஸாரால் அள்ளிச்செல்லப்பட்டன.
பரிசோதனைக்காக அவற்றைத் தாங்கள் கொண்டு செல்கின்றார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர் என அறியவந்தது. சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணிக்கும் நீதிமன்ற உத்தரவையும் அவர்களுக்குப் பொலீஸார் கையளித்தனர்.
இலங்கையில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருபவர் சாந்தி ரமேஷ். அவர் அண்மையில் கொழும்பு வந்திருந்தார். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய அதன் வருடாந்தப் பொதுக்கூட்ட நிகழ்வில் அவர் பங்கு கொண்டார்.
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் நடேசனின் துணைவியாருக்கு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஒருதொகை பணத்தை, நடேசனின் துணைவியாரிடம் அந்த நிகழ்ச்சியில் வைத்துக் கையளித்தார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக அதுவும் பெண் ஊடகவியலாளருக்கு எதிராக - பயங்கரவாதத் தடுப்புப் போர்வையில் மேற்குலக பொலீஸார் பாய்ச்சல் நடத்தியிருப்பது தமிழ் ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
நன்றி புதினம்.கொம்..

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: