Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேர்மனியில் தமிழரின் அவலம்
#21
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கறுப்பு நிறமானவர். அவரின் படம் கீழே.

<img src='http://edition.cnn.com/2000/WORLD/europe/03/03/un.kosovo/link.kofi.annan.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் கொலின் பவலும் கறுப்பு நிறமானவர் தான். அவரின் படம் கீழே
<img src='http://www.sudantribune.com/IMG/jpg/Colin_Powel-2.jpg' border='0' alt='user posted image'>

பாண்டியன், அடிப்படையில் இவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது. இவர்கள் படிப்பை குப்பை கொட்டும் அளவுடன் நிறுத்திக்கொள்ளவும் இல்லை. குப்பை கொட்டுவதற்கு காரணம் எனது தோலின் நிறம் என்று சாட்டு சொல்லி தமது சோம்பேறித்தனத்தையும் பிற்போக்குதனத்தையும் மறைக்கும் குணமும் இவர்களுக்கு இல்லை.

உண்மையில் உங்களை போன்றவர்கள் தமிழீழம் போகக்கூடாது. அங்கேயும் போய் எப்படி ஒட்டுண்ணிகளாக வாழலாம் என்று பார்ப்பீர்களேயன்றி, அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கும் ஆர்வமோ, ஆற்றலோ அல்லது பணமோ கூட உங்களிடம் இல்லை.
Reply
#22
யூட் சொன்ன பாதி விடயத்தினை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். அவுஸ்ரேலிய நாட்டிலும் அனைவரும் வந்தேறு குடிகள் தான். வெறும் 300 வருசத்திற்கு முன்னர். இங்கே என்னைப் பார்த்து ஒருவன் நீ வந்தேறு குடி என்றால் சொன்ன அவனும் வந்தேறு குடி தான். ஆனால் யூட் நீங்கள் எதற்காக வெளிநாடு வந்து சேர்ந்தீர்கள். பணம் சேர்க்க, நல்ல வேலை செய்ய, கொஞ்சம் வசதியாக வாழ இதற்குத் தானே. இதனை எவர் செய்தாலும் அது தவறு கிடையாது. உங்களை அழைத்த நாடு (கனடா????) கண்டிப்பாக நீங்கள் அங்கே வரத்தான் வேண்டும் என்று வற்புறுத்த வில்லையே. நீங்களாகத் தானே விரும்பி போனீர்கள். உங்களைப் போலவே பணம் சம்பாதிக்க வாழ்வில் நல்ல நிலைக்கு வர இவற்றிற்காகத் தானே வேறு நாடுகளுக்கும் மக்கள் போனார்கள். நீஙக்ள உங்கள் படிப்பை காட்டி போனீர்கள். அவர்கள் இனப்பிரச்சனையை காட்டி போனார்கள். மற்றும் படி போன நோக்கம் ஒன்று தான். உங்களுக்கும் அவர்களுக்கும்.

..
Reply
#23
சயந்தன்,

உங்களுடைய கருத்தை நான் ஏற்று கொள்கின்றேன். நான் படித்து வேலை எடுத்துக்கொண்டு உழைப்பதற்காக என்று சொல்லி வந்தேன். மற்றவர்கள் பிறந்த அதே போர்க்களத்தில் தான் பிறந்து வாழ்ந்து படித்து வந்தேன்.

அகதி, இருக்க இடம் தா என்று கேட்டு (ஆனால் உண்மையில் நீங்கள் சொல்வது போல உழைப்பதற்காக, புலி கொல்கிறது என்று பொய் கூட சொல்லி) வந்து, கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்து முன்னேறுவோம் அல்லது ஒரு வணிகத்தை தொடங்கி நிலை பெறுவோம் என்று பார்க்காமல், தோலின் நிறத்தை சாட்டு சொல்லிக் கொண்டு ஒட்டுண்ணிகளாக வாழ்வதை தான் என்னால் ஏற்று கொள்ள முடியாமல் இருக்கிறது.

நான் அகதிகளாக வந்து இரவு முழுவதும் எரிபொருள் நிலையத்தில் நின்று உழைத்து, பகலில் விரிவுரை அரங்கில் துங்கி துங்கி விரிவுரை கேட்டு பொறியியலாளராகி பின்னர் பொறியியலாளராக வேலை எடுத்து அதைக்காட்டி குடியுரிமை பெற்ற தலைசிறந்த எமது மாணவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்கள் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் மாவீராக, நாலாவதை லண்டன் அனுப்பி விட்டு போரிலே மாண்டு போன பெற்றோருக்கு பிறந்த உண்மையான அகதிகள். அதனால் உணர்ச்சியுடன் படித்தார்கள். பாராட்டி குடியுரிமை கொடுக்குமளவுக்கு உயர்ந்தார்கள்.. இப்போது வேலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு வன்னியில் அபிவிருத்தி பணி செய்கின்றார்கள்.

அதே வேளை தன்னை விடுதலைப்புலிகள் கற்பழித்ததாக எழுதிக்கொடுத்து வடக்கு கிழக்கில் நீ இருக்கலாம் தானெ என்று சொல்லி நாடு கடத்த வந்த அரசிடம் தன்னை இருக்க விடச்சொல்லி மன்றாடிய அகதிகளும் இருக்கிறார்கள். அகதிக்கோரிக்கை மேனமுறையீடுகளுக்கு பார்வையாளராக செல்லும் தமிழீழத்தொன்டர் ஒருவர் சொல்லிக்கவலைப்பட்ட விடயம் இது. வீடுதலைப்புலிகளின் காரணமாக தாம் இலங்கையில் வாழ முடியவில்லை என்று எழுதிக் கையெழுத்து போட்டுக்கொடுத்த அகதிகள் பல்லாயிரக்கணக்கானவர்கள். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளல்லர் என்று நாம் அரசுக்கு எடுத்து சொல்லும்போதெல்லாம் இந்த புள்ளிவிபரத்தை தான் துக்கி முகத்துக்கு முன்னால் பிடிக்கினறார்கள். பணத்துக்காகவும் வசதிக்காகவும் போராட்டத்தையும் மாவீரர்களையும் ஏன் எதையுமே விற்க தயாரானவர்களை ஏனொ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
''
'' [.423]
Reply
#24
இனும் ஒன்றை கவனிக்க வேண்டும் யூட் அண்ணா.. இங்கு கேஸ்சுக்கு எழுதிறவை அந்தந்த மக்கள் இல்லை... அவ்ர்களுக்கு என்ன எழுதி இருக்கு என்றே தெரியாது சில வேளைகளில் கேஸ் திகதிக்கு ஒருவாரம் முன் தான் மொழிபெயர்த்து ஏதோ பாடமாக்கிவிட்டு செல்கிறார்கள்... எனவே இதனை கேஸ் எழுதும் எம் தமிழ் அறிவுயீவிகள் தான் கவனிக்கவேண்டும்..... அவர்கள் தான் தமது வேலையை இலகுவாக்க இதனை கண்டபடி எழுதுகிறார்கள் என்பது எனது கருத்து.. எனவே இப்படியான மொழிபெயர்பு மற்றும் புலம்பெயர் மக்களுக்கு கேஸ் கதை எழுதி கொடுக்கும் தமிழ் பெரியார்கள் தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
<span style='color:darkblue'>
சில நாட்களுக்கு முன் நகைச்சுவையான சம்பவம் ஒன்று கேள்விப்பட்டேன்
அதாவது ஒரு நண்பனுக்கு ஒரு கேஸ் எழுதுபவர் கேசுக்கு கதை எழுதி கொடுத்திருக்கிறார் அதில் இவர் படித்த பாடசாலைக்கு ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலையின் பெயரை கொடுத்திருந்தாராம்.... இது நடந்தது சிலவருடங்களுக்கு முன்... ஆனால், விசாரணை செய்தவர்கள் இதனை கண்டுபிடிக்கவில்லையாம்... எனது நணருக்கும் பிறகுதான் இவ் விடையம் தெரியுமாம் .... இதனை சில நாட்கள் முன் அவரது மற்றைய நண்பர்கள் சொல்லி சிரிக்கும் போது தான் எனக்கே தெரிந்தது..

இனி வரும் காலங்களில் அது ஆண்கள் கல்லூரி என்றே கனடிய அலுவலர்கள் வாதாடினாலும் வாதாடுவார்கள்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: [அந்த கேஸ் எழுதுபவர் எத்தினை பேருக்கு எழுதிக்கொடுதாரோ]



இப்படியான சிலபேர் பிழையாக எழுதுவதற்கு என்று இருக்கும் போது கற்பனை கதையில் பிறேக் இல்லாமல் காடு மேடெல்லாம் தாண்டி சுத்தி வருவினம் என்ன...! நல்ல காலம் இவர்கள் எல்லாம் கதை எழுத வெளிக்கிட்டால் எழுத்தாளர்கள் பாடு அம்போ தான்..</span>
[b][size=18]
Reply
#25
கவிதன்,

இந்த கேஸ் எழுதிக்கொடுக்கும் வியாபாரிகள் தான் இப்படி விடுதலைப்புலிகளை பற்றி கண்டபடி எழுதிக்கொடுப்பவர்கள். சிலர் எப்படி எழுதவேண்டாம் என்று சொன்னால், உனக்கென்ன விசரா, திருப்பி அனுப்பி போடுவாங்கள் என்று வெருட்டி எழுதிக்கொடுக்கிறார்கள்.

உண்மையில் விடுதலைப்போராட்டத்துக்கு சாதகமாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுத்தோம் என்றும் சிங்களவர்கள் கூட எழுதிக்கொடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

நகைச்சுவையான ஒரு விடயம் ஜேர்மனியில் நடந்தது. ஒருவருக்கு அவரது மாமனார் கதை எழுதிக் கொடுத்திருந்தார். இவர் ஊரில் விதானை என்றும் அதனால் விடுதலைப்புலிகள் இவரை கொல்ல தேடுகின்றார்கள் என்றும் எழுதினார். விதானைக்கு ஆங்கிலத்தில் மேயர் என்று நினைத்து அதையும் சரியாக எழுத தெரியாமல் மேஜர் என்று எழுதிக் கொடுத்து விட்டார். விசாரணையில் அவர்கள் இவன் ஆமிக்காரன் ஆனபடியால் இலங்கையில் ஆமிக்காரனுக்கு என்ன பிரச்சினை என்று நாடு கடத்த உத்தரவு கொடுத்து விட்டார்கள். அப்ப அவர் கள்ளமாக கனடா வந்து விட்டார். அங்க என்ன கதை எழுதினாரோ?
''
'' [.423]
Reply
#26
இலங்கைத் தமிழ் அகதிகதிகளிடம் மீளப்பெறப்படும் அரசியல் தஞ்ச வதிவிட அனுமதி இப்படி மறுபிறவி எடுக்குதோ?
<img src='http://germantamilradio.com/tamil/02propertyBild.jpg' border='0' alt='user posted image'>

மேலதிக விபரங்களுக்;கு:
இங்கே அழுத்தவும்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#27
படிப்பென்பதற்கு முன்னர் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் பாடசாலையை இடையில் விட்டு படிக்காத ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள். ஆக எல்லாரும் படித்து விடலாம் என்று கருத வேண்டாம். அடுத்தது இது அவர்கள் சென்றடைந்த நாடுகளையும் பொறுத்தது. நீங்கள் என்னதான் படித்துக் கிழித்தாலும் அவை தங்களுடைய சட்ட விதிகளின் பிரகாரம் தான் குடியுரிமை தருகின்றன. எல்லா நாடுகளுமே கனடா போலவும் அவுஸ்ரேலியா போலவும் குடியுரிமைகளை தூக்கி தந்து விடுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் ஒட்டுண்ணிகள் போல வாழ்கின்றார்கள் என்ற கருத்து எதனை சொல்ல வருகிறது. கடந்த விடுமுறையில் நான் சுவிஸ் போயிருந்தேன். கணவனும் மனைவியுமாக எத்தனை கஸ்ரப்படுகிறார்கள் தெரியுமா? காலையும் மாலையும் அவர்கள் கஸ்ரப் படுவது நீங்கள் என்ன நோக்கத்திற்காக சென்றீர்களோ அதற்காகவே. பணம் சம்பாதிக்கவே, நல்ல வாழ்க்கை தரத்திற்கா கவே. கனடா போல அவுஸ்ரேலியா போல அந்த நாடுகளும் 1 வருடத்திலோ அல்லது 2 வருடத்திலோ குடியுரிமை கொடுத்தால் அவர்களும் இன்று அந்த நாட்டு பிரஜைகள் தான். எரிபொருள் நிலையத்தில் வேலை செய்து எல்லோராலும் படிக்க முடியாது. அவர்கள் கடன் பட்டு வந்த தொகை ஊரில் வட்டியும் குட்டியுமாக வளர்ந்திருக்கும். அக்காவோ தங்கையோ திருமணத்திற்காக காத்திருப்பாள். இந்த லட்சனத்தில் சொந்தமாக தொழில் தொடங்குவதையும் படித்து முடிப்பதையும் எப்படி நினைத்துப் பார்க்க முடியும். 1997 வரை வன்னியில் இருந்தவன் நான். வன்னி ஒரு சோமாலியாவாக றுவாண்டாவாக மாறாமல் அங்கிருந்தவர்கள் ஒரு வேளை கஞ்சியாவது குடித்தார்கள் என்றால் அதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும். இறுதியாக ஒரு விடயம். நான் இங்கே அகதியாக வரவில்லை. கேஸ் அது இது எதுவுமில்லாமல் இயல்பாக விசா எடுத்து வந்தவன். ஆனால் நான் இப்படி வந்ததற்கு நீங்கள் சொன்னது போல வணிகம் எதுவும் தொடங்காமல் படிக்காமல் உங்களது வார்த்தைகளில் ஒட்டுண்ணியாய் வாழ்ந்த என் தந்தை தான் காரணம். நியாயமாய்ப் பார்த்தால் வெளிநாடுகளில் பெரும்பாலானாவர்கள் புரிகின்ற தொழிலை இலங்கையில் செய்து அவர்களால் வருமானம் ஈட்ட முடியாது. அவர்கள் அங்கேயே இருக்கட்டும். ஆனால் நானும் நீங்களும் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இலங்கையில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது. குடியுரிமையை உதறி எறிந்து விட்டு வாருங்கள். நானும் வருகிறேன். என்ன இருந்தாலும் அது நம் அன்னை மண்ணல்லவா?

..
Reply
#28
ஏன் அண்ணா அண்ணி சுவிஸ்ல தான் இருக்கிறாவா...?? :wink: உங்கட குழுறலை உண்மையா சொல்லியிருக்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
ஆவி Wrote:இலங்கைத் தமிழ் அகதிகதிகளிடம் மீளப்பெறப்படும் அரசியல் தஞ்ச வதிவிட அனுமதி இப்படி மறுபிறவி எடுக்குதோ?
<img src='http://germantamilradio.com/tamil/02propertyBild.jpg' border='0' alt='user posted image'>

மேலதிக விபரங்களுக்;கு:
இங்கே அழுத்தவும்
நல்ல கதை தான்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
அவரும் விடுதலைப்புலிகளின் காரணமாக வடக்கு கிழக்கிலும் வாழமுடியவில்லை என்று எழுதிக்கொடுத்தவர்களில் ஒருவரா?

நான் இலங்கையில் போதிய வருமானத்துடன் கூடிய சிறந்த தொழில் செய்து அந்த நாடு வேண்டாம் என்று எனக்கு பிடித்தமான நாட்டை தெரிவு செய்து அவர்கள் வேலையும் தந்து இருப்புரிமையும் தர, சந்தோசமாக இந்த நாட்டை எனது நாடாக ஏற்று கொண்டவன் நான்.

பிறப்பு எனது வாழ்வை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கைக்கு நான் எதிரானவன். பிறப்பால் (சாதி முறை நிர்ணயிக்கும்) செய்யும் தொழில் , பேசும் மொழி, வாழும் நாடு அனைத்தையுமே மக்கள் தாமாக தெரிந்து கொள்ளும் சுதந்திரம் தான் தனிமனித சுதந்திரம்.

நான் பிறந்து வளர்ந்த நாடான இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக வரவேண்டும் என்ற விருப்பமும் அதற்கான தேவைகள் என்னிடம் கேட்கப்படும் போது செய்தும் வருகின்றேன்.

மற்றவர்கள் நாடுவிட்டு நாடு மாறுவதையோ உழைப்புக்காக இடமபெயர்வதையோ நான் தவறு என்று சொல்லவும் இல்லை மாறாக அதை செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். அது தான் தனிமனித சுதந்திரம்.
''
'' [.423]
Reply
#31
Quote:. ஆனால் நான் இப்படி வந்ததற்கு நீங்கள் சொன்னது போல வணிகம் எதுவும் தொடங்காமல் படிக்காமல் உங்களது வார்த்தைகளில் ஒட்டுண்ணியாய் வாழ்ந்த என் தந்தை தான் காரணம்.
அவரும் விடுதலைப்புலிகளின் காரணமாக வடக்கு கிழக்கிலும் வாழமுடியவில்லை என்று எழுதிக்கொடுத்தவர்களில் ஒருவரா?

Quote:ஆனால் நானும் நீங்களும் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இலங்கையில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது.
நான் இலங்கையில் போதிய வருமானத்துடன் கூடிய சிறந்த தொழில் செய்து அந்த நாடு வேண்டாம் என்று எனக்கு பிடித்தமான நாட்டை தெரிவு செய்து அவர்கள் வேலையும் தந்து இருப்புரிமையும் தர, சந்தோசமாக இந்த நாட்டை எனது நாடாக ஏற்று கொண்டவன் நான்.

Quote:குடியுரிமையை உதறி எறிந்து விட்டு வாருங்கள். நானும் வருகிறேன். என்ன இருந்தாலும் அது நம் அன்னை மண்ணல்லவா?
பிறப்பு எனது வாழ்வை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கைக்கு நான் எதிரானவன். பிறப்பால் (சாதி முறை நிர்ணயிக்கும்) செய்யும் தொழில் , பேசும் மொழி, வாழும் நாடு அனைத்தையுமே மக்கள் தாமாக தெரிந்து கொள்ளும் சுதந்திரம் தான் தனிமனித சுதந்திரம்.

நான் பிறந்து வளர்ந்த நாடான இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக வரவேண்டும் என்ற விருப்பமும் அதற்கான தேவைகள் என்னிடம் கேட்கப்படும் போது செய்தும் வருகின்றேன்.

மற்றவர்கள் நாடுவிட்டு நாடு மாறுவதையோ உழைப்புக்காக இடமபெயர்வதையோ நான் தவறு என்று சொல்லவும் இல்லை மாறாக அதை செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். அது தான் தனிமனித சுதந்திரம்.
''
'' [.423]
Reply
#32
Quote:. ஆனால் நான் இப்படி வந்ததற்கு நீங்கள் சொன்னது போல வணிகம் எதுவும் தொடங்காமல் படிக்காமல் உங்களது வார்த்தைகளில் ஒட்டுண்ணியாய் வாழ்ந்த என் தந்தை தான் காரணம்.
அவரும் விடுதலைப்புலிகளின் காரணமாக வடக்கு கிழக்கிலும் வாழமுடியவில்லை என்று எழுதிக்கொடுத்தவர்களில் ஒருவரா?

Quote:ஆனால் நானும் நீங்களும் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இலங்கையில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது.
நான் இலங்கையில் போதிய வருமானத்துடன் கூடிய சிறந்த தொழில் செய்து அந்த நாடு வேண்டாம் என்று எனக்கு பிடித்தமான நாட்டை தெரிவு செய்து அவர்கள் வேலையும் தந்து இருப்புரிமையும் தர, சந்தோசமாக இந்த நாட்டை எனது நாடாக ஏற்று கொண்டவன் நான்.

Quote:குடியுரிமையை உதறி எறிந்து விட்டு வாருங்கள். நானும் வருகிறேன். என்ன இருந்தாலும் அது நம் அன்னை மண்ணல்லவா?
பிறப்பு எனது வாழ்வை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கைக்கு நான் எதிரானவன். பிறப்பால் (சாதி முறை நிர்ணயிக்கும்) செய்யும் தொழில் , பேசும் மொழி, வாழும் நாடு அனைத்தையுமே மக்கள் தாமாக தெரிந்து கொள்ளும் சுதந்திரம் தான் தனிமனித சுதந்திரம்.

நான் பிறந்து வளர்ந்த நாடான இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக வரவேண்டும் என்ற விருப்பமும் அதற்கான தேவைகள் என்னிடம் கேட்கப்படும் போது செய்தும் வருகின்றேன்.

மற்றவர்கள் நாடுவிட்டு நாடு மாறுவதையோ உழைப்புக்காக இடமபெயர்வதையோ நான் தவறு என்று சொல்லவும் இல்லை மாறாக அதை செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். அது தான் தனிமனித சுதந்திரம்.
''
'' [.423]
Reply
#33
உங்களுக்கு இலங்கை பிடிக்க வில்லையா? வடக்கு கிழக்கு??? இப்பொழுதெல்லாம் அங்கே புலிகளின் நிர்வாகத்தில் அளவான சம்பளத்தில் தகுதியான நபர்கள் வேண்டப் படுகிறார்கள். வாருங்களேன் போவோம். கிளிநொச்சியிலோ அல்லது புதுக்குடியிருப்பிலோ மண்ணால் ஒரு வீடு கட்டுவோம். சைக்கிள் போதும். எங்களின் நிர்வாகம். எங்கள் தலைமைக்கு வரி, எங்களின் மண்.. இதை விட வேணு என்ன வேண்டும்? வாருங்களேன்.. உங்களுக்கு இலங்கை பிடிக்க வில்லை என்று சொன்னீர்கள். இன்னொரு நாட்டை தேர்ந்தெடுப்பதற்கு உங்களிடம் படிப்பு இருந்தது. அது இல்லை என்றிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அது இல்லாமல் இலங்கை பிடிக்காமல் போனவர்கள் என்ன செய்ய முடியும்? அகதியாவதைத் தவிர?

83 களில் வெளிநாடு போனவர்களுக்கு விடுதலைப்புலிகள் பெயரை பாவிப்பதை விட அனுகூலமான இன்னொரு காரணம் இருந்தது. அது கலவரம். அவர்கள் பாதிக்கப்படாவிட்டாலும் கூட.

எல்லோருக்கும் அவர்களுக்கு பிடிச்ச நாட்டினை தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது.

கேஸ் எழுதுவது பற்றி எனக்கு சரியாக தெரியாது. எதுவோ சட்டத்தின் படி பார்த்தால் கூட இனப்பிரச்சனை என அங்கீகரிக்கப்பட்டவர்கள் இனப்பிரச்சனை தீரும் வரை திருப்பி அனுப்பக் கூடாது. விரும்பியவர்கள் வரலாம்.

ஒருவருக்கு தான் வாழும் நாட்டை தெரிநிதெடுக்கும் உரிமை இருக்குது என்று சொல்லும் நீங்கள் எப்படி அவர்களை போகச் சொல்ல முடியும்.?

விடுதலைப் புலிகள் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்று வன்னியை விட்டு புறப்பட்டேனோ அன்று முதல் மக்களை போராடுங்கள் என்று சொல்லுகின்ற தகுதியை இழந்து விட்டேன். யுத்தத்தின் விளைவுகள் எதனையும் சந்திக்காத ஏதோ ஒரு மூலையில் இருந்து பொங்கி எழடா தமிழா வீச்சரிவாள் எழடா வெட்டடா என்றெல்லாம் சில வெளிநாட்டு தமிழர்கள் போல என்னால் படம் காட்ட முடியாது. மற்றும் இலங்கையில் வெயில் அதனால் இலங்கை பிடிக்க வில்லை என்று சொன்ன சிலரையும் சுவிஸில் பார்த்திருக்கிறேன். அவர்களும் தாம் விரும்பிய நாட்டிலேயே இருக்கட்டும்.

..
Reply
#34
Quote:மற்றவர்கள் நாடுவிட்டு நாடு மாறுவதையோ உழைப்புக்காக இடமபெயர்வதையோ நான் தவறு என்று சொல்லவும் இல்லை மாறாக அதை செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். அது தான் தனிமனித சுதந்திரம்

ஆக ஒரு நாட்டிற்கு செல்ல விசா மறுக்கும் நாடுகள் எல்லாம் தனி மனித சுதந்திரத்தை மறுக்கின்றன. அப்படித்தானே... ரொம்ப நல்லாயிருக்கு! என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய விடுமுறைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கேட்டார். மறுக்கப்பட்டு விட்டது. ஆக அமெரிக்கா அவரது தனி மனித சுதந்திரத்தை மறுத்து விட்டது. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்காவே இப்படி செய்யலாமா?

..
Reply
#35
பொதுவாக அகதி அந்தஸ்திலன்றி படித்தவர்கள் என்ற பெருமையுடன் புலம்பெயர்ந்தவர்களின் மனப்பாட்டை யூட் வெளிப்படுத்தியுள்ளார்.
யூட் உங்களுக்கு இலங்கை வேண்டாம் நீங்கள் இப்போது இருக்கும் நாடு பிடித்திருக்கு என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அகதியாகி வெளிநாடு போகும் மக்களுக்கும் இலங்கையில் எங்களால் வாழமுடியாது என்று சொல்வதற்கும் உண்டு அதற்குப் பெயர்தான் தனிமனித சுதந்திரம்.

அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இலங்கை அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் எமது மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் உடம்பு நோகாமல் படித்து பட்டமும் பெற்று பின்னர் வசதியானதொரு உத்தியோகமும் பார்த்து பின்னரும் உங்களுக்கு இலங்கையில் வாழப்பிடிக்காமல் பிறதேசம் போய் அந் நாட்டையே உங்கள் நாடென்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எனது பிறந்த நாட்டுக்கு தேவைப்படும் போது உதவி செய்வேன் என்று சொல்வது வெறும் பம்மாத்து என்று தெரியும்.

எப்போது இலங்கையில் வாழப்பிடிக்கவில்லை என்று சொல்லி இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்தீர்களோ அன்றே நீங்களும் அகதிதான் உத்தியோக அகதி.
\" \"
Reply
#36
அரசாங்கங்கள் தம்மிடம் உள்ள வளங்களை தமது மக்களுக்கு போதுமான வகையில் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பை கொண்டிருக்கின்றன. இதற்காக தான் சட்டங்களை நாடுகள் கொண்டிருக்கின்றன.
இந்த வகையில் மக்களின் வரிப்பணத்தை ஒரு குறிப்பிட்ட அளவிலாள அகதிகளுக்கே எமது நாடுகள் பிரித்து வழங்க முடியும்.

சட்டவிரோதமாக பணம் தேடுவோர் பலவிதமான சட்டவிரோத முறைகளை பயன்படுத்துகின்றனர். சிலர் தனிப்பட்டவர் சொத்தை கொள்ளையடிக்கின்றனர். வேறு சிலர் அரசாங்க சொத்தை கொள்ளையடிக்கின்றனர். அவர்களுள் வரி ஏய்ப்பு செய்வோர், பொய் சொல்லி அரச நலன்புரி உதவிகள் பெறுவோர், அகதி என்று சொல்ல உழைக்க வருவோர் ஆகியோர் அடங்குவர். அடிப்படையில் இவர்கள் எல்லாரும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க சட்டங்களை மீறுவோர் ஆவர்.

Quote:பொதுவாக அகதி அந்தஸ்திலன்றி படித்தவர்கள் என்ற பெருமையுடன் புலம்பெயர்ந்தவர்களின் மனப்பாட்டை யூட் வெளிப்படுத்தியுள்ளார்.
யூட் உங்களுக்கு இலங்கை வேண்டாம் நீங்கள் இப்போது இருக்கும் நாடு பிடித்திருக்கு என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அகதியாகி வெளிநாடு போகும் மக்களுக்கும் இலங்கையில் எங்களால் வாழமுடியாது என்று சொல்வதற்கும் உண்டு அதற்குப் பெயர்தான் தனிமனித சுதந்திரம்.

அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தனிமனித சுதந்திரம் பொது மனித நலன் கருதி சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாடுகள் தமது மக்களுக்கு தேவையான ஆற்றல் உள்ளவர்களை தேடி அழைத்து சட்டரீதியாக குடிமக்களாக்குவதற்கும், அகதியென்று சொல்லி நுழைந்து பின்னர் போகமறுப்பதற்கும் உள்ள வித்தியாசம் முன்னையது நாட்டின் தேவையோடும் சட்டதிட்டங்களோடும் அமைந்திருப்பதே.

Quote:இலங்கை அரசின் இலவசக் கல்வித் திட்டத்தில் எமது மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் உடம்பு நோகாமல் படித்து பட்டமும் பெற்று பின்னர் வசதியானதொரு உத்தியோகமும் பார்த்து பின்னரும் உங்களுக்கு இலங்கையில் வாழப்பிடிக்காமல் பிறதேசம் போய் அந் நாட்டையே உங்கள் நாடென்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எனது பிறந்த நாட்டுக்கு தேவைப்படும் போது உதவி செய்வேன் என்று சொல்வது வெறும் பம்மாத்து என்று தெரியும்.

எப்போது இலங்கையில் வாழப்பிடிக்கவில்லை என்று சொல்லி இன்னொரு நாட்டில் தஞ்சம் புகுந்தீர்களோ அன்றே நீங்களும் அகதிதான் உத்தியோக அகதி.
அது உங்களுடைய அபிப்பிராயம். ஆற்றலுள்ளவர்கள் தமது செயற்றிறனை வைத்து சட்டரீதியாக உழைப்பதை பார்க்க உங்களுக்கு பொறாமையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் வாழ்ந்த அதே போர்க்களத்தில் உங்களுக்கு கிடைத்த விதமான வசதிகளோடு ஆனால் உங்களைப் பார்க்க அதிகூடுதலான முயற்சியால் முன்னேறியவர்களை நீங்கள் பார்த்து பொறாமைப்படுவது எந்த வகையிலும் உங்களுக்கு பலன் தராது.
''
'' [.423]
Reply
#37
Quote:அவர்களை உழைக்க வந்தீர்கள் உழைத்துவிட்டீர்கள் தானே திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ சண்டையென்று வந்தீர்கள் சண்டை முடிந்துவிட்டது திரும்பிப் போகலாமே என்று சொல்வதற்கோ உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
நான் வருமானத்தில் பாதியை வரியாக செலுத்துகிறேன். எனது வரிப்பணம் போலி அகதிகளுக்கு போகாமல், போர்களங்களில் வாழும் உண்மையான அகதிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்த எனக்கு புூரணமான உரிமை இருக்கிறது.


Quote:சண்டை முடிந்துவிட்டதாக உங்களைப் போன்ற புத்திஜீவிகள் நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் சொகுசான வாழ்வு இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே சண்டை முடிந்தாலும் அது தொடருகிறது என்று சொல்லுவீர்கள். சண்டை தொடரும் நாட்டில் எந்த நிறுவனம் அல்லது நாடு பணத்தை முதலீடு செய்து அதை அபிவிருத்தி செய்ய முடியும்? விடுதலைப்புலிகளோ வாருங்கள் வாருங்கள் வன்னியில் முதலிடுங்கள் என்கிறார்கள். நீங்களோ சண்டை முடியவில்லை, நாங்களை போகமுடியவில்லை என்கிறீர்கள்.


Quote:\"தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்\"
அதற்குழ் மேற்கண்ட வரிகளில் பம்மாத்து வேறு. (நான் அண்மையில் போய் வந்தவன். வந்து வேறு சிலரும் போய் பயனுள்ள செயற்திட்டங்களை செய்ய ஏற்பாடும் செய்தவன். அதே வேளை இப்படி போலி அகதிகள் போராட்டத்தை விற்று வாழ்ந்து பின் போடும் புழுகு கையெழுத்து வரிகளையும் நிறையவே கண்டிருக்கிறேன்.)
''
'' [.423]
Reply
#38
Quote:மேற்கோள்:
நான் வருமானத்தில் பாதியை வரியாக செலுத்துகிறேன். எனது வரிப்பணம் போலி அகதிகளுக்கு போகாமல், போர்களங்களில் வாழும் உண்மையான அகதிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்த எனக்கு புூரணமான உரிமை இருக்கிறது.
போலி அகதி என எதை வைத்து நிர்ணயிக்கிறீங்கள்?!
எவராவது ஒரு இலங்கைத் தமிழன் தனது நாட்டில் எங்காவது நிரந்தர உயிர் உத்தரவாதத்துடன் ஒரு சிங்களவனுக்குச் சமனான உரிமைகளுடன் வாழ முடியுமா?
மற்றும், இங்கே பிறந்து வளர்ந்த எவ்வளவோ ஐரோப்பியர்கள் அமைப்புரீதீயாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் மனிதாபிமானத்துடன் செயற்படும்போது.. இடையில் நுழைந்து குறிப்பிட்டகாலம் வரி செலுத்தி பிரசையாகிய உங்களுக்கு அகதிகளில்தான் என்னெ கருணை? என்னே கருணை?!
முந்தி கொழும்பிலை சண்டை எண்டா.. தமிழனுக்கு பிறந்ததுகள்தான் முன்னாலை நின்று தமிழனை அடிக்குமென்று சொல்லுவினம்.. அந்த ஞாபகம் வருகிறது உங்களின் கருத்தைப் பார்க்கும்போது..!!
சரி.. போலி அகதி என்று எந்தவொரு ஈழத்தமிழனையும் அழைக்க முடியுமா என்பதை மாத்திரம் மனதைதொட்டு சொல்லுங்கள்? அகதியாய் வந்தவர்கள் வந்தநிலை மறந்து ஆட்டம்போடுவது வேறு.. ஆனால் இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் 'நிரந்தரமான வாழ்வு' என்ற அடிப்படையைப் பொறுத்தளவில் அகதிகள்தான்.
.
Reply
#39
சயந்தன்,

உங்களுடைய ஆர்வம் பாராட்டத்தக்கது. ஒரு மாதத்துக்கு முதல் எனது நண்பரான பொறியியல் பேராசிரியர் ஒருவர் போக விரும்பினார். தொடர்பெடுத்து கொடுத்தேன். ஒரு செயற்திட்டத்தை முடித்து விட்டு வந்திருக்கிறார். வன்னி தான் கட்டுப்பாட்டில் உள்ளது. முழு வடக்கு கிழக்குமல்ல. வன்னியில் ஒரு பொறியியலாளர் கூட இல்லை என்று சொன்னார். நீங்கள் தனித்த ஒருவர் என்றால், குறைந்தது ஒரு மாதமாவது நிற்கக் கூடியதாக இருப்பின் வரும்படி அழைக்கின்றனர். என்ன துறை உங்கள் துறை? காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின்பிறப்பாக்கி ஒன்றை வடிவமைக்கும் ஆற்றல் இருந்தால் உங்களை ஒரு நிறுவனத்தை உங்கள் நாட்டிலேயே பதிவு செய்யுமாறு கேடகிறார்கள். காரணம் உலக வங்கி இதற்காக பெருமளவு பணம் ஒதுக்கியிருக்கிறது. 2008 ம் ஆண்டுவரை இதற்காக விண்ணப்பிக்க முடியும். உலக வங்கி திட்டம் குறிப்பாக வடக்கு கிழக்கு என்று கேட்டுள்ள போதும் எந்த நிறுவனமும் முன்வராததனால் பணம் இலங்கையின் தென் பகுதிகளுக்கு செல்லும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. சரியான திட்டம், பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் ஆகியவை தயார் என்றால் விண்ணப்பிக்குமுன் வன்னி நிருவாகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். நான் சூரிய சக்தி சம்பந்தமாக ஒரு சிறிய மாதிரி அமைப்பை தொடங்கி இடை நடுவில் போதிய ஈடுபாடில்லாததினால் அப்படியே போட்டு வைத்திருக்கிறேன். நிறுவனம் ஒன்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். உங்களுடைய ஈடுபாடு பற்றி சொல்லுங்கள். பயனுள்ளதாக பேசலாம். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமானால் தான் அந்த அந்த நாடுகளின் உதவியுடனும் வன்னியிலுள்ள நிருவாகத்தின் (விடுதலைப்புலிகள்) உதவியுடனும் உலகவங்கி கடனை பெறமுடியும். முக்கியமாக, நான் குறிப்பாக பார்ப்பது இநதக் கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு மின்பிறப்பாக்கி மக்களுக்கு வருமானத்தை தரவேண்டும் என்பதையே. சோலார் செல்கள் அங்கு சில அமைப்புகளால் விற்கப்படுகின்றன. அவை மலிவான அமோபர்ஸ் ரகம். இந்த ரகம் 2 முதல் 5 வருடங்களுக்குள் 40 வீதமான ஆற்றலை இழந்து விடும். ஆகவே இவை கொடுக்கும் விலைக்கு பெறுமதியற்றவை.
''
'' [.423]
Reply
#40
ஐயா,

நீங்கள் அரைகுறையான இந்த கருத்து பரிமாற்றத்தை வாசித்திருக்கிறீர்கள்.


Quote:போலி அகதி என எதை வைத்து நிர்ணயிக்கிறீங்கள்?!
போலி அகதிக்கு வரைவிலக்கணம்.
அகதியென்று கூறி வந்த ஒருவர் தான் வந்தது உண்மையில் உழைக்கவும் வசதியாக வாழவும் தான் என்று ஏற்றுகொள்கின்றாரோ அன்றே அவர் தானாகவே போலி அகதி என்று ஏற்றுக்கொண்ட ஒருவர் ஆகிறார். இல்லை இல்லை நீ உண்மையான அகதி, வன்னி பாதுகாப்பாகி விட்டது போகலாமே என்று நீங்கள் அவர்களை திருப்பி அனுபபிவிடப் போகிறீர்களா? அல்லது உண்மைதான் நீ போலி அகதி உழைக்கத்தான் வந்திருக்கிறாய். சொகுசு பிடித்துப்போய்விட்டது. போனால் போகிறது இருந்து தொலை என்று விட்டுவிடப்போகிறீர்களா? ஏதோ உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொள்ளுங்கள்.
''
'' [.423]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)