Quote:நீங்கள் என்னதான் சொன்னாலும் நிங்கள் நீங்களேதான். உங்களுக்கு மதிப்பெண்டது நான் சொன்னமாதிரி காகக் கதைதான்.
அது சரி எப்ப உங்கட ஊரானது அயலவனின் நாடு..
நீங்கள் வெள்ளையனின் நாட்டில இருந்தால் என்ன அல்லது அதவிடக் குறஞ்ச கலரவன்ட நாட்டுல இருந்தாலென்ன "காகக் கதைதான்". இது எனது அனுபவம் மட்டுமல்ல அனைதுக் குடியேறிகளுடையதும் (உங்களையும் செர்த்துத்தன்) அனுபவம்.
உங்களுடைய அனுபவத்தில் பேசுறீங்கள். என்னுடைய அனுபவம் முற்றிலும் எதிர்மாறு. சொன்னாலும் அதைப்புரிந்து கொள்ள கூட உங்களுக்கு அனுபவம் இல்லை. எதுக்கும் ஒரு சின்ன முயற்சி. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கொலின் பவலோ காகமோ கறுப்பெண்டு நினைக்கிறீங்கள்? வேண்டாம், அப்பன் புஷ்க்கும் மகன் புஷ்க்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து ஈராக்கை இந்த வாட்டு வாட்டி எடுக்கும் கொண்டலெசா ரைஸோ நீரோ கறுப்பு சொல்லும் பாப்பம்? இவையளை நீங்கள் படத்திலயாவது கண்டிருப்பியளோ தெரியாது.
Quote:அதென்ன ஆரம்பத்தில சொன்னியள் நாடுகள் உங்கள வருந்தி அழைக்குதென்டு சிற்றிசன் தர . இப்ப சொல்றியள் நீங்களமைக்குறதான் ஆட்சி என்டு.. இதைதானோ உங்களது கணிப்பில் படித்தவர்கள் என்டு சொல்றது.. நல்ல படிப்பாத்தான் கிடக்கு.
ஐயா, பாண்டியன், எங்கட நாட்டில எல்லாருமே வந்தேறு குடிகள் தான். அதனால தான் எங்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை இங்க. உங்களுக்கு இது புரிய போதுமான அறிவோ அனுபவமோ இல்லை போல தெரியுது.
ஓமையா பாண்டியன். எங்களை இந்த நாடு வருந்தி அழைத்து குடிமக்களாக்கி வைக்கிறது. உங்களுக்கு புரியுமொ தெரியாது, குடிமக்களுக்கு சனநாயக நாட்டில ஆளும் அதிகாரம் இருக்கு பாருங்கோ. தேர்தல் நடக்கும். வாக்கு போடுவோம். தேர்தலிலும் நிப்போம். வெற்றி பெற்று ஆட்சியிலும் பங்கு பற்றியிருக்கிறோம். நான் தமிழரைமட்டும் சொல்லவில்லை, எல்லா வந்தேறு குடிகளையும் பற்றி சொல்லுறன்.
ஐயா பாண்டியன். நான் உள்பட எங்கட நாட்டின் பெரும்பாலான வந்தேறு குடிகள் உழைக்க தான் இங்க வந்த நாங்கள். நான் ஐரோப்பாவில இருப்பவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று சொல்லவும் இல்லை. இப்ப விளங்குது ஏன் படிச்சு போட்டு குப்பை கொட்டுறியள் எண்டு. தமிழில எழுதினதையே ஒழுங்கா வாசிக்க தெரியவில்லை, உந்தவிதமான படிப்புக்கு குப்பையாவது கொட்ட விட்டாங்களே. நல்லது.
Quote:அப்ப நீங்கள் எல்லாம்....ஏன் வெளி நாட்டுல இருக்கிறயள்.. ஓ நிங்கள் படித்தவர்கள் அதனால் நீங்கள் என்னவும் செய்யலாம்..மறந்திட்டன்.
ஏன் பாண்டியன் நாங்கள் எந்த நாட்டிலயும் இருக்கலாம். இந்த நாட்டு அரசு வேலையும் தந்;து குடியுரிமை எடுக்குமட்டும் நிரந்தர குடியுரிமையும் தந்து வாவெண்டு கூப்பிட்டு வந்தன். குடிமகனாகி இருக்கிறன். நீங்கள்
Quote:அதுசரி இயுரொப்பில இருப்பவர்களை திருப்பி அனுப்ப வேனும் என்டு சொல்றியள்..ஏனெனில் அவர்கள் பொயிருப்பது உழைப்பதற்காக என்டு.
நாட்டில சண்டை அகதி எண்டு வந்தியள். சண்டை முடிஞ்சுது;. சனம் போய்வருது. புலியும் போய்வருது. பாவம் எண்டு இடம் தந்தவன் சரி போட்டு வாங்கோ எண்டுறான். சோகுசான இடம் எண்டு போட்டு போமாட்டன் என்று அடம் பிடிக்கிறிள். உந்த பேய்க்காட்டலை தான் வேண்டாம் எண்டுறன். குப்பைகொட்டுற படிப்புக்கு இது எங்க புரியப்போகுது.