<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><img src='http://kuruvikal.yarl.net/archives/nallur_13_09_04_03_28865_435.jpg' border='0' alt='user posted image'>
நல்லைநகர் வீதியெங்கும்
சின்னக் கால் பதித்து
சிங்கார வேலன் பாதம் தேடி
வந்த கூட்டத்துள்
மூச்சுத் திணறிக் கண்டேன்
வெள்ளி மயில் வாகனனை கொடியன்று...!
பசும் பொன்னொளி வீச
பொன்னோடு வருவான்
சிங்கார வேலன் சிரித்தபடி
மஞ்சத்து நாளில் வள்ளியுடன்...!
இப்படியே இனியவன் நினைவுடன்
நாட்கள் கழியும் களிப்புடன்
நண்பரும் நாமுமாய்
வீதியெங்கும் உலாவந்து தேடுவோம்
நம் தோழமை மிகு கந்தனை...!
சப்பறமும் வரும்
வான்முட்டும் உயரத்தோடு
வடிவான மங்கையரும்
வாட்டசாட்ட காளையரும் வருவர்
அதன் பின்னே...
காதல் மன்னன் வள்ளி மணாளன்
வழிக்காட்டிச் செல்வான் அவர் முன்னே...!
அழகான தேர்
சரியாய் மணி ஒலிக்க
ஒலியோடு கிளம்பும்....
தினமும் சிட்டாய் பறந்து
பள்ளி செல்லச் சொன்ன அந்த மணி - அன்று
நண்பன் முருகன்
விழாப் பெருமை சொல்லி
நால் வீதியெங்கும் ஒலிக்கும் பெருமையோடு...!
தேரோடு மறுநாள்
மயிலேறி வருவான் முருகன்
தான் கொண்ட தீர்த்தமாடி
தான் கண்ட பக்தகோடிகள் மேல்
அருள் மழை பொழிந்திட....
நாமும் கூடவே
\"சொப்பிங் பாக்\" வாங்கி
தீர்த்த மழை பொழிந்து மகிழ்ந்திடுவோம்...!
இறுதி நாள்
வைரவர் மடையோடு முடிய முதலாய்
கலிகாலக் கடவுளாம்
காதல் மன்னன்
பணக்கார நாயகன்
பூங்கா வனம் ஏகி
\"சைற்றடிப்பாராம்\"
பூவுலக நாயகியாம் வள்ளியை....
தேவலோக நாயகியாம்
தெய்வானை கூட இருக்கவே...!
கந்தா இது கொஞ்சம் \"ஓவர்\"
இருந்தாலும் நீ எம் நண்பன் - என்று
முணுமுணுக்கும் இளவட்டத்து மனசுகள்....!
இப்படியாய்
கூடக் குடியிருந்த அன்பன்
நல்லை முருகனவன் திருவிழாக் காலம்
வாழ்வில் சொர்க்கத்து நாட்களாய்
கழிந்த நினைவுகளுடன்
வாரம்தோறும் உன்னோடு
உன் முற்றத்திலேயே
மண்வீடு கட்டி விளையாடிய
உந்தன் நண்பன் குருவிகள்
சொல்லும் இம்மொழிதனில்
பிழை கண்டால் பொறுக்க என்று வேண்டி
என்றும் - நீ
நின் புகழோடு விளங்க
வாழ்த்தி வணங்குகிறோம்...!
நன்றி...http://kuruvikal.yarl.net/<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்லூர்க் கந்தன் திருவிழா நினைத்து கடந்த ஆண்டு கிறுக்கியது இங்கே...! திருவிழாக் கால நினைவாக....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>