09-03-2004, 10:17 PM
<b>அக்கரைக்கு இக்கரை.... </b>
அகதியாய் அநாதரவாய் அந்நியதேசமதில்
முகவரி தொலைத்து புகலிடம் தேடி வந்ததால்
விசா தந்த வாழ்வு இங்கே வளமாக
சமூக உதவிகள் அனைத்தும் பெற்றே
வசதியான ஏகபோக வாழ்க்கையில்
அக்கரையில் காணத வாழ்வு
இக்கரையில் கண்டு விட்ட பெருமிதம்
எட்டுமணிநேர பகுதி நேர வேலையென்றே
பட்டும்படாமல் பருப்பும் சோறும் உண்டே
சீட்டுப்பிடித்தே சிக்கனமாய் சேர்த்த பணத்தை
வட்டிக்கு விட்டே வளமாய் வாழ்ந்து
குட்டிபோட்ட பணத்தையும் தந்திரமாய்
வட்டிக்கு விட்டே சொகுசாய் வாழ்ந்திடும்
வாழ்வுதான் அக்கரையில் வந்திடுமோ
தேசத்தின் விடியலுக்காய்
நேசத்துடன் நெஞ்சுருக வாய்கிழிய
மூச்சுக்கு மூன்னுறு முறை முழங்கிடுவர்
பங்களிப்புச் செய்யாமலே போலியாய்
தத்துவங்கள் பேசியே தர்க்கங்கள் புரிந்தே
வாழ்ந்திடும் பகட்டு வாழ்க்கை
இக்கரையில் கற்றுவிட்ட வித்தைகளோ
<b>இக்கரையில் கண்டுவிட்ட அத்தனையும்
அக்கரையில் கிடைத்துவிட்டால்
இக்கரைக்கு அக்கரை பச்சையென்று
அக்கணமே சொல்லிடுவாரோ..</b>
அகதியாய் அநாதரவாய் அந்நியதேசமதில்
முகவரி தொலைத்து புகலிடம் தேடி வந்ததால்
விசா தந்த வாழ்வு இங்கே வளமாக
சமூக உதவிகள் அனைத்தும் பெற்றே
வசதியான ஏகபோக வாழ்க்கையில்
அக்கரையில் காணத வாழ்வு
இக்கரையில் கண்டு விட்ட பெருமிதம்
எட்டுமணிநேர பகுதி நேர வேலையென்றே
பட்டும்படாமல் பருப்பும் சோறும் உண்டே
சீட்டுப்பிடித்தே சிக்கனமாய் சேர்த்த பணத்தை
வட்டிக்கு விட்டே வளமாய் வாழ்ந்து
குட்டிபோட்ட பணத்தையும் தந்திரமாய்
வட்டிக்கு விட்டே சொகுசாய் வாழ்ந்திடும்
வாழ்வுதான் அக்கரையில் வந்திடுமோ
தேசத்தின் விடியலுக்காய்
நேசத்துடன் நெஞ்சுருக வாய்கிழிய
மூச்சுக்கு மூன்னுறு முறை முழங்கிடுவர்
பங்களிப்புச் செய்யாமலே போலியாய்
தத்துவங்கள் பேசியே தர்க்கங்கள் புரிந்தே
வாழ்ந்திடும் பகட்டு வாழ்க்கை
இக்கரையில் கற்றுவிட்ட வித்தைகளோ
<b>இக்கரையில் கண்டுவிட்ட அத்தனையும்
அக்கரையில் கிடைத்துவிட்டால்
இக்கரைக்கு அக்கரை பச்சையென்று
அக்கணமே சொல்லிடுவாரோ..</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->