Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொலுசொலி கேட்டபோது
#1
<img src='http://www.yarl.com/forum/files/p112.psd.jpg' border='0' alt='user posted image'>

ஆவலாய் உள் மனது
ஆதங்கத்துடன் படபடப்பும்
அடித்தோய்ந்துவிடும் போல் இதயம்
ஏன் இந்த உணர்ச்சி கொந்தளிப்பு
உன்னை நான் சந்திக்கநினைக்கும்போது

புகைப்படத்தில் கண்டு புதைந்த என் மனசு
புலர்ச்சியில் காண துடிப்பதேன்
ஆனந்தத்துடிப்பா ஆவல்த்துடிப்பா
இல்லை பயமா ?

தாய் மண் கண்ட தவிப்பும்
உனை தழுவ நினைக்கையில்
தலைகீழாக மாறி நிற்கின்றதே

சொல்லமுடியா இன்பம்
சொல்லமுடியா துன்பம்
உணர்ச்சியை விவரிக்க
வார்த்தைகள் இல்லை

காணும்போது ஓடிவந்து
கட்டியணைப்பேனா ? - இல்லை
பதுங்கி நின்று பைய பைய
அருகில் வந்து இன்முகவிதழ் விரித்து
இச்சையுடன் ஓர்; முத்தம் வைப்பேனா ?
என்னவோ செய்ய தோன்றுகின்றது

தொலைபேசியில் தொட்டில்வரை பேசிவிட்டோம்
நேரில் என்ன பேசிக்கொள்வேன் ?
ஜ லவ் யூடா செல்லம் எனசொல்லி
ஆர்ப்பாட்டம் செய்வேனா ?
இல்லை அடங்கியொடுங்கி
புன்னகைமட்டும் பூத்து வைப்பேனா ?
புரியவில்லை என் செய்வேனென்று ?

இன்பமோ பயமோ ஏதோவோர் சுகத்தில்
இரவெல்லாம் கழிந்துவிட்டது
ஆதவன் கரங்கள் அடித்து எழுப்பியும்
அசையவில்லை எனக்கும் தலையணைக்கும்
இடையிலான உறவு


செவிக்குள் ஓர் இசைவெள்ளம்
உள்ளே புகுந்து உடலெங்கும்
ஓர் உற்சாக மழைவெள்ளமாய்
விழி திறந்தேன் தேவதையாய் நீ
புன்னகைத்தாயா ? இல்லை
என்னை அழைத்தாயா ?

என்ன இசைவெள்ளம்
எங்கேயிருந்து வந்தது
சுற்று முற்றும் பார்த்து
சோர்ந்து விழி மூட எண்ணுகையில்
மீண்டும் அவ்விசை அருகில்
ஓ ஓ
என் சின்ன தேவதையின் கால் சிறகுளில்
அரவணைத்து உறங்கும்
கொலுசுகளா பேசுகின்றன

கொலுசணிந்த மலர்ப்பாதம்
குனிந்து முத்தமிட எண்ணுகையில்
தடம்புரண்டு தரையில் வீழ்ந்தேன்
சீ என்ன இது
காலை நேரக்கனவா ?
தினமும் இவ்விடியல் எனக்கு வேண்டும்
கனவாகினும் ஓர் சுகமாய்
உன்னையே காணும் சுகமாய்

இன்று முதல் வார்த்தையாய்
உன்னுடன் பேசவேண்டும்
சொலுசணிந்துகொள் என்
கொஞ்சும் செல்லமே !
உன் பாதம் பட்டபோது
கொலுசே ஜொலிக்கின்றது
சினுங்கும் கொலுசு உன் சிரிப்பிற்கு
ஈடாகாவிடினும் எனக்கு
இஸ்டமாகிவிட்டதே

ந.பரணீதரன் 26.07.2004
[b] ?
Reply
#2
என்ன இது அண்ணா ......??????
ஏன் இந்த சோகம் Cry
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#3
Paranee Wrote:கொலுசணிந்த மலர்ப்பாதம்
குனிந்து முத்தமிட எண்ணுகையில்
தடம்புரண்டு தரையில் வீழ்ந்தேன்
சீ என்ன இது
காலை நேரக்கனவா ?
தினமும் இவ்விடியல் எனக்கு வேண்டும்
கனவாகினும் ஓர் சுகமாய்
உன்னையே காணும் சுகமாய்



ந.பரணீதரன் 26.07.2004

<b>ரொம்ப அருமையான கவிதை பரணி அண்ணா.
கனவுகள் மெய்ப்பட சுட்டி வெண்ணிலாவின் வாழ்த்துக்கள்.</b>
----------
Reply
#4
சோகம் இ;ல்லையே
எண்ணத்தின் வடிவம் வார்த்தைகளாகி

நன்றி சுவிற்மிச்சி

நன்றி வெண்ணிலா
[b] ?
Reply
#5
கவpதை அருமையாக உள்ளது பரணீ அண்ணா.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
கொலுசு மாதிரி கவிதையும் ஒலிக்குது அண்ணா....... கொலுசுக்கு வந்திட்டியள் வாழ்த்துக்கள்....தொடர்ந்து ......... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#7
நாவல் கவிக்கு எத்துனை நாவல்களை நான் ஒலிப்பது!
கொள்ளை கொண்டுவிட்டீரையா கொள்ளை!
நாளங்களின், நரம்புகளின் மொழியை அழகுத்தமிழில் அளந்தது கனகச்சிதம்.ஆனந்தம்,ஆனந்தம்...
\"


\" -()
<i><b></b></i>
Reply
#8
Paranee Wrote:சோகம் இ;ல்லையே
எண்ணத்தின் வடிவம் வார்த்தைகளாகி

நன்றி சுவிற்மிச்சி

Cry Cry Cry
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)