<b><span style='color:brown'>சலனம் வழங்கிய குறும்படமாலை
எழுதியவர் -குயிலி
Friday, 23 July 2004
வழமையான கோடையைவிட 17-07-2004 சனிக்கிழமை மாலை நேரக் கோடை சற்று வித்தியாசமானதாக இருந்தது. பாரிசின் புறநகர்ப் பகுதியான வில்தானூஸில் கடும் வெயிலுக்குப் பதிலாக மெல்லிய தூற்றலுடன் கூடிய மழையும் இதமான காற்றும் எங்கும் பரவியிருந்தது.
அந்தக் கிராமத்தின் பாடசாலை மண்டபத்தினுள்ளே நாங்கள் சுமார் ஐம்பது பேர் அளவில் குறும்பட மாலை நிகழ்வுக்காக் காத்திருந்தோம்.
அமைதி வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர்கள் எல்லோரும் குறும்படங்களைப் பார்க்கும் ஆர்வத்துடன் காணப்பட்டனர். அந்தக் குறும்பட நிகழ்வில் அழியாத கவிதை, தாகம், கனவுகள், எச்சில்போர்வை, விலாசம், நிழல் யுத்தம், ஆகிய ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
அத்துடன் புகலிடத்திலும் தன் திரைப்பணியைத் தொடரும் மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை சலனம் என்னும் பாரிஸ் தமிழர் சினிமாக்கலை இரசனை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
அப்பால்-தமிழின் நெறிப்படுத்தலில் இயங்கும் சலனத்தின் இந்த முயற்சிக்குத் தமிழர் புனர்வாழ்வுக் கழக வில்தானூஸ் கிளையினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.appaal-tamil.com/images/stories/4.jpg' border='0' alt='user posted image'>
(பார்வையாளர்கள்)
முதலில் ஈழவர் திலைக்கலை மன்றம் தயாரித்த மூன்று படங்களில் ஒன்றான [b]அழியாத கவிதை </b>திரையிடப்பட்டது. இதனை சுவிசில் வதியும் அஜீவன் அவர்கள் இயக்கி இருந்தார். இதன் முக்கிய பாத்திரத்தில் புகழ்பெற்ற கலைஞர் ரகுநாதன் நடித்திருந்தார். தா.பாலகணேசனின் பொற்கூண்டு என்ற தனிநடிப்புக்கான நாடகப்பிரதி அழியாதகவிதையென திரைக்கதையாகியிருந்தது. அந்தத் திரைக்கதையானது புலம்பெயர் நாட்டிற்கு வலிந்தழைக்கப்படும் முதியவர் ஒருவர் தனது பிள்ளைகளுடன் வாழநேர்ந்ததின் நிகழ்வை இலண்டனின் பின்னணியில் விபரிக்கின்றது. 21 நிமிடங்கள் கொண்டதான இந்தக் குறும்படத்தைத் தொடர்ந்து..........
<b> தாகம்</b> திரையிடப்பட்டது. திரு. மனோ அவர்களின் எழுத்து இயக்கத்தில் உருவான இந்தக் குறுப்படம் மகளுடன் வாழும் முதியவர் ஒருவருக்கு ஏற்படும் சுருட்டுப்பிடிக்கும் தீராததாகத்தைப் பற்றி எடுத்துக் கூறுகின்றது. 15 நிமிடங்கள் கொண்ட இக்குறும்படத்தில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முதியவராக நடித்திருந்தார்.
மூன்றாவது குறும்படமாக பாலராசா அவர்களது <b>கனவுகள்</b> திரையிடப்பட்டது. முதிர் இளைஞன் ஒருவனின் திருமண முயற்சி பற்றியும் அதனால் ஏற்படுகின்ற சிக்கல்கள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது.
அடுத்து அஜீவனின் <b>எச்சில் போர்வை</b> காண்பிக்கப்பட்டது. 1998 மாவீரர்தின குறும்பட நிகழ்வில் பரிசு பெற்ற இக்குறும்படம் சுவிசில் தஞ்சமடைந்த இளைஞன் தனது புகலிட இருப்பை உறுதி செய்யத் தவிப்பதும் இவனது தவிப்பைப் புரியாத தாயகத்தில் வாழும் பெற்றோர் இவனிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பதும் 11 நிமிடங்களுக்குள் கதையாக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக நல்லூர்ஸ்தான் தயாரித்து வதனன் இயக்கிய <b>விலாசம்</b> எனும் குறும்படம் திரையிடப்பட்டது. பிரான்சில் வாழும் அடுத்த தலைமுறையினர் எதிர்கொள்கின்ற பிரச்சனையை மையக் கருவாகக் கொண்டு 17 நிமிடங்களில் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அஜீவனின் <b>நிழல் யுத்தம் </b>திரையிடப்பட்டது. இத்திரைப்படமும் மாவீரர் தின குறும்பட நிகழ்வில் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. சுவிசில் அகதியாக வாழும் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சனையை 15 நிமிடத்தில் இக்குறும்படம் விளக்குகிறது.
குறும்பட நிகழ்வில் முதல் மூன்று படங்கள் திரையிட்டதன் பின் சிறிய இடைவேள வழங்கப்பட்டது.
அது முடிந்து மற்றைய படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னே மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். வில்தானூஸ் கிராம தமிழ்மக்கள் சார்பாக புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் பொன்னாடை போhர்த்திக் கௌரவித்தார்.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/1.jpg' border='0' alt='user posted image'>
(கெளரவிக்கப்பட்ட மூத்த கலைஞர் ரகுநாதன் எற்புரை வழங்குகிறார்)
கௌரவிப்பை ஏற்ற ரகுநாதன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வின் இறுதியாக பார்வையாளர்கள் குறும்படங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கருத்துக்களில் பிரதானமாக தென்பட்டது இதுவரையில் ஏன் இந்தப்படங்கள் எங்களுக்கு காண்பிக்கப்படவில்லை என்பதே. ஏனெனில் அஜீவனின் குறும்படங்களான நிழல்யுத்தம், எச்சில் போர்வை போன்றவை 1997ம்,1998ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவையாகும். அதுவும் அப்படங்கள் பிரான்சில் நடாத்தப்பட்ட குறுப்படத் தெரிவுப்போட்டியில் கலந்து முதலிடத்தை பெற்ற படங்களாகும்.
இந்நிலையில் எங்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் அதனை திரையிடாததன் காரணங்கள் என்ன என்பது போன்ற கேள்விகள் கருத்துக்களாக முன்வைக்கபடட்டன. சலனம் நெறியாளர் க.முகுந்தன் சலனம் பற்றிய விளக்கவுரையை நிகழ்த்தினார்.
பல சிறுவர்கள் அந்த நிகழ்வில் பெற்றோருடன் கலந்துகொண்ட போதும் மிக அமைதியாக அவர்கள் குறும்படங்களை பார்த்தது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தென்பட்டது.
<img src='http://www.appaal-tamil.com/images/stories/3.jpg' border='0' alt='user posted image'>
(வில்தானூஸ் தமிழ்ச்சோலை பொறுப்பாளர் திரு.குணசேகரன் கருத்துரை வழங்குகிறார்)
<img src='http://www.appaal-tamil.com/images/stories/5.jpg' border='0' alt='user posted image'>
(சலனம் பொறுப்பாளர் திரு.க.முகுந்தன் கருத்துரை வழங்குகிறார்)
</span>
நன்றி:
http://www.appaal-tamil.com/index.php?opti...&id=95&Itemid=2
&
இளைஞன்.