Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி
#41
<span style='font-size:30pt;line-height:100%'>முக்கிய செய்திகள்
கும்பகோணம் தீ விபத்தில் கைதான 17 பேர் யார் யார்?

கும்பகோணம் : கும்பகோணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இளம்தளிர்களுக்கு நடந்த கோரத்தினை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது . இந்த வழக்கில் பள்ளி நிர்வாகி உட்பட ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு கட்டட உறுதிச் சான்று கொடுத்த இன்ஜினியர், இவர் கொடுத்த சான்றிதழை நம்பி கட்டட சான்றிதழ் கொடுத்த தாசில்தார், \"சஸ்பெண்ட்' நிலையில் இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உட்பட எட்டு பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். நேற்று நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் கும்பகோணம் தீ விபத்து சம்பவம் தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 17 என உயர்ந்துள்ளது.

கும்பகோணம் பள்ளி நிர்வாகி புலவர் பழனிசாமி (75), இவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி (71), தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி (41), சமையல்காரர் வசந்தி (42), சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி (39) ஆகிய ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். பள்ளிக்கு கட்டட உறுதிச் சான்று கொடுத்த இன்ஜினியர் ஜெயச்சந்திரன் உட்பட சிலர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களை பிடிப்பதற்கு கும்பகோணம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

\"சஸ்பெண்ட்' நிலையில் இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முத்து பழனிசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிசாமி, திருவிடைமருதுõர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விருதுநகர் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன், பள்ளிக்கு கட்டட உறுதிச் சான்றிதழ் கொடுத்த அங்கீகரிக்கப்பட்ட இன்ஜினியர் ஜெயச்சந்திரன், இவர் கொடுத்த சான்றிதழை நம்பி கட்டட உறுதிச் சான்று கொடுத்த தஞ்சாவூர் தாசில்தார் பரமசிவம், முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன் ஆகிய எட்டு பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்டக் கல்வி அதிகாரியின் தனி உதவியாளர் ஜி.துரைராஜ் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் தொடக்கப் பள்ளி கல்வி விதிமுறைகளை மீறியும், நகராட்சி நிர்வாக விதிமுறைகளை மீறியும் செயல்பட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் 108, 109, 120பி, 283, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான 12 பேரையும் சேர்த்து கும்பகோணம் சம்பவத்தில் கைதானோர் எண்ணிக்கை 17 என உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று கைது செய்யப்பட்ட 12 பேரும் கும்பகோணம் ஜே.எம்., எண்.1ல் ஆஜர்படுத்தப்பட்டனர். 12 பேரையும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட இவர்களைப் பார்த்த பொதுமக்கள் \"கொலைகாரர்கள், ஊழல் பேர் வழிகள், இவர்கள் அராஜகத்தால் குழந்தைகள் பலியாகி விட்டனர்' என்று திட்டினர். பின்னர், 12 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#42
[size=13]<b>முக்கிய செய்திகள் </b>

குடந்தை நத்தம் கிராமத்தில் தற்காலிக ஆரம்ப பள்ளி துவக்கம் கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள நத்தம் கருப்பூர் கிராமத்தில் நேற்று முதல் தற்காலிக ஆரம்ப பள்ளி துவங்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்து 500 சத்துணவுக் கூடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் கூரைக் கட்டிடங்களாக உள்ளது. இவற்றை மாற்றி அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எஸ்.ஜி.ஆர்.ஒய் திட்டத்தில் 198 சத்துணவு கூடங்கள் காங்கிரிட் கட்டிடங்களாக மாற்ற்பபட்டு வருகிறது.

<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn25.jpg' border='0' alt='user posted image'>


விபத்தில் பலியான 91 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டதன் பெயரில், நத்தம் கிராமத்தில் 13 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி துவங்கி உள்ளது. இப்பணி ஆறு மாதத்தில் முடிவடையும். நத்தம் கருப்பூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி தற்காலிகமாக இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#43
<span style='font-size:24pt;line-height:100%'>கல்வித்துறை உயர் அதிகாரி சஸ்பெண்ட் * அரசின் அதிரடியால் இதுவரை கைது 17
அதிகாரிகள் பீதி!* கல்வித்துறை உயர் அதிகாரி சஸ்பெண்ட் * அரசின் அதிரடியால் இதுவரை கைது 17

<img src='http://www.dinamalar.com/2004july22/photos/fpn-01.jpg' border='0' alt='user posted image'>
[size=13]சென்னை: கும்பகோணம் தீ விபத்திற்கு காரணமானவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தீ விபத்து நடந்த பள்ளி மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததை காரணம் காட்டி, தொடக்கக் கல்வி இயக்குனர் ஆர்.கண்ணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கீழ் மட்ட அளவில் ஏற்கனவே பல அதிகாரிகள் கைதானதைத் தொடர்ந்து தற்போது உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடியால் கல்வித் துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். அடுத்து எந்த அதிகாரிக்கு என்ன "ஓலை' வருமோ என்ற "திக் திக்' காணப்படுகிறது. கும்பகோணம் சம்பவம் தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கியெடுக்கும் கோர சம்பவம் கடந்த 16ம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா குழும பள்ளி வளாகத்தில் நடந்தேறியது. ஒரே வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி என மூன்று பள்ளிகள் சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தன. இதில், தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 90 குழந்தைகள் துடி துடிக்க தீயில் கருகி இறந்தன. வகுப்பறைக்கு அருகில் இருந்த சமையல் அறையில் இருந்து ஏற்பட்ட சிறு தீப்பொறி, வகுப்பறைகளின் மேல் வேயப்பட்டிருந்த ஓலைக் கூரைகளில் பிடித்ததால் இந்த பயங்கர சம்பவம் நடந்தது.

<img src='http://www.dinamalar.com/2004july22/photos/fpn-01a.jpg' border='0' alt='user posted image'>தீ விபத்தில் 90 குழந்தைகள் கரிக்கட்டைகளான சம்பவம், தமிழகத்தை மட்டுமில்லாமல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியை சரிவர ஆய்வு செய்யாமல் கல்வித் துறை அதிகாரிகள் அசட்டையாக இருந்ததே குழந்தைகள் உயிர் இழப்புக்கு காரணம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் ஆவேசப்பட்டனர். தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, அப்போதே உதவி தொடக்க கல்வி அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்
இதைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் பழனிச்சாமி, இவரது மனைவி, மகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், கல்வித் துறை உயர் அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குனர் ஆர். கண்ணனை நேற்று முன்தினம் இரவு திடீரென "சஸ்பெண்ட்' செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளி இயக்குனர் பொறுப்பை, ஆசிரியர் பயிற்சி இயக்குனர் கே.மாரியப்பன் கூடுதலாக கவனித்துக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளி இயக்குனர் கண்ணன் "சஸ்பெண்ட்' ஆன தகவல் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பார்த்து மற்ற அதிகாரிகள் அனைவரும் "கலக்கத்தில்' உள்ளனர். எப்போது என்ன "ஓலை' வருமோ என்று அனைவரும் "திக் திக்' நிலையில் உள்ளனர்.

<img src='http://www.dinamalar.com/2004july22/photos/fpn-01b.jpg' border='0' alt='user posted image'>
தொடக்கப் பள்ளி இயக்குனராக கடந்த 2002ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார் கண்ணன். அதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனராக பணியாற்றி வந்தார். தொடக்கப் பள்ளி இயக்குனர் சவுந்தரராஜன் மாற்றப்பட்டு, பின்னர் கண்ணன் பொறுப்பேற்றார். தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அனைத்தும் இவரது தலைமையின் கீழ் இயங்குகின்றன. கும்பகோணத்தில் தீ விபத்து நடந்தது தொடக்கப் பள்ளி என்பதால் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித் துறையில் இயக்குனர் கீழ் பணியாற்றும், மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உட்பட மற்ற அதிகாரிகள் அனைவரும் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து இயக்குனருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதற்கேற்ப இயக்குனர் நடவடிக்கை எடுப்பார். புது பள்ளிகள் துவங்க அனுமதி கோரினாலும் முதலில் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை, பரிந்துரைப்படி அங்கீகாரம் கொடுப்பது குறித்து இயக்குனர் முடிவு எடுப்பார். தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசின் அதிரடி நடவடிக்கையில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#44
<span style='font-size:22pt;line-height:100%'><b>உலகத்தமிழர்களையும் உலுக்கிய கும்பகோண சம்பவம்</b>

மனம் உடைந்து போனேன்
அமரிக்காவிலிருந்து அக்கவுன்ட்ஸ் அதிகாரி பாபு வெங்கடராமன்: கும்பகோணத்தில் நடந்த கோரத் தீவிபத்தில் இளம் தளிர்கள் கருகி இறந்ததற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தயர சம்பவம் தொடர்பான படங்களை தினமலர் வெப்சைட்டில் பார்த்தபோது மனம் உடைந்து போனேன். எதிர்காலத்திலாவது இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெட்டுக் கொள்கிறேன்.

<b>கண்ணீர் அஞ்சலி</b>

பால் மணம் மாறா

பட்டாம் பூச்சிகளை

தீயின் திவலைகள்

தீண்டிப் பார்த்திருக்கிறது...

கண்ணில் வண்ணக் கனவோடு

காலையில் சென்றவரை

காலன் தீயாய் வந்து

கைப்பிடித்து அழைத்திருக்கிறான்...

கல்வி அமைப்பின் காவலர்கள்

கண் உறங்கி கிடந்ததனால்

இந்தியாவின் எதிர்காலம் இங்கே

இடிந்து போய்க் கிடக்கிறது...

கல்விக் கூடங்கள்

காசு பார்ப்பவர் கூடமானதால்

காலையில் பிரியாவிடை கொடுத்தவர்கள்

கண நேரத்தில் பிழந்து கிடக்கிறார்கள்...

அவர்கள் நெஞ்சிலே

ஈரம் இருந்தாலாவது

எரியும் நெருப்பு

எப்படியாவது அணைந்திருக்குமே...

மழலையாய் சிறாராய் இருந்தவர்கள்

மனிதராய் மாறுமுன்னர்

மரணத்தைத் தொட்டிருக்கிறார்கள்...

இப்பொழுது கூட இவர்கள்

மற்றவர்கள் விழிப்பதற்காய் தாம்

உறங்கிப் போனவர்கள்...

அவர்கள்தம் அறிவுக்கண்ணை திறப்பதற்காய்

அகல் விளக்காய் ஆனவர்கள்...

இனியாவது

விழித்தெழுவோம்!

எதிர்கால சந்ததியை

ஏற்றமுடன் காத்திட இவர்கள்

சமாதியின் மேலொரு

சத்தியம் செய்வோம்!

பிஞ்சுகள் மற்றவர்கள்

பிழையால் உதிர்வது

இதுவே இறுதியாக இருக்கட்டும்!
கண்ணீருடன் அமெரிக்காவிலிருந்து ச.ராஜ்மோகன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_pray.gif' border='0' alt='user posted image'> </span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#45
<span style='font-size:22pt;line-height:100%'>இத்தகைய துயரங்களைத் தடுக்கவே முடியாதா?

ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் டி.என்.குப்புசாமி: கும்பகோணத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பான படங்களை தினமலர் வெப்சைட்டில் பார்த்து கண்ணீர் சிந்தினோம். இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவியுங்கள். இத்தகைய துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவே முடியாதா? எப்போது பத்திரிகையைப் புரட்டினாலும் விபத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகளே கண்ணில் படுகின்றன. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதேன்? இவற்றைத் தடுக்கவே முடியாதா? அரசியில்வாதிகளின் உதவி, லஞ்சம், அரசு அதிகாரின் துணை ஆகியவற்றால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக இதுவரை நாம் கேள்விப்பட்டதே இல்லை. போலீசாரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். உண்மையான குற்றவாளியை அப்பாவியாகவும் சட்டத்தை மதித்து நடக்கு அப்பாவிகளை குற்றவாளிகளாக மாற்றவும் போலீசாரால் முடிகிறது. எனவே இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையாக ஒளிரும்.

அமெரிக்க நகரில் கண்ணீர் அஞ்சலி

அமெரிக்காவில் உள்ள கேரி நகரில் தமிழர்கள் ஒன்று கூடி கும்பகோணம் தீவிபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுமார் 70 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பலியானவர்கள் நினைவாக 90 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அந்த மெழுகுவர்த்திகள் அமைதி என்ற சொல் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஓம் என்ற ஒலியுடன் துவங்கிய இந்த பிரார்த்தனை கூட்டத்தில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் சிவபுராண பாராயணமும் நடந்தது. ஜெயராஜ் கிறிஸ்தவ பிரார்த்தனை நடத்தினார். சாந்தி நிலவ வேண்டும் என்ற பாடலை உஷா ரவிச்சந்திரன் பாட வீணா கண்ணன் இணைந்து பாடினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சுவாமி அனுபவானந்தா, வெறுமனே கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தி கலைவதற்குப் பதில் பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் சங்கர் குமார், இது பற்றி கூறுகையில் கும்பகோணம் சம்பவத்திற்காக நிதி திரட்டி தமிழகத்தில் ஒரு பள்ளிக்கூடமாவது கூரை இல்லாமல் தீயால் பாதிக்கப்படாததாக கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்றார். பின்னர் கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பள்ளிகளிலும் தீத்தடுப்பு கருவிகள் அமைக்கப்படுமா

சிங்கப்பூரிலிருந்து பாலா: கும்பகோணம் தீவிபத்து குறித்து அரசியல்வாதிகள் பலவாறாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவித்தைத் தொடர்ந்து அரசும் பள்ளி நிர்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன... இதெல்லாம் சரி... இத்தகைய கட்டிடங்களில் தீ அலாரம், தீயணைப்பு கருவிகள் போன்றவை அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்பலாம் அல்லவா? இது குறித்து எவரும் பேசாததேன்? இவ்வாறு தீத்தடுப்பு முறைகள் இருப்பதே அவர்களுக்கு தெரியாதா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து சிந்திப்பார்களா...?



போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்

அமெரிக்காவில் உள்ள ஒலிம்பியா நகரிலிருந்து வைரம்: ஓலைக்கொட்டகைளையும் டூரிங் தியேட்டர்களை மூடுவதிலும் தமிழக அரசு இவ்வளவு அவசரப்பட்டு முடிவெடுப்பதேன்? இதற்கு மாறாக தீவிபத்து தடுப்பு முறைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதில் உரிய கவனம் செலுத்தலாமே..! அமெரிக்காவில் கலிபோர்னியா, ஒரிகன், வாஷிங்டன் போன்ற பகுதிகளில் காட்டுத் தீ, பூகம்பம் போன் இயற்கை பேரழிவுகள் நடப்பதால் அந்த பகுதி மக்களை வேற இடங்களில் குடியமர்த்தவில்லை. மாறாக அப்பகுதி மக்களுக்கு தீவிபத்து, பூகம்பம் போன்றவை ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. கும்பகோணத்தில் தீவிபத்து ஏற்பட்டபோது குழந்தைகளைக் காப்பாற்ற ஆசிரியர்கள் எவரும் முயற்சி எடுத்ததாக தெரியவில்லையே? ஏன்? அவர்களுக்கு இந்தமாதிரி சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை என்றுதானே பொருள். எனவே ஒலைக்கொட்டகைகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தராமல் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றம் பயிற்சிகளை மக்களுக்கு அளிப்பதில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும்.



கொடுத்த விலை போதும்.. இனியாவது திருந்துங்கள்...!

சவூதி அரேபியா, அல்கோபாரிலிருந்து சிவகுமார்: கும்பகோணம் தீவிபத்து தொடர்பான செய்திகளை தினமலர் வெப்சைட்டில் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சோகத்தை எப்படி வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை. செங்கல்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் என் 4 வயது மகளை போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினேன். தீயில் வெந்த தங்கங்களே உங்களை நாங்கள் என்றும் நினைவு கூர்வோம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். பணத்தை வாங்கிக் கொண்டு முறையற்ற அங்கீகாரம் வழங்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நாம் இப்போது தந்துள்ள பெரும் விலைக்குப் (90 இளம் தளிர்களின் உயிர்) பிறகாவது இதே தவறை மீண்டும் செய்யாதிருக்கட்டும்.



யோசனைகளுக்கு செயல் வடிவம் தருவோம்

கான்பூர் கித்வாய் நகரிலிருந்து கே.ஆர்.தியாகராஜன் : அதிகஅளவில் உயிர்ப்பலி நடந்த பிறகு அது குறித்து பல்வேறாக பேசுகிறோம்; ஆளாளுக்கு யோசனைகள் கூறுகிறோம். ஆனால் அவை எந்த அளவுக்கு செயல் வடிவம் பெறுகிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இனியாவது 5ம் வகுப்பு வரையான வகுப்புகள் கீழ் தளத்திலேயே அமைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கும்பகோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கடையடைப்பு, விடுமுறை அறிவிப்பதற்குப் பதிலாக அனைவருமே தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை நிவாரண தொகையாக வழங்க முன்வர வேண்டும். மேலும் நமது தமிழக அரசு பஸ்களில் ஆபத்து காலங்களில் அவசரமாக வெளியேற உரிய பாதைகள் அமைக்கப்பட வேண்டும். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக அரசு பஸ்களில் இடது புறம் மத்தியிலும் கடைசியிலும் இத்தகைய அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.



அக்னி பகவானே உன் கோபம் சரிதானா?

அகனிபகவானே உனக்கு கோபம் வந்தால் கவனிக்கப்பட வேண்டியவர்கள் பலர் இருக்க, இள் தளிர்கள் மீது ஏன் இந்த கோபம்?

சமுதாயத்தில் ஆட்சிக்கு வந்தததும் லஞ்சப் பேயைத் தடுக்க தம் செய்யாமல் தாங்களும் உடந்தையாக இருந்து லஞ்சத்தை உலவ விட்டிருக்கும் அரசியல்வாதிகள் பலர் இருக்க சமுதாயம் என்றால் இன்தென்றே தெரியாத மலர் மொட்டுகள் மீது ஏன் இந்த கோபம்?

நாட்டில் தீவிரவாதத்தை உலவ விட்டிருக்கும் அரக்கர்கள் பலர் இருக்க தீவிரவாதம் என்றாலே என்னனெ தெரியாத மலர் மொட்டுகள் மீது ஏன் இந்த கோபம்?

லஞ்சம் வாங்கி நாட்டையே சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் பலர் இருக்க லஞ்சம என்றால் என்னவென்றே தெரியாத மலர் மொட்டுகள் மீது ஏன் இந்த கோபம்?

அக்னி பகவானே அடுத்த முறை உனக்கு கோபம் வந்தால் தீக்கு இரையாக்கப்பட வேண்டியவர்கள் இவர்களதானே ஒழிய அப்பாவி பொது மக்களும் இது போன்ற இளம் தளிர்களும் அல்ல வி. பாலா சந்திரசேகரன்

பூத்த மலர்கள் உதிர்ந்தன

குடும்ப விளக்காய் நினைத்த உன்னை

குடிசை தீ எடுத்துக்கொண்டதே அன்று

குலமகள் கண்றீர் சிந்த உருக்குலைந்த நாள் இது

குற்றமற்ற சிறு உள்ளங்களே சிறிய நெஞ்சங்களே

மழலையர் புன்சிரிப்பில் பூத்த பள்ளி

பூங்குரலில் காலைவழிபாடு பாடிய உள்ளங்களே

பூமழை மண்ணில் துõவ விண்ணில் உங்களின் பயணம்

மான் குட்டியாய் வீட்டில் ஓடிய நாட்கள் எங்கே

பெற்றோரின் காலைவிடியலில் கண்ணீர் மழை தினமும்

குண்பகோணமே கதற சிதறிய சிறு இதயங்களே

எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்.

பேட்டை சரவணன், விக்டர், சுரேஷ், கார்த்திக் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry Cry</span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#46
22/7/2004<span style='font-size:25pt;line-height:100%'><b>கும்பகோணம் தீ விபத்து : கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்</b>
கும்பகோணம் : கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கபட்ட குழந்தைகளை தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.மேலும், தீ விபத்து சம்பவம் நடந்த இடத்தில் மலர் வளையம் வைத்த அவர் அஞ்சலி செலுத்தினார். இச்சம்பவத்தில் பாதிக்கபட்ட 112 குடும்பங்களுக்கு தலா இருபத்தி ஐந்தாயிரம் (25 ஆயிரம் ) விகிதம், மொத்தம் இருபத்தி எட்டு லட்சம் ( 28 லட்சம் ) ரூபாய் நிவாரண தொகையாக வழங்கினார். மேலும் , இச்சம்பவம் தனக்கு தாங்க முடியாத துக்கத்தை தந்ததாக அவர் கூறினார். அவருடன் திமுக தலைவர்கள் துரைமுருகன் , நடிகர் நெப்போலியன் , கோ. சி . மணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்


<b>கும்பகோணம் தீ விபத்து : பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு </b>
கும்பகோணம் : கும்பகோணத்தில் கடந்த வெள்ளிகிழமை பாலசரஸ்வதி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் , கும்பகோணம் மருத்துவ கல்லுவரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜனனி ( 8 ], மீனா(11), தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் ஆகியோர் இறந்ததால் பலி 93 ஆக உயர்ந்தது.
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த 92வது குழந்தைக்கு முதல்வர் இரங்கல் ; 1 லட்சம் நிவாரணம்


<b>கும்பகோணம் தீ விபத்தில் இறந்த 92வது குழந்தைக்கு முதல்வர் இரங்கல் ; 1 லட்சம் நிவாரணம்</b>
சென்னை: கும்பகோணம் கோரத் தீ விபத்தின் பலி எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை மருத்துக்கல்லுவரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜனனி, மீனா என்ற இரு குழந்தைகளும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இவர்களின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த இரு குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளார்.


</span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#47
<b>தீவிபத்தில் சிக்குண்ட மாணவமணிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக! "தீயே உனக்கென்ன கோரப் பசியா? பசி தீர்க்க பள்ளிச்சிறார்கள்தான் கிடைத்தார்களா? </b>
Cry Cry Cry Cry Cry
----------
Reply
#48
<b>நாகர்கோவில் பாடசாலை குண்டுத்தாக்குதல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.</b>
Cry Cry Cry Cry Cry
----------
Reply
#49
Cry Cry Cry Cry
Cry Cry Cry Cry Cry
----------
Reply
#50
<b>ஏன் இந்தப் படங்களைப் போட்டு சுட்டியை அழவைக்கிறீங்கள்?</b>
Cry Cry Cry Cry Cry
----------
Reply
#51
:roll:
Reply
#52
<b>சண்முகி அக்கா என்னாச்சு?</b>

Cry
----------
Reply
#53
<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'>

என்னடா சுட்டி பயமா... பயந்தா இந்தப் பக்கம் பாக்க வராதேங்க.... ஆனா பயம் என்டும் ஒன்றை வளர்க்காதேங்கோ... உலகம் இதைப்போல இன்னும் பல கொடூரங்கள் காட்டும்...ஏன் நாம் கூட நாளை அதில் பழிக்கடாக்களாய்... மற்றோரின் பார்வையில்... பாவங்களாய்.... வாழ்க்கை நிச்சயமில்லாதது... வாழும் வரை மானிடப்பண்புகள் காத்து நல்ல மனிதனாய் வாழ்வதே வளம்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
<b>கும்பகோணத்தில் மீண்டும் குறிப்பிட்ட பாடசாலையில் தீ விபத்தாமே. ஆவணங்கள் எல்லாம் தீப்பற்றிவிட்டனவாமே. உண்மையா?</b> :roll: Confusedhock:
----------
Reply
#55
Quote:என்னடா சுட்டி பயமா... பயந்தா இந்தப் பக்கம் பாக்க வராதேங்க.... ஆனா பயம் என்டும் ஒன்றை வளர்க்காதேங்கோ... உலகம் இதைப்போல இன்னும் பல கொடூரங்கள் காட்டும்...ஏன் நாம் கூட நாளை அதில் பழிக்கடாக்களாய்... மற்றோரின் பார்வையில்... பாவங்களாய்.... வாழ்க்கை நிச்சயமில்லாதது... வாழும் வரை மானிடப்பண்புகள் காத்து நல்ல மனிதனாய் வாழ்வதே வளம்....!


<b>சுட்டியின் பயத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. சுட்டியின் பீதியை சாதாரணமாக "பயம்" என்ற வார்தையில் சொல்லிவிடமுடியாது. எல்லாவற்றுக்கும் பயம் இல்லை. மரணித்த உடலை பார்த்தால் பயம்.</b> (அது திரைப்படத்திலோ புகைப்படத்திலோ நேரடியாகவோ.) Cry :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#56
ஏன் சுட்டி தாயகத்தில்... கீபிர் அடியைப்பார்த்ததில்லையோ...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
tamilini Wrote:ஏன் சுட்டி தாயகத்தில்... கீபிர் அடியைப்பார்த்ததில்லையோ...!



<b>பார்த்ததில்லையோவோ? என்ன கேள்வி அக்கா இது? கிபிர் தாக்குதலைப் பார்க்காத யாழ்ப்பாணத் தமிழனுமுண்டோ? அந்தத் தாக்குதலுக்குள் இருந்து தப்பிய சுட்டிக்குழந்தை நான். என்னால் வாழ்க்கையில் மறக்கமுடியாத கோரச் சம்பவம் அந்த நாகர்கோவில் பாடசாலைக் குண்டுத்தாக்குதல். அன்று மனதில் பட்டவடு இன்னும் மாறவில்லையே. அதுதான் இந்தப் பொல்லாத பயத்துக்கு காரணமே.</b>
----------
Reply
#58
இதை எல்லாம் பார்த்து கேட்டு எமக்கு இப்ப எல்லாத்தையும் கேட்க பழக்கம் வந்து விட்டது பயம் எல்லாம் வாறது குறைவு....! நீங்கள் பயப்பிட்டவுடன் கேட்டேன் அவ்வளவு தான்.........!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
kuruvikal Wrote:<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'>

என்னடா சுட்டி பயமா... பயந்தா இந்தப் பக்கம் பாக்க வராதேங்க.... ஆனா பயம் என்டும் ஒன்றை வளர்க்காதேங்கோ... உலகம் இதைப்போல இன்னும் பல கொடூரங்கள் காட்டும்...ஏன் நாம் கூட நாளை அதில் பழிக்கடாக்களாய்... மற்றோரின் பார்வையில்... பாவங்களாய்.... வாழ்க்கை நிச்சயமில்லாதது... வாழும் வரை மானிடப்பண்புகள் காத்து நல்ல மனிதனாய் வாழ்வதே வளம்....! Idea
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)