07-22-2004, 01:18 PM
<span style='font-size:30pt;line-height:100%'>முக்கிய செய்திகள்
கும்பகோணம் தீ விபத்தில் கைதான 17 பேர் யார் யார்?
கும்பகோணம் : கும்பகோணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இளம்தளிர்களுக்கு நடந்த கோரத்தினை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது . இந்த வழக்கில் பள்ளி நிர்வாகி உட்பட ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு கட்டட உறுதிச் சான்று கொடுத்த இன்ஜினியர், இவர் கொடுத்த சான்றிதழை நம்பி கட்டட சான்றிதழ் கொடுத்த தாசில்தார், \"சஸ்பெண்ட்' நிலையில் இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உட்பட எட்டு பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். நேற்று நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் கும்பகோணம் தீ விபத்து சம்பவம் தொடர்பாக கைதானோர் எண்ணிக்கை 17 என உயர்ந்துள்ளது.
கும்பகோணம் பள்ளி நிர்வாகி புலவர் பழனிசாமி (75), இவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி (71), தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி (41), சமையல்காரர் வசந்தி (42), சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி (39) ஆகிய ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். பள்ளிக்கு கட்டட உறுதிச் சான்று கொடுத்த இன்ஜினியர் ஜெயச்சந்திரன் உட்பட சிலர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களை பிடிப்பதற்கு கும்பகோணம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
\"சஸ்பெண்ட்' நிலையில் இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி முத்து பழனிசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பி.பழனிசாமி, திருவிடைமருதுõர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விருதுநகர் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன், பள்ளிக்கு கட்டட உறுதிச் சான்றிதழ் கொடுத்த அங்கீகரிக்கப்பட்ட இன்ஜினியர் ஜெயச்சந்திரன், இவர் கொடுத்த சான்றிதழை நம்பி கட்டட உறுதிச் சான்று கொடுத்த தஞ்சாவூர் தாசில்தார் பரமசிவம், முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன் ஆகிய எட்டு பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்டக் கல்வி அதிகாரியின் தனி உதவியாளர் ஜி.துரைராஜ் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் தொடக்கப் பள்ளி கல்வி விதிமுறைகளை மீறியும், நகராட்சி நிர்வாக விதிமுறைகளை மீறியும் செயல்பட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் 108, 109, 120பி, 283, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான 12 பேரையும் சேர்த்து கும்பகோணம் சம்பவத்தில் கைதானோர் எண்ணிக்கை 17 என உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று கைது செய்யப்பட்ட 12 பேரும் கும்பகோணம் ஜே.எம்., எண்.1ல் ஆஜர்படுத்தப்பட்டனர். 12 பேரையும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட இவர்களைப் பார்த்த பொதுமக்கள் \"கொலைகாரர்கள், ஊழல் பேர் வழிகள், இவர்கள் அராஜகத்தால் குழந்தைகள் பலியாகி விட்டனர்' என்று திட்டினர். பின்னர், 12 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</span>

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_pray.gif' border='0' alt='user posted image'> </span>
hock: