<span style='font-size:25pt;line-height:100%'><b>புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கிரிமினல்கள்</b></span>
மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஆசிய சமூகத்தவர்கள் சட்டத்தை மதித்துச் செயற்படும் நயநாகரிகம் கொண்டவர்கள் என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்னர் இருந்தது. அந்த நாடுகளில் உள்ள குடியேற்றவாசிகள் சமூகத்தவர் மத்தியில் அதிகரித்துக் காணப்படும் குற்றச் செயல்களுக்கு ஆசிய நாட்டவர்களும் கணிசமான 'பங்களிப்பைச்" செய்யும் பிரிவினராக மாறிவிட்டார்கள். <b>ஆசிய குடியேற்றவாசிகளில் இலங்கைத் தமிழர்கள் இப்போது படுமோசமான குற்றச் செயல்களைப் புரிவதில் முன்னணி வகிக்கக் கூடிய துரதிர்ர்;டவசமான நிலையை நோக்கி துரிதமாக நகருவதாக வெளிவரும் தகவல்கள் எமக்குப் பெரும் வேதனையைத் தருகின்றன.</b>
இங்கிலாந்தின் தலைநகரில் ஆசியக் குடியேற்றவாசிகள் மத்தியில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை ஒழித்துக் கட்டுவதற்கு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 'ஏசியன் கிறைம்" நடவடிக்கையின் ஒரு அங்கமாக வடக்கு லண்டனிலும் கிழக்கு லண்டனிலும் கடந்த வியாழக்கிழமை 500க்கும் அதிகமான பொலிஸாரினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல்களின் போது <b>13 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் காசோலைகள், கடன் அட்டைகள் மற்றும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.</b>
<b>ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட 'ஒபரேசன் என்வர்" என்ற இந்த நடவடிக்கையின்போது 22 விலாசங்கள் முற்றுகையிடப்பட்டன.</b> <b>தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் அதிகரிக்கும் வன்செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தக் கைதுகளையடுத்து விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று மெட்ரோபோலிட்டன் பொலிஸ் கமாண்டர் அல்பிரட் ஹிச் ஹொக் தெரிவித்திருக்கிறார்.</b>
லண்டன் மெட்ரோபோலிட்டன் பொலிஸார் தெற்காசியக் குடியேற்றவாசிகள் மத்தியிலான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கென விசேட தெற்காசியப் பிரிவொன்றையும் <b>தமிழர்கள் முறைப்பாடுகளைச் செய்வதற்காக, 'தமிழ் அவசர தொலைபேசிச் சேவை" (Tamil Hotline)) ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.</b>
புராதன ரோமானியர்களினால் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட ய10தர்கள் உலகம் ப10ராவும் அலைந்து திரிந்ததைப் போன்று இலங்கைத் தமிழர்களும் இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இனவன்செயல்களும் அதைத் தொடர்ந்து மூண்ட உள்நாட்டுப் போரின் விளைவாகத் தோன்றிய பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுமே இலங்கையில் இருந்து இலட்சக்கணக்கில் தமிழ் மக்களை 'நவீன ய10தர்களாக" புலம்பெயர வைத்தன.
1975 இல் வியட்நாமில் அமெரிக்கப் படைகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்துப் பெரும்பாலும் சீன வம்சாவளியினரான வியட்நாமியர்கள் தங்கள் நாட்டை விட்டு உருக்குலைந்த படகுகளில் வெளியேறி ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் அவர்களுக்கு<b> 'படகு மக்கள்" </b>என்ற பரிதாபமான பட்டத்தைக் கொடுத்திருந்தது அண்மைய வரலாறு. <b>அதேபோன்று இலங்கைத் தமிழர்களும் போரின் கொடூரத்தில் இருந்து விடுபடுவதற்காக வீடு வாசல்களைக் கைவிட்டு அயல்நாடான இந்தியாவுக்கு படகுகளில் தப்பியோடி 'படகு மக்களாக" மாறினார்கள்.</b> உயிரைக் காப்பாற்றுவதற்காக பாக்குநீரிணைய10டாக பதறியடித்துக் கொண்டு படகுகளில் சென்று மாண்டு போன ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை ஒருபோதுமே தெரியவரப் போவதில்லை.
<b>1980களின் நடுப்பகுதியில் மேற்கு ஜேர்மனியில் வரவேற்கப்படாத நிலையில் அங்கிருந்து அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக சற்றேனும் பழக்கமில்லாத சீதோர்;ண நிலையில், இரு சிறிய படகுகளில் நெருக்கியடித்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் கனடாவின் நிய10பவுண்ட்லாந்துக் கரையோரமாகச் சென்றடைந்த 155 இலங்கைத் தமிழர்களின் சோகக் கதையை தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.</b>
அதே காலப்பகுதியில் <b>பிரிட்டனுக்குள் பிரவேசிப்பதற்காக விசா இல்லாமல் பங்களாதேர்pல் இருந்து விமானத்தில் சென்ற 58 இலங்கைத் தமிழர்கள் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தை அடைந்தபோது அவர்களை பிரிட்டிர்; அதிகாரிகள் கைது செய்து அதே விமானத்தில் திருப்பியனுப்ப முயற்சித்த வேளை, அவர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை உரிந்து, சனசந்தடி மிக்க நவீன விமான நிலையத்தில் நிர்வாணப் போராட்டத்தை நடத்தியதையும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.</b>
பாதுகாப்பான ஒரு வாழ்வைத் தேடி கடன்பட்டேனும் முகவர்களுக்கு இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து மேற்கு நாடுகளுக்குச் செல்வதற்காக தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய எல்லைகளின் ஊடாக கொள்கலன்களுக்குள் மறைந்திருந்து பயணம் செய்தவேளை குளிரில் உறைந்து எத்தனை பேர் மாண்டிருப்பார்கள் என்ற விபரமும் ஒருபோதும் தெரியவரப் போவதில்லை.
பொருளாதார நோக்கங்களுக்காகவே இலங்கையில் இருந்து மேற்குலக நாடுகளுக்குச் சென்று பொய் கூறிப் போலி அரசியல் தஞ்சம் கோருகிறார்கள் தமிழர்கள் என்று தென்னிலங்கை இனவாதிகளும் அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் ஊடகங்களும் அன்று தீவிர பிரசாரம் செய்தன. <b>தங்களுக்கு எதிராக ஆயுதப் படைகளைக் கட்டவிழ்த்து விட்ட அரசாங்கத்திடமிருந்து தப்பியோடி உயிரைக் காப்பாற்றும் நோக்கில் வெளிநாட்டில் தஞ்சம் கோரும் ஒரு தமிழன் ஒழுக்க விழுமியங்களின் உச்ச நிலையைப் பேணி பொய் கூறாமல் இருக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியுமா?</b> பொருளாதார நோக்கங்களுக்காகத் தான் தமிழர்கள் மேற்குலகுக்குப் படையெடுக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியவர்கள், 1983 ஜூலைக்குப் பிறகு தான் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் புலம் பெயர வேண்டியேற்பட்டது என்பதில் உள்ள யதார்த்தத்தை ஒரு போதுமே உணர முயற்சித்ததில்லை. நாஜி ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடிய ய10த இனத்தவரான உலகின் மகத்தான விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்ரீனும் பொருளாதார நோக்கங்களுக்காகத்தான் புலம் பெயர்ந்தார் என்று புதுமையான விளக்கத்தைக் கூடத் தரக்கூடியவர்கள் தென்னிலங்கை இனவாதிகள்.
<b>உண்மையிலேயே மேற்குலக நாடுகளுக்கான இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு அடிப்படையில் ஒரு சோக காவியம். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து பண உதவி கிடைத்திராவிட்டால், இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போரின் அவல நிலைக்குள் பெரும்பான்மையான வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டியிருக்க முடியாது என்பது ஒன்றும் இரகசியமில்லை.</b>
<b>முன்னைய கால கட்டங்களில் மேற்குலகுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் கடந்த இரு தசாப்த காலத்திற்குள் புலம் பெயர்ந்த சந்ததியினருக்கும் இடையே இருக்கின்ற அரசியல் உணர்வு வேறுபாடு குறிப்பிட்டுக் கவனிக்கப்பட வேண்டியதாகும். </b>முன்னையவர்கள் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தொழில்சார் நிபுணர்களாகவும் கல்விமான்களாகவும் இருந்தனர். அவர்கள் இலங்கை அரசியலில் பெருமளவுக்கு அக்கறை காட்டவில்லை. இங்கைத் தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்கு இடையிலான குரோதங்களும் இவர்களின் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாமல் பிரதிபலிக்கவே செய்கின்றன.
இந்த இயக்கக் குரோதங்கள் காரணமான வன்முறைகளுக்கு ஒரு அரசியல் பின்னணி இருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், <b>தற்போது மேற்குலக நகரங்களில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வன்முறைகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் காரணம் என்ன? </b>
<b>அதேவேளை, இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் புரையோடிப் போயிருக்கும் சாதிப்பாகுபாடுகள் மற்றும் பிரதேச வேறுபாடுகளும் புலம் பெயர்ந்த சமூகத்தின் மத்தியிலான தகராறுகளுக்கு காரணமாக அமைவதாகவும் அறிய வருகிறது. அவலங்களுக்குள் இருந்து தப்பியோடிய போது ஒரே உணர்வுடன் காணப்பட்டவர்கள் பின்னர் 'நாங்கள்"ஃ 'அவர்கள்" என்று பிளவுபட்டு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். வௌ;வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் தங்களுக்கிடையிலான பழைய குரோதங்களை தீர்த்துக் கொள்வதற்கு வன்முறைகளை நாடுகிறார்கள். கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே இதைக் கூடுதலாகக் காண முடிகிறது
[b]எத்தகைய வேதனை மிகுந்த சூழ்நிலைகளின் கீழ் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள் என்பதை அவர்களில் ஒரு பிரிவினர் இன்று மறந்து செயற்பட்டு புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் முழுவதுக்குமே அவப்பெயரைத் தேடிக் கொடுக்கும் நிலைமை மிகவும் விசனத்துக்குரியதாகும்.</b>
மேலோட்டமான காரணங்களைக் கூறி இலங்கைத் தமிழர்களுக்கு தஞ்சம் வழங்குவதற்கு மறுக்கும் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரிட்டன், தமிழ்க் குடியேற்றவாசிகள் மத்தியில் அதிகரிக்கும் குற்றச் செயல்களையும் வன்முறைகளையும் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் போக்கிற்கு அனுகூலமாகப் பயன்படுத்த முனைப்புக் காட்டும் என்பதையும் மறந்து விடக் கூடாது.
<b>லண்டனில் உள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் கும்பல்கள் கடந்த ஒரு சில வருடங்களில் 10 கொலைகள் உட்பட தொடர்ச்சியான படுமோசமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக மெட்ரோபோலிட்டன் பொலிஸ் அறிவித்திருக்கிறது லண்டனில் வாழும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களே சொந்த இனத்தைச் சேர்ந்த காடையர்களின் அடாவடித்தனத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.
நிற வெறி கொண்ட ஆங்கிலேயர்கள் மேற்கிந்திய மற்றும் ஆபிரிக்கக் குடியேற்றவாசிகளை விட கூடுதலான அளவுக்கு ஆசியக் குடியேற்றவாசிகளை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர்கள். வெள்ளையர் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரிட்டிர்; [b]தீவிர வலதுசாரி அரசியல் வாதி ஈனொக் பவல் ஒரு தடவை ஆசியர்களைப் பற்றிக் குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். 'ஒரு மேற்கிந்தியனை நான் உற்று நோக்கும்போது அஞ்சவில்லை. ஆனால், ஒரு ஆசியனை நோக்கும்போது எமக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய ஒரு அந்நிய கலாசாரத்தைக் காண்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.</b>
<b>புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள கிறிமினல் பிரகிருதிகளின் குற்றச்செயல்களும் வன்செயல்களும் முழுத் தமிழ்க்குடியேற்றவாசிகள் சமூகத்திற்கும் எதிரான ஒரு கொடூரமான துவேசம் பிரவாகம் எடுப்பதற்கான காரணிகளாக விஸ்வரூபம் எடுக்காதிருப்பதை உறுதிசெய்ய உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.</b>
http://www.thinakural.com/2004/July/11/S_Editorial.htm
நன்றி
தினக்குரல்
யாழ் இணையம்