Yarl Forum
புலத்தில் உங்களுக்கு அருகாமையில் தமிழ்க் குடும்பங்கள் ..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புலத்தில் உங்களுக்கு அருகாமையில் தமிழ்க் குடும்பங்கள் ..... (/showthread.php?tid=6947)

Pages: 1 2 3


புலத்தில் உங்களுக்கு - yarlmohan - 07-11-2004

இக் கேள்வியை எழுப்பியதன் காரணம் என்னவெனில், சில நாட்களுக்கு முன்னர் ஒருவரைச் சந்தித்தபோது தனது புதிய இடத்தில் தமிழாக்கள் எவரும் அருகில் இல்லையென்றும், நல்ல இடமென்றும் கூறினார். தமிழ்ர்கள் அருகில் இல்லாததால்தான் அதை நல்ல இடம் என்று குறிப்பிட்டது அவருடன் தொடர்ந்த கதைத்தபோது தெரிந்தது. இது போன்று தமிழர்கள் அதிகம் இல்லாத இடமாகப் பார்த்து எம்மவர்கள் சில குடியேறியதையும் அறிந்துள்ளேன். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?


- kuruvikal - 07-11-2004

லண்டனில் இது ஒரு பஷனாப் போச்சு மோகன் அண்ணா... எங்காவது ஒன்றாகக் கூடும் இடங்களில் வாய் கூசாமல் நாலு விடுப்புக் கதை சொல்லி தம்மைத்தாமே உயர்த்தியும் தாழ்த்தியும் காட்டும் அர்ப்ப குணமுள்ளவர்களாச்சே தமிழர்கள்.... இப்ப வெளிநாடுகளில் அகதிகள் என்று பலரும் வந்து குடியேறிவிட்டதால்... உந்த மனதுக்குள் ஒரு பெருமைக்கு அலையும் சிறுமைகள் என்ன சொல்கின்றன தெரியுமா... நாங்கள் இங்கிலீஸ் பீப்பிளோடதான் இருக்கிறம்...தே ஆ நைஸ்...வெறி டீசன் பீப்பிள்... ஐ டோன் லைக் ரு ஸ்ரிக் வித் தமிழ் பீப்பிள்... உது அப்பா அம்மாவட்ட இருந்து மட்டும் இல்ல அங்க இருந்து வந்து கண்ட இடத்தில் பொறுக்கி எடுத்த புதுமைகளோடு அலையும் இளசுகளிடத்தும்... பிரித்தானியா பிறப்பு குழம்பல் கலப்புகளிடம் மிக அதிகமாக இருக்கிறது.... அதுதான் நிஜம்....! வந்து பார்தால் புரியும்....! உந்த வெட்டிப் பந்தாவுக்கு எங்கட ஆக்களுக்கு எங்க போனாலும் குறைச்சல் இல்ல...நாடோடிகள்....என்றது மட்டும் நினைவில நிக்குதில்ல..வெள்ளைக்காரனில உயர்மட்டம் உவைய மனிசர் என்று கூட மதிக்கிறதில்லை....அதுவும் உண்மை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea


- tamilini - 07-11-2004

என்னை பெறுத்தவரை தமிழ் ஆக்கல் இல்லா இடத்தில இருக்கிறது தான்.... சிறந்தது.... இங்கினை இருக்கிறாக்கல் மனிசர் மாதிரியே இருக்கினம்.... அதைவிட பொம்பிளை பிள்ளைகளை வைத்திருக்கிறவர்கள்.... முற்றாக தமிழ் ஆக்கல் இருக்கிற இடத்தை தவிர்க்கிறதுக்கு தான் விரும்பினம்... அவர்கள் ஆதங்கம் நியாயமாக தான் படுகிறது.... இளைய சழுதாயத்தில் இப்போ சண்டையும் சச்சரவும் தான் அதிகம்... காரணம் பெண்களால் தான் என்டு நிறைய பேர் பேசியதை நான் கேட்டிருக்கிறன்... ஏன் கொலை கூட நடந்திருக்கிறது... அதற்காக எங்கட அடையாளங்களை மறந்து வெள்ளைக்காரர் மாதிரி இருக்க வேண்டும் என்டு சொல்ல வில்லை எங்கிருந்தாலும் நாம் தமிழர் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் எங்கும் இருக்கலாம்.... ஏன் இங்கு வரும் பொழுது... கூடிய வந்தோம்... விரும்பியவர்கள் தனித்து வாழ்வதில் குறை ஒண்டும் இல்லையே.....!


- kuruvikal - 07-11-2004

தமிழினி... உங்கட கருத்து நியாயம் எப்ப ஒரு செயலுக்கு நியாயமான ஒரு தேவை இருக்கும் போது.... ஆனா உந்த பந்தா அப்படிச் சொல்லவில்லையே.... அப்ப அதுக்கு என்ன சொல்லுறீங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆனா இன்னொன்றையும் கவனியுங்கோ.... பெட்டைப் பிரச்சனை வெள்ளைக்காரன் மத்தியிலும் இருக்கு.... ஆனா அவன் பெட்டைக்காக கொலை செய்யும் அளவுக்கு இன்னும் விலங்குகளை விடக் கேவலமான நிலையிலும் இல்லை....ஆனா விலங்கு நிலையில் இருக்கிறான்... ஒன்றில்லை என்றால் இன்னொன்று....!

மனிதரைத்தான் உலகில் காணக்கிடக்குதில்லை.....குருவிகளைக் கேட்டால் எங்கே உண்மையான மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கேதான் எமக்கு நிம்மதியான இருப்பு இருக்கும் என்று நினைக்கின்றன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kavithan - 07-11-2004

நான் நினைக்கிறேன்,
பலர் இதனை விரும்புவதற்கு பலகாரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமாக அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் எம்மவராலேயே ஏற்படுவதனால்.அதாவது தமிழினி அக்கா சொல்வது போன்று பெண்பிள்ளைகள் இருப்பவர்கள் தான் இதனைக் கூடுதலாக விரும்புகிறார்கள் என்றும் இல்லை, ஆண்பிள்ளைகள் இருப்பவர்களும் இதனை விரும்புகிறார்கள்.....
பெண்பிள்ளைகள் இருப்பவர்களுக்கு சில தமிழ் இளைஞர்களால் பிரச்சனை
ஆண் பிள்ளைகள் இருப்பவர்களுக்கு கூடாத நண்பர்களின் நட்பால் பிரச்சனை.

கனடாவைப் பொறுத்தவரை தான் தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலை....மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். அதைவிட குடும்பத்தை கனிக்கவே நேரமின்றி திரியும் பெற்றோர்கள்....... இதற்குள் மேலும்பிரச்சனைகள் எமது சமூகத்தவரால் என்றால்..... என்ன தான் செய்ய முடியும் அவர்கள்... அவர்களை சொல்லிக் குற்றமில்லை..... . எது வித கஸ்டமும் தெரியாது ஊதாரித்தனமாக திரிகின்ற சில இளைஞர்களே இதற்கு முழுக் காரணமும்.
இதற்கு உதாரணங்களாக இரண்டு உண்மைச் சம்பவங்களை பின்னர் கூறுகிறேன்

இதற்கு விதி விலக்காக வெள்ளைகளோடு இங்கிலீஸ் தான் பேசி இருக்கவேணும் என்று இருப்பவர்களும் உண்டு....


<b>எனது கருத்து

புலம்பெயர் நாடுகளில் எம்மினத்தவருக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளில் 90% ஆனவை எம்மினத்தவராலேயே ஏற்படுத்தப்படுகின்றது</b>.


- tamilini - 07-11-2004

சரியாக சொன்னீர்கள் கவிதன்....

ஆனால் பந்தாவுக்காக செல்பவர்களை ஓன்டும் செய்ய முடியாது... அவர்கள் தான் அடயாளங்களை தொலைத்தவர்களாக திரிகிறார்கள்... என்ன செய்வது....


- kuruvikal - 07-11-2004

கவிதன் உங்கள் கருத்தும் தமிழினியின் கருத்தும் சாரத்தால் ஒன்றுதான்... சரி தமிழர்கள் தமிழர்களிடமே இருந்து பாதுகாப்புத் தேட ஓடி ஒழிக்கிறார்கள் என்றால்...?????! தமிழர்களிடம் இருந்து சிங்களவர்கள் பாதுகாப்புத் தேட நினைத்துத்தான் யுத்தம் செய்கிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா...?????!

ஏன் தமிழர்கள் ஆண்டாண்டுகளாக தாயகத்தில் கூடி வாழவில்லையோ...மாற்றினங்களுக்குள் புகுந்துதானோ வாழ்ந்தார்கள்.... அப்படி வாழ்ந்திருந்தால் இன்று தமிழர்கள் என்று கூறி மொழிக்காகவும் நாட்டுக்காகவும் தியாகங்களூடு போராடத்தான் முடிந்திருக்குமோ....அல்லது ஒரு தனித் தேசிய இனம் என்றுதான் கூறி இருக்கமுடியுமோ... இல்ல இப்படி அகதிகளாகத்தான் வந்திருக்க முடியுமோ....???! :roll: :?:

எங்கடை ஆக்களில ஒரு கூட்டம் இருந்து இருக்குது வெட்டிப் பந்தாவுக்கென்றே... அது எல்லாம் நியாயம் பார்த்துக் சமூகம் பார்த்துக் கருமம் ஆற்றுவதில்ல சுயநலம் பார்த்து ஆற்றும் கறுமம்...! Idea

யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது என்ர பிள்ளை சென் ஜோன்ஸ் கொலிச்சில் படிக்கிறான் கொழும்பில் றோயலில் படிக்கிறான் என்று சொல்வதற்காகவே பல ஆயிரங்கள் கொட்டி பிரபல்ய பாடசாலைகளில் சேர்ப்பார்கள்... இதை வைத்து அவர்களுக்குப் பிள்ளைகளின் படிப்பின் மீதான அதீத அக்கறையில்தான் இதைச் செய்கிறார்கள் என்று முடிவாகக் கூறத்தான் முடியுமா....???! அப்படி நினைத்திருந்தால் பிள்ளைகளை போட்டிப்பரீட்சைகளுக்குத் தயார் செய்து போட்டிப் பரீட்சைகள் மூலம் இந்துக் கல்லூரிக்கோ அல்லது மத்திய கல்லூரிக்கோ அல்லது இதர பாடசாலைகளுக்கோ அனுப்பி இருக்கலாமே....???! ஏன் அப்படிச் செய்யவில்லை....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

இது நாங்கள் கண்கூடாகக் கண்டது... எங்களோடு படித்த நண்பன் ஒருவன் நாங்கள் போட்டிப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யும் போது படிப்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை...அப்போ நாங்கள் கேட்டோம் நீ பரீட்சை எடுக்கவில்லயா என்று... அவன் சொன்னான் நான் சென் ஜோன்சில சேரப்போறன் அதுதான் என்று...இந்த வாரிசுகள் தான் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளிலும் வெட்டிப் பந்தாவுக்கால அலையும் கூட்டங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kavithan - 07-11-2004

தமிழ் மக்கள் தமிழீழத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போது இப்பிரச்சனை இல்லையே. சில இளைஞர்கள் இங்கு இருக்கின்ற சில சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்து வதால் தான் இப்பிரச்சனை.......இங்கு புலிகளுக்கு அதிகாரம் இருக்கு மென்றால் தமிழ் இளைஞர்களின் அட்டகாசம் இருக்குமா? இல்லைத்தானே.....சில மாடுகளை அடித்து தான் திருத்தலாம் .... அப்படித்தான் இவர்களையும் திருத்த வேண்டும்..... அதற்கு ...இந்த இடங்களின் சட்டங்கள் சரி வராது..... அதனால் தான் மக்கள் தனித்து வாழ முயல்கிறார்கள் . பல இன்னல்களில் இருந்து தாண்டி வந்து , வந்த இடத்திலும் பிரச்சனையை எதிர் நோக்க முடியாமல் போயும் அவர்கள் இதனை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இதற்கான உண்மை சம்பவங்களை பின்னர் கூறுகிறேன்.......


- tamilini - 07-11-2004

kavithan Wrote:தமிழ் மக்கள் தமிழீழத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போது இப்பிரச்சனை இல்லையே. சில இளைஞர்கள் இங்கு இருக்கின்ற சில சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்து வதால் தான் இப்பிரச்சனை.......இங்கு புலிகளுக்கு அதிகாரம் இருக்கு மென்றால் தமிழ் இளைஞர்களின் அட்டகாசம் இருக்குமா? இல்லைத்தானே.....சில மாடுகளை அடித்து தான் திருத்தலாம் .... அப்படித்தான் இவர்களையும் திருத்த வேண்டும்..... அதற்கு ...இந்த இடங்களின் சட்டங்கள் சரி வராது..... அதனால் தான் மக்கள் தனித்து வாழ முயல்கிறார்கள் . பல இன்னல்களில் இருந்து தாண்டி வந்து , வந்த இடத்திலும் பிரச்சனையை எதிர் நோக்க முடியாமல் போயும் அவர்கள் இதனை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இதற்கான உண்மை சம்பவங்களை பின்னர் கூறுகிறேன்.......

எப்படி கவிதன் இப்படி எடுத்துவிடுறியள் நான் நினைத்தேன் தமிபி சொல்லி விட்டார் நன்றி தம்பி...
மானம் பெரிது என்று வாழ்பவன் தானே தமிழன்... கறைபடியாமல் வாழ வேண்டும் என்டால்... இப்படி பட்டவர்களை விலகி இருப்பதே சிறந்தது... ம் குருவிகளும் அனுபவித்து பார்த்தால் தான் புரியும்... நான் இங்கு சிறிது காலம் வாழ்ந்திருந்தாலும்... நிறையவே பார்த்திருக்கிறேன்.... Cry Cry Cry
சிலர் செய்யும் செயலைப்பார்த்து நான் வருந்தியதும் உண்டு....!


- kuruvikal - 07-11-2004

நீங்கள் வருந்தி என்ன பயன்... சம்பந்தப்பட்டவர்கள் வருந்தித் திருந்த வேண்டும்... நிலவுக்குப் பயந்து பரதேசம் போகலாம் என்கிறிங்க... பாவம் வெள்ளைக்காரன்... ஊரூராக் காலி செய்து கடைசியில எங்க போய் வாழப் போறானோ....நண்பா வெள்ளைக்காரா என் செய்வோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- tamilini - 07-11-2004

ம் பாவம் குருவிகள்.... வெள்ளைக்காரனிக்காக கவலைப்படுதுகள்.......... :| :mrgreen: !


- kavithan - 07-11-2004

tamilini Wrote:
kavithan Wrote:தமிழ் மக்கள் தமிழீழத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போது இப்பிரச்சனை இல்லையே. சில இளைஞர்கள் இங்கு இருக்கின்ற சில சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்து வதால் தான் இப்பிரச்சனை.......இங்கு புலிகளுக்கு அதிகாரம் இருக்கு மென்றால் தமிழ் இளைஞர்களின் அட்டகாசம் இருக்குமா? இல்லைத்தானே.....சில மாடுகளை அடித்து தான் திருத்தலாம் .... அப்படித்தான் இவர்களையும் திருத்த வேண்டும்..... அதற்கு ...இந்த இடங்களின் சட்டங்கள் சரி வராது..... அதனால் தான் மக்கள் தனித்து வாழ முயல்கிறார்கள் . பல இன்னல்களில் இருந்து தாண்டி வந்து , வந்த இடத்திலும் பிரச்சனையை எதிர் நோக்க முடியாமல் போயும் அவர்கள் இதனை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இதற்கான உண்மை சம்பவங்களை பின்னர் கூறுகிறேன்.......

எப்படி கவிதன் இப்படி எடுத்துவிடுறியள் நான் நினைத்தேன் தமிபி சொல்லி விட்டார் நன்றி தம்பி...
மானம் பெரிது என்று வாழ்பவன் தானே தமிழன்... கறைபடியாமல் வாழ வேண்டும் என்டால்... இப்படி பட்டவர்களை விலகி இருப்பதே சிறந்தது... ம் குருவிகளும் அனுபவித்து பார்த்தால் தான் புரியும்... நான் இங்கு சிறிது காலம் வாழ்ந்திருந்தாலும்... நிறையவே பார்த்திருக்கிறேன்.... Cry Cry Cry
சிலர் செய்யும் செயலைப்பார்த்து நான் வருந்தியதும் உண்டு....!
வந்த கொஞ்ச நாட்களில் ஏற்பட்ட அனுபவங்களும்......... பத்திரிகையிலை தமிழ்... இளை..... எண்டு கிடக்கேக்கை இருக்கிற அவமானமும்தான்.....ஏதும் தமிழுக்கு, ஈழத்துக்கு என்று செய்யாவிட்டாலும்..... இனத்தின்ரை மரியாதையையாவது கெடுக்காமல் இருக்க வேண்டும்......இது தான் என்னுடைய அவா...


- AJeevan - 07-11-2004

[size=15]1990களில் நான் சுவிசுக்கு வந்த போது ஒரு இடத்தில் ஒரு தமிழர் வேலை செய்தால்,தான் வேலை செய்த இடத்தில் இன்னொரு தமிழரை வேலைக்கு சேர்த்துவிடுவது சர்வ சாதாரணமான ஒரு விடயம்.

இப்படி சேர்த்து விடுவது தற்போது வெகுவாக குறைந்தே இருக்கிறது.

இதற்கு ஒரு காரணம், பின்னயவர் முன்னயவரை தூக்க எல்லா விதங்களிலும் முயல்வதுதான்.

அண்மைக்காலமாக
தற்போது வேலையிலிருப்பவர்கள்;
இப்போது வருவோர் சிலரை,
வேலைக்குள் வரவே விட மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கிள்ளி எறிகிறார்கள்.
வேறு ஒரு இனத்தவன் வந்தாலும் பரவாயில்லை, நம்மவன் நுழையவே கூடாது என்பதில் கடுமையாக சதி வேலை செய்கிறார்கள்.<b>என்ன கொடுமை?</b>

<i>(அவர்கள் செய்த செயலை வருவோரும்; செய்வார்கள் என்ற பயமா?)</i>

இவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்று ஒரு கணம் யோசிக்க மாட்டார்களா என்று
இதயம் கனக்கிறது?
<img src='http://www.yarl.com/forum/files/tears.jpeg' border='0' alt='user posted image'>


- Paranee - 07-11-2004

ம்
நாங்கள் இங்கை எங்கே தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று தேடி அங்கே இருக்க முனைகின்றோம்

எல்லாம் காலம்


- shanmuhi - 07-11-2004

தமிழர்கள் அதிகம் இல்லாத இடமாகப் பார்த்து எம்மவர்கள் சில குடியேறுவதன் பலன்களை.... காலம் கடந்து அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
தனிமையாக வாழும் காலங்களில் இது சாத்தியப்பட்டாலும்... மனைவி பிள்ளைகள் என்று வந்தபின் இதன் தாக்கம் அதிகரிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என்றே கூறலாம்.
குறிப்பாக பிள்ளைகளின் வாழ்க்கைமுறை... அந்நிய கலாச்சாரத்துடன் ஒன்றிணைய நாமே வழி வகுத்துக் கொடுக்கிறோம்.

அதைவிட... வாழ்வில் முதுமை எட்டிப்பார்க்கும்போது...எம் இனத்தின் உறவுகளை எட்டிப்பார்க்கக்கூடிய நிலை ஏற்படலாம் என்பதே என் கருத்தாக அமைகின்றது.


புலம்பெயர்ந்த தமிழர் - kavithan - 07-12-2004

<span style='font-size:25pt;line-height:100%'><b>புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் கிரிமினல்கள்</b></span>

மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் ஆசிய சமூகத்தவர்கள் சட்டத்தை மதித்துச் செயற்படும் நயநாகரிகம் கொண்டவர்கள் என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்னர் இருந்தது. அந்த நாடுகளில் உள்ள குடியேற்றவாசிகள் சமூகத்தவர் மத்தியில் அதிகரித்துக் காணப்படும் குற்றச் செயல்களுக்கு ஆசிய நாட்டவர்களும் கணிசமான 'பங்களிப்பைச்" செய்யும் பிரிவினராக மாறிவிட்டார்கள். <b>ஆசிய குடியேற்றவாசிகளில் இலங்கைத் தமிழர்கள் இப்போது படுமோசமான குற்றச் செயல்களைப் புரிவதில் முன்னணி வகிக்கக் கூடிய துரதிர்ர்;டவசமான நிலையை நோக்கி துரிதமாக நகருவதாக வெளிவரும் தகவல்கள் எமக்குப் பெரும் வேதனையைத் தருகின்றன.</b>

இங்கிலாந்தின் தலைநகரில் ஆசியக் குடியேற்றவாசிகள் மத்தியில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை ஒழித்துக் கட்டுவதற்கு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 'ஏசியன் கிறைம்" நடவடிக்கையின் ஒரு அங்கமாக வடக்கு லண்டனிலும் கிழக்கு லண்டனிலும் கடந்த வியாழக்கிழமை 500க்கும் அதிகமான பொலிஸாரினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல்களின் போது <b>13 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் காசோலைகள், கடன் அட்டைகள் மற்றும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.</b>

<b>ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட 'ஒபரேசன் என்வர்" என்ற இந்த நடவடிக்கையின்போது 22 விலாசங்கள் முற்றுகையிடப்பட்டன.</b> <b>தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் அதிகரிக்கும் வன்செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தக் கைதுகளையடுத்து விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று மெட்ரோபோலிட்டன் பொலிஸ் கமாண்டர் அல்பிரட் ஹிச் ஹொக் தெரிவித்திருக்கிறார்.</b>

லண்டன் மெட்ரோபோலிட்டன் பொலிஸார் தெற்காசியக் குடியேற்றவாசிகள் மத்தியிலான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கென விசேட தெற்காசியப் பிரிவொன்றையும் <b>தமிழர்கள் முறைப்பாடுகளைச் செய்வதற்காக, 'தமிழ் அவசர தொலைபேசிச் சேவை" (Tamil Hotline)) ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.</b>

புராதன ரோமானியர்களினால் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட ய10தர்கள் உலகம் ப10ராவும் அலைந்து திரிந்ததைப் போன்று இலங்கைத் தமிழர்களும் இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். 1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இனவன்செயல்களும் அதைத் தொடர்ந்து மூண்ட உள்நாட்டுப் போரின் விளைவாகத் தோன்றிய பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுமே இலங்கையில் இருந்து இலட்சக்கணக்கில் தமிழ் மக்களை 'நவீன ய10தர்களாக" புலம்பெயர வைத்தன.

1975 இல் வியட்நாமில் அமெரிக்கப் படைகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்துப் பெரும்பாலும் சீன வம்சாவளியினரான வியட்நாமியர்கள் தங்கள் நாட்டை விட்டு உருக்குலைந்த படகுகளில் வெளியேறி ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் அவர்களுக்கு<b> 'படகு மக்கள்" </b>என்ற பரிதாபமான பட்டத்தைக் கொடுத்திருந்தது அண்மைய வரலாறு. <b>அதேபோன்று இலங்கைத் தமிழர்களும் போரின் கொடூரத்தில் இருந்து விடுபடுவதற்காக வீடு வாசல்களைக் கைவிட்டு அயல்நாடான இந்தியாவுக்கு படகுகளில் தப்பியோடி 'படகு மக்களாக" மாறினார்கள்.</b> உயிரைக் காப்பாற்றுவதற்காக பாக்குநீரிணைய10டாக பதறியடித்துக் கொண்டு படகுகளில் சென்று மாண்டு போன ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை ஒருபோதுமே தெரியவரப் போவதில்லை.

<b>1980களின் நடுப்பகுதியில் மேற்கு ஜேர்மனியில் வரவேற்கப்படாத நிலையில் அங்கிருந்து அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக சற்றேனும் பழக்கமில்லாத சீதோர்;ண நிலையில், இரு சிறிய படகுகளில் நெருக்கியடித்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் கனடாவின் நிய10பவுண்ட்லாந்துக் கரையோரமாகச் சென்றடைந்த 155 இலங்கைத் தமிழர்களின் சோகக் கதையை தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.</b>

அதே காலப்பகுதியில் <b>பிரிட்டனுக்குள் பிரவேசிப்பதற்காக விசா இல்லாமல் பங்களாதேர்pல் இருந்து விமானத்தில் சென்ற 58 இலங்கைத் தமிழர்கள் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தை அடைந்தபோது அவர்களை பிரிட்டிர்; அதிகாரிகள் கைது செய்து அதே விமானத்தில் திருப்பியனுப்ப முயற்சித்த வேளை, அவர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை உரிந்து, சனசந்தடி மிக்க நவீன விமான நிலையத்தில் நிர்வாணப் போராட்டத்தை நடத்தியதையும் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.</b>

பாதுகாப்பான ஒரு வாழ்வைத் தேடி கடன்பட்டேனும் முகவர்களுக்கு இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து மேற்கு நாடுகளுக்குச் செல்வதற்காக தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய எல்லைகளின் ஊடாக கொள்கலன்களுக்குள் மறைந்திருந்து பயணம் செய்தவேளை குளிரில் உறைந்து எத்தனை பேர் மாண்டிருப்பார்கள் என்ற விபரமும் ஒருபோதும் தெரியவரப் போவதில்லை.

பொருளாதார நோக்கங்களுக்காகவே இலங்கையில் இருந்து மேற்குலக நாடுகளுக்குச் சென்று பொய் கூறிப் போலி அரசியல் தஞ்சம் கோருகிறார்கள் தமிழர்கள் என்று தென்னிலங்கை இனவாதிகளும் அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் ஊடகங்களும் அன்று தீவிர பிரசாரம் செய்தன. <b>தங்களுக்கு எதிராக ஆயுதப் படைகளைக் கட்டவிழ்த்து விட்ட அரசாங்கத்திடமிருந்து தப்பியோடி உயிரைக் காப்பாற்றும் நோக்கில் வெளிநாட்டில் தஞ்சம் கோரும் ஒரு தமிழன் ஒழுக்க விழுமியங்களின் உச்ச நிலையைப் பேணி பொய் கூறாமல் இருக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியுமா?</b> பொருளாதார நோக்கங்களுக்காகத் தான் தமிழர்கள் மேற்குலகுக்குப் படையெடுக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியவர்கள், 1983 ஜூலைக்குப் பிறகு தான் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் புலம் பெயர வேண்டியேற்பட்டது என்பதில் உள்ள யதார்த்தத்தை ஒரு போதுமே உணர முயற்சித்ததில்லை. நாஜி ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடிய ய10த இனத்தவரான உலகின் மகத்தான விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்ரீனும் பொருளாதார நோக்கங்களுக்காகத்தான் புலம் பெயர்ந்தார் என்று புதுமையான விளக்கத்தைக் கூடத் தரக்கூடியவர்கள் தென்னிலங்கை இனவாதிகள்.

<b>உண்மையிலேயே மேற்குலக நாடுகளுக்கான இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு அடிப்படையில் ஒரு சோக காவியம். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து பண உதவி கிடைத்திராவிட்டால், இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போரின் அவல நிலைக்குள் பெரும்பான்மையான வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டியிருக்க முடியாது என்பது ஒன்றும் இரகசியமில்லை.</b>

<b>முன்னைய கால கட்டங்களில் மேற்குலகுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் கடந்த இரு தசாப்த காலத்திற்குள் புலம் பெயர்ந்த சந்ததியினருக்கும் இடையே இருக்கின்ற அரசியல் உணர்வு வேறுபாடு குறிப்பிட்டுக் கவனிக்கப்பட வேண்டியதாகும். </b>முன்னையவர்கள் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தொழில்சார் நிபுணர்களாகவும் கல்விமான்களாகவும் இருந்தனர். அவர்கள் இலங்கை அரசியலில் பெருமளவுக்கு அக்கறை காட்டவில்லை. இங்கைத் தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்கு இடையிலான குரோதங்களும் இவர்களின் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாமல் பிரதிபலிக்கவே செய்கின்றன.

இந்த இயக்கக் குரோதங்கள் காரணமான வன்முறைகளுக்கு ஒரு அரசியல் பின்னணி இருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், <b>தற்போது மேற்குலக நகரங்களில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வன்முறைகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் காரணம் என்ன? </b>


<b>அதேவேளை, இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்குள் புரையோடிப் போயிருக்கும் சாதிப்பாகுபாடுகள் மற்றும் பிரதேச வேறுபாடுகளும் புலம் பெயர்ந்த சமூகத்தின் மத்தியிலான தகராறுகளுக்கு காரணமாக அமைவதாகவும் அறிய வருகிறது. அவலங்களுக்குள் இருந்து தப்பியோடிய போது ஒரே உணர்வுடன் காணப்பட்டவர்கள் பின்னர் 'நாங்கள்"ஃ 'அவர்கள்" என்று பிளவுபட்டு வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். வௌ;வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் தங்களுக்கிடையிலான பழைய குரோதங்களை தீர்த்துக் கொள்வதற்கு வன்முறைகளை நாடுகிறார்கள். கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே இதைக் கூடுதலாகக் காண முடிகிறது

[b]எத்தகைய வேதனை மிகுந்த சூழ்நிலைகளின் கீழ் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள் என்பதை அவர்களில் ஒரு பிரிவினர் இன்று மறந்து செயற்பட்டு புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் முழுவதுக்குமே அவப்பெயரைத் தேடிக் கொடுக்கும் நிலைமை மிகவும் விசனத்துக்குரியதாகும்.</b>

மேலோட்டமான காரணங்களைக் கூறி இலங்கைத் தமிழர்களுக்கு தஞ்சம் வழங்குவதற்கு மறுக்கும் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரிட்டன், தமிழ்க் குடியேற்றவாசிகள் மத்தியில் அதிகரிக்கும் குற்றச் செயல்களையும் வன்முறைகளையும் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் போக்கிற்கு அனுகூலமாகப் பயன்படுத்த முனைப்புக் காட்டும் என்பதையும் மறந்து விடக் கூடாது.

<b>லண்டனில் உள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் கும்பல்கள் கடந்த ஒரு சில வருடங்களில் 10 கொலைகள் உட்பட தொடர்ச்சியான படுமோசமான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக மெட்ரோபோலிட்டன் பொலிஸ் அறிவித்திருக்கிறது லண்டனில் வாழும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களே சொந்த இனத்தைச் சேர்ந்த காடையர்களின் அடாவடித்தனத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.

நிற வெறி கொண்ட ஆங்கிலேயர்கள் மேற்கிந்திய மற்றும் ஆபிரிக்கக் குடியேற்றவாசிகளை விட கூடுதலான அளவுக்கு ஆசியக் குடியேற்றவாசிகளை வெறுக்கும் மனோபாவம் கொண்டவர்கள். வெள்ளையர் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு எதிரான பிரிட்டிர்; [b]தீவிர வலதுசாரி அரசியல் வாதி ஈனொக் பவல் ஒரு தடவை ஆசியர்களைப் பற்றிக் குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். 'ஒரு மேற்கிந்தியனை நான் உற்று நோக்கும்போது அஞ்சவில்லை. ஆனால், ஒரு ஆசியனை நோக்கும்போது எமக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய ஒரு அந்நிய கலாசாரத்தைக் காண்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.</b>

<b>புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள கிறிமினல் பிரகிருதிகளின் குற்றச்செயல்களும் வன்செயல்களும் முழுத் தமிழ்க்குடியேற்றவாசிகள் சமூகத்திற்கும் எதிரான ஒரு கொடூரமான துவேசம் பிரவாகம் எடுப்பதற்கான காரணிகளாக விஸ்வரூபம் எடுக்காதிருப்பதை உறுதிசெய்ய உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.</b>

http://www.thinakural.com/2004/July/11/S_Editorial.htm
நன்றி
தினக்குரல்
யாழ் இணையம்


- kavithan - 07-12-2004

இக்கட்டுரையிலும் இத்தலைப்புக்கு நான் கூறிய கருத்துக்களுக்கு ஏற்றவாறு கருத்துக்களைக் கூறியுள்ளார்கள் . வாசியுங்கள் :!: :!: :!:


- AJeevan - 07-12-2004

லண்டன் வாழ் பெரியவர்கள் வானோலிகளிலும் மேடைகளிலும் பேசி இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறார்கள். தமிழ் சமூகத்தை சீர் செய்து வருவதாக வானேலி பேட்டியொன்றில் கேட்டேன். :?:


- kavithan - 07-12-2004

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா., அவர்களின் முயற்சி பாரட்டப் படவேண்டும்....... ஆனால் அவர்களின் பேச்சை இவர்கள் கேட்க வேண்டுமே.....இப்படிப் பட்டவர்கள் எல்லாம் பேச்சைக் கேட்டு திருந்துபவர்களா :?: அவர்களைப் பொறுத்தவரை இது செகிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்...... இருக்கும்..... பாப்பம்....... அவர்களின் முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.


- Chandravathanaa - 07-12-2004

[b][size=18]புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா எனக் கேட்கும் போது
எடுத்த உடனே தமிழர்கள் இருப்பது நல்லதில்லை என்று சொன்னால் அது ஏதோ நாம் தமிழரை வெறுக்கிறோம் என்ற காட்சிப் பிரமையையே ஏற்படுத்தும். ஊரிலே தமிழர்களுடன் வாழவில்லையா என்ற கேள்வி எழும்.

வாழ்ந்தோம்தான்.
அப்படி வாழ்ந்த நாங்களும் எங்களோடு வாழ்ந்தவர்களும்...
தமிழர்கள் என்பதையும் கடந்து அடியடியாக வந்த உறவுகள். ±õ§Á¡Î ஒத்து... அதாவது ஓரளவுக்காவது எமது நடைமுறைக்கு.. எமது பழக்கவழக்கங்களுக்கு.. என்று ஒத்து வாழப் பழக்கப் பட்டவர்கள். ஒரு கூட்டாக எம்மோடு வாழ்ந்தவர்கள். அது மட்டுமன்றி அடி, நுனி என்று அவர்தம் பரம்பரைப் பழக்க வழக்கங்கள் கூட எமக்குத் தெரிந்திருக்கும்.

இந்தக் குடும்பத்துடன் இந்தளவுக்குத்தான் சகவாசம் வைக்க வேண்டும் என்னும் கணக்குப் போட்டு வைக்கும் அளவுக்கு ஓரளவுக்கேனும் ஒவ்வொரு குடும்பத்தையும் அறிந்து வைத்திருப்போம்.

ஆனால் புலம் பெயர் மண்ணில் அப்படியில்லையே.
சந்திப்பவர்களில் எத்தனையோ பேர் தேவை கருதிப் பழகிவிட்டு, சமயம் வரும் போது உதைத்து விடுபவர்களாக இருக்கிறார்கள். நட்பென்று சொல்லிக் கரம் நீட்டி விட்டு தருணம் பார்த்து முறித்தெறிய முனைகிறார்கள். அவர்களது சுயரூபமோ, குணாதிசயமோ எடுத்த எடுப்பிலேயே எங்களுக்குத் தெரிந்து விடுவதில்லை. சிலரின் அநாகரீகமான பழக்க வழக்கங்களுடன் ஒன்ற முடிவதில்லை.

தனிமை, அந்நியச் சூழ்நிலை... என்ற ஒரு அந்தர நிலையில் தமிழர் என்று கண்ட உடனே மகிழ்ச்சியில் திளைத்து... அவர்கள் பற்றி எதுவுமே தெரியாமலே, நண்பர்களாக மதித்து வீடுகளுக்குள் அனுமதிக்கிறோம். அது மட்டுமா..? இதயத்தையே திறந்து பேசுகிறோம். காலப்போக்கிலோ அன்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ... நண்பர்கள் என்று நம்பியவர்களின் ஏமாற்றுச் செயல்களால் ஏமாந்து போகிறோம்.

இது இன்று நேற்றல்ல. பலகாலமாக புலத்தில் தொடர்கிறது. இது போன்றதான சில சம்பவங்கள்.. நடைமுறைகள்.. போன்றவற்றின் பிரதிபலிப்புத்தான்
"தமிழர்களோ...! அங்கே வேண்டாம்." என்ற குரல்கள்.

அது மட்டுமன்றி ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது வீட்டுப் பிரச்சனைகளை விடுத்து, அடுத்த வீட்டுப் பிரச்சனைக்குள் தலை போடுவதில்லை. ஆனால் எமது தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டு பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டு, அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றதென்று பார்த்து, அதற்கு கை, கால், மூக்கு, வாய்... என்று வைத்து இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி
ஊருக்குப் பறை சாற்றுவதில் இன்பம் காண்பார்கள்.

இதெல்லாம் தாம் உண்டு. தம் வேலை உண்டு என்று வாழும் தமிழருக்கு தலையிடி கொடுக்கும் விடயங்களே. இப்படியான பல பிரச்சனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காகத்தான் பல தமிழர் எந்தச் சோலியும் வேண்டாம். பேசாமல் ஒரு மூலையில் இருப்போம் என்று நினைத்து, தமிழர்கள் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.

இவர்களை நாட்டுப்பற்றோ, தமிழ்பண்பாடோ இல்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். கூடி இருந்து குழப்பம் விளைவிப்பவர்களை விட, தனித்திருந்து அமைதியாக வாழ விரும்பும் இவர்களிடம் அனேகமாக நல்ல பண்புகளே இருக்கும்.

அதேநேரம் இங்குள்ள சிலரின் கருத்துக்கள் போல இளைஞர்களினாலான பிரச்சனைகளே தமிழர்கள் தனியே வாழ விரும்புவதற்கான காரணம் என்றில்லை.
சில இடங்களில் இளைஞர்களின் வரம்பு மீறல் சற்று அதீதம்தான். அதையும் விட மேலான பல பிரச்சனைகள் பெரியவர்களாலேயே ஏற்படுகின்றன.

நேரம் போதவில்லை. முடிந்தால் பின்னர் வந்து இன்னும் விபரமாகச் சில பிரச்சனைகளைச் சொல்கிறேன்.

12.7.2004