Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்குதமிழ்
#21
துயரங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற தமிழரின் நம்பிக்கை குறைந்து வருகின்றது. பொங்கு தமிழ் செய்தியில் கிழக்கு பல்கலை. துணைவேந்தர்

நாட்டின் யுத்தம் ஓய்ந்து தமிழ் மக்களின் துயரங்களுக்கு விடிவு ஏற்படப்போகின்றது என்ற நம்பிக்கை இப்பொழுது கணிசமாகக் குறைவடைந்து செல்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். மூக்கையா அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் விக்கினேஸ்வரன் துணை வேந்தரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:-

அனைத்து மக்கள் சமூகங்களும் சுயகௌரவத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கான உரிமைகளைக் கொண்டவர்கள் என்பதே நவீன உலகின் ஜனநாயக சிந்தனையின் அடித்தளமாகும். ஆனால், இலங்கை அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் ஏற்பட்ட தேசிய அரசுகள் யாவும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்துள்ளன. அதன் விளைவாக உருவான முரண்பாடுகளினால் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெரும்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமது அபிலாஷைகள் புூர்த்திசெய்ய சமதான சூழ் நிலைகள் ஏற்பட்டுவிட்டன என்ற எண்ணத்துடன் கடந்த ஒன்றரை வருடகாலமாக வாழ்ந்துவரும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் கனவாகிப் போய்விடுமோ என்ற ஆதங்கம் இன்று ஏற்பட்டுள்ளது.

சமாதானத்துக்கான முயற்சிகளுக்கு பல முரண்பாடான தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் எதிர்பார்த்த விளைவுகளை அரசினால் கொண்டுவர முடியாமல் இருக்கின்றது. இலங்கையின் இன்றைய அரசினால் சமாதானத்தை செயற்படுத்த முடியாதிருப்பதால் சமாதானத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் தமது நியாயத்தை எடுத்துக்கூறும் தேவை ஏற்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் பொங்குதமிழ் விழிப்புணர்வு நடவடிக்கை கடந்த 3 வருடங்களாக ஆண்டு தோறும் இடம்பெற்று வருவது தமிழ்மக்களின் நியாய புூர்வமான அபிலாஷைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் நிகழ்வுகளாகும்.

இதன்மூலம், தமிழ்மக்கள் அஹிம்சை, சமாதானம் ஆகிய வழி முறைகளுக்கு இன்றும் ஆதரவானவர்கள் என்ற கருத்தை உலகெங்கும் பரப்ப வழி ஏற்படுகின்றது. இம்முயற்சிக்கு எனது ஆதரவும் பாராட்டும் என்றும் உரித்தாகும் - என்று உள்ளது.

பொங்குதமிழ் நிகழ்வில் உரையாற்றிய யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.மோகனதாஸ் தனது உரையில் தெரிவித்ததாவது:-

இடம்பெயர்ந்த மக்களுக்கென அரசினால் வழங்கப்பட்டுவரும் நிவாரணம் எமது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அவர்களது அகதிவாழ்வு தொடர்கிறது. தமது சொந்த மண்ணில் வாழும் நிலை வரவேண்டும் என எதிர்பார்ப்பது அமைதி பற்றிப் பேசுவதற்கு அடிப்படையாகும். இடம்பெயர்ந்து அவதிப்படும் ஒவ்வொரு மக்களும் தமது சொந்த மண்ணில், சொந்த வீடுகளில், வாழுகின்ற பொழுதே சமாதானத்தின் உண்மை விழுமியத்தை அனுபவிப்பதாக அமையும் தொழில்வாய்ப்புகள் இன்றி மற்ற வரை நம்பிவாழும் நிலைமாறி தனது சொந்த மண்ணில் சொந்தத் தொழில் செய்து நிம்மதியாக வாழவேண்டும் என்று மக்கள் நினைப்பது நியாயமானதே.

இது ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஏற்றுக்கொண்ட அடிப்படை மனித உரிமையுமாகும். தமிழ்மக்கள் போருக்கான ஆர்வம் கொண்டவர்கள் அல்லர் என்பதை பொங்குதமிழ் எடுத்துக்காட்டி நிற்கிறது. அவர்களின் அன்றாட வாழ்வின் அவலத்தை நீக்குகின்ற சாத்வீக நடைமுறையாகவே இது அமைந்துள்ளது. எமது அடிப்படை உரிமைகள், விருப்பங்கள், அபிலாஷைகளை எடுத்து விளக்குவதே பொங்குதமிழ். இது தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் எமது விருப்பத்தைச் சொல்லும் என்றார்.
Reply
#22
sethu Wrote:துயரங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற தமிழரின் நம்பிக்கை குறைந்து வருகின்றது. பொங்கு தமிழ் செய்தியில் கிழக்கு பல்கலை. துணைவேந்தர்..
ஆயுதத்தலைதான்.. எல்லாத்தயும்.. குழப்புது போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#23
உங்களின் தலையில் என்ன இருக்கு
Reply
#24
''தம்பி.. மீண்டும் ஆயுதத்தை தூக்கு..!''

பிரபாகரனுக்கு மக்கள் உத்தரவு!
09.07.03 ஜுனியர் விகடன் இதழில்

http://www.juniorvikatan.com/
Reply
#25
''தம்பி.. மீண்டும் ஆயுதத்தை தூக்கு..!''
பிரபாகரனுக்கு மக்கள் உத்தரவு!இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலி களுக்கும் இடையே நடந்துவந்த சமாதானப் பேச்சுக்கள் இப்போது மொத்தமாகச் சுணங்க ஆரம்பித்திருக் கின்றன.
சமாதானப் பேச்சில் முழு முயற்சியாக இருந்து வந்த நார்வே நாடும் என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
'இனி சமாதானம் என்பது எட்டாக்கனிதான்' என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் சொல்லுமளவுக்கு நிலைமை கீழே போய்விட்டது.
'ஒன்றரை ஆண்டு காலமாக அந்த இலங்கைத் தீவில் நிலவிவந்த அமைதிஇ எப்போது வேண்டு மானாலும் காணாமல் போகலாம். இலங்கை ராணுவமும் புலிகளும் துப்பாக்கிகளைத் துடைக்க ஆரம்பித்துவிட்டன‘ என்று செய்திகள் பறந்து வந்து உலகத்தமிழர்களிடையே கவலையை படரவிட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்கு தமிழ்' என்ற கலைநிகழ்ச்சி அதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துவிட்டது.
ஈழத்தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த 'பொங்குதமிழ்‘ கலைவிழா யாழ்ப்பாணம் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் திரண்டு நிற்க... கடந்தவாரம் படு கலகலப்பாக நடந்திருக்கிறது.
'பதினாறு ஆண்டுகளுக்கு முன் சுகுமலைக் காட்டில் பிரபாகரன் பேசியபோது திரண்ட கூட்டம்தான் பிரமாண்ட கூட்டமாக ஈழ சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அதற்கு இணையான கூட்டம் இப்போது கூடியிருக்கிறது' என்று சொல்லுமளவுக்குக் கூட்டமாம்.
''எமது நிலம் எமக்கு வேண்டும்‘' என்ற கோஷத்துடன் நடந்த இந்த விழாவில் தமிழர் பகுதியில் இருக்கும் இலங்கை ராணுவத்தை வெளியேறச் சொல்லித்தான் பொதுமக்கள் ஆக்ரோஷமான கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். [/color]பகுதியை ராணுவம் வளைத்திருப்பது மாதிரி போடப்பட்டிருந்த ஒரு செட் காண்போரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஒரு ஓலைக் குடிசையை ராணுவம் பாதுகாப்பது மாதிரியும் அந்தக் குடிசையை ஒரு பாம்பு சுற்றி வளைத்திருப்பது மாதிரியும் 'நிருத்து' என்ற பிழையான தமிழில் ஒரு பலகையும் கொண்டதாக இருந்த அந்த செட்டை(ராணுவத்தின் கட்டுப்பாட்டை) நிகழ்ச்சியின் முடிவில் தகர்ப்பது மாதிரி ஏற்பாடு. இதற்காக சிலரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களே நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு ஓடிப்போய் ஆவேசக் கூச்சலுடன் அதைத் தகர்த்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் மட்டுமல்ல இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் செய்தித் தொடர்பாளர் சமன் அத்தாவுடஹெட்டியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. மோகன்தாஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் இளம்பரிதி பேசிய பேச்சுதான் ஈழத்தமிழர்களது இன்றைய எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
''தமிழர்களாகிய நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போகவேண்டும். நீங்கள் (ராணுவம்) உங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள்...'' என்று தொடங்கிய இளம்பரிதி ''எங்களது மக்களுக்காகத்தான் எல்லா அவமானங்களையும் சகித்துக் கொண்டோம். ஆறு கட்டமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகும் தமிழர்களின் மனிதாபிமானத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாததை ஆட்சேபிக்கிறோம்.
இதனால்தான் எங்கள் தலைவர் பேச்சுவார்த்தையைத் தற்காலிகமாக நிறுத்தினார். அதிகாரமுள்ள ஜனாதிபதி சந்திரிகாவுடன் நித்தமும் திண்டாடிக் கொண்டிருக்கும் பிரதமர் ரணிலுடன் அரசியல் தீர்வுகள் பற்றிப் பேசுவது சாத்தியமற்றது..'' என்று முடித்திருக்கிறார்.
''பரிதியின் பேச்சுக்குக் கூடியிருந்த கூட்டம் கொடுத்த வரவேற்பு இலங்கையில் மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்கிவைக்கும் என்பதைத்தான் காட்டுகிறது‘‘ என்று சொல்லும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் இவர்கள் இன்னொரு ஆதாரத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
'' 'கிளிநொச்சி தமிழர் தேசியப் பேரவை..‘ 'முல்லைத்தீவு கடலோரப் பகுதி மக்கள் அமைப்பு..‘ ஆகிய அமைப்புகளின் சார்பில் பிரபாகரனுக்கு சமீபத்தில் மகஜர்கள் அனுப்பியிருக்கிறார்கள் அதில் 'தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் எம் தலைவனே! உங்கள் மௌனத்தைஇ அமைதியை பொறுமையை சிங்கள அரசுப் படைகள் புரிய மறந்தார்கள்.
இதற்கு மேலும் நீங்கள் சிங்கள அரசிடம் நீதியும் நியாயமும் வேண்டி நிற்கக்கூடாது. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதிக்கும் பிள்ளைகளைத்தான் நாம் போருக்கு அனுப்பினோம். இனியும் அனுப்பிவைப்போம்' என்று ஆக்ரோஷத்துடன் அந்த அமைப்புக்கள் தங்களது எண்ணத்தை எழுதியிருக்கின்றன. இதுபோன்ற கடிங்கள் விடுதலைப்புலிகளின் தலைமையை உசுப்பிவிடலாம்...'' என்கிறார்கள்.
'இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளை இணைத்து அங்கே இடைக்கால நிர்வாகம் அமைத்து அதை நிர்வகிக்கும் பொறுப்பைத் தங்களிடம் தரவேண்டும்‘ என்பதுதான் புலிகளின் கோரிக்கை. இதைப் பிரதமர் ரணில் ஏற்றுக் கொண்டாலும் ஜனாதிபதி சந்திரிகா ஏற்கவில்லை.
இதனால்தான் 'சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் வரை பிரதமர் ரணில் எதுவும் செய்ய முடியாது. அரசியல் அதிகாரம் இல்லாத ரணில் அரசு சும்மா ஒப்புக்குக் கொடுக்கும் வாக்குறுதியை நம்பி நாம் எதுவும் செய்துவிடக்கூடாது...' என்று சொல்லி புலிகள் சமாதானப் பேச்சிலிருந்து விலகி நிற்கிறார்கள்.[/color]இப்படி விலகி நிற்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரண உதவிகள் பெறும் நன்கொடையாளர் மாநாடு சமீபத்தில் டோக்கியோவில் நடந்தது.
'சமாதானப் பேச்சு முடியும் தருணத்தில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்' என்பது முக்கிய நிபந்தனையாக அந்த மாநாட்டில் பேசப்பட்டதாம். இப்படியரு நிபந்தனை பற்றி மாநாட்டில் பேச்சு வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் மாநாட்டையே புலிகள் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
''நாங்கள் போர்நிறுத்தம் செய்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுவிட்டு அமைதியாக நிற்கிறோம். இதற்குமேல் எங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆயுதங்களை மொத்தமாக நாங்கள் இழக்க முடியாது. ஆயுதங்கள்தான் எமது பேரம் பேசும் வலு. எமது மக்களைப் பாதுகாக்கும் கருவியும் அவைதான்!'' என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சமாதான முயற்சியில் இருக்கும் நார்வே தரப்பிடம் கறாராகச் சொல்லி விட்டாராம்.
இந்த விஷயங்கள் இலங்கைப் பிரதமரின் முகத்தில் கவலை ரேகைகளை வெகுவாகப் படர விட்டிருக்கிறதாம்.
இடைக்கால நிர்வாகத்துக்குச் சாதகமான வாக்குறுதியைப் புலிகளுக்குக் கொடுத்துவிட்டு அதற்கு சந்திரிகாவின் ஒப்புதலை வாங்க முடியாமல் ரணில் விழித்துக் கொண்டிருக்கும் அதேசமயம்...
'சமாதானமாகப் போகிறோம்' என்று சொல்லி உலக நாடுகளிடம் நிவாரணப் பணம் வாங்கிவிட்டு மீண்டும் சண்டையைத் தொடங்கினால்... உலக நாடுகளின் பல்வேறு முனைகளிலிருந்தும் கண்டனக் கணைகள் வருமே‘ என்று இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறார் ரணில்.
இவரைப் போலவே 1995-ல் சந்தோஷத்துடன் சமாதானக் கொடி பிடித்தவர்தான் சந்திரிகா. ஆனால் அந்தச் சமாதானப் பேச்சு ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.
அந்தக் காயம் இன்னமும் ஆறாதவராக இருக்கும் சந்திரிகா ''புலிகள் சாத்தியமில்லாத கோரிக்கைகளை வைக்கிறார்கள். ஆயுதங்களை மீண்டும் கையிலெடுத்து எதிரிகளை ராணுவ உளவாளிகளை ஒழித்துக் கட்டுகிறார்கள். போர் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்கான யூகங்கள் உள்ளன...'' என்று இப்போது எச்சரிக்கத் தொடங்கி விட்டார் சந்திரிகா.
யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்கு தமிழ்' நிகழ்ச்சிப் பிரகடனமும் சந்திரிகாவின் இந்த எச்சரிக்கையும் ஈழத்தில் மீண்டும் ரத்தச் சிதறலுக்கு அடித்தளம் போட்டால்இ அது தமிழனின் துரதிர்ஷ்டம்தான்!
- ப. திருமாவேலன்[/color]

நன்றி ஜுனியர்விகடன்- 09.07.03
Reply
#26
Mullai Wrote:யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்கு தமிழ்' நிகழ்ச்சிப் பிரகடனமும் சந்திரிகாவின் இந்த எச்சரிக்கையும் ஈழத்தில் மீண்டும் ரத்தச் சிதறலுக்கு அடித்தளம் போட்டால்இ அது தமிழனின் துரதிர்ஷ்டம்தான்!
ப. திருமாவேலன் ஜுனியர்விகடன்- நன்றி
Reply
#27
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள புலிகளின் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் செயலகம் பாதுகாப்பு காரணங்களுக்காக வன்னிக்கு இடமாற்றப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது பதட்டமான சூழல் நிலவுவதாலும், மாணவர் பேரவைத் தலைவர் எனப்படும் கஜனுக்கு பல அச்சுறுத்தல்கள் வருவதாலும் இடமாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Reply
#28
sethu Wrote:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள புலிகளின் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் செயலகம் பாதுகாப்பு காரணங்களுக்காக வன்னிக்கு இடமாற்றப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது பதட்டமான சூழல் நிலவுவதாலும், மாணவர் பேரவைத் தலைவர் எனப்படும் கஜனுக்கு பல அச்சுறுத்தல்கள் வருவதாலும் இடமாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொய்..சொல்லாதையப்பு.. குருவியளுக்கு.. கோபம்..வரப்போகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#29
தாத்தா அது பொய் இல்லை உண்மை.

நீங்கள் வால்பிடிக்கும் அந்த ஈபிடிபி கும்பலால்தான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
[b] ?
Reply
#30
Karavai Paranee Wrote:தாத்தா அது பொய் இல்லை உண்மை.

நீங்கள் வால்பிடிக்கும் அந்த ஈபிடிபி கும்பலால்தான் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அடே.. அடே.. தம்பி.. முடிச்சுப்போடாதயடா.. எனக்கு.. ஒருத்தரையும்.. தெரியாது.. .இப்ப விஷயத்துக்கு வா..

என்னடாப்பா ..ஒண்டரை.. இலச்சம்.. ஆயுதத்தை.. து}க்குதம்பியெண்டு.. சொன்னதாகவும்.. அத்தனைபேரும்.. பின்னாலை.. நிக்குதுகள்.. நான்; விளங்காமல.. புலம்புறன் எண்டான்..பாவி.. அப்ப பார்த்தால்.. மற்றமாதிரித்.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#31
தாத்தா பிரச்சினைகளை உருவாக்க எண்டே பிறந்துட்டியளோ?
Reply
#32
sethu Wrote:தாத்தா பிரச்சினைகளை உருவாக்க எண்டே பிறந்துட்டியளோ?
அடெ.. அடே.. இருக்கிற பிரச்சனையை.. மூடி மறைச்சு.. பிரச்சனையைக் கூட்டிறது.. நீங்கள்.. பிறகு.. இப்ப..பார்த்தால்..மூட்டையை.. என்னுடைய.. தலையிலை.. ஏத்துறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#33
உப்படி சொல்லி மநைக்கப்பாக்கறியள்
Reply
#34
GMathivathanan Wrote:
sethu Wrote:தாத்தா பிரச்சினைகளை உருவாக்க எண்டே பிறந்துட்டியளோ?
அடெ.. அடே.. இருக்கிற பிரச்சனையை.. மூடி மறைச்சு.. பிரச்சனையைக் கூட்டிறது.. நீங்கள்.. பிறகு.. இப்ப..பார்த்தால்..மூட்டையை.. என்னுடைய.. தலையிலை.. ஏத்துறியள்..
sethu Wrote:உப்படி சொல்லி மநைக்கப்பாக்கறியள்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#35
தாத்தா இதை நிப்பாட்டுங்கோ?
Reply
#36
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா இதை நிப்பாட்டுங்கோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->சரியடாப்பா.. எனக்கும்.. இரண்டு.. மூண்டுநாள் தொடர்ந்து..வேலை.. சாப்பாட்டுக்கு வந்தாலும்.. ஒருக்கால் பார்க்காமல்.. போக முடியேல்லை.. உங்களை.. தொந்தரவு.. பண்னேல்லை.. நீங்கள்.. எழுதிறதை.. எழுதுங்கோ.. ஆறுதலா.. ஆசாவாசமா.. வந்து பதில்.. எழுதிறேனே..!
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
பாவம் தாத்தாவை ஓய்வெடுக்க விடுங்கள். என்ன தான் அச்சில் வார்த்தெடுத்தாலும் ஒரு சிலதை திருத்தவே முடியாது. அதற்கு ஒரு நல்ல சான்று மதி. நல்லவைகளைப் போற்றப் பழகுங்கள். உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். எல்லாம் நன்மையாகவே முடியும். ஆயுதம் தூக்காமலே எம் கல்விச் சமூகம் அஹிம்சை நெறியிலே மண்ணின் யாதார்த்தத்தைப் பிரதிபலித்துக் காட்டி விட்டார்கள். இனியாவது துவேசங்களை விடுத்து நல்லதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆயுதம் தூக்கினாலும் கோபம். அஹிம்சையாய்ப் போராடினாலும் ஆத்திரம். இதற்கு வயது காரணமா? அல்லது இது தான் குணமா?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#38
நன்றி.. மதி.. ஆயுதத்திறிகுள்ளே..பிறந்து.. ஆயுதத்துக்குள்ளே.. வளர்ந்தவர்களுக்கு.. ஆயுதம்தானே..நல்லது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#39
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->அஹிம்சையாய்ப் போராடினாலும் ஆத்திரம். இதற்கு வயது காரணமா? அல்லது இது தான் குணமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆயுதத்தை ஒப்படைத்துவிட்டு.. அகிம்சைப்போர்.. நடாத்தத்.. துணிவில்லாதவனுக்கு.. ஆயிரம்.. சாட்டு.. ஆயுதம்வைத்துக்கொண்டு அகிம்சைபேசினால்.. எவனும்..அதை..அகிம்சையாகப்.. பார்கப்போவதில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#40
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-GMathivathanan+--><div class='quotetop'>QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin-->நல்லவைகளைப் போற்றப் பழகுங்கள். உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இந்தியாவுடன்..கூட்டு.. அது..நன்மைதான்.. ஜேயாருடன் கூட்டு.. அது.. நன்மைதான்.. பிறேமதாசாவுடன்கூட்டு..அது.. நன்மைதான்.. சந்திரிகாவுடன் கூட்டு.. அது நன்மைதான்.. ரணிலுடன் கூட்டு.. அதுவும் நன்மைதான்.. 2002வரை..ஆயுதம்..ஆயுதம்.. அதுவும்.. நன்மைதான்.. அதன்பின்னர்.. யப்பான்.. மூன்றாம்சுற்றுவரை.. அகிம்சை.. அதுவும்.. நன்மைதான்.. தற்போது.. ஆயுத.. அகிம்சை.. அதுவும் நன்மைதான்.. ஒருவேனை.. சில..நாட்களில்.. ஆயுதம் ஆயுதம்..வரலாம்.. அதுகூட.. நன்மையாக.. மாறலாம்.. ஆனால்.. சாதாரண.. பொதுமக்களின்.. இயல்பு.. வாழ்கை.. மாத்திரம்.. போராட்டம்.. போராட்டமாகவே.. இருக்கவேண்டும்.. அதுசுட.. மேலே..சொல்லப்பட்ட.. அத்தனைக்கும்.. காரமாயிருந்தவர்களுக்கு.. அத்தனையும்.. நன்மைதான்..உண்மையை உண்மையாகப்..பாருங்கள்..உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)