Eelavan Wrote:மீண்டும் தொடரும் மிடுக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அஜீவன் அண்ணா சில விடயங்கள் சொல்லலாம் என்றிருந்தேன் நீங்கள் ஒரேயடியாக வணக்கம் சொல்பவனை பல்லைப் பிடித்துப் பார்த்து பதிவணக்கம் சொல்வதில்லை என்று போட்டுவிட்டீர்கள் அதனால் விட்டுவிட்டேன்
ஈழவன்,
தான் வெல்ல வேண்டுமென்று சிலர் லொஜிக்கேயில்லாமல் எழுதுவார்கள். அதுவல்ல நாம் செய்ய வேண்டியது நல்லதொரு சமுதாயம் உருவாக நாமாவது உருப்படியாக சொல்ல வேண்டும் என்றுதான் எழுதுகிறேனே தவிர எவரோடும் தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லை. எனவே நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள். எனக்குத் தெரியாதது இன்னுமொருவரிடமிருந்து கிடைக்குமானால் மகிழ்வேன்.
Quote:யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியது மூலமும் பேட்டி கண்ட பத்திரிகைக்கு தனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்று முரளி கூறியிருந்ததாக எழுதியிருந்தீர்கள்.
அதுபற்றி எழுதலாம் என யோசித்தேன். ஆனால் கருத்துகள் வேறு பாதையால் போகத் தலைப்பட்ட போது இவற்றை இங்கே பேசாமல் விடுவது நல்லது எனத் தோன்றியது.
இருந்தாலும் இது சரியாகப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அல்லது விட்டு விடலாம்.
நான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்பது மட்டுமல்ல, ஆரம்பக் கல்வியை தமிழில் கற்காதவன் என்பதும், சிங்கள மொழி மூலமே எனது கல்வி என்பதும், பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
வீட்டில் பெற்றோரோடு தேவையானவற்றை தமிழில் பேசுவேன். இருநதாலும் அப்பா வழி உறவினர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தால் நானும் ஆரம்பததில் எனக்குத் தெரிந்த தமிழில் பேச முற்படுவேன். அவர்கள் என் பேச்சில் வரும் தவறுகளை திருத்துவதை விட்டு, என் தவறுளுக்கு நொட்டை நொடிசல்களையே சொல்லத் தொடங்கினார்கள்.ஒரு வார்த்தையை திரித்து கூறவும் முற்பட்டார்கள்.
இதனால் நான் இவர்களுக்கு முகம் கொடுக்காமல் ஒதுங்கத் தலைப்பட்டேன்.
என் அப்பாவின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால், நான் அறைக்குள் முடங்கிக் கிடப்பேன் அல்லது இருளும் வரை வெளியே சுற்றித் திரிவேன்.(இதை விட சொல்வதற்கு வெகுவாக இருக்கிறது.இவை வேதனையான விடயங்கள்...............)
சிங்கப்புூருக்கு போன பின் (1980)தான் தமிழ் கற்க ஆரம்பித்தேன். எனது தமிழ் சிங்களத் தமிழாக இருக்கிறது என்று கூறி என்னை ஆளாக்கிய கோபாலி (சிங்கை தொலைக்காட்சி பணிப்பாளர்) அண்ணாவின் தயவில் தமிழை ரசிக்கக் கற்றக் கொண்டேன்.
ஈழவன், இது போன்ற ஒரு நிலை முரளிக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது முரளி பேசுவதை விளங்கிக் கொள்ளாமல் தமிழரும்-சிங்களவரும் ஏதாவது திரித்தும் எழுதிவிடலாமல்லவா?
யாருக்குத் தெரியும்? அவரவர் பிரச்சனை அவரவருக்குத்தான் தெரியும்?
நாங்கள் நாட்டை விட்டு வெளியே நின்று வீராப்பு பேசுவது இலகுவான காரியம். அவரவர் நிலையில் இருந்து பார்ப்பதிலே நமது நிலை தங்கியிருக்கிறது?
அண்மையில் சோணியா காந்தியிடம் பேட்டி எடுக்க முற்பட்ட இத்தாலிய நாட்டு தொலைக்காட்சி பேட்டியாளருக்கு, அவர் இத்தாலிய மொழியில் பேட்டி கொடுக்க மறுத்ததை பார்த்திருப்பீர்கள். அது அவரது தாய் மொழிதான், ஆனால் அவர் பேசும் ஒரு வார்த்தையை திரித்துக் கூற எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை காட்டியது. இதற்காக அவரை நாம் குறை சொல்லவில்லை. இது ஒரு புரிந்துணவு மட்டுமே......................